"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
National Independence Days - Angola - Part 1.

National Independence Days - Angola - Part 1.

நாடுகளின் சுதந்திர தினங்கள்.

Suthanthira Thinangal.

[Part - 1].

          தங்களுடைய எல்லைகளை விரிவுபடுத்தும் எண்ணம் இன்றல்ல நேற்றல்ல தொன்மை காலம் தொட்டே ஆதி மனிதர்களிடையே நிலவி வந்துள்ளது.

மன்னராட்சி காலத்தில் எதிரி நாடுகளை கையகப்படுத்தி தன்னுடைய நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துவதை தன் வீரத்திற்கு கிடைக்கும் அங்கீகாரமாகவே அரசர்கள் பெருமையாக நினைத்து வந்தனர்.

National Independence Days - Angola

ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாடுகளிடையே உருவான காலனி ஆதிக்கத்தின் கொடுமைகள் நீண்டவை, நெடியவை.

இந்த ஆதிக்க கொடுமைகளிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணமே மக்களிடையே புரட்சியை வெடிக்கச் செய்து காலனி ஆட்சிக்கு சாவுமணி அடித்து சுதந்திரம் பெற காரணமாக அமைந்தது.

அவ்வாறு மக்கள் புரட்சிமூலம் சுதந்திரம் பெற்ற நாடுகளின் சுதந்திர தினங்களை இந்த தொடர் பதிவின்மூலம் நினைவு கூர்வோம் வாருங்கள்....

🎡 🎡 🎡 🎡 🎡 🎡


நாடுகளின் அடிமை வாழ்வும்

சுதந்திர தருணங்களும்.

[பகுதி - 1]

அங்கோலா.

Angola.

நாட்டின் பெயர் -  அங்கோலா (Angola).

தலைநகரம் - லுவாண்டா (Luanda)

ஆட்சி மொழி - போர்த்துகீசியம் (Portuguese).

Angola map


அமைவிடம் - அங்கோலா குடியரசு நாடான இது ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தெற்கு எல்லையாக நமீபியாவும் (Namibia), வடக்கு எல்லையாக காங்கோ மக்களாட்சி குடியரசும் (Democratic Republic of the Congo), கிழக்கே சாம்பியாவும் (Zambia), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் (Atlantic Ocean) உள்ளன.

பரப்பளவு - பரப்பளவில் உலகின் 23 வது பெரிய நாடாகும். இதன் மொத்த பரப்பளவு 481,321 சதுர மைல்.

தேசிய கொடி.


Flag_of_Angola

தேசிய சின்னம்.

Emblem_of_Angola

அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - 16 நூற்றாண்டு வரையில் இங்கு மன்னராட்சியே நடந்துவந்தது. 16 ம் நூரண்டில்தான் போர்த்துகீசியர்கள் வியாபாரம் செய்வதற்காக அங்கோலாவில் காலடி எடுத்து வைத்தனர்.

முதலில் அங்கோலா மன்னனுடன் தன்னுடைய நெருக்கத்தை வளர்த்துக் கொண்டவர்கள் இறக்குமதி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

காலம் செல்லச்செல்ல இறக்குமதி பிஸினஸ் சலிப்புத்தட்ட ஏற்றுமதி வியாபாரத்தில் களம் இறங்குகின்றனர்.

ஏற்றுமதி வியாபாரம் என்றால் நீங்கள் நினைப்பதுபோல பொருள்களை ஏற்றுமதி செய்வதல்ல.

மாறாக, மனிதர்களை ஏற்றுமதி செய்வது...

அதாவது, அங்கோலா மக்களை அடிமைகளாக்கி வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது.

இதனால் மக்களிடையே எதிர்ப்பு கிளம்ப... கிளர்ச்சி வெடிக்கின்றது...

கிளர்ச்சி பெரும் போராக வெடிக்க ஆயுத பலம் பொருந்திய போர்ச்சுக்கல் இராணுவத்தினரால் அங்கோலாவின் மன்னர் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.

விளைவு, அங்கோலா நாடு போர்த்துகீசியர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. மக்கள் அடிமை வாழ்வின் வேதனையை அனுபவிக்க தொடங்குகிறார்கள்.

சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1960 ம் ஆண்டுதான் சுதந்திரத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்டது.

சுதந்திர விதையை விதைத்தது வேறுயாருமல்ல விவசாயிகள்தான்.

