"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நாடுகளும் தலைநகரங்களும் - Countries and their Capitals.

நாடுகளும் தலைநகரங்களும் - Countries and their Capitals.

நாடுகளும் அதன் தலைநகரங்களும்.

          உலகில் மொத்தம் 193 நாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிலர் இது தவறான கணக்கு என்றும், உலகில் 200 க்கும் அதிகமான நாடுகள் உள்ளதாகவும் வாதிடுகின்றனர். இந்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 

Countries map.

அதற்கு காரணம் ஐக்கிய நாடுகள் சபையால் [United nations organisation] அங்கீகரிக்கப்படாத நாடுகள் என சில குட்டிநாடுகள் உள்ளன.

இதற்கு உதாரணமாக உலகின் சக்திவாய்ந்த மனிதருள் ஒருவரான "நித்தியானந்தா" சுவாமிகளைக் குறிப்பிடலாம். சுவாமிகள் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள "கைலாசா" போன்ற இன்னும் அங்கீகரிக்கப்படாத குட்டி நாடுகளால்தான் மேற்குறிப்பிட்ட குழப்பங்களே வருகின்றன.

Kailasa president with flag.
Kailasa president with flag.

இப்படியான "ஜில்ஜில் ஜல்சா" ("ஜில்ஜில் ஜல்சா" என்பது கைலாசா நாட்டின் தலைநகரம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) நாடுகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு ஐக்கிய நாடுகள் சபையால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் என்று பார்த்தால் 193 நாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Parliament of Kailasa.
Open Parliament of Kailasa

சரி, இப்போது நாம் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக உள்ள 193 நாடுகளைப்பற்றியே இங்கு பார்க்க இருக்கிறோம்.

வெறும் நாடுகளின் பெயர்களை மட்டும் பார்த்தால் போதுமா? அதன் தலைநகரத்தைப்பற்றியும் பார்க்க வேண்டாமா? வாருங்கள் அதையும் பார்த்துவிடுவோம்...

Countries and their Capitals.


நாடுகள் Countries தலைநகரம் Capital
அங்கோலா Angola லுவாண்டா Luvanda
அசர்பைஜான் Azerbaijan பாகூ Baku
அமெரிக்கா U.S.A வாஷிங்டன் டி.சி Washington D.C
அயர்லாந்து Ireland டப்ளின் Dublin
அர்மீனியா Armenia ஏரவன் Yereven
அர்ஜென்டீனா Arjentina போனஸ் அயர்ஸ் Buenos aires
அல்பேனியா Albania டிரானா Tirana
அல்ஜீரியா Algeria அல்ஜீயர்ஸ் Algiers
அன்டோரா Andorra அன்டோரா லா வெல்லா Andorra La Velle
ஆண்டிகுவா - பார்புடா Antigua and Barbuda செயின்ட் ஜோன்ஸ் Saint johns
ஆப்கானிஸ்தான் Afghanistan காபூல் Kabul
ஆஸ்திரியா Austria வியன்னா Vienne
ஆஸ்திரேலியா Australia கான்பெர்ரா Canberra
இங்கிலாந்து England லண்டன் London
இத்தாலி Italy ரோம் Rome
இந்தியா India புதுடில்லி New Delhi
இந்தோனேசியா Indonesia ஜகார்த்தா Jakartha
ஈராக் Iraq பாக்தாத் Baghdad
ஈரான் Iran டெஹ்ரான் Teheran
இஸ்ரேல் Israel ஜெருசலேம் Jerusalem
ஈக்வடோரியல் கினியா Equatorial Guinea மலபோ Malabo
ஈக்வாடார் Ecuador க்யுடோ Quito
உக்ரைன் Ukraine கீவ் Kive
உகண்டா Uganda கம்பாலா Kampala
உருகுவே Uruguay மோண்டேவிடியோ Montevodeo
உஸ்பெகிஸ்தான் Uzbekistan தாஷ்கண்ட் Tashkent
எகிப்து Egypt கெய்ரோ Cairo
எத்தியோப்பியா Ethiopia அடிஸ் அபாபா Addis Ababa
எசுவாத்தினி Eswatini இம்பபான் Mbabane
எரித்ரியா Eritrea அஸ்மாரா Asmara
எல் சால்வடார் El Salvador சன் சால்வடார் San Salvador
எஸ்தோனியா Estonia டால்லின் Tallin
ஐக்கிய அரபுக் குடியரசுகள் United Arab Emirates அபுதாபி Abudhabi
ஐஸ்லாந்து Iceland ரெய்க்ஜாவிக் Reykjqvik
ஓமன் Oman மஸ்கட் Muscut
கத்தார் Qatar தோஹா Doha
கம்போடியா Cambodia போனெம் பென்க் Phnom penh
கமரோஸ் Comoros மொரோனி Moroni
கயானா Guyana ஜார்ஜ் டவுன் Geroge Town
கனடா Canada ஒட்டாவா Ottawa
கஸகஸ்தான் Kazakhstan நூர்-சுல்தான் Nur-Sultan
காங்கோ குடியரசு Republic of the Congo பிராசவில்லி Brazzaville
காங்கோ ஜனநாயக குடியரசு DR Congo கின்ஷாசா Kinshasa
காபோன் Gabon லிப்ரவில் Libreville
காம்பியா Gambia பஞ்சுல் Banjul
காமரூன் Cameroon யாவூண்டே Yaounde
கானா Ghana அக்ரா Accra
கியூபா Cuba ஹவானா Havana
கிர்கிஸ்தான் Kyrgyzstan பிஸ்ஹேக் Biskek
கிரிபாடி Kiribati தராவா Tarawa



