"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
எபிஃபில்லம் பின் பத்து இனங்கள் - Secondary Top Ten Epiphyllum Specice.

எபிஃபில்லம் பின் பத்து இனங்கள் - Secondary Top Ten Epiphyllum Specice.

Classification of Epiphyllum Species.

பின் பத்து இனங்கள்.

[Part - 4]

          ஆர்க்கிட் ரக கள்ளி வகை தாவரத்திலுள்ள "எபிஃபில்லம்" (Epiphyllum) என்னும் பேரினத்தைப்பற்றி தொடர்ந்து சிலபதிவுகளில் தொடர்பதிவாக பார்த்துவருகிறோம்.

Epiphyllum Specice.

இந்த ஆர்க்கிட் ரக கள்ளிகளில் 10 வகையான பேரினங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவை -

Tamil English
எபிஃபில்லம் Epiphyllum
ஹைலோசீரியா Hylocereeae
அகாந்தோசெரியஸ் Acanthocereus
அபோரோகாக்டஸ் Aporocactus
டிஸ்கோக்டஸ் Disocactus
கிம்னாச்சியா kimnachia
சூடோரிப்சலிஸ் Pseudorhipsalis
செலினிசெரியஸ் Selenicereus
வெபரோசெரியஸ் Weberocereus
ரிப்சாலிஸ் Rhipsalis

இந்த பத்து வகையான பேரினங்களில் முதல் இடத்தைப்பிடித்துள்ள எபிஃபில்லம் (Epiphyllum) என்னும் பேரினத்தைப்பற்றித்தான் தொடர்பதிவாக பார்த்துவருகிறோம்.

  எபிஃபில்லம்.

  எபிஃபில்லம் என்றால் இலையில் பூப்பது என்று பொருள். ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இத்தாவரத்திற்கு இலைகளே கிடையாது. இலைகள்போல் நம் கண்களுக்கு காட்சிதருபவை உண்மையில் இலைகள் அல்ல. அவைகள் இலைத்தண்டுகள்.

  இந்த இலைத்தண்டுகள் நம் கண்களுக்கு இலைகள்போல் காட்சி தருவதாலும். இந்த இலைகளின் விளிம்புகளில் இவைகள் பூப்பதாலும் இதனை இலைகளில் பூக்கும் தாவரம் என்று பொருள்படும்படி "எபிஃபில்லம்" (Epiphyllum) என அழைத்துவந்தனர்.

  அதன்பின் தொடர்ந்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக இலைகள்போல் காட்சிதருபவை உண்மையில் இலைகள் இல்லை என்பதும். அவைகளுக்கு தண்டுகளுடைய தன்மைகளே முழுமையாக இருப்பதால் இவைகள் இலைவடிவிலுள்ள தண்டுகள் என்னும் முடிவுக்கு வந்தனர். எனவேதான் இவைகள் "இலைத்தண்டுகள்" என அழைக்கப்படுகின்றன. எனவே நாமும் இந்த இலைபோன்ற அமைப்பை இலைத்தண்டுகள் என்றே அழைத்துவருவோம்.

  இனங்களும், பண்புகளும்.

  எபிஃபில்லம் என்னும் இந்த பேரினத்தில் 20 வகையான இயற்கையான இனங்கள் மட்டுமல்லாது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட கலப்பினங்களும் உள்ளன.

  20 இயற்கையான இனங்கள்.

