"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாரத ரத்னா - Bharat Ratna Medal Winners - Part - 6.

பாரத ரத்னா - Bharat Ratna Medal Winners - Part - 6.

Bharat Ratna Awardees.

பாரத ரத்னா வெற்றியாளர்கள்.

1988 - 1991.

(PART - 6).

பாரத தேசத்தின் மேன்மை மிகுந்த விருதுகளில் முதன்மையானது "பாராத ரத்னா" (Bharat Ratna) எனலாம்.

கலை, அறிவியல், இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

Bharat Ratna Medal Winners.

பாரத ரத்னா பற்றிய இந்த தொடர் பதிவில் இது ஆறாவது பகுதி (Part - 6).

இதன் முன் பகுதிகளான ஐந்து பகுதிகளில் பாரத ரத்னா விருதினை பற்றியும் 1954 முதல் 1987 வரையில் பாரத ரத்னா விருதுபெற்ற சாதனையாளர்களைப்பற்றியும் தொடர்ந்து பார்த்துவந்துள்ளோம். அந்த வரிசையில் ஆறாவது பகுதியாகிய இப்பதிவில் 1988 ம் ஆண்டு முதல் 1991 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலங்களில் பரதரத்னா விருது பெற்ற வெற்றியாளர்களைப்பற்றியும், அவர்களுக்கு எந்த காரணங்களுக்காக பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது என்பது பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

இத்தொடரின் முதல் பகுதியை (Part 1) படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை "கிளிக்"குங்க..

👉👉பாரத ரத்னா - Bharat Ratna Award - Part 1.👈👈

💞💞💞💞💞💞


  எம். ஜி. ராமச்சந்திரன்.

  M.G.Ramachandran.

  பெயர் :- எம்.ஜி. இராமச்சந்திரன் - M.G.Ramachandran. முழுப்பெயர் "மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்" (Maruthur Gopalan Ramachandran).

  நாடு :- இந்தியா - India. (பிறந்தது இலங்கையில் உள்ள கண்டிக்கு (Kandy) அருகில் உள்ள நாவலப்பிட்டி (Nawalapitiya) என்னும் சிற்றூரில்).

  மாநிலம் :- தமிழ்நாடு - Tamilnadu.

  பிறப்பு :- 1917 ம் ஆண்டு ஜனவரி 17 ல் இலங்கையில் உள்ள கண்டிக்கு (Kandy) அருகில் உள்ள நாவலப்பிட்டி (Nawalapitiya) என்னும் சிற்றூரில் பிறந்தார்.

  இறப்பு :- 1987 டிசம்பர் 24.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1988. ( இவருடைய மறைவுக்குப்பின்பே இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது).

  M.G.Ramachandran.

  வாழ்க்கை முறை :- இலங்கையில் (Sri Lanka) உள்ள கண்டிக்கு (Kandy) அருகில் உள்ள நாவலப்பிட்டி (Nawalapitiya) என்னும் சிற்றூரில் பிறந்தவர். இலங்கையில் பிறந்தார் என்பதால் இவர் இலங்கையை தாயகமாக கொண்டவர் என்று நினைத்து விடாதீர்கள்...

  இவருடைய தாயகம் இந்தியாதான்.

  இவருடைய பெற்றோர்கள் கேரள (Kerala) மாநிலத்தில் பன்னெடுங்காலம் வாழ்ந்துவந்தாலும் இவர்களுடைய பூர்வீகம் கோவை (Coimbatore) மாவட்டத்திலுள்ள காங்கேயம் (Kangeyam) என அறியமுடிகிறது.

  இவருடைய தந்தை ஆரம்பகட்டத்தில் ஒரு வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின் ஆங்கிலேய அரசாங்கத்தால் அந்தமான் தீவில் (Andaman and Nicobar Ialands) நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.

  அப்போதைய ஆங்கிலேய அரசின் கொடும்பாதக செயலுக்கு இவர் துணைபோகாததால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள் இவரை சிறையிலடைத்து சித்திரவதைக்குள்ளாக்கினர்.

