"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பைசா டவர் - Tower of Pisa.

பைசா டவர் - Tower of Pisa.

Tower of Pisa.

உலக அதிசயங்களைப் பற்றி அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அப்படியான உலக அதிசயங்களில் ஒன்றுதான் "பைசா டவர்" என்று சொல்லப்படும் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம். இத்தாலியிலுள்ள மத்திய தரைகடல் பகுதியில் ''டஸ்கன்'' னிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பைசா நகரம்.


''பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு''

ஆகஸ்ட் 9 ல் 1173 ம் ஆண்டு இந்நகரில் ஒரு சர்ச் கட்டப்பட்டது. சர்ச்சில் மணியடிக்க அதன் அருகாமையிலேயே மணியடிக்கும் கூண்டு ஒன்றும் தனியாக அமைக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது.

1174 ம் ஆண்டு பைசா நகரத்தை சேர்ந்த ''பொனான்னஸ்'' (Bonannus ) மற்றும் இன் பிரக்கைச் சேர்ந்த ''வில்லியம்'' (William) ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் தொடங்கப்பட்டன.  

கற்கள் மற்றும் சலவைக்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இது மூன்று மாடிகள் கட்டிய உடனேயே கட்டிடம் லேசாக சாய ஆரம்பித்து விட்டது.

''வாஸ்து'' சரியில்லையோ என்று அதிர்ந்து போன அவர்கள் அதற்கான காரணத்தை ஆராய முற்பட்டனர் . அப்பொழுதுதான் ஒரு உண்மை தெரிய ஆரம்பித்தது. என்ன உண்மையென்றால் '' பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு" என்பதுதான் அது.

பேஸ்மெண்ட் பகுதியின் கீழிருந்த மண் இறுகிய தன்மையில் இல்லாமல் கொஞ்சம் இளகிய தன்மையில் இருந்ததால் பேஸ்மெண்ட் மண்ணிற்குள் அமுங்க. ''பக்கவாதம் வந்தவன் பரதநாட்டியம் ஆடுன'' கதை போல் கட்டடம் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்து விட்டது. உடனே அங்கிருந்தவர்களெல்லாம் காண்டாகி இது என்னடா கூண்டுக்கு வந்த சோதனை என்று பயந்துபோய் கட்டிட வேலையை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள்.

''விழும் ஆனா விழாது'' என்ற கதையாக 100 ஆண்டுகள் கழிந்து விட்டன.

நூறு ஆண்டுகள் கழிந்த பின்பும் கட்டிடம் அப்படியே நிற்க ஆச்சரியப்பட்டுப்போன தொழில்நுட்ப வல்லுனர்கள் கட்(டி)டத்தை ஆராய்ந்தனர். அப்போதுதான் ''கட்டதொரைக்கு கட்டம் சரி இல்லை'' என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

கட்டம் சரியில்லை என்றாலும், இதன் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் ''குரு'' இருப்பதால் இதன் ஆயுள் கெட்டி என்பதனை உணர்ந்த அவர்கள் குருவுக்கு இராசியான வீடு எட்டு என்பதால் 8 மாடிகள் வரை விழாமல் தொடர்ந்து கட்டமுடியும் என்று சர்டிபிகேட் கொடுத்தனர்.

உடனே அவர்களின் ஆலோசனைப்படி பரிகார பூஜையெல்லாம் செய்யப்பட்டு சரியாக 8 மாடிகள் கட்டி முடிக்கப்பட்டது.

முழு கோபுரமும் 1372 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்பொழுது அண்ணாத்த ஒரு பக்கம் சைடு வாங்கி (சுமார் 10% சாய்வு ) நின்றாலும் தரையிலிருந்து 108 அடி வளர்ந்து நிற்கிறார்.

விட்டம் 52 அடி. சுவர்களின் தடிமன் 13 அடி. மொத்த கட்டிடத்தின் எடை சுமார் 14,453 டன்.

மேலே போய் நலம் விசாரிக்க வேண்டுமென்றால் 296 படிகள் ஏற வேண்டும். மேலே ''டிங் டாங்'' பெல் 7 கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. ஏழும் 7 ஸ்வரங்கள். ஆனால் இப்போது மணி அடிக்கப்படுவதில்லை. காரணம் மணியோடு சேர்த்து கட்டடத்திற்கு ''சங்கு'' ம் ஊத வேண்டி வந்துவிடக்கூடாதே என்கிற பயம்தான்.

