"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பழமொழி புதிது - புரிவது எளிது - The New Proverb.

பழமொழி புதிது - புரிவது எளிது - The New Proverb.

Easy to Understand the Proverb.

       காலம் காலமாக நம் முன்னோர்களின் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட அனுபவ அறிவானது சொல்லாடலாக அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்பட்டு காலமாற்றங்களால் ஏட்டில் தடம்பதித்து இன்று நம்மிடையே "பழமொழிகள்" என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றன.

The New Proverb

காலத்தால் பழையது என்பதால் இவைகள் "பழமொழிகள்" என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்தாலும்... நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளை கற்றுத்தந்து பாதை தெரியாமல் பரிதவிப்பவர்களை "கலங்கரைவிளக்கமாக" நின்று கரைசேர்ப்பதால் இவைகள் "பொன்மொழிகள்" என்றும் அழைக்கப்பட்டுவருகின்றன.

இப்பழமொழிகளில் பல சிந்தனையை தூண்டி வாழ்வியல் நெறிமுறைகளை கற்றுத்தரும் விதத்தில் அமைந்திருக்கும் அதேவேளையில் சில பழமொழிகள் எதுகை, மோனை லயத்தில் நகைச்சுவையாகவும் அமைந்திருப்பதுண்டு.

வாருங்கள்,... இப்பதிவில் சிந்தனையைத் தூண்டி புன்னகையைப் பூக்கச்செய்யும் சில பழமொழிகளைப் பார்க்கலாம்.

பழமொழி புதிது - புரிவது எளிது.

 • வந்தட்டிக் காக்கா வரப்புல, காணிக் காக்கா கரையில.
 • மோசம் பாய் போட்டுத் தூங்குது. நாசம் நாய் போல் காவல் காக்குது.
 • சோற்றில் கிடக்கும் கல்லை எடுக்காதவனா சேற்றில் கிடக்கும் எருமையை தூக்கப்போகிறான்?
 • தட்டானுக்கு பயந்தல்லவோ பரமசிவனும் சர்ப்பத்தை அணிந்தான்.
 • தூங்கும் நாய்க்கு துடைப்பக்கட்டைகூட எதிரியாக மாறும்.
 • தெரிந்தவனுக்குத்தான் தெரியும் செம்மறியாட்டின் முட்டு.
 • தென்னை மரத்து குரங்கே, என்னை பார்த்த பின்பாவது இறங்கே.
 • நாடு சமுத்திரமானாலும் நாய்க்கு கிடைப்பதென்னவோ நக்கு நீர்தான்.
 • நதியெல்லாம் பால் ஆனாலும் நாய் நக்கித்தானே குடிக்க வேண்டும்.
 • நடு மேட்டில் நரி கத்திற்றாம், தீர்த்த மேட்டில் தேள் கொட்டிற்றாம்.
 • நரசிம்மரை நரி மிரட்ட, நரியை நாய் மிரட்டியதாம்.
 • நல்ல நாயை நகத்தால் கிள்ளியா பார்க்க வேண்டும்?
 • நாய் கடி போதாதென்று செருப்படியும் பட்டானாம்.
 • நாய்க்கு எதிரே பிறிதொரு நாய் வராமல் இருந்தால் காசிக்கும் போய் கச்சிதமாய் திரும்பி வருமாம்.
 • நாய்க்கு மழை பெய்தால் நாய்குடை தீர்வாகுமா?
 • நாய்க்கு மீசை முளைத்து நாவிதனுக்கு ஆவதென்ன?
 • நாய் தொட்ட சட்டி நல்லதுக்கு உதவா.
 • நற்சிங்கத்துக்கு நாயா முடிசூட்டுவது?
 • நரி கிணற்றில் விழுந்தால் தண்டடியும், தடியடியும்தான்.
 • நரி கொழுத்தென்ன? காஞ்சிரங்காய் பழுத்தென்ன?
 • நல்ல குதிரை புல்லுக்கு அழ.. நொண்டிக் குதிரையோ கொள்ளுக்கு அழுதுச்சாம்.
 • நாமம் போட்ட குரங்கு ஆனாலும் நடு வீதியில் நடக்க முடியுமா?
mandrill Monkey

 • நாய் நக்கியா குளம் வற்றும்?
 • முதுகிலே புண்ணுள்ளவன் காடு போனால் வீடு திரும்பான்.
 • மனக்கவலையே பலக்குறைவாம்.
 • பிறக்கும்போதே முடமானால் நேர்ந்துவிட்டால் நேராகுமா?
 • வடகோடு உயர்ந்தென்ன? தென்கோடு தாழ்ந்தென்ன? வையகத்து வான் பிறைக்கே!
 • கழுதையின் புண்ணுக்கு புழுதிதான் மருந்து.
 • பட்டினி பரம ஔடதம்.
 • கிண்டி கிழங்கெடுத்தாளாம் கள்ளி, கீழாநெல்லி வேரெடுத்தாளாம் கிள்ளி.
 • பணத்தை பிறருக்கு கொடு, குணத்தை உனக்குள் கொடு.
 • நாய் பட்ட பாடு தடிக்கம்புக்கே தெரியும்.
 • நாய் மலையை பார்த்து குரைக்க, பேய் மரத்தை பிடித்து குலுக்கிற்றாம்.
 • நாய் மூத்திரம் குத்துக்கல்லை குளிப்பாட்டும்.
dog-urinating-more-often

