header ads

header ads

இந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - சுவாமி விவேகானந்தர்.

Swami vivekananda philosophies.

          பண்டைய காலம் தொட்டே ஆன்மீகம் தழைத்து வளர்ந்த தேசம் நம் இந்திய தேசம். இந்த நிலப்பரப்பு தன்னலமற்ற பல துறவிகளையும், மகான்களையும்  கண்டிருந்தாலும் இந்தியாவின் "வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் "சுவாமி விவேகானந்தர் - Swami vivekanandaமட்டுமே.

Swami Vivekananda philosophies

          ஏனெனில், இவருடைய வீரம் செறிந்த உணர்ச்சியூட்டும் உரைகள் ஒவ்வொன்றும் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியூட்டும் விதைகளாக விழுந்தன.

          இவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் இளைஞர்களின் இதயங்களில் தன்னம்பிக்கையையும், வீரத்தையும் விதைத்ததால் வீரத்துறவி என மக்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். அவரின் வீரம் செறிந்த தத்துவங்களில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

வாழ்க்கை குறிப்பு.

பெயர் :- விவேகானந்தர்.

இயற்பெயர் :- நரேந்திரநாத் தத்தா. 

பிறப்பு :- ஜனவரி 12, 1863.

தாயகம் :- இந்தியா.

பெற்றோர்கள் :- விசுவநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி.

பிறந்த இடம் :- கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா.

உடன் பிறப்புகள் :- இளைய சகோதரர்கள் 2, மூத்த சகோதரி 1, இளைய சகோதரி 1.

வாழ்க்கை :- ஆன்மீகவாதி, தத்துவ ஞானி, துறவி.

குரு :- ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சர் .

இறப்பு :- ஜூலை 4, 1902.

இறந்த இடம் :- பேலூர். கொல்கத்தா.

விவேகானந்தரின் தத்துவங்கள்.

 • நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார் ... ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை.
 • உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அதிலிருந்தே நல்ல செயல்கள் விளையும்.
 • உலகிலுள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகி விடும்.

philosophies- vivekananda

 • யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் பின்னாளில் உன்னை யோசிக்க வைக்கும்.
 • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையில் நீங்கள் செய்து முடிக்காத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
 • எழுமின், விழிமின் குறிக்கோளை அடையும் வரை அயராது உழைமின்.
 • உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம் ... ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்து விடாதீர்கள்.
 • உனக்கு தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கிறது.
 • பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஒதுங்கினால் அது உன்னை துரத்தும். அதை எதிர்த்து நின்றால் ஒதுங்கிக் கொள்ளும்.
 • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் ! உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
 • பலவீனத்திற்கான பரிகாரம். ஓயாது பலவீனத்தைப் பற்றி சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையை குறித்து சிந்திப்பதுதான் ஒரே தீர்வு.
 • வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது. அதைவிட அதிகமாக விவேகமும் இருத்தல் வேண்டும்.
 • பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும்தான்...
 • நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்.
 • நீ தனிமையில் இருக்கும் போது எதைப்பற்றி சிந்திக்கிறாயோ. அந்த சிந்தனைதான் உன் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும்.

philosophies vivekananda

 • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.
 • ஆயிரம் முறை தோற்றாலும் இலட்சியத்தையும், முயற்சியையும் கை விடாதீர்கள் . தோல்வியையும் தோற்கடிக்கும் திறன் இவைகளுக்கு மட்டுமே உண்டு.
 • பிறரது பழிக்கும், பாராட்டுக்கும் நீ செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் சாதிக்க முடியாது.
          இதுவரை வீர துறவியின் வைர வரிகளை அறிந்துகொண்ட நீங்கள் ஆன்மீக தத்துவ ஞானி "ஓஷோ - Osho " அவர்களின் தத்துவங்களையும்  அறிந்து  கொள்ள விருப்பமா! ... அறிந்துகொள்ள 👉 இங்கே கிளிக்குங்க.


கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.