"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அறிந்தும் அறியாத பழமொழிகள் - Known and Unknown Proverbs.

அறிந்தும் அறியாத பழமொழிகள் - Known and Unknown Proverbs.

Known and Unknown Proverbs.

நம் முன்னோர்கள் தங்களின் வாழ்வில் கிடைத்த அனுபவங்களை வேடிக்கையாகவும், விவேகமாகவும் சொல்லிச் சென்ற பண்பட்ட மொழிகளே பழமொழிகள் எனலாம். இவை "பொன்மொழிகள்" என்றும் "பழமொழிகள்" என்றும் காலத்தால் அழியாது நின்று இன்றும் நம் வாழ்விற்கு வளம் சேர்த்து வருகின்றன.

அவ்வாறான விவேகம் மற்றும் நகைச்சுவை பொருந்திய சில பழமொழிகளை தமிழின் சுவையோடு அருந்தி மகிழ்வோம் வாருங்கள்.


அறிந்தும் அறியாத பழமொழிகளை
அறிந்து கொள்வோம் வாருங்கள்.

  • கசடருக்கு இல்லை கற்றோர் உறவு.
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
  • ஓயா கவலை, தீரா வியாதி.
  • கண்மூடி பழக்கம் மண்மூடிப் போகும்.
  • கண்டிப்பு இருந்தால்தான் காரியமாகும்.
  • ஒரு தையல் ஒன்பது தையலை தவிர்க்கும்.
  • ஓடினால் மூச்சு நின்றால் போச்சு.
  • ஓடுகள் விதையை கேடறக் காக்கும்.
  • ஒரு கால் பார்த்தால் புஞ்சை... இரு காலமும் பார்த்தால் நஞ்சை.
  • ஓதும் வேதம் பேதம் அகற்றும்.
  • ஒடுக்கம் சிதம்பரம், ஒடுங்காமை வைகுந்தம்.
  • ஓணான் ஓட்டம் ஒரு முழம் மட்டும்தான்.
  • குட்டன் வீட்டு நாய் கட்டில் ஏறி தூங்கிச்சாம்.
  • ஒட்டகத்துக்கு கல்யாணம் என்றால் கழுதைதான் வந்து கச்சேரி பாடுமாம்.
  • ஒட்ட உலர்ந்த ஊமத்தங்காய் வெட்கம் மறந்து சிரித்ததாம்.
  • எட்டப்பன் தின்றானாம் எள்ளுருண்டை, பொட்டப்பன் தின்றானாம் பொரிஉருண்டை.
  • ஒட்டின வயிறும் உழக்கு பீர் கொள்ளும்.
  • ஒட்டின தேகத்தை தொட்டிலும் கொள்ளும், ஒட்டாத தேகத்தை கட்டிலும் தள்ளும்.
  • ஒட்டுத்திண்ணை நித்திரைக்கு கேடு.
  • ஒடிந்த கோலானாலும்கூட சமயத்தில் ஊன்றுகோலாக உதவும்.
  • ஒண்டவந்த எலி தின்று கொழுத்தது. அதனை அண்டி நின்ற பூனையோ ஆலாய் பறக்கிறது.
  • ஒண்டாதே, ஒண்டாதே ஓரிக்கால் மண்டபமே.. அண்டாதே, அண்டாதே ஆயிரங்கால் மண்டபமே.
  • ஒண்ணாங் குறையாம் வண்ணான் கழுதைக்கு.
  • ஒன்றைப் பெற்றாலும் அதை கன்றாய்ப் பெறு. கன்றைப் பெற்றாலும் அதை நன்றாய்ப் பெறு.
  • ஒண்ணுக்குள்ளே ஒண்ணு இருக்க, எள்ளுக்குள்ளே எண்ணை இருக்க.
  • ஒண்ணுக்குள்ளே ஒண்ணா நின்னு கண்ணுக்குள்ளே மண்ணை போட்டானாம்.

