"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
உயிரினங்கள் உணர்த்தும் பழமொழிகள் - Proverbs Conveyed By Creatures.

உயிரினங்கள் உணர்த்தும் பழமொழிகள் - Proverbs Conveyed By Creatures.

Proverbs Conveyed By Creatures.

நம்முடைய வாழ்க்கை கடினப்பட்டு நிற்கும் சமயங்களாகட்டும் அல்லது நம் மனம் வழிதடுமாறி கலங்கி நிற்கும் சமயங்களாகட்டும்... கலங்கரை விளக்கமாக நின்று நம்மை நேர்வழியில் அழைத்து செல்பவை நம் முன்னோர்கள் சொல்லிச்சென்ற நீதியுரைகளான பழமொழிகள் மட்டுமே.

என்றோ பேச்சு வழக்கில் சொல்லிச்சென்ற அவர்களின் நீதியுரைகள் இன்றும் அதன் வீச்சு குறையாமல் நம்மை நல்வழிபடுத்தி வருகின்றன என்பது உண்மையில் ஆச்சரியமே!

நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் உணர்த்த நம்மை சுற்றி வாழும் உயிரினங்களையே மேற்கோள்காட்டி உணர்த்தும் பழமொழிகள் கூட தலைமுறை பல கடந்தும் நம்மிடையே உலா வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான சில பழமொழிகளையே நாம் இப்போது இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

உயிரினங்கள் உணர்த்தும் பழமொழிகள்.

 • ஆனை அடி அப்பளம்.
 • அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும்.
 • மரத்தை மறைத்தது மாமத யானை.
 • அட்டைக்கு தெரியுமா கட்டில் சுகம்?
 • முகம் சந்திர பிம்பம். அகம் சர்ப்ப விஷம்.
 • சல்லி கட்டுன மாட்டுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
 • சலுகை உள்ள மாடு படுகை எல்லாம் மேய்ந்ததாம்.
 • சாண் பாம்பு ஆனாலும் முழந்தடி வேண்டும்.
 • சிங்கம் அரசு செய்யும் காட்டில் நரி அம்பலம்  செய்வது போல.
 • சிப்பாய் நாய் துப்பாக்கிக்குப் பயப்படுமா?
 • சீனி கிழங்கு தின்ற பன்றி செவி அறுத்தாலும் நிற்காது.
 • சுட்ட நரியை நாய் புரட்டியது போல.
 • சட்டி திருடும் நாயானாலும் சுண்ணாம்பு கலையத்தை தூக்காது.
 • சுடு தண்ணீரில் விழுந்த பூனை பச்சைத்தண்ணீரைக் கண்டாலும் பயப்படும்.
 • சுண்டெலி சிலம்பம் பல கற்றாலும் யானையை ஜெயிக்க முடியுமோ?
 • பெருங்காயம் தின்ற நாய் போல பல்லிளிக்காதே.
 • சகுனம் சொல்லும் பல்லி கழுநீர் பானையில் விழும்.
 • சட்டி திருடும் நாய்க்கு பெட்டி பணம் எதற்கு?
 • பிள்ளையை பெறச்சொன்னால் பெருமாள்சிலந்தியை பெற்ற கதை.
 • சாகப் போகிற நாயி கூரை மேல ஏறியதாம்.
 • சாதுரியப் பூனை தயிர் இருக்க சட்டியை நக்கியதாம்.
 • புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சிங்கத்துக்கு பிறந்தது சிற்றெறும்பு ஆகுமா?
 • சித்திரை மாதம் சிறந்த மழை இல்லையெனில் வில்லாததை விற்று வெள்ளாடு கொள்ளு.
 • சிரட்டை தண்ணீர் எறும்புக்கு சமுத்திரம்.
 • சிறியா நங்கை இல்லையேல் சீறிய பாம்பு பிடிப்பாரும் இல்லை.
 • சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.
 • சீ என்கிற வீட்டில் தெருநாயும் நுழையாது.
 • சுகவாசி சரீரம் கழுதையின் பிறப்பு.
 • சுட்ட நண்டுக்கு வேலி கட்டின சுடுகாட்டு பள்ளி.
 • பெரிய வீட்டு கல்யாணமாம், பூனைக்குட்டிக்கு சோறு இல்லையாம்.
 • பேச்சு கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.
 • பைய அடிப்பது வேடன் அடி, பதறி அடிப்பது பன்றி அடி.
 • புழு பூச்சிக்கு எலிப்புழுக்கைகூட ஒரு கொழுக்கட்டையாகவே தெரியும்.
 • பொறுக்கி தின்னும் நாய்க்கு முறுக்கும் திருப்பும் அதிகம்.
 • போக்கிடம் கெட்ட முயல் பொந்திலே நுழைந்தாற் போல.
 • போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.
 • போக்கு அற்றால் புலி ஆள்மேல் பாயும்.
 • போதாத காலத்துக்குப் பழுதையும் பாம்பு ஆகும்.
 • போர் மிதிக்கிற மாடு வைக்கோல் தின்னாதா?
 • போன சனியன் போச்சு என்று இருந்தேன், பொந்துக்குள் இருந்து கீச்சு கீச்சு என்றது.