  இதன் காரணமாக விடுதலை பெற்றபின் வெள்ளையர்கள் ஆளும் இந்தியாவில் வாழப்பிடிக்காமல் இலங்கைக்கு (Sri Lanka) இடம்பெயர்ந்தார். இலங்கையில் உள்ள கண்டிக்கு (Kandy) அருகே நாவலப்பிட்டி (Nawalapitiya) என்னும் சிற்றூரில் குடியேறினார். அங்குதான் நம் கதாநாயகனான எம்.ஜி.ஆர் அவருடைய பெற்றோருக்கு 5 வது குழந்தையாக அவதரித்தார்.

  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகளுக்கே உரித்தான குறும்புடன் நம் கதாநாயகன் வளர்ந்துவர...

  அவருடைய வளர்ச்சியை தொடர்ந்து பார்க்க கொடுத்துவைக்காமல் எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயது இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது. நாட்கள் செல்ல செல்ல போதிய வருமானம் இல்லாமல் வறுமையிலும் வாடியது.

  சிறிது காலத்திற்கு பின் வறுமையின் காரணமாக எம். ஜி. ஆர் - ன் உடன்பிறந்த சகோதரரும், சகோதரியும் அடுத்தடுத்து இறந்துபோக இனியும் இலங்கையில் வாழ்வது உகந்ததல்ல என எண்ணிய அவரது தாயார் தன்னுடைய இரு ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகளோடு பூர்வீக பூமியான கேரளாவுக்கே திரும்பினார்.

  ஆனால், இலங்கையில் இவர்களை வாட்டியெடுத்த அதே வறுமை இவர்களுக்கே தெரியாமல் இவர்களின் பின்னாடியே பயணித்து இங்கேயும் வந்துவிட்டதோ என்று எண்ணுமளவிற்கு இங்கு வந்த பின்பும் பசி பட்டினிக்கு குறைவில்லை.

  இலங்கையில் நிகழ்ந்த சோகம் இங்கேயும் அரங்கேறியது. ஆம்... மற்றொரு பெண்குழந்தையும் பசியின் கொடுமையை தாங்கமுடியாமல் தன் இன்னுயிரை நீத்தது.

  மூன்று குழந்தைகளை காவு வாங்கிய பின்பும் வறுமை தன் கோரப்பிடியை விட்டுவிட தயாரில்லை.

  குடும்பத்தை வாட்டி வந்த வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாததால் எம். ஜி. ஆரும் (M.G.R) அவர் அண்ணன் "சக்கரபாணியும்" (Chakrapani) நாடகக் கம்பெனி ஒன்றில் இணைந்தனர். நாடகங்களில் நடித்து பொருளீட்டி குடும்ப வறுமையை ஒருவாறு போக்கினர்.

  அண்ணன் நாடகத்துறையிலேயே நிலைத்துவிட தம்பியோ படிப்படியாக திரைப்படத்துறையில் கால்பதித்து தமிழ் திரைப்பட குணசித்திர நடிகராக விஸ்வரூபம் எடுத்தார்.

  இவர் முதன்முதலில் நடிகராக களம் இறங்கிய திரைப்படம் "சதிலீலாவதி". 1936 ம் ஆண்டு மார்ச் 28 ல் வெளியானது. அதன்பின்பு கதாநாயகனாக உயர்வுபெற்று தமிழ் திரைப்படத்தில் தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சியது தனிக்கதை.

  திரைப்படத் துறையோடு நின்றுவிடாமல் அரசியலிலும் குதித்தார். அ.தி.மு.க (ADMK) என்னும் அரசியல் கட்சியை தொடங்கி அதன் வாயிலாக முதல்வராகி மக்களிடம் நன்மதிப்பை பெற்றார்.

  இந்திய வரலாற்றிலேயே நடிகர் ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்றது இவருடைய பதவியேற்பில்தான் நிகழ்ந்தது.

  தொடர்ச்சியாக 3 முறை முதல்வராக பதவியில் அமர்ந்தார். இவருடைய பதவிக்காலம் 10 ஆண்டுகள். இந்த 10 ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு பதிலாக சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தது இவருக்கு நற்பெயரை தேடித்தந்தது.

  10 ஆண்டுகளாக தொடர்ந்து நல்லாட்சி கொடுத்ததால் இவருடைய மறைவுக்குப்பின் 1988 ல் பாரதரத்னா விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

  💞💞💞💞💞💞

  B.R. அம்பேத்கர்.