நாடுகள் Countries தலைநகரம் Capital
கிரீஸ் Greece ஏதென்ஸ் Athens
கிரெனடா Grenada செயின்ட் ஜார்ஜஸ் Saint Geroges
கிழக்கு திமோர் Timor-Leste டிலி Dili
கினியா Guinea கோனக்ரி Conakry
கினி பிசாவு Guinea-Bissau பிசாவு Bissau
குரோசியா Croatia சாகிரேப் Zagreb
குவைத் Kuwait குவைத் Kuwait
கௌதமாலா Guatemala கௌதமாலா சிட்டி Guatemala City
கென்யா Kenya நைரோபி Nairobi
கேப் வேர்ட் Cape Verde பிரய்யா Praia
கொலம்பியா Colombia பொகோடா Bogota
கோட் டிவார் - ஐவரி கோஸ்ட் Cote d'lvoire - Ivory Coast யாமூசூக்ரோ Yamoussoukro
கோஸ்டாரிகா Costa Rica சான் ஜோஸ் San Jose
சமோவா Samoa ஆப்பியா Apia
சவுதி அரேபியா Saudi Arabia ரியாத் Riyadh
சன்மரினோ San Marino சன்மரினோ San Marino
சாடோம் அண்ட் பிரின்சிப் Sao Tome and Principe சாடோம் Sao Tome
சாட் Chad ந்ஜமேனா N'Djamena
சாம்பியா Zambia லுசாகா lusaka
சாலமன் தீவுகள் Solomon Islands ஹோனியரா Honiara
சிங்கப்பூர் Singapore சிங்கப்பூர் Singapore
சியர்ரா லியோன் Sierra Leone பிரீ டவுன் Free Town
சிரியா Syria டமாஸ்கல் Damascus
சிலி Chile சாண்டியாகோ Santiago
சீனா China பெய்ஜிங் Beijing
சுரினாம் Suriname பரமரிபோ Paramaribo
சுவிட்சர்லாந்து Switzerland பெர்ன் Bern
சுவீடன் Sweden ஸ்டாக்ஹோம் Stockholm
சூடான் Sudan கார்டூம் Khartoum
செக்கியா Czechia பராகுவே Prague
செயின்ட் லூசியா Saint Lucia காஸ்ட்ரீஸ் Castries
செயின்ட்கிட்ஸ் நெவிஸ் Saint Kitts Nevis பெஸ்ஸடர் Basseterre
செயின்ட் வின்சென்ட் St Vincent and Grenadines கிங்ஸ்டவுன் Kings Town
செர்பியா Serbia பெல்கிரேட் Belgrade
செனகல் Senegal தாகர் Dakar
சீசெல்ஸ் Seychelles விக்டோரியா Victoriya
சைப்ரஸ் Cyprus நிகோசியா Nicosia
சோமாலியா Somalia மொகடிஷீ Mogadishu
டிரினிடாட்-டொபாகோ Trinidad and Tobago போர்ட் ஆஃப் ஸ்பெயின் Port of Spain
டென்மார்க் Denmark கோபன்ஹேகன் Copenhagen
டொமினிக்கன் குடியரசு Dominican Republic சான்ரோ டொமிங்கோ Santo Domingo
டொமினிகா Dominica ரோஸியு Roseau
டோகோ Togo லோம் Lome
டோங்கா Tonga நுகு அலோஃபா Nuku'alofa
தஜிகிஸ்தான் Tajikistan துஷான்பே Dushanbe
தாய்லாந்து Thailand பாங்காக் Bangkok
தான்சானியா Tanzania டூடுமா Dodoma
துர்க்மெனிஸ்தான் Turkmenistan அஷ்காபத் Ashkhabad
துருக்கி Turkey அங்காரா Ankara
துவாலு Tuvalu புனாஃபுதி FunaFuti