 • மடத்தையும் கட்டி அதற்கு மட நாயையும் காவல் வைத்தது போல.
 • மடம் புகுந்த நாய் தடியடிக்கு தப்பாது.
 • முட்டி ஊட்டின குட்டி முதல் குட்டி. கட்டி ஊட்டின குட்டி கடைக்குட்டி.
 • முக்கால் பணத்துக்கு வாங்கிய குதிரையானாலும் மூன்று பணத்திற்கு புல் தின்னும்.
 • மிதித்தாரைக் கடிக்குமாம் நீள சர்ப்பம். விதித்தாரை கடிக்குமாம் கால சர்ப்பம்.
 • மிளா விழுங்கி சிற்றப்பனுக்கு வறட்டு ஆடு கருவாடு.
 • மாப்பிள்ளை வேண்டும் என்று மலைப்பாம்புக்கு வாழ்க்கைப்பட்டாளாம்.
 • ஆடு எரு அவ்வருஷம், மாடு எரு மறு வருஷம்.
 • மாட்டை நடையில் பார், ஆட்டை கிடையில் பார்.
 • மாடு இளைத்தாலும் கொம்பு இழைப்பதில்லை.

உயிரினங்கள் உணர்த்தும் பழமொழிகள் - Proverbs Conveyed By Creatures.