  B.R. Ambedkar.

  பெயர் :- B.R. அம்பேத்கர் - B.R. Ambedkar. முழுமையான பெயர் "பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்" (Bhimrao Ramji Ambedkar).

  நாடு :- இந்தியா - India.

  மாநிலம் :- மகாராஷ்டிரா - Maharashtra.

  பிறப்பு :- மத்திய பிரதேசத்திலுள்ள அம்பாவாதே (Ambadawe) என்னும் கிராமத்தில் 1891 ம் ஆண்டு ஏப்ரல் 14 ல் பிறந்தார். அவருடைய பெற்றோருக்கு இவர் 14 வது குழந்தை.

  இறப்பு :- 1956 டிசம்பர் 6.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1990. (இவருடைய மறைவுக்குப்பின்பே இவருக்கு "பராதரத்னா" விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது).

  B.R. Ambedkar.

  வாழ்க்கை முறை :- பாரத தேசத்தின் மக்களால் "அம்பேத்கர்" (Ambedkar) எனவும் "பாபாசாகேப் அம்பேத்கர்" (Babasaheb Ambedkar) எனவும் அன்பாக அழைக்கப்பட்ட இவர்தான் இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகளில் முதன்மையானவர்.

  நாட்டின் முதல் சட்ட அமைச்சர். கல்வியாளர், வரலாற்று ஆய்வாளர், பொருளாதார நிபுணர், சட்ட மாமேதை, சமூக சீர்திருத்தவாதி என பன்முக ஆளுமையை கொண்டவர்.

  வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். சிறு வயதிலிருந்தே ஜாதீய ஒடுக்கு முறைகளால் பல இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் ஆளானதால் தன் வாழ்வின் பெரும்பகுதியை ஜாதீய தீண்டாமை முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே செலவிட்டவர்.

  இவருடைய சீர்திருத்த செயல்களை கௌரவிக்கும்முகமாக இவருடைய மறைவுக்குப்பின் 1990 ல் பாரதரத்னா விருது அளித்து கௌரவிக்கப்பட்டார்.

  💞💞💞💞💞💞

  நெல்சன் மண்டேலா.

  Nelson Mandela.

  பெயர் :- நெல்சன் மண்டேலா - Nelson Mandela. இவரின் முழுப்பெயர் "நெல்சன் ரோலிக்லாலா மண்டேலா" (Nelson Rolihlahla Mandela).

  நாடு :- தென்னாப்பிரிக்கா - South Africa.

  பிறப்பு :- 1950 ம் வருடம் ஜூலை 18 ம் தியதி தென்னாப்பிரிக்காவிலுள்ள "வீஸோ" (Mvezo) கிராமத்தில் பிறந்தார்.

  இறப்பு :- 2013 டிசம்பர் 5 அன்று தன்னுடைய 95 வது வயதில் காலமானார்.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1990.

  Nelson Mandela

  வாழ்க்கை முறை :- இவரை தெரியாதவர் என்று உலகில் யாருமே இருக்கமுடியாது. காந்தியடிகளை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்.

  தென்னாப்பிரிக்காவை (South Africa) தாயகமாக கொண்டு வெள்ளையர்களிடம் அடிமைபட்டுக்கிடந்த தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக கறுப்பின மக்களின் மத்தியில் தோன்றிய இன்னொரு காந்தி.

  வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் கொடிய சிறைவாசத்தை அனுபவித்த தியாகசீலர். உலக வரலாற்றிலேயே இவ்வளவு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த விடுதலை போராளி வேறு யாருமே இல்லையெனலாம்.

  இவரின் தலைமையில் நடந்த அயராத அறப்போராட்டத்தை அடுத்து நிறவெறி அரசு ஒழிந்து புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.

  மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென்னாப்பிரிக்க அதிபர் இவர்தான். தன்னுடைய 75 வது வயதில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

  இவருடைய தியாக போராட்டத்தைப் பாராட்டும் விதமாக இவருக்கு 1990 ல் இந்திய அரசு பாரதரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

  💞💞💞💞💞💞

  ராஜீவ்காந்தி.

  Rajiv Gandhi.

  பெயர் :- ராஜீவ்காந்தி - Rajiv Gandhi.