காலனி ஆட்சியில் விவசாயிகள் தொடர்ந்து நிர்பந்திக்கப்பட்டதாலும், அவர்களின் நிலங்கள் பெரும் நிலக்கிழார்களால் கையகப்படுத்தப்பட்டதாலும் விவசாயிகள் கொதிப்படைந்தனர்.

இதனால் விவசாயிகளும் மக்களும் விடுதலை வேண்டி தொடர்ந்து போராட ஆரம்பித்தனர். இதன் பயனாக 1975 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி போர்ச்சுக்கல் நாட்டிடம் இருந்து அங்கோலா சுதந்திரத்தை மீட்டெடுத்தது.

தற்போதைய ஆட்சிமுறை - 18 மாநிலங்களை கொண்டுள்ள இங்கு தற்போது மக்களாட்சி நடைபெற்று வருகிறது.

🎌 🎌 🎌 🎌 🎌 🎌


அந்தோரா.

Andorra.

நாட்டின் பெயர்அந்தோரா (Andorra).

தலைநகரம் - அந்தோரா லா வேலா (Andorra la Vella).

ஆட்சி மொழி - வடகிழக்கு ஸ்பெயினில் பேசப்படும் "காட்டலான்" (Catalan) என்னும் மொழியே இங்கும் பேசப்பட்டு வருகிறது.

Andorra location map

அமைவிடம் - பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையே மத்திய தரைகடலுக்கு 80 மைல் மேற்கே அமைந்துள்ளது. வடக்கு எல்லையாக பிரான்சும் (France), தெற்கு எல்லையாக ஸ்பெயினும் (Spain) உள்ளது.

பரப்பளவு - 467.6 சதுர கிலோமீட்டர்.

தேசிய கொடி.

Andorra national flag


தேசிய சின்னம்.

Emblem of Andorra

அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - பன்னெடுங்காலமாக நடந்துவந்த மன்னராட்சியின் போது வெளியுலகுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வந்தது.

சுதந்திரத்தை பிரகடனப்படுத்திய வருடம் - 1866 ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி  சுதந்திரமான நிலையை பெற்றது.

தற்போதைய ஆட்சிமுறை - ஸ்பெயின் நாட்டு பிஷப், பிரான்ஸ் நாட்டு அதிபர் உட்பட 28 அங்கத்தினர்களை கொண்ட நாடாளுமன்றம் மற்றும் பிரின்சிபாலிடி நிர்வாகத்தால் ஆட்சி நடத்தப்படுகிறது.

🎉🎉🎉🎉🎉🎉


அப்காசியா.

Abkhazia.

நாட்டின் பெயர்அப்காசியா (Abkhazia).

தலைநகரம் - சுகுமி (Sukhumi).

ஆட்சி மொழி - அப்காஸ் (Abkhaz) மற்றும் ரஷ்ய மொழி (Russian).

abkhazia-location-map

அமைவிடம் - கிழக்கு ஐரோப்பாவிற்கும் (Eastern Europe), மேற்கு ஆசியாவிற்கும் (Western Asia) இடைப்பட்ட ஒரு மலைத்தடுப்பு பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பு.

இது கருங்கடலின் (Black Sea) கிழக்கு கரையில் அமைந்துள்ளது. வடக்கு எல்லையாக ரஷ்யா (Russia) உள்ளது. ஜோர்ஜியாவை (Georgia) ஒட்டி அமைந்துள்ள தன்னாட்சி கொண்ட நாடு.

பரப்பளவு - 3,256 சதுர மைல்.

தேசிய கொடி.

Flag of the Republic of Abkhazia.

தேசிய சின்னம்.

Coat of arms of Abkhazia.

அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - அப்காசியாவானது ஜோர்ஜியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துவந்தது. இங்கு "அப்காஸ்" (Abkhaz People) என்னும் இனமக்கள் வாழ்ந்துவந்தனர்.

தனிநாடு கேட்டு போராடிய அப்காசிய மக்கள் 1992 ம் ஆண்டு ஜோர்ஜியாவிடம் இருந்து தம்மை தனிநாடாக அறிவித்தனர். இதனால் 1992 முதல் 1993 வரையில் ஜோர்ஜியா அரசுக்கும் அப்காசிய பிரிவினைவாதிகளுக்கும் இடையில் போர் நடந்து வந்தது.

