"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 1. List of National Flower - Part 1.

தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 1. List of National Flower - Part 1.

தேசங்களின் தேசிய மலர்கள்.

List of National Flower.

Part - 1.

          உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் தங்களுடைய தேசிய அடையாளங்களாகக் கொண்டுள்ளன.

அதோடு நின்றுவிடாமல் மரம், மலர், கனி, விலங்கு, பறவை போன்ற இயற்கை செல்வங்களையும்கூட தன் தேசத்தின் அடையாள சின்னங்களாக முன்னிறுத்துகின்றன.

List of National Flower.

அதோடு மட்டுமல்லாது தன் நாட்டில் தோன்றிய எதாவது ஒரு விளையாட்டினை தன் நாட்டின் தேசிய விளையாட்டாகவும் முன்னிறுத்துகின்றன.

அப்படியெனில், நம் இந்திய நாட்டிற்கும் தேசிய அடையாளங்கள், தேசிய சின்னங்களெல்லாம் இருக்குமல்லவா?? என கேள்வி எழுப்பினோமென்றால்...

ஆம்... இருக்கின்றன!!..

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி இருக்கின்றன. தேசிய கீதம் இருக்கின்றன. தேசிய விலங்கு இருக்கின்றன. தேசிய பறவை இருக்கின்றன. ஆனால், தேசிய விளையாட்டு??...

"ஹாக்கி" என்பதுதானே உங்கள் பதில்....ஆனால் அதுதான் இல்லை...

இன்னாது... ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு இல்லையா?அப்படியென்றால் வேறு எதுதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று கேட்கிறீர்களா?

எதுவுமே இல்லை...

ஆம்... எந்த ஒரு விளையாட்டையும் இந்தியாவின் தேசிய விளையாட்டாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெளிவாக தெரிவித்துவிட்டது.

சரி... அப்படியென்றால் தேசிய மலர்??...

இந்தியாவின் தேசிய மலர் எதுவென்ற கேள்வியை எழுப்பியவுடன் உங்கள் முகம் "தாமரை" போல மலர்கிறதல்லவா!!!... ஆனால் அங்கும் உங்களுக்கு ஏமாற்றமே...

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப்போல "தாமரை" மலர் ஒன்றும் இந்தியாவின் தேசிய மலர் இல்லையாம்....

ஆம்... இதுவரையில் எந்தவொரு மலரையும் இந்திய தேசிய மலராக அறிவிக்கப்படவில்லை என இந்திய அரசு தெளிவாக ஒரு கேள்வி நேரத்தின்போது தெளிவுபடுத்திவிட்டது...

அதோடு நின்று விடாமல் எந்த மலரை தேசிய மலராக அறிவிக்கலாம் என பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளது....

அவர்கள் பரிசீலிக்கட்டும்... அவசரமில்லை... நிறைய நேரம் இருக்கிறது பொறுமையாகவே பரிசீலிக்கட்டும்... அதுவரையில் நாம் இங்கு "தேமே" என்று இருக்காமல் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளின் தேசியமலராக எந்தெந்த மலர்களெல்லாம் தேர்வாகியுள்ளன என்பதனை பார்த்துவிடுவோமா?...

வாருங்கள் பார்க்கலாம்!!...

List of National Flower.



No Country நாடுகள் National Flower தேசிய மலர்
1 Afghanistan ஆப்கானிஸ்தான் Tulip துலிப்
2 Algeria அல்ஜீரியா Iris Tectorum ஐரிஸ் டெக்டோரம்
3 Andorra அன்டோரா Narcissus நாசீசஸ்
4 Angola அங்கோலா White Mariposa வெள்ளை மாரி போசா
5 Antigua and Barbuda ஆன்டிகுவா - பார்புடா Agave flower நீலக்கத்தாழை மலர்
6 Argentina அர்ஜென்டினா Ceibo செய்போ (பவளமர பூ)
7 Australia ஆஸ்திரேலியா Golden Wattle தங்க வாட்டில் மலர்
8 Austria ஆஸ்திரியா Edelweiss எடல்வீஸ்
9 Bahamas பஹாமாஸ் yellow Elder நாக செண்பகம் (தங்க அரளி)
10 Bangladesh பங்களாதேஷ் White Water lily வெள்ளை லில்லி


Tulip_Iris Tectorum_Narcissus_White Mariposa

Agave flower_Ceibo_Golden Wattle_Edelweiss

yellow Elder_White Water lily


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
11 Barbados பார்படாஸ் Dwarf Poinciana பாயின்சியானா
12 Belarus பெலாரஸ் Wild Blue Flax நீல ஆளி மலர்
13 Belgium பெல்ஜியம் Red Poppy சிவப்பு பாப்பி
14 Belize பெலிஸ் Black Orchid பிளாக் ஆர்க்கிட்
15 Bermuda பெர்முடா blue-eyed grass நீலக்கண் மலர்
16 Bhutan பூட்டான் Blue Poppy நீல பாப்பி
17 Bolivia பொலிவியா Cantua கான்டுவா மலர்
18 Bosnia and Herzegovina போஸ்னியா - ஹெர்சகோவினா Golden lily கோல்டன் லில்லி
19 Botswana போட்ஸ்வானா Sengaparile செங்கபரிலே
20 Brazil பிரேசில் Cattleya Labiata கேட்லியா லேபியாட்டா