  நாடு :- இந்தியா - India.

  மாநிலம் :- உத்திரப்பிரதேசம் - Uttar Pradesh.

  பிறப்பு :- 1944 ம் ஆண்டு ஆகஸ்ட் 20 ம் தியதி மும்பையில் (Mumbai) பிறந்தார்.

  இறப்பு :- 1991 ம் ஆண்டு மே 21 ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் (Sriperumbudur) நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தின்போது நடந்த தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தார்.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1991. (அவருடைய மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது).

  Rajiv gandhi.

  வாழ்க்கை முறை :- நேரு குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய திருநாட்டின் 6 வது பிரதமர். இவரது ஆட்சியல் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

  1991 ம் ஆண்டு மே 21 ம் தியதி ஸ்ரீபெரும்புதூரில் (Sriperumbudur) நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தின்போது நடந்த தீவிரவாதிகளின் மனிதத்தன்மையற்ற கொடூர தாக்குதலால் தன் இன்னுயிரை பாரதமாதாவின் காலடியில் காணிக்கையாக்கியவர்.

  இவருடைய தியாக வாழ்க்கையை கருத்தில்கொண்டு இவருடைய மறைவுக்குப்பின் 1991 ம் ஆண்டு பாரதரத்னா விருது அளித்து இந்தியா தன்னுடைய வீர வணக்கத்தை செலுத்தியது.

  💞💞💞💞💞💞

  வல்லபாய் படேல்.

  Vallabhbhai Patel.

  பெயர் :- வல்லபாய் படேல் - Vallabhbhai Patel. இவரின் முழு பெயர் "வல்லபாய் ஜாவர்பாய் படேல்" (Vallabhbhai jhaverbhai Patel).

  நாடு :- இந்தியா - India.

  மாநிலம் :- குஜராத் - Gujarat.

  பிறப்பு :- 1875 ம் ஆண்டு அக்டோபர் 31 ல் அன்றைய பம்பாய் (Mumbai) மாகாணத்தில் "கோடா" (Kheda district) மாவட்டத்திலிருக்கும் "நதியாத்" (Nadiad) என்னும் சின்னங்சிறு கிராமத்தில் பிறந்தார்.

  தற்போது இந்த "நதியாக்" (Nadiad) கிராமம் குஜராத்தின் (Gujarat) ஒரு பகுதியாக உள்ளது. (அவருடைய பெற்றோர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில் இவர் 4 வது குழந்தை).

  இறப்பு :- 1950 ம் ஆண்டு டிசம்பர் 15 ல் தன்னுடைய 75 வது வயதில் மும்பையில் (Mumbai) தன்னுடைய இன்னுயிரை நீத்தார்.

  குழந்தைகள் :- 2.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1991. (அவருடைய மறைவுக்குப்பின்பே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது).

  sardar vallabhbhai patel.

  வாழ்க்கை முறை :- இந்திய விடுதலை போரட்ட வீரர். வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய இவர் மகாத்மா காந்தியின் மேடைபேச்சுக்களால் கவரப்பட்டு தன்னுடைய கறுப்புக்கோட்டை துறந்து கதர் ஆடைக்கு மாறினார். முழுநேர சுதந்திர போரட்ட வீரராக தன்னை மாற்றிக்கொண்டார். அதன் பயனாக சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராக பதவி வகித்தார். உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

  இந்தியா சுதந்திரம் அடைந்த தருவாயில் 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தன. இதில் பல சமஸ்தானங்கள் ஒரே நாடக ஒன்றிணைய மறுத்துவந்தன. இணைய மறுத்த சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பை படேலிடம் ஒப்படைத்தார் ஜவகர்லால் நேரு (Jawaharlal Nehru)... ஜவகர்லால் செய்த ஒரே நல்ல விஷயம் இது ஒன்றுதான் எனலாம்.

  கொடுத்த வேலையை அப்படியே ஏற்றுக்கொண்டு தன்னுடைய திறமையாலும் திடம்கொண்ட மனதாலும் பேச்சுவார்த்தை மற்றும் இராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைத்த பெருமை வல்லபாய் படேலையே சாரும். அதனாலேயே "இந்தியாவின் இரும்பு மனிதர்" என அழைக்கப்படுகிறார்.

