விலங்குகளின் கர்ப்ப கால அளவை. - Pregnancy duration of animals.

Pregnancy duration of animals.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே சந்தோசம் நிறைந்த வாழ்க்கையையே விரும்புகின்றன. 

ஆனால் இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் முதல் ஜனனம் என்பது வேதனை நிறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அருகிலுள்ளவர்களுக்கு பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும் அந்த நிகழ்வு பெற்றெடுக்கும் தாய்க்கும் பிறக்கப்போகும் சேய்க்கும் அந்த சில கணங்கள் பரபரப்பும் கூடவே வலியையும் தரக்கூடிய ஒரு நிகழ்வு.

''அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்'' என்பார்கள். வேறு வழி?

குழந்தை பிரசவித்த பெண்களை கிராமப்புறங்களில் ''செத்துப் பிழைத்தவள்'' என்பார்கள். ஆம், உண்மைதான்! ஒரு உயிரை இந்த உலகிற்குக்கொடுக்க தாயானவள் தன் உயிரை பணயம் வைக்கிறாள் என்பதே நிதர்சன உண்மை.

வலியோடுதான் பிரசவிக்கிறோம் ஆனாலும் அதனை ''சுக பிரசவம்'' என்றுதான் பிரசுரிக்கிறோம்.. முரண்பாடாக தெரியவில்லை?

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மனிதஇனம் தற்போது குழந்தையை பிரசவிக்கும் அந்த கணத்தில் ஏற்படும் உடல் வலியிலிருந்து ஓரளவு விடுபட்டுள்ளன என்று கூறலாம். ஆனால் மனிதனை தவிர பிற உயிரினங்கள் இன்னும் அந்த வலியை முழுமையாக அனுபவித்தேதான் தன் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன.

deerfam

வலியாக இருந்தாலும் அதற்கு வேறு வழி இல்லை. இயற்கை அப்படித்தானே விதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. தன் இனம் நீடிக்க வேண்டுமென்றால் இயற்கை ஏற்படுத்தி வைத்துள்ள அந்த வழி வலியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.. வேறு வழி?

சரி.. இங்கு சில விலங்குகளை பற்றியும் அவைகளின் கருவுறும் கால அளவுகளைப்பற்றியும் சிறிது பார்ப்போம்..

விலங்குகள் கருவுறும் கால அளவு
எலி 19 -23 நாட்கள்
மாடு 280 நாட்கள்
புலி 115 - 145 நாட்கள்
எருமை 305 - 318 நாட்கள்
கரடி 215 - 240 நாட்கள்
அணில் 30 - 40 நாட்கள்
மான் 200 நாட்கள்
நரி 52 நாட்கள்
கொரில்லா 255 - 260 நாட்கள்
கங்காரு 42 நாட்கள்
சிறுத்தை 93 நாட்கள்
சிங்கம் 108 நாட்கள்
குரங்கு 164 நாட்கள்
பன்றி 115 நாட்கள்
முள்ளம்பன்றி 240 நாட்கள்
முயல் 28 - 35 நாட்கள்
கடல் சிங்கம் 350 நாட்கள்
திமிங்கலம் 535 நாட்கள்
ஓநாய் 64 நாட்கள்
வரிக்குதிரை 375 நாட்கள்
மனிதன் 9 மாதங்கள்
நாய் 2 மாதங்கள்
ஆடு 5 மாதங்கள்
யானை 17 - 20 மாதங்கள்
கழுதை 12 மாதங்கள்
ஒட்டகம் 13 மாதங்கள்
சிம்பன்ஸி 8 மாதங்கள்
ஒட்டகசிவிங்கி 14 மாதங்கள்
நீர்யானை 8 மாதங்கள்
டால்பின் (ஓர்கா) 17 மாதங்கள்
குதிரை 11 மாதங்கள்
காண்டாமிருகம் 15 மாதங்கள்
சீல் 11 மாதங்கள்

animals_Pregnancy duration

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

1 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.