"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் - biodata.

எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் - biodata.

எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்.

Nobel Achievers - biodata.

உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவது "நோபல் பரிசு". இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளியல் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்குபவரை கவுரவிக்கும் முகமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு இது.


இன்றயை பதிவில் மருத்துவத்திற்காக முதல் நோபல் பரிசு பெற்ற "எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்" பற்றி பார்ப்போம்.

எமில் அடால்ஃப் - வாழ்க்கை குறிப்பு.

பெயர் :- எமில் அடால்ஃப் வான் பெர்ரிங். (Emil Adolf von Behring).

பிறப்பு :- மார்ச் 15, 1854 ம் ஆண்டு போலந்து நாட்டிலுள்ள "ரோசன்பெர்க்" (Rosenberg ) மாவட்டத்தில் பிறந்தார்.

தந்தை :- ஜார்ஜ் அகஸ்ட் பெஹ்ரிங் (Georg August Behring ).

தாயார் :- அகஸ்டின் பெஹ்ரின் (Augustine Behring).

உடன் பிறந்தவர்கள் :- இவருடன் பிறந்தவர்கள் 12 பேர். இவரையும் சேர்த்து மொத்தம் 13 பேர். 13 பேர்களில் இவர் ஐந்தாவது குழந்தை. ஆனால் நம்முடைய கதாநாயகரின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவியே "அகஸ்டின் பெஹ்ரின்". இந்த அகஸ்டின் பெஹ்ரினுக்கு நம் கதாநாயகர் மூத்த மகன்.

மனைவி :- எல்ஸ் பெர்ன்ஹார்டின் ஸ்பினோலா. (Else Bemhardine Spinola).

Nobel Achievers

குழந்தைகள் :- 
 • ஹான்ஸ் வான் பெஹ்ரிங். (Hans von  Behring).
 • ஃபிரிட்ஸ் வான் பெஹ்ரிங். (Fritz von  Behring).
 • எமில் வான் பெஹ்ரிங். (Emil von  Behring).
 • ஓட்டொ வான் பெஹ்ரிங். (Otto von  Behring).
- என்ற நான்கு மகன்கள்,
 • எம்மா வான் பெஹ்ரிங். (Emma von  Behring).
 • எமில் அடோல்ஃப் வான் பெஹ்ரிங். (Emil Adolf von  Behring).
- என்ற இரண்டு மகள்கள்.

தேசியம் :- ஜெர்மனி (German).

கல்வித்தகுதி :- பெர்லினிலுள்ள இராணுவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, ஹம்போல்ட் பல்கலைக்கழகம்.

பணி :- உடல் இயக்கவியல் மற்றும் நோய் எதிர்ப்பியல்.

பணிபுரிந்த இடம் :- ஹாலே - விட்டன்பெர்க் பல்கலைக்கழகம் (University of Halle). மற்றும் மார்பர்க் பிலிப்ஸ் பல்கலைக்கழகம். (Pilipps University of Marburg).

பிற திறமைகள் :- மிக சிறந்த கட்டுரை எழுத்தாளர்.

உறுப்பினர் பதவி :-

 • அகாடமி ஆஃப் யூஸ்ஃபுல் சயின்ஸ்.
 • அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமி.

விருதுகள் :- கேமரூன் பரிசு (1894) மற்றும் நோபல் பரிசு (1901).

நோபல் பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டு :- 1901 ம் ஆண்டு மருத்துவத்திற்கான சேவையை பாராட்டி இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு பெற்ற பெருமை இவரையே சாரும்.

நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு :- "சீரம்" சிகிச்சைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொண்டை அடைப்பான் அல்லது தொண்டை அழற்சி நோய் என்று சொல்லப்படும் "டிப்தீரியா" (diphtheria) மற்றும் டிப்தீரியா தடுப்பு மருந்து (diphtheria antitoxin /serum) கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அளித்து கவுரவிக்கப்பட்டது.

நோபல் பரிசு வகை :- மருத்துவத்திற்கான நோபல் பரிசு.

மறைவு :- மார்ச் 31, 1917 ம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள மார்பர்ஃக் (Marburg) என்னும் இடத்தில் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 63.

மரணத்திற்கான காரணம் :- "நிமோனியா" நோய் தாக்குதல்.

Emil Adolf Von Behring Grave Memorial

இவர் தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக ஆரம்பம் முதலே இராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்பை தொடர்ந்ததால் மருத்துவப்படிப்பை முடித்தபின் பன்னெடும்காலம் இராணுவ மருத்துவ சேவையில் இணைந்து பணியாற்றி வந்தார்.

பொதுவாக பல நோய்கள் வைரஸ் மற்றும் நுண்ணுயிரிகளாலேயே ஏற்படுகின்றன. அவ்வேளையில் நம் உடல் அந்த வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு ஏதுவாக தற்காப்பு நடவடிக்கையாக தம் உடலில் எதிர்ப்பு ஆன்டிபாடி (Antibody) அணுக்களை உற்பத்தி செய்கின்றன.

இவ்வாறு உருவாகும் ஆன்டிபாடி அணுக்களை இரத்த பிளாஸ்மா மூலம் பிரித்தெடுத்து அதை நோயுற்ற பிற உடலுக்குள் செலுத்துவதன் மூலம் நோயுற்றவரை எளிதாக வைரஸ் பாதிப்பிலிருந்து குணப்படுத்திவிட முடியும் என்பதனை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார்.

இவருடைய இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் இவருக்கு மிகுந்த பாராட்டை பெற்றுத்தந்தன.

🔺🔻🔺🔻🔺🔻🔺🔻

          மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற "எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்" ஐ பற்றி அறிந்துகொண்ட நீங்கள்... உலகில் அமைதியும் சமாதானமும் செழிக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்த ஒரு மனிதரைப் பற்றி இதற்கு முன் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?!!... இல்லையெனில், அவரைப்பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை தட்டி அறிந்துகொள்ளுங்கள்.


💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

10 கருத்துகள்

 1. சிறப்பான தகவல்கள். 12 பேரில் ஐந்தாவது. அப்பாடி.

  தொடரட்டும் நோபல் சாதனையாளர்களின் விவரங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே !! தங்களின் கருத்து பதிவிற்கு நன்றி !!!

   நீக்கு
 2. தகவல்கள் தொடர்ந்து வரட்டும் நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. எங்கள் பொது அறிவைப் புதுப்பிக்கும் தங்கள் தகவல்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் ... கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி நண்பரே !...

   நீக்கு
 4. தகவல்கள் அருமை. தொடருங்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே !! வருகைக்கும் ... தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி நண்பரே !...

   நீக்கு
 5. தொண்டை அடைப்பான் என்று சொல்லப்படும் Diphtheria வுக்கு டிப்தீரியா தடுப்பு மருந்து கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்ற Dr எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் அவர்கள் நிமோனியா நோய் தாக்கி இறந்தது துரதிர்ஷ்டமே. அவர் இருந்திருந்தால் அதற்கும் மருந்து கண்டுபிடித்திருப்பார்.
  அருமையான தொடர். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே !!! அன்றைய நிமோனியா வைரஸ்களின் லேட்டஸ்ட் அப்டேட்தான் இன்றைய கொரானோ வைரஸ் என்கிறார்கள். அவர் இன்று இருந்திருந்தால் கொரானோவிற்கு நிச்சயம் மருந்து கண்டுபிடித்திருப்பார் என்றே தோன்றுகிறது. தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி நண்பரே!!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.