நாடுகள் Countries தலைநகரம் Capital
துனிசியா Tunisia துனிஸ் Tunis
தெற்கு சூடான் South Sudan யூபா Juba
தென் ஆப்பிரிக்கா South Africa கேப் டவுன் Cape Town
தென் கொரியா South Korea சியோல் Seoul
நமீபியா Namibia வின்ட்ஹோக் Windhoek
நிகரகுவா Nicaragua மனாகுவா Managua
நியூசிலாந்து New Zealand வெல்லிங்டன் Wellington
நெதர்லாந்து Netherlands ஆம்ஸ்டர்டாம் Amsterdam
நவ்ரூ Nauru யாரென் Yaren
நேபால் Nepal காட்மாண்டு Kathmandu
நைஜர் Niger நியாமி Niyamey
நைஜீரியா Nigeria அபுஜா Abuja
நோர்வே Norway ஒஸ்லோ Oslo
பங்களாதேஷ் Bangladesh டாக்கா Dhaka
பராகுவே Paraguay அகன்சியான் Aguncian
பல்கேரியா Bulgaria சோஃபியா Sofia
பலாவ் Palau கோரோர் Koror
பனாமா Panama பனாமா நகர் Panama City
பஹ்ரைன் Bahrain மனாமா Manama
பஹாமாஸ் Bahamas நஸ்ஸாவ் Nassau
பாகிஸ்தான் Pakistan இஸ்லாமாபாத் Islamabad
பப்புவா நியூகினி Papua Niugini போர்ட் மோர்ஸ்பி Port Moreshby
பார்படோஸ் Barbados பிரிட்ஜ் டவுன் Bridge Town
புர்க்கினா பாசோ Burkina Faso வாகடூகு Ouagadougou
பிரான்ஸ் France பாரிஸ் Paris
பிரேசில் Brazil பிரேசிலியா Brasillia
பிலிப்பைன்ஸ் Philippines மணிலா Manila
பின்லாந்து Finland ஹெல்சிங்கி Helsinki
பிஜி Fiji சுவா Suwa
புருண்டி Burundi புஜீம்பரா Bujumbura
புருனை Brunei பண்டர் செரி பெகவன் Bandar Seri Begawan
பூட்டான் Bhutan திம்பு Thimpu
பெரு Peru லிமா Lima
பெல்ஜியம் Belgium பிரசெல்சு Brussels
பெலாரஸ் Belarus மின்ஸ்க் Minsk
பெலிஸ் Belize பெல்மோபான் Belmopan
பெனின் Benin போர்டோ நோவோ Porto-Novo
பொலிவியா Bolivia லாபாஸ் Lapaz
போட்ஸ்வானா Botswana கபோரோன் Gaborne
போர்த்துகல் Portugal லிஸ்பன் Lisbon
போலந்து Poland வார்ஸா Warsaw
போஸ்னியா-ஹெர்ஸிகோவினா Bosnia and Herzegovina சரஜீவோ Sarajevo
மங்கோலியா Mangolia உலன்பதார் Ulan Bator
மடகாஸ்கர் Madagascar அன்டானானாரிவோ Antananarivo
மத்திய ஆப்பிரிக்கா Central African பான்குய் Bangui
மலாவி Malawi லிலாங்வே Lilongwe
மலேசியா Malaysia கோலாலம்பூர் Kula Lumpore
மாசிடோனியா North Macedonia ஸ்கோப்ஜே Skopeje
மார்ஷல் தீவுகள் Marshall Islands மஜீரோ Majuro
மாரிடானியா Mauritania நவாக்சோட் Nouak Chott


