"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Master gland - Hypophysis.

பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Master gland - Hypophysis.

Pituitary Gland - Hypophysis.

[Part - 3]

பிட்யூட்டரி சுரப்பியின் முன்புற கதுப்பான ''அடினோ ஹைப்போபைஸிஸ்'' ல் சுரக்கும் சுரப்பில் உள்ள 5 விதமான ஹார்மோன்களை பற்றி முன்பு பார்த்தோம். இனி பின்புற கதுப்பான ''நியூரோ ஹைப்போபைஸிஸ்''  பற்றி பார்ப்போம்.

இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இந்த சுட்டியை செல்லமாய் தட்டுங்க

>>பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis. Part - 1<<

பிட்யூட்டரி சுரப்பி.

ஹைப்போபைஸிஸ்.

நியூரோஹைப்போபைஸிஸ் இரு விதமான ஹார்மோன்களை சுரக்கிறது. அவையாவன -

 • ADH என்னும் வாஸோபிரஸின் அல்லது ஆண்டிடையூரிட்டிக் ஹார்மோன்.
 • ஆக்ஸிடோசின்.

வாஸோபிரஸின் அல்லது ஆண்டிடையூரிட்டிக் ஹார்மோன். [ADH] :- இந்த ஹார்மோனானது சிறுநீரக நாளங்களில் அதிகப்படியாக வெளியேற்றப்படும் நீரை கட்டுப்படுத்தி அந்த நீரை  மீண்டும் உடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கிறது.

இதனால் உடலில் அதிகப்படியான நீர் இழப்பு தடுக்கப்படுகிறது. உடலில் தண்ணீரின் அளவை இது சமன்படுத்துகிறது.

இந்த ADH ஹார்மோன் குறைவாக சுரந்தால் ஒருவருக்கு அதிக அளவில் சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும். அதிக அளவில் சிறுநீர் கழிப்பதை ''பாலியூரியா'' என்பர். இக்குறைபாடு ''டயாபடீஸ் இன்சிபிடஸ்'' (Diabetes insipidus ) எனப்படும். தமிழில் இதனை ''சர்க்கரையில்லா நீரழிவு'' என குறிப்பிடுகின்றனர். மேலும் இது ரத்த அழுத்தத்தை சமன்படுத்தும் வேலையையும் செய்கிறது.

ஆக்ஸிடோசின்:- நியூரோஹைப்போபைஸிஸ் - ல்  உள்ள இரண்டாவது ஹார்மோனான இது பெண்களுக்கு குழந்தை பிறப்பின்போது கருப்பை சுருங்கி விரியும் தன்மையை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை பிறந்த பின்பு பால்  சுரப்பிகளில் பாலை தேவையான அளவில் கட்டுப்படுத்தி வெளியேற்றும் வேலையையும் இந்த ஹார்மோன் செய்கிறது.

பிட்யூட்டரி சுரப்பி பற்றிய பொதுவான சில தகவல்கள் :-  பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை குறைவாக சுரந்தால் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவ்வாறு ஹார்மோன் குறைவாக சுரப்பதை ''ஹைப்போ பிட்யூட்டரிசம்'' என அழைக்கின்றனர்.

Pituitary Gland

சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே பிட்யூட்டரியானது சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தால் இந்த பிரச்னை வரும். அல்லது மூளையில் கட்டிகள் ஏதாவது இருந்தாலோ அல்லது ஏதாவது தொற்றுக்கிருமி பாதிப்பு ஏற்பட்டாலோ ஹார்மோன் குறைவாக சுரக்கும் பிரச்சனை உண்டாகலாம். கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் தவறான சிகிச்சை மூலமாகவும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பிட்யூட்டரி சுரப்பி குறைவாக ஹார்மோனை சுரந்தால் பசியின்மை, உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த குறைவு ஏற்படுவதோடு பெண்களுக்கு பூப்படைதல் தள்ளிப்போவதோடு மாதவிடாய் சுழற்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக ஹார்மோனை சுரந்தால் இரத்த அழுத்தம், தலைவலி அதிகரிப்பதோடு பார்வைக்குறைபாடும் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும். இன்னும் பலவித பாதிப்பையும் ஏற்படுத்தும்.