இந்த போரில் ஜோர்ஜியா தோல்வியை சந்தித்தது. இதன்விளைவாக அப்காசியாவின் நிலப்பகுதியில் இருந்து அனைத்த ஜோர்ஜியா மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1992 ம் ஆண்டு ஜூலை 23 ம் தேதி ஜோர்ஜியா இடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர் என்றாலும், 1999 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதிதான் முறையான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போதைய ஆட்சிமுறை - ஐக்கிய நாட்டு சபையால் (United Nations - UN) ஏற்றுக்கொள்ளப்படாத அதேவேளையில் தற்போது ரஷ்யாவினால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ள தன்னாட்சி கொண்ட குடியரசு.

🎇🎇🎇🎇🎇🎇


அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

United States of America.

நாட்டின் பெயர் - ஐக்கிய அமெரிக்கா (United States of America).

தலைநகரம் - வாசிங்டன் டி.சி (Washington, D.C).

ஆட்சி மொழி - ஆங்கிலம் (English).

united states of american map

அமைவிடம் - வடக்கே கனடாவையும் (Canada), தெற்கு பகுதியில் மெக்ஸிகோவையும் (Mexico) நில எல்லைகளாகக் கொண்டுள்ளன. அதோடு நின்றுவிடாமல் பஹாமாஸ் (Bahamas), கியூபா (Cuba), ரஷ்யா (Russia) மற்றும் பிற நாடுகளுடனான கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது.

பரப்பளவு - 3,796,742 சதுர மைல்.

தேசிய கொடி.

National flag Of United States Of America


தேசிய சின்னம்.

National Symbols Of United States Of America


அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - பிரிட்டன் அமெரிக்க நிலப்பரப்பில் கால் பதிப்பதற்கு முன்பாகவே போர்ச்சுகீசியர்களும், ஸ்பானியர்களும் கால் பதித்திருந்தனர்.

அவர்களை தொடர்ந்து பிரான்ஸ் (France), இங்கிலாந்து (England), ஹாலந்து (Natherlands) போன்ற நாட்டினரும் பல குழுக்களாக வந்து குடியேறினர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்த 13 குடியேற்ற நாடுகளை இங்கிலாந்து (kingdom of Great Britain) தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் மக்கள் மீது பல அடக்குமுறைகளையும் பிரயோகித்தது.

அடக்கு முறைக்கான காரணம் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் நெடுங்காலமாக நடந்துவந்த போர்தான் காரணம்.

ஆம், இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே தொடர்ந்து ஏழாண்டுகளாக போர்கள் நடந்தன. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் மிகப்பெரிய அளவில் பொருள் இழப்பை சந்தித்திருந்தது.

இந்த பொருள் இழப்பை ஈடுகட்ட 1763 ம் ஆண்டு தன் கட்டுபாட்டின் கீழ் இருக்கும் அமெரிக்க மக்கள்மீது அதிக அளவு வரியை விதித்தது.

இறக்குமதி செய்யப்படும் வெல்லப்பாகு, மதுபானங்கள், பட்டு, காப்பி முதலியன மீதும் அதிக அளவு புதிய வரியை விதித்தன.

அதிகப்படியான வரிவிதிப்பை எதிர்த்து அமெரிக்க வணிகர்கள் பல போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பலரும் கொல்லப்பட்டனர்.

எனவே, அமெரிக்க குடியேற்றவாசிகள் பிரிட்டன் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலைபெற மேற்கொண்ட போராட்டமே அமெரிக்காவின் சுதந்திர போர் எனப்படுகிறது.

சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1775 ம் ஆண்டு பிரிட்டனிடம் அடிமைப்பட்டு இருந்த வட அமெரிக்கக் கண்டத்தின் 13 காலனிகள் ஒன்றிணைந்து பிரிட்டனுக்கு எதிராக மாபெரும் யுத்தத்தை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக 1776 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி சுதந்திரம் அடைந்து விட்டதாக அமெரிக்க ஐக்கிய அரசு பிரகடனப்படுத்தியது. என்றாலும், 1781 ம் ஆண்டு வரையிலும் பிரிட்டனுடன் போர் உரசல்கள் நடந்துகொண்டுதான் இருந்தன.

தற்போதைய ஆட்சிமுறை - உலகின் முதல் வல்லரசாக திகழும் இங்கு தற்போது மக்களாட்சி நடைபெற்று வருகிறது.

🎆🎆🎆🎆🎆🎆


அயர்லாந்து.

Ireland.

நாட்டின் பெயர்அயர்லாந்து (Ireland).

தலைநகரம் - டப்ளின் (Dublin).

ஆட்சி மொழி - ஐரிஷ் (Irish), ஆங்கிலம் (English).