  TAMIL ENGLISH
  எபிஃபில்லம் ஆக்சிபெட்டலம் Epiphyllum oxypetalum
  எபிஃபில்லம் கார்டஜென்ஸ் Epiphyllum cartagense
  எபிஃபில்லம் கிரெனாட்டம் Epiphyllum crenatum
  எபிஃபில்லம் குவாத்தமாலென்ஸ் Epiphyllum guatemalense
  எபிஃபில்லம் தோமசியம் Epiphyllum thomasianum
  எபிஃபில்லம் பையூரி Epiphyllum baueri
  எபிஃபில்லம் ஃபைலாந்தஸ் Epiphyllum phyllanthus
  எபிஃபில்லம் லாய் Epiphyllum laui
  எபிஃபில்லம் ஹீக்கரி Epiphyllum hookeri
  எபிஃபில்லம் ட்ரைமெட்ரேல் Epiphyllum trietrale
  எபிஃபில்லம் ஆங்குலிகர் Epiphyllum anguliger
  எபிஃபில்லம் தாமஸ் Epiphyllum thomas
  எபிஃபில்லம் காடடம் Epiphyllum caudatum
  எபிஃபில்லம் கிராண்டிலோபம் Epiphyllum grandilobum
  எபிஃபில்லம் பிட்டேரி Epiphyllum Pittieri
  எபிஃபில்லம் ருப்ரோகோரோனாட்டம் Epiphyllum rubrocoronatum
  எபிஃபில்லம் லிபிடோகார்பம் Epiphyllum lepidocarpum
  எபிஃபில்லம் கொலம்பியன்ஸ் Epiphyllum Columbiense
  எபிஃபில்லம் பூமிலம் Epiphyllum pumilum
  எபிஃபில்லம் கிரிசோகார்டியம் Epiphyllum Chrysocardium

  மேற்கண்ட 20 வகையான இனங்களில் முதல் 10 இனங்களைப்பற்றி பகுதி 3 ல் ஏற்கனவே பார்த்துவிட்டோம். எனவே இந்த நான்காவது பதிவில் அடுத்துள்ள 10 இனங்களைப்பற்றியும் அவைகளின் தன்மைகளைப்பற்றியும் பார்க்க இருக்கின்றோம்.

  இத்தொடரின் முதல் பகுதியை படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க.

  >> குலேபகாவலி - எபிஃபில்லம் - Epiphyllum. [Part - 1] <<.

  எபிஃபில்லம் ஆங்குலிகர்.

  Epiphyllum anguliger.

  பெயர் :- எபிஃபில்லம் ஆங்குலிகர் - Epiphyllum anguliger.

  வேறு பெயர்கள் :- Moon Cactus, Queen of the Night.

  Epiphyllum anguliger

  தாவரத்தின் தன்மை.

  இதன் முதன்மை தண்டுகள் மர தண்டுகள்போல்  கடினமானவை. இத்தண்டுகள் மஞ்சள் கலந்த பச்சைநிறத்தை கொண்டுள்ளன.

  இரண்டாம்நிலை தண்டுகளான இலைத்தண்டுகள் தட்டையானவை. சதைப்பற்றுள்ளவை. இந்த இலைத்தண்டுகள் தாவரத்தின் அடித்தண்டுகளிலிருந்து ஏராளமாக கிளைகின்றன. இவை 1 மீட்டர்  நீளமும் 2 முதல் 6 அங்குல அகலத்துடன் பல நெளிவுகளுடன் காணப்படுகின்றன. இது மீன் எலும்புகள் போல தோற்றமளிப்பதால் இந்த இனமானது "Fish bone cactus" (மீன் எலும்பு கள்ளி) என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.

  மலர்களின் தன்மை.

  இவைகள் இனிமையான வாசனையுடன் இரவு நேரங்களில் பூக்கின்றன. பூக்கள் 10 லிருந்து 20 செ.மீ நீளமும், 7 செ .மீ அகலமும் கொண்டவை. உள்பக்க இதழ்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன. வெளிப்புற இதழ்கள் ஒவ்வொன்றும் 4 முதல் 5 செ.மீ நீளமுடன் மஞ்சள்நிறத்தில் உள்ளன.

  பழங்களின் தன்மை.

  பச்சை நிறமான காய்களையும், மிதமான மஞ்சள் நிறங்கொண்ட பழங்களையும் உற்பத்தி செய்கின்றன. பழங்கள் ஒவ்வொன்றும் 3 முதல் 5 செ. மீ விட்டம் கொண்டவையாக காணப்படுகின்றன.

  பழங்களினுள்ளே மண்ணிலே விதைக்கப்படவேண்டிய ஏராளமான கருமைநிற விதைகள் சதைக்கூழங்களினூடாக புதைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

  Epiphyllum anguliger fruit

  இதில் கலப்பின வகைகளும் உள்ளன. இந்த கலப்பினத்தின் தாவரவியல் பெயர் "செலினி செரியஸ் அந்தோனியானஸ்" (selenicereus anthonyanus).

  selenicereus anthonyanus

  இவைகள் வெள்ளைநிற பூக்களுக்கு பதிலாக வயலட் மற்றும் சிவப்புநிற வெளிப்புற இதழ்களையும் வெள்ளைநிற உள் இதழ்களையும் கொண்டுள்ளன. இது பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பூக்கின்றன.