dog-urinating

 • நாயின் அவசரம் அதன் வாலுக்குதான் தெரியும்.
 • பண்ணையார் வீட்டு நாய் என்றாலும் எச்சில் இலை என்றால் ஒருகை பார்க்கத்தான் செய்யும்.
 • பட்டிக்காட்டான் நாய்க்கு அஞ்சான், பட்டணத்தான் பேய்க்கு அஞ்சான்.
 • பசி பெரிதாயினும் புல் மேயாதாம் புலி.
 • பின் இன்னல் பேதையர் நட்பு.
 • ஊன்ற கொடுத்த தடியும்கூட சிலநேரம் மண்டையை பிளக்குமாம்.
 • நாயிடம் கிடைத்த தேங்காய் தானும் உடையாது, வேர்களும் விடாது.
 • பகுத்தறிவில்லாத துணிவு நங்கூரமில்லாத கப்பலுக்கு சமம்.
 • புதுமைக்கு வண்ணான் பறைதட்டி வெளுத்தான்.
 • ஆனை கொழுக்க வாழைத்தண்டு, ஆண்பிள்ளை கொழுக்க கீரைத்தண்டு.
 • முழம் குறைய சாண் நீளுமா?
 • காலமும் கடல் அலையும் கடைசிவரை காத்திரா..
 • பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா?
 • பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சுகின்ற நாய், இரவில் கரித்துண்டைக் கண்டாலும் கதறியே ஓடும்.
 • துள்ளி எழுந்து தூணில் முட்டுவானாம் முட்டாள் .
 • அடி தாங்காத உரல்... மத்தளத்திடம் முறையிட்டதாம்.
 • தாய் வார்த்தை கேளா பிள்ளை நாய் வாயில் அகப்பட்ட சீலை போல.
 • இறைத்த கிணறு ஊறும். இறையா கிணறோ நாறும்.
 • எட்டும் பூ தனக்கு எட்டா பூ இறைவனுக்கு.
 • உள்ளத்தில் படர்ந்ததையே கூறுமாம் முகம்.
 • கடையடைத்து புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்விவிடும்.
 • கைக்குமே தேவரே கின்னினும் வேம்பு.
 • பதம் கெட்ட நாயை பல்லக்கில் வைத்திழுத்தால் கண்ட கண்ட இடத்திலெல்லாம் இறங்க வேண்டும் என்னுமாம்.
 • புலிக்கு பயந்தே பூனை புழுக்கையை மூடுமாம்.
cat poop

 • பூனை இளைத்த இடத்திலே எலியார் பேரன் பேத்தி காண்பாராம்.
 • பூனை குட்டிக்கு கும்மாளம் வந்தால் ஓலைப்பாயும் பீத்தல் பாயாம்.
 • தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா?
 • கழுதை உழவுக்கு வந்தால் காடு ஏன் தரிசாய் கிடக்குது?
 • கூறுகெட்ட மாடு ஏழு கட்டு வைக்கோல் தின்னுமாம்.
 • தான் தின்னி பிள்ளை வளர்க்காது, தவிடு தின்னி கோழி வளர்க்காது.
 • வெங்கப் பயலுக்கு ஒருமாடு, அதை பிடுச்சு கட்ட ரெண்டு ஆளு.
 • மழைக்காலம் இருட்டானாலும் கொம்பிழந்து பாயுமோ மந்தி?
 • வவ்வால் வீட்டுக்கு விருந்துக்கு போனால் தொங்குவதற்கு இடமுண்டு, ஆனால் குந்துவதற்குதான் இடமில்லை.
 • கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா?
arrested pot thief

 • எலும்பு கடிக்கிற நாயால் இரும்பை கடிக்க முடியுமா?
 • அக்கப்போர் பிடிச்ச நாயி வைக்கப்போர்ல படுத்து கிடக்காம்.
 • கழுதை கோபம் கத்துனா தீரும். அழுத கோபம் மொத்துனா தீரும்.
 • நெய் குடம் உடைந்தால் நாய்களுக்கு விருந்து.
💢💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. பதில்கள்
  1. தாங்கள் பல பழமொழிகளை புதியதாக அறிந்திகொண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சி நண்பரே!!!

   நீக்கு
 2. இந்தத் தொகுப்பில் சிலது தெரிந்தவை...குறிப்பா நாய் என்று வருபவற்றுள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில தெரிந்தவை... பல தெரியாதவை... அப்படிதானே?!... தங்களுடைய வருகைக்கும் கருத்துகளை பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி சகோதரி!

   நீக்கு
 3. நல்ல சுவாரஸ்யமான பழைய பல"மொழிகள் கிராமத்துக்குள் நுழைந்து கடந்தது போலிருந்தது நண்பரே...

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.