Location Ireland EU Europe

அமைவிடம் - அயர்லாந்துவானது வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இதன் வடக்கு எல்லையாக ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகிய வட அயர்லாந்தும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் ஐரிஷ் கடலும் (Irish Sea) எல்லைகளாக அமைந்துள்ளன.

பரப்பளவு - 27,133 சதுர மைல்.

தேசிய கொடி.

Flag of Ireland


தேசிய சின்னம்.

Emblem of Ireland


அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - பல நாடுகளை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அயர்லாந்தையும் விட்டுவைக்கவில்லை. பத்தோடு ஒன்று பதினொன்றாக அயர்லாந்தையும் தன்னுடைய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.

சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - அயர்லாந்து மக்களிடையே உருவான தேசிய புரட்சியை அப்போதைய பிரிட்டிஷ் அரசு "தேசிய கலகம்" என பெயர்சூட்டி அடக்குமுறையை ஏவியது.

இந்தியாவிற்கு எப்படி காந்தியடிகளோ அப்படி அயர்லாந்திற்கும் ஒரு தலைவர் இருந்தார்.

ஆம், அவர்தான் "ஏமன் டிவேலரா".

இவர் ஆரம்பத்தில் சுதந்திர போராட்டத்திற்காக ஆயுதப்புரட்சியை கையிலெடுத்தாலும் முடிவில் வன்முறையை கைவிட்டு சட்டத்திற்கு உட்பட்ட அகிம்சை போராட்டத்தின் மூலமாகவே வெற்றிபெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

அதை செயல்படுத்த "ஐரிஷ்" என்ற கட்சியை உருவாக்கி 1917 ம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் சட்டசபைக்கான தேர்தலில் "கிஷேர்" என்னும் மாநில தொகுதியில் நின்று அமோகமான வெற்றியை பெற்றார். பிரிட்டிஷ் சட்டசபையில் அயர்லாந்து விடுதலைக்காக முழக்கமிட்டார்.

அந்த நேரத்தில் ஜெர்மனி நாட்டுடன் பிரிட்டிஷ் கடும் போரில் ஈடுபட்டிருந்தது.

அயர்லாந்து மக்கள் பிரிடிஷ் இராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபடவேண்டும் என கட்டளை இட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்த எதேச்சாதிகார உத்தரவை எதிர்த்து அயர்லாந்து மக்கள் வெகுண்டெழுந்தனர். கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

கிளர்ச்சி செய்தவர்கள் மீது ராணுவம் அடக்குமுறையை ஏவியது.

இதனால் ஒட்டுமொத்த அயர்லாந்து மக்களும் இராணுவத்திற்கு எதிராக கலகத்தில் இறங்க 1919 ம் ஆண்டு ஜனவரி 21 ம் தேதி பிரிட்டீஷ் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசித்தது.

தற்போதைய ஆட்சிமுறை - மக்களாட்சி.

💃💃💃💃💃


          "நாடுகளின் சுதந்திர தினங்கள்" (Part 1) என்னும் முதல் பகுதியான இப்பதிவில் அடிமை வாழ்வில் நைந்துபோன ஐந்து நாடுகளைப் பற்றியும், அவற்றின் சுதந்திர தினங்களைப் பற்றியும் அறிந்து கொண்டோம். தொடர்ந்து வரும் பதிவுகளில் மேலும் பல நாடுகளைப் பற்றி பார்க்க இருக்கின்றோம்...

👇👇👇👇👇👇

          இப்பதிவின் இரண்டாவது பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்க....

👉👉National Independence Days - Argentina - Part 2👈👈


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. பிரமிக்க வைக்கும் தகவல்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி.

    தொடர்ந்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
  2. அருமை, நாஞ்சில் சிவா. பாருங்க காலனி ஆட்சி குறிப்பா பிரிட்டிஷ், அப்புறம் போர்ச்சுகீசியர்கள், ஃப்ரென்ச் கூட உண்டு. எல்லாரும் உலகத்தையே ஆள நினைச்சிருக்காங்க...ஒவ்வொன்றும் போராடி வென்று இப்ப குடியாட்சி. இப்ப குடியாட்சி வந்தாலும் போர் நடக்கத்தான் செய்கிறது...என்ன சொல்ல? இன்று உலகத்தைக்கோலோச்சும் அமெரிக்கா கூட ஒரு காலத்தில் அடிமையாக இருன்டிருக்கு. சில தகவல்கள் வாசித்ததுண்டு.

    தகவல்கள் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோதரி...

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.