  💢💢💢💢

  எபிஃபில்லம் தாமஸ்.

  Epiphyllum thomas.

  பெயர் :- எபிஃபில்லம் தாமஸ் - Epiphyllum thomas.

  தாவரத்தின் தன்மை.

  இது இயற்கை சூழலில் சராசரியாக 4 மீ உயரம்வரை வளரும் இனம். ஆனால் வீடுகளில் வளர்க்கும்போது 1 மீ மட்டுமே வளருகிறது.

  Epiphyllum thomas

  பூக்களின் தன்மை.

  25 செ. மீ விட்டமுள்ள கவர்ச்சியான வெண்ணிற பூக்களை பூக்கிறது. பூக்களின் மத்தியில் மெல்லிய மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ளது.

  Epiphyllum thomas fruit

  பழங்களின் தன்மை.

  பழங்கள் சிவப்பு நிறத்தில் சற்று நீள்வடிவில் காட்சியளிக்கின்றன. பழங்களின் மேல் பகுதியில் முற்கள்போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.

  💢💢💢💢

  எபிஃபில்லம் காடடம்.

  Epiphyllum caudatum.

  பெயர் :- எபிஃபில்லம் காடடம் - Epiphyllum caudatum.

  தாயகம் :- இதன் பூர்வீகம் குவாத்தமாலா (Guatemala) மற்றும் மெக்சிகோ (Mexico).

  Epiphyllum caudatum.

  தாவரத்தின் தன்மை.

  முதன்மை தண்டுகள் வலு குறைந்தவை. இரண்டாம்நிலை தண்டுகளான இலைத்தண்டுகள் பசுமையானவை மற்றும் மெல்லியவை. இரண்டடிக்கும்மேல் நீளமானவை.

  மலர்களின் தன்மை.

  குழாய்வடிவ பூந்தண்டுகள் வளைந்த நிலையில் காணப்படுகின்றன. அவைகளில் மிகவும் தூய வெள்ளை நிறத்தில் மிக அழகான பூக்களை பூக்கின்றன.

  💢💢💢💢

  எபிஃபில்லம் கிராண்டிலோபம்.

  Epiphyllum grandilobum.

  பெயர் :- எபிஃபில்லம் கிராண்டிலோபம் - Epiphyllum grandilobum.

  தாவரத்தின் தன்மை.

  இந்த தாவரமானது உறுதியான வேர் அமைப்பை கொண்டுள்ளதால் வீடுகளில் கவலையின்றி வளர்ப்பதற்கு ஏற்ற இனம் இது என்று சொல்லலாம்.

  Epiphyllum grandilobum

  அதுமட்டுமல்லாது நோய் தொற்று மற்றும் பூச்சிகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் திறனும் இதனிடம் உள்ளது. மேலும் வேகமாக வளரும் தன்மையும் உள்ளது. விளிம்புகளில் லேசான பற்கள் போன்ற அமைப்புடன் கூடிய நடுத்தர விட்டம்கொண்ட நீளமான இலைத்தண்டுகளை கொண்டுள்ளன. சிலர் தொங்கும் பூந்தொட்டிகளிலும் இதனை வளர்த்துவருகின்றனர்.

  இதற்கு 65 - 80 % சூரியவெளிச்சம் தேவைப்படுகிறது. சூரிய வெளிச்சம் மட்டுமே தேவை. நேரடியான சூரியஒளி இதனை தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அதிகப்படியான சூரிய ஒளியின் தாக்கத்தால் இதன் இலைகள் எளிதில் கருகலாம்.

  Epiphyllum grandilobum flower

  மலர்களின் தன்மை.

  வெளிர் மஞ்சள்நிற இதழ்களை கொண்டுள்ளன. அற்புதமான வாசத்தையும் கொண்டுள்ளது. பூக்களின் விட்டம் சராசரியாக 7 அங்குலம்வரை உள்ளது.