நாடுகள் Countries தலைநகரம் Capital
மால்டா Malta வலேட்டா Valetta
மால்டோவா Moldova சிசிநவ் Chisinau
மாலத்தீவுகள் Maldives மாலே Male
மாலி Mali பமாகோ Bamako
மியான்மர் Myanmar யங்கோன் Yangon
மெக்ஸிகோ Mexico மெக்ஸிகோ நகர் Mexico city
மைக்குரோனீசியா Micronesia பாலிகிர் Palikir
மொசாம்பிக் Mozambique மொபுடோ Maputo
மொண்டெனேகுரோ Montenegro பத்கரீத்சா Podgorica
மொரிசியஸ் Mauritius போர்ட் லூயிஸ் Port Louis
மொரோக்கோ Morocco ரபாட் Rabat
மொனாக்கோ Monaco மொனாக்கோ Monaco
யேமன் Yemen சனா Sana
ரஷ்யா Russia மாஸ்கோ Moscow
ருமேனியா Romania புகாரெஸ்ட் Bucharest
ருவாண்டா Rwanda கிகாலி Kigali
லக்ஸம்பார்க் Luxenberg லக்ஸம்பார்க் Luxenberg
லாட்வியா Latvia ரிகா Riga
லாவோஸ் Laos வியாணன்டைன் Vientiane
லிச்டென்ஸ்டெயின் Liechtenstein வடூஸ் Vaduz
லிதுவேனியா Lithuania வில்னியஸ் Vilnius
லிபியா Libya திரிபோலி Tripoli
லெசோதா Lesotho மசெரு Maseru
லெபனான் Lebanon பெய்ரூட் Beirut
லைபீரியா Liberia மன்ரோவியா Manorovia
வட கொரியா North Korea பியோங்யாங் Pyongyang
வனுவது Vanuatu விலா Vila
வியட்னாம் Vietnam ஹானோய் Hanoi
வெனிசுலா Venezuela கராகஸ் Caracas
ஜப்பான் Japan டோக்கியோ Tokyo
ஜமைக்கா Jamaica கிங்ஸ்டன் Kington
ஜார்ஜியா Georgia திபிலிசி Tbillisi
ஜிபூட்டி Djibouti ஜிபூட்டி Djibouti
ஜிம்பாவே Zimbabwe ஹராரே Harare
ஜெர்மனி Germany பெர்லின் Berlin
ஜோர்டான் Jordan அம்மான் Amman
ஹங்கேரி Hungary புட்டாபெஸ்ட் Budabest
ஹெய்டி Haiti போர்ட்-அவு-பிரின்ஸ் Port-au-prince
ஹோண்டுராஸ் Honduras டெகுசிகல்பா Tegueigalpa
ஸ்பெயின் Spain மாட்ரிட் Madrid
ஸ்ரீலங்கா Sri Lanka கொழும்பு Colombo
ஸ்லோவாகியா Slovakia பிராட்டிஸ்லாவா Bratislava
ஸ்லோவேனியா Slovenia லுபில்ஜானா Ljubljana
- - - -

சரி, இதுவரையில் ஐக்கிய நாடுகள் சபையால் [United nations organisation] அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளைப்பற்றி அறிந்துகொண்டோம் அல்லவா!!... இதுபோலவே ஐக்கிய நாடுகள் சபையால் [United nations organisation] முறையாக அங்கீகரிக்கப்படாத பல குட்டி நாடுகளும்கூட உள்ளன. அவைகளைப்பற்றி தொடர்ந்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்... நன்றி!!!

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

7 கருத்துகள்

  1. சூப்பர் சிவா சகோ...ஓரளவுக்கு இந்தத் தலைநகரங்கள் ஒருகாலத்தில் ரொம்பவே மனப்பாடமாக இருந்தது எல்லாம் வேலைக்கானத் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொண்ட போது!! இப்பவும் மனதில் இருக்கு. ஆனால் இந்த ஸ்லொவாகியா, ஸ்லோவேனியா இதுக்கெல்லாம் மனசுல நிக்கவே மாட்டேங்குது!

    அது சரி அதென்ன ஜில் ஜில் ஜல்ஸா!! ஹாஹாஹா நித்யானந்தாவிற்கு நீங்களே உருவாக்கிய தலைநகரமா!! ஜல்ஸா ன்ற வார்த்தைய நானும் மகனும் அப்பப்ப பயன்படுத்துவோமாக்கும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல்கள் நானும் சுற்றுலா செல்வதற்கு வழி கிடைத்து விட்டது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி நண்பரே!!! இன்ப சுற்றுலா செல்வதற்கு வழி கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்... அனால் வழிதவறி "உக்ரைன்" பக்கம் சென்றுவிடாதீர்கள்... அங்கு வெடிச்சத்தம் ரொம்பவே உக்கிரமாக இருக்கிறதாம்... இந்திய அரசு அங்குள்ள மாணவர்களை மட்டுமே மீட்பதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது.. அதிலும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது "மோடி" அரசு என்பதால் தங்களை கண்டுகொள்வார்களா என்று தெரியவில்லை.. எனவே மிகவும் கவனமாக இருக்கவும்.
      தங்களின் சுற்றுலா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

      நீக்கு
    2. ஏற்கனவே எனக்கும், மோடிக்கும் ஆகாது இதில் வயிற்றில் புலி"யை கரைக்கிறீர்கள்.

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.