header ads

header ads

சுருட்டை விரியன் - Saw-scaled viper.

Saw-scaled viper.

       பொதுவாகவே பாம்பென்றால் எல்லோருக்குமே நடுக்கம்தான். அதிலும் விஷ பாம்பென்றால் கேட்கவே வேண்டாம்....  இந்தியாவில் காணப்படும் ஆபத்தான நான்கு பெரிய விஷ பாம்புகளில்  "சுருட்டை விரியன்Curuttai viriyan (Saw-scaled viper) பாம்பும் ஒன்று. இந்த பதிவில் அதுபற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.


சுருட்டை விரியன்.

பெயர் :- சுருட்டை விரியன் [Saw-scaled viper].

தினை :- விலங்கு. (animal).

தொகுதி :- முதுகுநாணிகள். (Chordate).

துணைத்தொகுதி :- முதுகெலும்பிகள். (vertebrate).

வகுப்பு :- ஊர்வன. (reptile).

தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான் மற்றும் ஆப்பிரிக்காவின் வறண்ட பிரதேசங்களிலும் காணப்படுகின்றன.

வரிசை :- செதிலுடைய ஊர்வன [Squamata].

துணைவரிசை :- பாம்புகள்.

குடும்பம் :- நச்சுப்பாம்புகள். [Viperidae].

பேரினம்:- Echis.

இனம் :- E. carinatus.

வகைகள் :- இது Pitless viper வகையை சேர்ந்தது.

பெயர்க்காரணம் :- எதிரிகளால் தனக்கு ஆபத்து வருகிறது என உணரும் தருணத்தில் எதிரிக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக உடலை 8 போன்ற வடிவத்தில் சுருட்டிக்கொண்டு உடலை ஒன்றோடொன்று உரசி ஒருவிதமான ஒலியை எழுப்புவதால் இதற்கு தமிழில் "சுருட்டை விரியன்" Curuttai viriyan என பெயர் ஏற்பட்டது.

       ஆனால், ஆங்கிலத்தில் இதற்கு Saw-scaled viper என்று பெயர். "saw" என்றால் ரம்பம். இதன் உடலின் மேலுள்ள நிறம் மற்றும் டிசைன் அமைப்பு பார்ப்பதற்கு வெட்டும் ரம்பம் போலவே இருப்பதால் இதற்கு Saw-scaled viper என பெயர்வைத்துவிட்டனர்.

snake-for-saw-scaled-viper

வேறு பெயர்கள் :- புல் விரியன், சிறு விரியன், ரம்பச்செதில் விரியன்,   வாள்செதில் விரியன், ஊது சுருட்டைகுறட்டை விரியன், கம்பள விரியன்.

உணவு :- எலிகளும், தவளைகளும்தான் இவைகளின் பிரதான உணவுகள். பல்லி, ஓணான், தேள்கள், பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். பெரும்பாலும் இரவில்தான் வேட்டையாடும்.

இனப்பெருக்கம் :-  இவைகள் குட்டிகள் போட்டு தன் இனத்தை பெருக்குகின்றன. 4 முதல் 8 வரையிலான குட்டிகளை ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலுள்ள இடைப்பட்ட காலங்களில் ஈனுகின்றன.

வாழிடம் :- வறண்ட நிலப்பகுதி, மணற்பாங்கான நிலப்பகுதி, பாலைவனம் மற்றும் முட்புதர்கள் நிறைந்த பகுதிகளிலும் இவைகள் வாழ்கின்றன. பெரும்பாலும் பாறைக்கடியிலும், மணலுக்கடியிலும் தன் உடலை மறைத்துக்கொள்ளும் தன்மை உடையவை.

உடலமைப்பு :-  விரியன் பாம்புகளில் மிகவும் சிறியது சுருட்டை விரியன் பாம்புதான். ஆனால் ஆபத்தில் எந்த குறைவும் இல்லை. இது அடர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும். உடலின் மேல் புறத்தில் வளைவு வடிவங்கள் காணப்படும். இதன் தலையின் மேல்புறம் அம்பு போன்ற வடிவம் காணப்படும்.

       இது சுமார் இரண்டடி நீளம் வரை வளரக்கூடியது. மற்ற பாம்புகளைப்போல் நேராக செல்லாமல் பக்கவாட்டில் (side-winding) மிக வேகமாக நகர்ந்து செல்லும் இயல்புடையது. தலை கழுத்தைவிட பெரியது, தலை முக்கோண வடிவம் கொண்டதாக இருக்கும். தலையின் மேற்பகுதியில் செதில்கள் சிறியதாகவும், நெருக்கமானதாகவும் அமைந்துள்ளன, வால் மெல்லியதாகவும் சிறியதாகவும் இருக்கும். மரங்களிலும் நன்றாக ஏறும்.

saw-scaled_viper_snake_pic


வாழிடம் :- சம வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும், புதர் செடிகளிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவைகள் இரவில்தான் வெளியில் வருகின்றன.