Dwarf Poinciana_Wild Blue Flax_Red Poppy_Black Orchid

blue-eyed grass_Cantua_Golden lily

Sengaparile_Cattleya Labiata


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
21 Brunei புருனே Simpur flower சிம்பர் மலர்
22 Bulgaria பல்கேரியா Rose ரோஜா
23 Burkina Faso புர்கினா பாசோ Red Rose சிவப்பு ரோஜா
24 Cambodia கம்போடியா Rumduol flower ரம்டுவால்
25 Canada கனடா Bunchberry பன்ச்பெர்ரி
26 Chile சிலி Lapageria rosea லாபகேரியா ரோஜா
27 China சைனா Plum blossom பிளம் ப்ளாசம்
28 Columbia கொலம்பியா Christmas Orchid கிறிஸ்துமஸ் ஆர்க்கிட்
29 Costa Rica கோஸ்ட்டா ரிக்கா Guaria morada குவாரியா மொராடா
30 Croatia குரோஷியா Iris ஐரிஸ் மலர்

Simpur flower_Rose_Red Rose_Rumduol

Bunchberry_Lapageria rosea_Plum blossom_Christmas Orchid

Guaria morada_Iris


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
31 Cuba கியூபா White Mariposa Lily வெள்ளை மாரிபோசா
32 Cyprus சைப்ரஸ் Cyclamen சைக்லேமன்
33 Czech Republic செக் குடியரசு Rose ரோஜா மலர்
34 Denmark டென்மார்க் Marguerite Daisy மார்குரைட் டெய்சி
35 Dominica டொமினிகா Caribwood கரீப்வுட் மலர்
36 Dominican Republic டொமினிக்கன் குடியரசு Bayahibe Rose பயாஹிபே ரோஸ்
37 Egypt எகிப்து White Egyptian Lotus எகிப்திய வெள்ளை தாமரை
38 El Salvador எல் சால்வடோர் Flor de Izote ஐசோட் மலர்
39 England இங்கிலாந்து Tudor Rose
சிவப்பு வெள்ளை ரோஜா
40 Estonia எஸ்டோனியா Cornflower கார்ன்ஃப்ளவர்

White Mariposa Lily_Cyclamen_Rose_Marguerite Daisy

Caribwood_Bayahibe Rose_White Egyptian Lotus_Flor de Izote

Tudor Rose_Corn flower


No Country நாடுகள் National Flower தேசிய மலர்
41 Ethiopia எத்தியோப்பியா Calla Lily காலா லில்லி
42 Faroe Islands ஃபாரோ தீவுகள் Marsh Marigold மார்ஷ் மேரிகோல்ட்
43 Fiji பிஜி தீவு Tagimaucia டாகிமௌசியா
44 Finland பின்லாந்து Lily of the Valley பள்ளத்தாக்கு லில்லி
45 France பிரான்ஸ் Iris ஐரிஸ்
46 Gabon காபோன் African Tulip ஆப்பிரிக்கன் துலிப்
47 Germany ஜெர்மனி Cornflower கார்ன்ஃப்ளவர்
48 Gibraltar ஜிப்ரால்டர் Candytuft மிட்டாய் மலர்
49 Greece கிரீஸ் Bear's Breech கரடி மலர்
50 Greenland கிரீன்லாந்து Niviarsiaq நிவியர்சியாக்

Calla Lily_Marsh Marigold_Tagimaucia_Lily of the Valley

Iris_African Tulip_Cornflower_Candytuft

Bear's Breech_Niviarsiaq

இந்த பதிவின் மூலம் பல நாடுகளின் தேசிய மலர்களைப்பற்றி தெரிந்து கொண்டீர்கள்தானே? இதில் விடுபட்ட இன்னும் பல நாடுகளின் தேசிய மலர்களைப்பற்றி அறிந்துகொள்ள இதன் தொடர்ச்சியாகிய இரண்டாவது பகுதிக்கு (Part - 2) வருகை தாருங்கள்...

இந்த தொடரின் இரண்டாவது பகுதியை படிக்க (Part - 2) அடுத்து கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க...

👉தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 2. List of National Flower - Part 2.👈


🌹🌹🌹🌹🌹🌹🌹

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. சிறப்பான தகவல்கள் நண்பரே தொடர்ந்து வரட்டும்....

    பதிலளிநீக்கு
  2. மலேசியா ஃப்ரான்ஸ் எனு சிலநாடுகளுக்கானவை தெரியும். சிங்கப்பூருக்கும் உண்டே - பெயர்கொஞ்சம் வாயில நுழைய கஷ்டம்....Vanda Miss Joaquim இதை அப்படியே தமிழ்ல சொல்லிப் பாருங்க வந்தா மிஸ் ஜோஆகுவிம்!!!! அர்த்தமுள்ள மலர்!! ஹிஹிஹி...ஆர்கிட் வகை.

    பெங்களூர்ல இறக்குமதி மலர்களில் கன்காட்சியில் பார்த்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... சிங்கப்பூருக்கும் தேசிய மலர்கள் உள்ளன. அது அடுத்தபதிவில்... தகவலுக்கு நன்றி சகோதரி!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.