  பழங்களின் தன்மை.

  அயல்மகரந்த சேர்க்கை ஏற்படும் பட்சத்தில் முட்டை வடிவில் சாப்பிடத்தகுந்த பழங்களை உற்பத்தி செய்கின்றன.

  💢💢💢💢

  எபிஃபில்லம் பிட்டேரி.

  Epiphyllum Pittieri.

  பெயர் :- எபிஃபில்லம் பிட்டேரி - Epiphyllum Pittieri.

  தாவரத்தின் தன்மை.

  மிக ஒடுங்கிய விட்டம் கொண்ட அதேவேளையில் 3 அடிக்கும் நீளமான அமைப்பைக்கொண்ட இலைத்தண்டுகளை கொண்டுள்ளன. பல் விளிம்புகளுடன்கூடிய இலைகளின் விட்டம் சராசரியாக 2 அங்குலம் இருக்கலாம். இலைகள் மட்டுமல்ல மலரின் இதழ்களும் மிக ஒடுங்கிய வடிவம் கொண்டவையாகவே உள்ளன.

  Epiphyllum Pittieri flower

  மலர்களின் தன்மை.

  வெண்மையும் பசுமையும் கலந்த மலர்த்தண்டுகளில் அதே பச்சையையும் வெண்மையும் கலந்த இதழ்களைக்கொண்ட சிறிய மலர்களை கொண்டுள்ளன. மலர்களின் விட்டம் 2 முதல் 3 அங்குலம்வரை உள்ளன.


  Epiphyllum Pittieri fruits

  பழங்களின் தன்மை.

  பழங்கள் இளஞ்சிவப்பு நிறத்துடன் நீள் உருண்டை வடிவத்தை கொண்டுள்ளது.

  💢💢💢💢

  எபிஃபில்லம் ருப்ரோகோரோனாட்டம்.

  Epiphyllum rubrocoronatum.

  பெயர்கள் :- எபிஃபில்லம் ருப்ரோகோரோனாட்டம் - Epiphyllum rubrocoronatum.

  வேறுபெயர்கள் :- எபிஃபில்லம் ஃபைலாந்தஸ் ருப்ரோகோரோனாட்டம்.

  தாயகம் :- கொலம்பியா (Colombia) மற்றும் ஈக்வடார் (Ecuador) பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டது.

  தாவரங்களின் தன்மை.

  இதனை வீட்டின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில்  வளர்க்கலாம். இதனை வளர்ப்பதும், பராமரிப்பதும் மிக எளிது. மிக நீளமான ஒடுங்கிய தொங்கும் இலைகளை கொண்டுள்ளன.


  Epiphyllum rubrocoronatum flower

  மலர்களின் தன்மை.

  மலர்களின் நிறம் வெண்மை. குறுகிய விட்டம்கொண்ட இதழ்களைக் கொண்டுள்ளன. மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது என்னும் கூற்றுக்கிணங்க இதன் பூக்களில் வாசனைகளுக்கு எந்த குறைவும் இல்லை.

  Epiphyllum rubrocoronatum fruit

  பழங்களின் தன்மை.

  இதன் பழங்கள் வரைவரையான தோற்றத்துடன் இளஞ்சிவப்புநிறத்தில் நீள் உருண்டை வடிவத்தை கொண்டுள்ளன. சதைப்பற்று மிகுந்துள்ள இது சிறியரக விதைகளை ஏராளமாக கொண்டுள்ளன.

  💢💢💢💢

  எபிஃபில்லம் லிபிடோகார்பம்.

  Epiphyllum lepidocarpum.

  பெயர் :- எபிஃபில்லம் லிபிடோகார்பம் - Epiphyllum lepidocarpum.

  தாயகம் :- கோஸ்டாரிகா (Costa Rica), பனாமா (Panama).

  தாவரங்களின் தன்மை.