Pisa Tower

ஏற்கனவே எட்டாமிடத்து குருவின் பார்வை கட்டிடத்தின் மீது ஸ்ட்ராங்காக இருக்க அக்காலத்தில் வாழ்ந்த அறிவியலாளர் ''கலிலியோ'' (Galileo Galilei) பிறந்த ஊரும் இது என்பதால் அவரது பார்வையும் இதே கட்டிடத்தின் மீது விழ ஒரே நாளில் கலிலியோவோடு சேர்ந்து கட்டிடமும் உலக அதிசயங்களில் ஒன்றாக புகழ் பெற தொடங்கிவிட்டது.

ஆம், புவியீர்ப்பு விசையை பற்றி ஆராய்வதற்காக சிறிதும் பெரிதுமாக வித விதமான அளவுகளில் உள்ள கற்களை எட்டாவது மாடியிலிருந்து கீழே போட இருவருமே எட்டாத உயரத்திற்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

1987 ம் ஆண்டு ''யுனெஸ்கோ'' (UNESCO) வும் இதனை புராதன சின்னமாக அறிவித்ததால் உலக அதிசயமாக முடிசூடியது.

ஆனாலும், இதன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லையென்றாலும் கூட ஒன்பதாமிடத்தில் இருக்கும் ராகுவின் பார்வை வக்கிரமாகவும் 10 ம் இடத்தில் இருக்கும் கேதுவின் பார்வை நீச்சமாகவும் இருப்பதால் ஆண்டுக்கு கால் அங்குலம் என்ற அளவில் மெதுவாக சரிந்து கொண்டு வருகிறதாம்.

இப்படியே போனால் ''செத்தவனுக்கு செய்வினை வைத்த கதை'' யாக மாறி விரைவிலேயே எள்ளும் எண்ணெய்யும் இறைத்து திதி கொடுக்க வேண்டி வருமோ என்று பயந்து போன தொழில் நுட்ப வல்லுநர்கள் ''ரிஸ்க் எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி'' என்று 10 வருடம் தொடர்ந்து ரிஸ்க் எடுத்து புதுவகையான சிமெண்டெல்லாம் போட்டு பரிகார பூஜையெல்லாம் நடத்தியதின் விளைவு இப்போது பில்லடிங் கொஞ்சம் ஸ்ட்ராங்!

indian great scientist Tower of Pisa

என்றாலும், நம்ம ஊரு ''வாஸ்து'' நிபுணர்களிடம் ஒரு வார்த்தை கூட கலந்தாலோசிக்கவில்லை என்பதால் இப்போது ''நித்திய கண்டம் பூரண ஆயுசு'' என்று இருக்கும் இந்த பில்டிங் விரைவிலேயே தன் பில்டப்பை மாற்றி இன்னும் நூறு ஆண்டுகளில் ''நித்திய ஆயுசு பரிபூரண கண்டம்'' என்று ஆகும் நாள் தொலைவில் இல்லை என்றே கருதுகின்றனர்.

எது எப்படியோ ''அடுப்புல கைய விடப்போய் கடைசியில் இடுப்பு வெந்து போன'' கதைபோல் ஆகாமல் நம்ம ஊரு அரசியல்வாதிகளைப் போல குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டாமல் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய பிராத்தனை.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. பதிவை ரசித்து படித்தேன் நண்பரே இருந்தாலும் செ.ரா.வை இப்படி கேவலப்படுத்தக்கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேவலப்படுதுகிறேனா? ... ஐயகோ இது என்ன அநியாயம் .... பைசாவை நைசாக தூக்கி நிறுத்தி முன்னைப்போல் பெயர் எடுத்துவிடுவார் என்று உங்களுக்கு அவர் மீது பொறாமை ... அதனால்தான் என்மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள் ...

   நீக்கு
 2. பதிவை இரசித்தேன். வைகைப் புயல் வடிவேலுவின் 'பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு' என்ற புகழ் பெற்ற நகச்சுவை பைசா நகர கோபுரத்திற்கு பொருந்துகிறது என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகை தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. தங்களின் கருத்துகளுக்கு நன்றி நண்பரே !!!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருக நண்பரே! தங்கள் கருத்து மனதிற்கு மகிழ்சியை தருகிறது... நன்றி!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.