உணவு :- எலிகள், தவளைகள் முதலிய சிறு உயிரினங்கள்.

விஷத்தன்மை :- இதன் விஷத்தால் முதலில் பாதிக்கப்படுவது நம்முடைய இரத்தமண்டலம்தான். இதன் விஷம் இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் திறன் படைத்தது. கொடிய விஷம் கொண்ட இப்பாம்பு தீண்டினால் இரத்தம் நீர்த்துப்போகும். இது கடித்தால் கடித்த இடம் யானைக்கால் வீங்குவது போல வீங்கிவிடும். விரைவாக சிகிச்சையை தொடங்காவிடில் மரணம் தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிவிடும்.

       இதன் தாக்குதலில் பல மனித உயிர்கள் பலியாகின்றன என்பது வேதனையளிக்கும் தகவல்.

முதலுதவி :- சுருட்டை விரியன் கடித்தால் எக்காரணம்கொண்டும் கடிவாயின்மேல் கட்டுப்போடக்கூடாது. ஏனெனில் இதன்விஷம் வேறெங்கும் செல்லமுடியாமல் ஒரே இடத்தில் தங்கி விஷத்தின் வேகத்தால்  சம்பந்தப்பட்ட உறுப்பு முழுவதுமாக சிதைத்துவிடும். அந்த உறுப்பை உடலிலிருந்து அகற்றும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே கட்டுபோடுவதை தவிர்க்க வேண்டும். கடிவாயில் கத்திக்கொண்டு கீறவும் கூடாது. காரணம் அது ஆறாத புண்களை ஏற்படுத்திவிடும்.

       இந்த விரியன் வகை பாம்புகள் எவ்வளவு ஆபத்தானது என்பதனை "விதி முடிந்தவனைத்தான் விரியன் கடிக்கும்" என்னும் பழமொழி (Proverb) நன்கு உணர்த்துகிறது. எனவே இப்பழமொழி உணர்த்தும் உண்மைகளை கருத்தில்கொண்டு எச்சரிக்கையாக இருப்போம் ...


கருத்துரையிடுக

8 கருத்துகள்

 1. படங்களும், விபரங்களும், முடிவில் சொன்ன பழமொழியும் என்னை பயமுறுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக !!! பழமொழியை கண்டு பயப்பட வேண்டாம் ... இது பழைய பழமொழி .... இப்போது இதற்கு விஷ முறிவு தடுப்பூசி வந்தாகிவிட்டது ... எனவே பழமொழி காலாவதியாகிவிட்டது. !!!

   நீக்கு
 2. பார்த்தாலே பயம் கொள்ள வைக்கிறது...

  தகவல்கள் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வருக ... வருகைக்கு நன்றி நண்பரே ... "பார்த்தாலே பயம் கொள்ள வைக்கிறது" என்பது உண்மைதான் .... ஆனால் இதே பயம் பாம்புகளுக்கும் ஹெவியாக இருக்கத்தான் செய்கிறதாம் ... பாம்புகளெல்லாம் ஒன்றுசேர்ந்து "இந்த மனிதர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது" என்று புலம்பிக்கொண்டு திரிவதாக கேள்வி ... ஏனென்றால் பாம்பிடம் கடிபட்டால் நாம் ௨யிர் பிழைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது ... அனால், நம்மிடம் அடிபட்டால் பாம்புகள் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை !!! ....

   நீக்கு
 3. ஒரே பாம்பு வகையா வருதே! :) பீதியைக் கிளப்பும் பதிவு!

  தகவல்கள் நன்று. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்ச்சி !!! இந்த வாரம் பாம்பு வாரம் ... எனவே இன்னும் சில நாட்கள் இது தொடரும் நண்பரே !!!

   நீக்கு
 4. விரியன் பற்றிய தகவல்கள் அதுவும் முதலுதவி பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் பயனுள்ளவை. பகிர்ந்தமைக்கு நன்றி! இந்த விரியனின் விஷம் எவ்வளவு வீரியமானது என்பதை சிற்றூர்களில் சண்டை வரும்போது ‘விரியன் புடுங்க’ என்று வசை பாடுவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே ! புதிய தகவல் ஒன்றை சொல்லியுள்ளீர்கள் ... "விரியன் புடுங்க" வசைமொழியை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் ... தங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி !!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.