  தாவரத்தின் முதன்மைத்தண்டுகள் உருளை வடிவமானவை. இத்தண்டுகள் 7 லிருந்து 9 அடிவரை நீளம் உள்ளவையாக உள்ளன. இரண்டாம்நிலை தண்டுகளான இலைத்தண்டுகள் தட்டையானவை. வெளிர்பச்சை நிறமானவை. இவைகள் 12 அங்குல நீளமும், 4 முதல் 4.7 அங்குல விட்டமும் கொண்டவையாக உள்ளன. இதன் விளிம்புகள் பற்கள் போன்ற அமைப்புடன் காணப்படுகின்றன.

  Epiphyllum lepidocarpum flower

  மலர்களின் தன்மை.

  இவைகள் நீண்ட புனல்வடிவ வெண்மையான பூக்களை மலரச்செய்கின்றன. பூக்களின் தண்டுகள் 9 முதல் 12 அங்குலம் வரை நீளம் இருக்கின்றன. பூ தண்டுகள் சிவப்பும் பச்சையும் கலந்து உள்ளன. தண்டுகளின் அடிப்பகுதியில் முட்கள் போன்ற செதிள் இழைகள் உள்ளன.

  மலரின் உள்பக்க இதழ்கள் வெண்மையாகவும், வெளிப்பக்க இதழ்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை கலந்த நிறங்களிலும் காணப்படுகின்றன. மலர்களின் விட்டம் 4.5 முதல் 6.5 வரை உள்ளன. இவைகள் இரவில் மட்டுமே மலர்கின்றன.

  Epiphyllum lepidocarpum fruit

  பழங்களின் தன்மை.

  காய்கள் பச்சை நிறங்களிலும், பழங்கள் வயலட் கலந்த சிவப்பு நிறங்களிலும் உள்ளன. இவை 3.5 அங்குல நீளம் கொண்டது. பழங்களின் மேல் ஆங்காங்கே முட்கள் காணப்படுகின்றன.

  💢💢💢💢

  எபிஃபில்லம் கொலம்பியன்ஸ்.

  Epiphyllum Columbiense.

  அறிவியல் பெயர் :- எபிஃபில்லம் கொலம்பியன்ஸ் - Epiphyllum Columbiense.

  தாயகம் :- கொலம்பியா (Colombia) மற்றும் ஈக்வடார் (Ecuador).

  Epiphyllum Columbiense

  தாவரங்களின் தன்மை.

  இத்தாவரம் 1 முதல் 2 மீட்டர் அளவில் நீளமான இலைத்தண்டுகளை கொண்டுள்ளது. இலைபோன்ற இந்த இலைதண்டுகள் மிகவும் நீளமாக இருப்பதால் செடியிலிருந்து தொங்கியபடி காணப்படுகின்றன.

  Epiphyllum Columbiense flower

  மலர்களின் தன்மை.

  மெல்லிய குழாய்போன்ற மலர்த்தண்டுகளை கொண்டுள்ள இத்தாவரங்கள் வெண்மையாகவும் நல்ல வாசனையுடனும்கூடிய பூக்களை உற்பத்தி செய்கின்றன. மலர்கள் 10 செ.மீ நீளமும், 5 செ.மீ விட்டமும் கொண்டுள்ளன.

  Epiphyllum Columbiense fruit

  பழங்களின் தன்மை.

  சிவப்பு நிறத்தில் நீள்வட்ட பழங்களை கொண்டுள்ளன. இது 2 முதல் 4 செ.மீ விட்டம் கொண்டது.

  💢💢💢💢

  எபிஃபில்லம் பூமிலம்.

  Epiphyllum pumilum.

  அறிவியல் பெயர் :- எபிஃபில்லம் பூமிலம் - Epiphyllum pumilum.

  Epiphyllum pumilum

  தாவரங்களின் தன்மை.

  அருகிலுள்ள பெரியமரங்களின்மீது தொற்றிக்கொண்டு சுமார் 16 அடி உயரம்வரை வளரும்தன்மை கொண்டது. முதன்மைத்தண்டுகள் உருளை வடிவமானவை. 2 முதல் 3 மீட்டர் வரை நீளம் கொண்டவை. இரண்டாம்நிலை தண்டுகளான இலைத்தண்டுகள் தட்டையானவை. இவைகள் 1 முதல் 3.5 அங்குலம் வரையில் அகலம் உள்ளவையாக இருக்கின்றன. இதன் விளிம்புகள் அலையலையான தோற்றத்தை கொண்டுள்ளன.