 • மாடுபோல் உழை, மன்னர்போல் வாழ்.
 • மாடு முக்க முக்க வீடு நக்க நக்க.
 • மாடு மேய்க்கிறவன்கூட மாமனார் வீட்டில் இருக்க மாட்டான்.
 • மாடு மேய்க்கும் குமரனுக்கு மண்டலம் எட்டும் குமரியாம்.
 • மனிதன் சுற்றிக் கெட்டான், நாய் நக்கிக் கெட்டது.
 • மலையாளத்து குரங்கே மரத்தைவிட்டு இறங்கே.
 • மலையைக் கில்லி எலியை பிடித்தது போல.
 • மரம் பழுத்தால் வௌவாலை கூவி அழைக்க வேண்டியதில்லை.
 • மந்தைவெளி நாய்க்கு சந்தைவெளியில் என்ன வேலை?
 • மதம் பிடித்த யானைக்கு மாவுத்தனை தெரியுமா?
 • மின்மினி பூச்சியால் இருள் விலகுமா?
 • மிடுக்கு ஏறிய குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது?
 • முத்தால் நத்தை பெருமை பெறும், மூடர்களோ முக்கினாலும் பெருமை பெறார்.
 • முகமோ சந்திரபிம்பம், அகமோ பாம்பின் விஷம்.
 • முட்டிக் கால் கழுதை பட்டவர்த்தனப் பரி ஆகுமா?
 • முதலை வாயில் அகப்பட்ட பிள்ளையும், முதலை வைத்து பெருக்காத வாணிகமும் பிழைக்கவே பிழைக்காது.
 • முயல் வேட்டைக்கும் பிள்ளையார் கோவில் ஆண்டிக்கும் ஒத்து வராது.
 • முப்பேன் பிடிப்பது மூதேவி வாசத்துக்கு அடையாளம்.
 • முயலை எழுப்பிவிட்டு நாய் பதுங்கியது போல.
 • அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்.
 • அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல.
 • முன்னிருந்து பார்த்தால் சேவகன் குதிரை, பின்னிருந்து பார்த்தால் செட்டியார் குதிரை.
 • முன் பிறந்த காதை பார்க்கிலும், பின் பிறந்த கொம்பே பலம்.
 • அகப்பட்ட நாயை அடிக்கும்போது அதை கண்ணால் கண்ட நாய் காததூரம் ஓடும்.
 • அகமுடையான் சாதம் ஆனை போல, பிள்ளையாண்டான் சாதம் பூனை போல.
 • அங்குசம் இல்லா ஆனையும் அடங்கா, கடிவாளம் இல்லா குதிரையும் அடங்கா.
 • மெழுகின வீட்டில் நாய் புகுந்தது போல.
 • ராவுத்தர் தவிட்டுக்கு ஆலாய் பறக்க, அவர் குதிரையோ கோதுமை ரொட்டிக்கு கொட்டமடிக்குதாம்.
 • ருசிகண்ட பூனை உறி உறியாய் தாவுமாம், வரிசை கண்ட மாப்பிள்ளை மீண்டும் வந்து நிற்பானாம்.
 • கொங்கு நாடு சென்றானாம் அங்கு வங்கு நாய் வந்து வழியை மறித்து நின்றதாம்.
 • வண்டிக்கு அலங்காரமாம், வலத்த மாட்டுக்கு சிங்காரமாம்.
 • வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.
 • வலையன் பிடித்த மீனுக்கு துறையன் இட்டதே பேர்.
 • வறுவோட்டை நக்கிய நாய்க்கு வாயெல்லாம் கரி.
 • வாக்கிலே கெட்ட கழுதையை அதன் போக்கிலே விட்டுத் திருப்ப வேண்டும்.
 • வாசம் அறிந்தது வேட்டை நாய், மறுகணமே சுவாசம் முறிந்தது காட்டு மான்.
 • வாழ்கிற வீட்டில் மரநாய் புகுந்ததுபோல.
 • வால் இல்லாத குரங்குக்கு வாயெல்லாம் பல்.
 • வாய் இருந்தால் வாசலும் வரவேற்கும், வாய் இல்லாவிடிலோ வாழை மட்டையும் வழுக்கிவிடும்.
 • விசுவாசப் பூனை கருவாட்டை தூக்கிக்கொண்டு போனதாம்.
 • விடியும் மட்டும் குரைத்தாலும் வீட்டு நாய் வேட்டை நாய் ஆகாது.
 • விதி அற்ற மாடு கதி கெட்ட புல்லை தின்னும்.
 • வீட்டு எலியை அடித்தால் மோட்டு எலி பறக்கும்.
 • வீட்டைக் கட்டி குரங்கையல்லோ குடி வைத்தானாம்.
 • வெறி பிடித்த நாய் வேங்கைக்கு சமம்.
 • வெறிநாய் அழகு சொறி நாய்க்கு வருமா?
 • வேட்டை கண்ட நாயும், சாட்டை கண்ட மாடும் ஓரிடத்தில் நில்லா.
 • வௌவால் அடித்து தின்னும், அணில் கடித்து தின்னும்.
 • வௌவால் தலை நரித்தலை போல.
 • ஜலமண்டலி கடித்தால் பரமண்டலம் பார்க்கலாம்.
 • குக்கல் (நாய்) வாலை கோல் கொண்டு நிமிர்த்தியது போல.
 • கூட்டத்தில் நுழைந்த பாம்பு உயிர் தப்பித்துக்கொள்ளும்.
 • நாய்க்கு நாக்கில் கழுகுக்கு மூக்கில்.
 • அட்டை கடியும், அரிய வழி நடையும், கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே.
 • அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் அது செடி செத்தையைத்தான் நக்கும்.
 • அட்டையை கழுவி கட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்குமாம் குட்டையிலே.
 • அடுக்களை பூனைபோல இடுக்கிலே ஒளிந்தானாம்.
 • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரை லாயமாக மாறும்.
 • வறட்டு தவளையும் முரட்டு தனமாகத்தான் கத்தும்.
 • அந்தி ஈசல் அடைமழைக்குஅறிகுறி.
 • அம்பலக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? கம்பளத்தில் கிடந்தால் என்ன?
 • அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போன வழியெல்லாம் பெருமாள் போகும் வழி.
 • அரசனுக்கு ஒரு ஆனை, ஆண்டிக்கு ஒரு பானை.
 • அரண்மனை ஆனைக்கு அம்பாரி வேண்டும், ஆலய ஆனைக்கு கொட்டுமேளம் போதும்.
 • அரவத்தை கண்டால் கீரி விடுமா?
 • அல்லல் காட்டு நரி பல்லை காட்டி நின்றதாம்.


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. எல்லாமே புதுசா இருக்கு முதல் அடி தெற்றினால் அதுஆனைக்கும் அடி சறுக்கும்னு பிரபலமாச்சே.... நல்ல தொகுப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. ஆம்.. நண்பரே நீங்கள் கேள்விப்படாத இன்னும் சில பழமொழி தொகுப்புகள் தொடர்ந்து வர இருக்கின்றன. நன்றி!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.