"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
செவ்வாய் - பயோடேட்டா - Mars bio data.

செவ்வாய் - பயோடேட்டா - Mars bio data.

Mars biodata.

பெயர் காரணம் - ஆகாயத்தில் இந்த கோளை உற்றுநோக்கும்போது செந்நிறத்தில் காட்சி அளிப்பதால் ''செவ்வாய்'' என்று பெயர் பெற்றது. 

இதற்கு மார்ஸ் (Mars ) என்றொரு பெயரும் உண்டு. '' Mars'' என்பது ரோமானிய போர்க்கடவுளின் பெயர்.


செவ்வாய்  - பயோடேட்டா.

சூரியனிடமிருந்து தொலைவு  - 227.9 மில்லியன் கி . மீ.

பூமியிலிருந்து தொலைவு - 54.6 மில்லியன் கி . மீ.

சூரியனை சுற்றும் வேகம்  - 24.077 Km / s.

சூரியனை சுற்றும் கால அளவு - 687 நாட்கள்.

தன்னைத்தானே சுற்றும் கால அளவு  - 24 மணி 37 நிமிடம்.

தன்னைத்தானே சுழலும் வேகம் - 24 . 2 கி . மீ. 

நடுக்கோட்டில் பகல் நேர வெப்பநிலை -  +27 ⁰ c முதல் -140⁰ c வரை.

Mars_bio_data

விடுபடு திசைவேகம் - 5.027Km/s.

செவ்வாயின் சராசரி ஆரம்   - 3,389.5 ± 0.2 Km .

விட்டம் - 6,755 . 2 கி. மீ.

நிலநடுக்கோட்டு ஆரம் - 3,396.2 ± 0.1 Km.

துருவங்களில் ஆரம் - 3,376.2 ± 0.1Km.

சுழல் அச்சு சாய்வு - 25.19 ⁰ .

காந்தப்புல வலிமை - காந்தப்புலம் இல்லை.

செவ்வாயின் எடை  - 6.4171 x 10²³ Kg.

கன அளவு - 1.6318 x 10¹¹Km³

செவ்வாயின் சராசரி அடர்த்தி - 3.9335 ± 0.0004 g/cm³.

மேற்பரப்பு ஈர்ப்பு விசை - நமது பூமியோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்புவிசை 37%.

துணைக்கோள்கள்.

''ஃபோபாஸ்'' (Phobos) மற்றும் ''டெய்மாஸ்'' (Deimos) என்ற இரு துணைக்கோள்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டும் எதிர் எதிர் திசைகளில் சுற்றி வருகின்றன.

செவ்வாயில் அடங்கியுள்ள பொருட்கள்.

சிலிக்கன், உலோகங்கள், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரைடு மற்றும் பல தனிம கனிமங்களை கொண்டுள்ளது.

வளிமண்டலம்.

மெலிதான காற்று மண்டலம் உள்ளது. இதில் கார்பன் டை ஆக்சைடு, ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் மோனாக்சைடு அடங்கியுள்ளது. வளிமண்டல அழுத்தம் பூமியோடு ஒப்பிடும்போது 1% ற்கும் குறைவு.

mars_bio data

செவ்வாயின் சிறப்பு.

பூமியைவிட சிறியது. பூமிக்கு அடுத்து இருக்கிறது. சூரியனிலிருந்து 4 வது கிரகம்.

தன்மை.

செவ்வாயில் இரும்புத்தாதுக்கள் அதிக அளவில் உள்ளதால் இரும்பு ஆக்ஸைடு செறிவால் இங்குள்ள மணல் பரப்புகள் மற்றும் பாறைகள் சிவப்பு நிறத்தில் உள்ளது. எனவே செவ்வாய் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.

 உயிரின  வாழ்க்கை.

பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்க..

>> செவ்வாய் கிரகம் - Mars planet <<

👽👽👽👽👽👽

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்