"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பிறையாசனம் - Pirai Asana - Arc of the Moon Pose.

பிறையாசனம் - Pirai Asana - Arc of the Moon Pose.

பிறையாசனம்.

Pirai Asana.

மனித உடல் நோயின்றி வாழ கடின உழைப்பு அவசியம். முன்பெல்லாம் அனைவருக்குமே கடின உழைப்பு இருந்தது. இதனால் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ உழைப்பு என்றாலே அது பலபேருக்கு கடினமானதாக இருப்பதால் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிவிட்டது..

எனவே இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் திரும்ப பெறவேண்டுமெனில் உழைப்புக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இங்கேதான் நமக்கு கைகொடுக்க வருகிறது உடற்பயிற்சி.

பரபரப்பும் மன அழுத்தமும் மலிந்துகிடக்கும் இவ்வேளையில் வெறும் உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதோடு நிறுத்திவிடாமல் மனதிற்கும் பயிற்சியளிக்க வேண்டியிருப்பதால் இக்கட்டான இந்த சூழ்நிலையில் நமக்கு கைகொடுக்க வருகிறது பரபரப்பில்லாமல் நிதானமாக செய்யப்படும் யோகாசன பயிற்சிகள்.

யோகாசன பயிற்சியில் பல கடினமான பயிற்சிகள் இருந்தாலும் ஆரம்பகட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி செய்வதற்கென சில எளிமையான பயிற்சிகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் "பிறையாசனம்" என்னும் பயிற்சியாகும். இந்த பிறையாசன பயிற்சியில் உடல் பிறை வடிவில் அமைவதால் இது பிறையாசனம் என அழைக்கப்படுகிறது.

வாருங்கள் பிறையாசனம் பயிற்சி செய்யும் விதத்தை தெரிந்து கொள்ளலாம்..

Arc of the Moon Pose.

செய்முறை.

இரு கால்களுக்கிடையேயும் சுமார் இரண்டடி இடைவெளி இருக்கும்படி கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நேராக நிற்கவும். பின் இருகைகளையும் தலைக்கு மேலாக நேராக உயர்த்தவும்.

அதன்பின் கைகளையும் உடலையும் மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே பின்னால் மெதுவாக வளைக்கவும். இந்நிலையில் உள்ளங்கை மேலே பார்த்தபடி இருக்கட்டும். 20 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.

Arc of the Moon Pose - Pirai Asana.

இந்நிலையில் பார்ப்பதற்கு உங்கள் உடல் பிறைநிலவு போன்று வளைந்த நிலையில் இருப்பதால் "பிறையாசனம்" என அழைக்கப்படுகிறது. சுமார் 20 வினாடிகள் கழித்து உடலை நேராக்கவும்.

இந்த ஆசனத்தை இரண்டு அல்லது மூன்று தடவை பயிற்சி செய்யவும். இதற்கு மாற்று ஆசனமாக விளங்குவது "பாதஹஸ்த்த ஆசனம்". எனவே பிறையாசன பயிற்சி முடிந்தவுடன் அடுத்த ஆசனமாக பாதஹஸ்த்த ஆசனம் செய்தல் வேண்டும்.

பலன்கள்.

இந்த பிறையாசன பயிற்சியால் முதுகுவலி, கழுத்துவலி நீங்குவதோடு முதுகுத்தண்டு நன்கு நெகிழும் தன்மையை பெறுகிறது. இருதயமும், நுரைஈரலும் நன்கு பலமடைகின்றன. இதன்மூலம் இரத்த அழுத்தம் சீராகிறது. சுவாசமண்டல இயக்கம் மேம்படுகிறது. இடுப்புக்கு நல்ல வனப்பையும், வலிமையையும் அளிக்கக்கூடியது.

குறிப்பு.

நம்மால் எவ்வளவு பின்னால் உடலை வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்தால் போதுமானது. முதுகில் வலி ஏற்படும் அளவில் உடலை வளைத்தல்கூடாது. ஆரம்பத்தில் இதனை பயிற்சி செய்ய கடினமானதாக இருக்கலாம். தொடர்ந்து பயிற்சி செய்ய எளிதானதாக மாறும்.

இந்த ஆசனம் பயிலும்போது கால்மூட்டுகள் வளையாமல் இருக்கவேண்டியது அவசியம்.

கழுத்து பிரச்சனை மற்றும் தோள்வலி உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும்.

💘💘💘💘💘💘💘

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

10 கருத்துகள்

 1. இது ஒரு நல்ல ஆசனம் இடுப்பு முதுகு வலிக்கு நீங்கள் சொல்லியிருப்பது போல். சூரிய நமஸ்காரத்தில் ஒரு ஸ்டெப்பாகவும் வரும். எப்போதுமே முன்னால் குனிந்து செய்யும் யோகா செய்தால் அடுத்து இப்படியான யோகா செய்யச் சொல்லப்படுவதுண்டு
  நல்ல விளக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கும், கருத்துகளுக்கும் நன்றி ... சகோதரி !!

   நீக்கு
 2. சில மாதங்கள் முன் தான் யோகா கற்றேன். இதுவும் செய்வதுண்டு

  விளக்கம் நன்று

  துள்சிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகாவில் பயனடைய வாழ்த்துக்கள்.. கருத்துகளுக்கு நன்றி அய்யா !!!.

   நீக்கு
 3. பெயரில்லா4 மே, 2022 அன்று 7:36 PM

  You made it clear ... thank you!

  பதிலளிநீக்கு
 4. மகனே வணக்கம். தங்கள் மஹோன்னத தகவல்களுடன் கூடிய இடுகைகளுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். நான் கனடாவில் இருந்து எழுதுகிறேன்.நான் மஞ்சள் கரிசாலை, மணல்தக்காளி விதைகள் வாங்க விரும்புகிறேன். இங்கு விளைவிக்க முடியுமோ தெரியாது. பொன்னாங்கண்ணியை நட்டு இரண்டு அல்லது மூன்று முறை பறித்து உண்கிறேன்.அதன் பின் அடுத்த வருடமே நட முடியும். தங்களால் உதவ முடியுமா? எனது அன்பு கலந்த நன்றிகளை தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா... தங்களுடைய அன்புக்கு தலைவணங்குகிறேன். கனடாவிலிருந்து வரும் தங்களின் மடலை கண்டதில் மகிழ்ச்சி.

   மஞ்சள் கரிசாலை மற்றும் மணத்தக்காளி விதைகளை விற்பனை செய்யும் பல நிறுவனங்கள் இங்கு இந்தியாவில் இயங்கிவருகின்றன. நீங்கள் ஆர்டர் செய்தால் உங்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் இவர்கள் பார்சலில் அனுப்பி வைக்கும் விதைகளில் 90% விதைகள் முறையாக முளைப்பதில்லையாம்.

   எனவே, தாங்களே இந்தியா வரும்போது விதைகளை சேகரித்து கையோடு கொண்டுசென்றால்தான் பலனுண்டு என நினைக்கிறேன். அதிலும் முறையாக விதைநேர்த்தி செய்து விதைத்தால்தான் முளைப்புத்திறன் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

   தங்களின் அன்புக்கும், பாசத்திற்கும்... நன்றிகள் பல.

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.