  • ஓரகத்தாள் ஒரு முற்றம்... அவள் நாத்தனாரோ நடுமுற்றம்.
  • ஒத்துக்கு ஏற்ற மத்தளம், நட்டுக்கு ஏற்ற நாட்டியம்.
  • ஒத்தைக்கு ஒரு பிள்ளை என்றால் புத்தி கூடக் கட்டையாக போகுமா?
  • ஓதி பெருத்தாலும் (ஓதி மரம்) உத்திரத்துக்கு ஆகாது.
  • ஓதி பெருத்தென்ன.. உபகாரம் செய்யாதவன் வாழ்ந்தென்ன?!
  • ஒப்புக்கு சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை.
  • ஒரு அப்பம் தின்றாலும் நெய்யப்பமாக திங்க வேண்டும்.
  • ஒரு குருவி இரை எடுக்க ஒன்பது குருவி வாய் திறக்குமாம்.
  • ஒரு நாய் ஊளையிட ஆரம்பிக்க.. முடிவில் ஊரெல்லாம் நாய் ஊளைதான் போங்க.
  • ஒரு பணம் கொடுத்து அழச் சொல்லி.. ஒன்பது பணம்கொடுத்து நிறுத்தச் சொன்னாளாம்.
  • ஒரு பிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம்... அது ஊரையெல்லாம் காட்டிக்கொடுத்ததாம்.
  • ஒரு பிள்ளை பெற்றவளுக்கு சோறு உள்ளங்கையில், நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுவீதியில்.
  • ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன் ஆவானா?
  • ஒரு மிளகுக்காக ஆற்றை கட்டி இறைத்தானாம் வெளுத்தசெட்டி.
  • ஒரு முத்தும் கண்டறியாதவனுக்கு "சொரிமுத்துபிள்ளை" என்று பெயராம்.
  • ஒல்லி நாய் ஒட்டியானத்துக்கு குரைத்ததாம். சல்லி நாய் சட்டிபானைக்கு குரைத்ததாம்.
  • ஒன்றான தெய்வம் உறங்கிக்கிடக்கும்போது பிச்சைக்கு வந்த தெய்வம் போசனத்துக்கு அழுததாம்.
  • ஒன்றும் அற்ற நாரிக்கு ஒன்பது நாள் சடங்கு அதுவும் அற்ற மூதேவிக்கு நாற்பதுநாள் சடங்கு.
  • ஓங்கி அறைய உசுரு இருக்கு, ஆனா ஏங்கி அழத்தான் சீவன் இல்லை.
  • ஓசை காட்டி பூசை செய்து ஆசை காட்டி காசை அள்ளு.
  • ஓடி ஓடி உழக்கு அரிசி உண்பதைவிட உட்கார்ந்து ஆழாக்கு அரிசி உண்பதே மேல்.
  • ஓடிப்போன புருஷன் வந்து கூடிக்கொண்டானாம்.. உடமைமேல் உடமை போட்டு மினுக்கிக்கொண்டாளாம்.
  • ஓடி மேய்ந்த சிறுக்கிக்கு ஒன்றியிருக்க மனம் வருமா?

  • ஓடிவந்து உமிக்காந்தலை மிதித்தாளாம். திரும்பிவந்து தீக்காந்தலை மிதித்தாளாம்.
  • ஓடுகிற தண்ணியை ஓங்கி அடித்தாலும் அது கூடுகிற இடத்தில்தான் கூடும்.
  • ஓடுகிற பாம்பை கையினால் பிடித்து உண்ணுகிற வாயில் மண்ணை பொட்டுக் கொண்டானாம்.
  • ஓணான் கடித்தால் ஒரு நாழிகை. அரணை கடித்தால் அரை நாழிகை.
  • ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும்.
  • ஓணான் வேலிக்கு இழுத்ததாம், தவளை தண்ணிக்கு இழுத்ததாம்.
  • ஓணானுக்கு வேலி சாட்சி, வேலிக்கு ஓணான் சாட்சி.
  • ஓதப் பணம் இல்லை. உட்கார பாய் இல்லை. வாக்காளி உனக்கு எக்காளம் கேக்குதோ? 
  • மரம் வெட்ட கழியாத தச்சனுக்கு மரவட்டை சைஸ்ல எங்கேயோ மச்சமாம்.
  • ஓதின மஞ்சள் உறியிலே இருக்கையில் அடிபட்ட வேதனை என்னதான் செய்துவிடும்?
  • ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.
  • ஓதுவானுக்கு ஊரும் கிடையாது, உழுவானுக்கு நிலமும் கிடையாது.
  • ஓய்ந்த வேளையில் அவிசாரி ஆடினால் உப்பு புளிக்கு ஆகும்.
  • ஓர் ஏர் உள்ளவன் உழுது கெட்டான். நாலு ஏர் உள்ளவனோ நிறுத்திக் கெட்டான், பத்து ஏர்க்காரனோ பாத்து கெட்டான்.
  • ஓரண்டைக் காடு காடும் அல்ல, ஒரு ஏர் உழவு உழவும் அல்ல.
  • ஓரம் சொல்பவன் ஆருக்கும் ஆகான்.
  • ஓரம் வெளுத்தால் ஒருபக்கம் செல்லரிக்கும்.
  • ஓலை டப்பாவ உதறி கடாசு.
  • கக்கி தின்னுமாம் குக்கல் [குக்கல் - நாய்].
  • கக்கின பிள்ளை தக்கெனப் பிழைக்கும்.
  • கங்கை ஆடப் போனவன் கூடவே கடாவையும் கட்டி அழுதானாம்.
  • கச்சேரிக்கு முன்னே போகாதே. கழுதைக்கு பின்னே போகாதே.
  • கஞ்சனுக்கு காசு பெரிது, கம்மாளனுக்கு மானம் பெரிது.
  • கஞ்சி ஊற்ற ஆள் இல்லை என்றாலும், கச்சை கட்ட ஆள் உண்டு.
  • கஞ்சிக் கவலை கடன்காரனுக்கு தெரியுமா?

  • கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம்.
  • கட்டத் துணியும் இல்லை. நக்கத் தவிடும் இல்லை.
  • கட்டப்பாலை முற்றப் பழுக்குமோ?
  • கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம்.
  • கட்டின மாட்டை அவிழ்ப்பாரும் இல்லை. மேய்த்த கூலியை கொடுப்பாரும் இல்லை.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
  • கட்டுக் கலம் காணும், கதிர் உழக்கு நெல் காணும்.
  • கட்டுக்கு கட்டு மாற்றிக் கட்டு.
  • கட்டைக் கலப்பையும் மொட்டைப் பசுவும் காணிக்கு உதவாது.
  • கட்டை கிடக்கிற கிடையைப் பாரு, கழுதை குதிக்கிற குதியை பாரு.
  • கடல் மீனுக்கு நுளையன் இட்டதே பேர்.
  • கடலில் மூழ்கிப்போனாலும் கடனில் மூழ்கிப்போகாதே.
  • கடலை விதைத்தால் கடுத்த உரம்.
  • கடலை விதைப்பது கரிசல் காட்டில்.
  • கடற்கரை தாழங்காய் கீழே தொங்கினால் என்ன? மேலே தொங்கினால் என்ன?
  • கடன் கேட்காமல் கெட்டது. வழி நடக்காமல் கெட்டது.
  • கடன் பட்டு உடன் பட்டு உடம்பை தேற்று. கடன்காரன் கேட்டால் தடியை தூக்கு.
  • கடாவும் கடாவும்  சண்டை போட்டால் நசுங்குவதென்னவோ உண்ணிகள் ரெண்டும்தான்.
  • கழித்த பாக்குக்கூட கொடுக்காத பெரியாத்தாள் கடைத்தெருவரை வந்து வழியனுப்பி வைத்தாளாம்.  
  • கடிதான சொல் அடியிலும் வலிது.
  • கடிய மாட்டுக்கு கம்பு உடையும், கொடிய மாட்டுக்கு கொம்பு உடையும்.
  • கடுக்காய்க்கு அகமும் சுக்குக்கு புறமும் நஞ்சு.
  • கடுகிற்று முடுகிற்று வடுகச்சி கல்யாணம்.
  • கடுங்காற்று மழை காட்டும், கடும்நட்பு பகை காட்டும்.
  • கடு முடுக்கடா சேவகா.. கம்பரிசியடா சம்பளம்.
  • கடை கெட்ட நாய் கல்யாணத்துக்குப் போனதாம். எச்சில் இலை கிடைக்காமல் எட்டி எட்டி பார்த்ததாம்.
  • கடைசி சோற்றுக்கு மோரும், கால்மாட்டிற்கு பாயும் வேண்டும்.

  • அவுசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?
  • அவுசாரி என்று யானை மேல் போகலாம். ஆனால் திருடி என்று தெருவில் போக முடியாது.
  • கண் உள்ள போதே காட்சி, கரும்பு உள்ள போதே ஆலை.
  • கண் ஊனன் கைப்பொருள் இழப்பான்.
  • கண்டது பாம்பு. ஆனால் கடித்ததோ கருக்குமட்டை.
  • கண்டம் இல்லாத எருமை தண்டம்.
  • கண்ட மாப்பிள்ளையை நம்பி கொண்ட மாப்பிள்ளையை கைவிட்டாளாம்.
  • கண்டால் ஆயம். காணாவிட்டால் மாயம்.
  • கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிரை?
  • கண்ணான பேரை எல்லாம் புண்ணாக்கிக்கொண்டு கரும்பான பேரையெல்லாம் வேம்பாக்கிக் கொண்டதுபோல.
  • கண் பெருவிரலை பார்க்கும்போதே கடைக்கண் ஊரெல்லாம் சுற்றிவந்துவிடும்.
  • கணை முற்றினால் கட்டையிலே.
  • கத்தியும், வெண்ணையும் காய்ச்சித்தான் துவைக்க வேண்டும்.
  • கதிகெட்ட மாப்பிளைக்கு எரு முட்டை பணியாரம்.
  • கதைக்கு காலும் இல்லை. கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை.
  • கந்தகப்பொடி கடைக்காரனுக்கு மூக்குப்பொடி வாசனை தெரியுமா?
  • கந்தப்புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை.
  • கம்பளி மூட்டை என்று எண்ணியல்லோ கரடியைக் கட்டிப்பிடித்தானாம்.
  • கரடி கையில் அகப்பட்டவனுக்கு கம்பளிக்காரனை கண்டாலும் பயம்.
  • கம்மாளன் வீட்டு நாய் சம்மட்டிக்கு அஞ்சுமா?
  • கருங்கொல்லன் உலைக்களத்தில் சொறிநாய்க்கு என்ன வேலை?
  • கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும்.
  • கரிச்சுக் கொட்டினால் எரிச்சல் வராதா?
  • கரிசனம் எல்லாம் கண்ணுக்குள்ளே, வஞ்சனையெல்லாம் நெஞ்சுக்குள்ளே.

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. கடலில் மூழ்கினாலும்....
    வேலிக்கு ஓணான் சாட்சி,
    உப்புக்குச் சப்பாணி...
    இது மட்டும்தான் தெரிந்தவை மற்றதெல்லாம் அறியாதவை!!!

    கீதா

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.