பிட்யூட்டரி அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் தலைமை சுரப்பி என்பதால் இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பிற அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, காலம் தாழ்த்தாமல் நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு சரியான சிகிச்சை அளிப்பதற்காக பயிற்சி பெற்றுள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடனே சிகிச்சையை எடுத்துக்கொள்வது சிறப்பு.

பிட்யூட்டரி சுரப்பியில் பொதுவாக கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. தலையில் ஏற்படும் காயங்களாலும் நாம் வியாதிகளுக்காக உட்கொள்ளும் சிலவகை மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளாலும் கூட  கட்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

pituitary tumors

இந்த கட்டிகள் பெரும்பாலும் புற்றுநோய் கட்டியாக உருமாறும் வாய்ப்பு குறைவு என்றாலும் இக்கட்டிகள் பிட்யூட்டரியின் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கலாம். சிலநேரங்களில் இக்கட்டிகள் பெரிதாக வளர்ச்சியடைந்தால் மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி உடலுறுப்புகளின் இயக்கங்களை பாதிக்கும். இந்த கட்டிகளை தவிர பிட்யூட்டரியில் ''பிட்யூட்டரி அப்போபிலேக்ஷன்'' என்னும் பிரச்சனையும் ஏற்படுகிறது.

இந்த பிட்யூட்டரி சுரப்பி நேர்த்தியாக வேலை செய்ய வேண்டுமெனில் உணவில் ப்ரோட்டீனுடன் வைட்டமின் A , வைட்டமின் D, வைட்டமின் E முதலிய சத்துக்கள் இடம்பெறவேண்டியது அவசியம்.

பிட்யூட்டரி சரியாக இயங்குவதற்கு தானிய உணவான கோதுமையோடு பீட்ரூட், உருளைக்கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும், கொய்யா, பப்பாளி, அன்னாசி முதலிய பழவகைகளும், காலிபிளவர், முட்டைக்கோஸ், கீரைவகைகளுடன் நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளை தொடர்ந்து பயன்படுத்தி வர தடையில்லா ஆரோக்கியத்தை தலைமையகம் பெறும் என்பது உறுதி.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் , கருத்துகளுக்கும் நன்றி!

   நீக்கு
  2. அருமையான தகவல், இந்துக்களின் வழிபாடு முறைகள் ஆன கும்பிடுதல்களை நெற்றி மையம், கழுத்து மற்றும் தொண்டைக்குழி மற்றும் மார்பு மையம் என தினசரி பல முறை அழுத்தம் கொடுத்து செய்வதினால் ஏற்படும் பலன்கள் பற்றி தேடும் போது உங்களின் அருமையான தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது! மிக்க நன்றி ! நீங்களே இந்துக்களின் கும்பிடுதல்கள் (3 ஞான கேந்திரத்தில்) மற்றும் நமஸ்கரித்தல் (3 சக்தி கேந்திரங்கள்) முறைகளால் ஏற்படும் பலன்கள் பற்றி எழுதலாமே ?

   நீக்கு
  3. இந்த பதிவு தங்களுக்கு பயனுடையதாக அமைந்தது மகிழ்ச்சி. மேலும் தங்களின் கருத்துக்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அறிவியலிலும், ஆன்மீக தத்துவம் மற்றும் அது சார்ந்த கருத்துக்களிலும் அதிக அனுபவம் உண்டு என்பதால் அவசியம் எழுதுகிறேன். தங்களின் கோரிக்கைகளுக்கு பணிவான நன்றிகள் அய்யா!!!

   நீக்கு
 2. ஆன்மீக அறிவியலில் நாட்டம் கொண்ட நான், இப்பதிவின் மூலம் பல தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரி!!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.