  Epiphyllum pumilum flower

  மலர்களின் தன்மை.

  வெண்மைநிறமான இதன் மலர்கள் நான்கிலிருந்து ஆறு அங்குலம்வரை விட்டத்தைக்கொண்டுள்ளன. கவர்ச்சியான தோற்றத்தையும், ரம்மியமான வாசனையையும் பெற்றுள்ளன.

  Epiphyllum pumilum fruit

  பழங்களின் தன்மை.

  பழங்கள் பளபளக்கும் இளஞ்சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவில் காணப்படுகின்றன.

  💢💢💢💢

  எபிஃபில்லம் கிரிசோகார்டியம்.

  Epiphyllum Chrysocardium.

  தாவரவியல் பெயர் :- எபிஃபில்லம் கிரிசோகார்டியம் - Epiphyllum Chrysocardium.

  தாயகம் :- மெக்சிகோ (Maxico).

  Epiphyllum Chrysocardium

  தாவரத்தின் தன்மை.

  மீன்எலும்பு வடிவ இலைத்தண்டுகளை கொண்டுள்ளன. அனைவராலும் விரும்பப்படுகிற மிகப்பிரபலமான இனம். காரணம் இவைகள் கவர்ச்சிகரமான பெரிய பூக்களை பூக்கின்றன. இவைகள் பொதுவாக தொங்கும்கூடைகளில் வளர்க்கப்படுகின்றன. இதில் தற்போது பலபெயர்களில் பலவகை கலப்பினங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

  மலர்களின் தன்மை.

  இது பெரிய வெண்மைநிற மலர்களை உருவாக்குகின்றன. 25 செ.மீ நீளமும் 25 செ.மீ விட்டமுள்ள புனல்வடிவ வெண்மை நிற மலர்களை கொண்டுள்ளன.

  Epiphyllum Chrysocardium flower

  இவைகள் தவிர இந்த எபிபைலும் இனத்தில் சிற்சில மாற்றங்களுடன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட கலப்பினங்களும் உள்ளன.

  கலப்பினம் அல்லாத அசல் எபிபைலும் இனங்களில் ஓரிரு இனங்களை தவிர்த்து பெரும்பாலும் வெண்மைநிற பூக்களையே பூக்கின்றன. ஆனால் கலப்பினங்களோ பலவண்ணங்களில் பூக்கின்றன.

  கலப்பினங்களில் இரவில் பூக்கும் எபிபைலும் மட்டுமல்லாது பகலில் பூக்கும் எபிபைலும் இனங்களும் ஏராளமாக உள்ளன.

  இதுவரை தொடர்ந்து நான்கு பதிவுகளில் "எபிஃபில்லம்" (Epiphyllum) பற்றிய சில அடிப்படை தகவல்கள் மட்டுமல்லாது அதன் 20 வகையான சிற்றினங்களைப் பற்றியும் அலசிய நாம், இனி பிறிதொரு நல்ல சந்தர்ப்பம் அமையும் பட்சத்தில்  மனிதர்களால் உருவாக்கப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட எபிஃபில்லம் (Epiphyllum) கலப்பினங்களில் மிக முக்கியமான சில இனங்களை பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ள முயற்சி மேற்கொள்வோம்.. நன்றி!!.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. எத்தனை வகைகள்... வியப்பூட்டும் தகவல்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம் ... உண்மைதான்... இயற்கையின் ஒவ்வொரு செதுக்கல்களும் வியப்பூட்டுவதாகவே இருக்கின்றன!!!

    நீக்கு
  2. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. தகவல்கள் பிரமாதம். ஒன்று கிவ்வி பழம் போல இருக்கு, மற்றொன்றுன் ட்ராகன் ஃப்ரூட் (தாமஸ்) போன்று இருக்கு மற்றொன்று அல்லிப் பூ போல, ஜம்பக்காய் போல ....

   இயற்கை இயற்கைதான்...அதை அறிய ஒரு பிறவி போதாது.

   கீதா

   பதிலளிநீக்கு
  3. ஆம் .. இயற்கைக்கு நிகர் இயற்கைதான் .... தங்களின் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி சகோதரி!!!

   பதிலளிநீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.