  திடம்கொண்ட இவருடைய மன உறுதியை பாராட்டி இவருடைய மறைவுக்குப்பின் 1991 ல் பாரதரத்னா விருது அளிக்கப்பட்டது.

  💞💞💞💞💞💞

  மொரார்ஜி தேசாய்.

  Morarji Desai.

  பெயர் :- மொரார்ஜி தேசாய் - Morarji Desai. முழுப்பெயர் "மொரார்ஜி ரன்சோதிசி தேசாய்" (Morarji Ranchhodji Desai).

  நாடு :- இந்தியா - India.

  மாநிலம் :- குஜராத் - Gujarat.

  பிறப்பு :- 1896  பிப்ரவரி 29. குஜராத் மாநிலத்தின் "பல்சார்" மாவட்டத்திலுள்ள "பதேலி" (Bhadeli) என்னும் கிராமத்தில் பிறந்தார்.

  இறப்பு :- 1995 ம் ஆண்டு ஏப்ரல் 10 தேதி தன்னுடைய 99 வது வயதில் மறைந்தார்.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1991.

  Morarji-desai.

  வாழ்க்கை முறை :- இந்திய விடுதலைப் போராட்ட வீரர். ஆங்கில அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டவர். விடுதலை போராட்டத்தின் விளைவாக பல ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர்.

  சுதந்திர இந்தியாவின் 6 வது பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தவர்.

  பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு இருந்துவந்த மனக்கசப்பை நீக்கி இரு நாடுகளிடையே நல்லுறவை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டவர். இவருடைய இந்த செயலை பாராட்டி பாகிஸ்தான் அரசு (Government of Pakistan) பாகிஸ்தானின் உயரிய விருதன "நிஷான்-இ-பாகிஸ்தான்" (Nishan-e-Pakistan) விருதை கொடுத்து கவுரவித்தது. இந்த விருதை பெற்ற ஒரே இந்தியர் இவர் மட்டுமே என்பது இங்கு குறிபிடத்தக்கது.

  இவருடைய நல்லாட்சியின் சாதனைகளை பாராட்டும் விதமாக 1991 ல் இந்திய அரசு இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருதை அளித்து சிறப்பித்தது.

  இப்பதிவின் தொடர்ச்சியாகிய ஏழாவது பகுதியை படிக்க [Part - 7] கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

  👉👉பாரத ரத்னா - Medal Winning Gems of India - Part 7👈👈

  💢💢💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களில் மாநிலம் தமிழ்நாடு என்பது ஏற்புடையதல்ல கேரளம் என்றே இருக்க வேண்டும்.

   மேலும், கீழும் ஓடிக்கொண்டு இருக்கும் ஃப்ளாஷ் நியூஸ் அருமையாக இருக்கிறது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. M.G.R ன் பெற்றோர்கள் கேரள (Kerala) மாநிலத்தில் பன்னெடுங்காலம் வாழ்ந்துவந்தாலும்... இவர்களுடைய பூர்வீகம் "கோவை" (Coimbatore) மாவட்டத்திலுள்ள "காங்கேயம்" (Kangeyam) என அறியமுடிகிறது என்பதாலும், பிழைப்புக்காகவே இவரின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு இடம்பெயர்ந்தனர் என்கின்ற தகவல் கிடைக்கப்பெற்றதாலும் M.G.R ன் பூர்வீக மாநிலம் தமிழ்நாடு என குறிப்பிட்டுள்ளேன் நண்பரே !!.

    நீக்கு
  2. அட! பகுதி 6 ஆகிடுச்சா....பழைய பதிவ்களையும் பார்க்க வே ண்டும். இந்தப் பதிவு முகங்கள் எல்லாம் ரொம்பவே தெரிந்த முகங்கள்!!

   இடையில் வலைக்கு வராததால் எல்லாமே விடுபட்டு போயிருக்கு சகோ. மெதுவாக வாசிக்கிறேன். இப்போது நேரம் ரொம்ப டைட். பொறுப்புகள் கூடியிருக்கு.

   எம் ஜி ஆர் பற்றிய ஒரே ஒரு தகவல் புதியது அதான் காங்கேயம் தகவல்

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி சகோதரி!...

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.