"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சந்திரன் (நிலவு ) - பயோடேட்டா - Moon - Bio data.

சந்திரன் (நிலவு ) - பயோடேட்டா - Moon - Bio data.

Moon - Biodata.

பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வரும் பூமியின் ஒரேயொரு துணைக்கோள் சந்திரன். சூரிய குடும்பத்தில் உள்ள துணைக்கோள்களில் இது 5 வது பெரிய துணைக்கோளாகும். அதே வேளையில் துணைக்கோள்களில் இரண்டாவது அடர்த்தி மிகுந்த கோள்  சந்திரன் ஆகும்.


நிலவு  - பயோடேட்டா.

நிலவானது தன்னுடைய அளவுடன் ஒப்பிட்டால்  புளுட்டோவை விட பெரியது. மேலும் பூமி தவிர்த்து மனிதன் காலடி பதித்த ஒரே அந்நிய தளம் சந்திரன் மட்டும்தான்.

முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் எட்வின் அல்ட்ரின் ஆகிய இருவரும் நிலவில் தடம் பதித்தனர்.

நிலாவின் வேறு பெயர்கள்.

கவிஞர்களின் காதல் பேசும் கவிதைகளுக்கு விதையாக விளங்குவது இந்த நிலாதான். நிலவிற்கு பல பெயர்கள் உண்டு  என்றாலும் நிலா, பிறை, மதி, சந்திரன், திங்கள், அம்புலி முதலியன அவற்றில் முக்கியமானவையாகும்.

Moon vada poche

தன்மை.

பாறைகளும். மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்துள்ளன. கனிம வளங்களும் மிக குறைந்த அளவில் பனிப்பாறைகளும் உள்ளன. நிலவு தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வேகமும் பூமியை சுற்றும் வேகமும் சமமாகும் . எனவேதான் நாம் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காணமுடிகிறது.

சூரிய கிரகணம்.

சூரியனை விட நிலவு 400 மடங்கு சிறியது என்றாலும் புவியின் விட்டத்தைப் போல 400 மடங்கு தொலைவில் சூரியன் அமைந்திருப்பதால் சூரியனும் நிலவும் ஒரே அளவில் இருப்பது போல நமக்கு காட்சியளிக்கிறது. இந்த காரணத்தினாலேயே சூரிய கிரகணத்தின் போது நிலவினால் சூரியன் முழுமையாக மறைப்பது சாத்தியமாகிறது.

சந்திரனின் சராசரி விட்டம் - 1737.10 Km.

துருவ விட்டம் - 1735.7 Km .

கிடை விட்டம் - 1738.14 Km.

பரப்பளவு - 3.793 × 10 ⁷

கன அளவு - 2.1958 × 10¹⁰ Km³.

எடை - 7.3477 × 10 ²² Kg.

சராசரி அடர்த்தி - 3.3454 g/Cm³.

பூமிக்கும் நிலவுக்குமான சராசரி தூரம் - 384,403 Km. 1 வருடத்திற்கு 2 செ . மீ என்ற அளவில் சந்திரன் பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி சென்று கொண்டிருக்கிறது.

புவியை ஒருமுறை சுற்றிவர செலவிடும் நேரம் - 27.321661 நாட்கள்.

ஈர்ப்பு விசை - 1.622 m / s ². (புவி ஈர்ப்பு விசையில் 6 ல் 1 பங்கு மட்டுமே சந்திரனின் ஈர்ப்பு விசை இருக்கிறது. இதனால் பூமியில் 6 கிலோ எடையுள்ள ஒரு பொருள் சந்திரனில் 1 கிலோ எடை மட்டுமே இருக்கும்)

விடுபடு வேகம் - 2.38 Km /s.

கிடை அச்சில் சுழற்சி வேகம் - 4.627 M /s .

சுற்றுப்பாதை வேகம் - 1.022 Km /s .

வளிமண்டலம் - நிலவிற்கு காற்றுமண்டலம் என்று சொல்லப்படும் வளிமண்டலம் எதுவும் கிடையாது.

《》《》《》《》

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்