தனுராசனம் - dhanurasana.

Dhanurasana.

தனுசு என்றால் ''வில்''. இந்த ஆசனத்தில் வில் போன்று நம்முடைய உடல் பின்னோக்கி வளைக்கப்படுவதால் இது ''தனுராசனம்'' என பெயர் பெற்றது.

dhanurasana

தனுராசனம்.

இது மிகவும் அற்புதமான ஆசனம். இந்த பயிற்சியின் மூலம் முதுகுத்தண்டு நன்கு துவளும் தன்மையை பெறும். இதனால் இளமை மேலிடும். சுறுசுறுப்பு பெருகும். முதுகு கூன்விழுவதிலிருந்து தடுக்கப்படும். உடலின் உள்ளுறுப்புகளான இதயம் நுரையீரல் முதலியன வலுப்பெறும்.

இது எனக்கு மிகவும் பிடித்தமான ஆசனமும் கூட. ஆனால் சில ''துடிப்பான'' இளைஞர்கள் இந்த ஆசனத்தை செய்து முடிக்கும் தருவாயில்  ''வடபோச்சே'' என்று பீல் பண்ணுவார்கள்..

இது ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான ஆசனம் என்றாலும் இதை பயிற்சி செய்து முடிக்கும் வரையில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் அவ்வளவே!!

sealvaraj siddha vaithiya salai

சரி, இப்போது ஆசனம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தனுராசனத்தினால் மார்பு வலிமை பெறும். கூன் முதுகை நிமிரச்செய்து இளமையை கொடுக்கும். மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். தனித்துவம் வாய்ந்த இந்த தனுராசனத்தை எப்படி பயிற்சி செய்வது என பார்ப்போம்.

செய்முறை.

விரிப்பின்மீது கவிழ்ந்த நிலையில் நேராக படுக்கவும். கைகள் இரண்டையும் உடலை ஒட்டினாற்போல் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். அதன்பின் இரு கால்களையும் மடக்கி இடது கையால் இடது கணுக்காலையும், வலது கையால் வலது கணுக்காலையும் பிடித்துக்கொள்ளவும். மார்பு பகுதி, கழுத்து, தலை முதலியவற்றை மேல்நோக்கி தூக்கி முதுகை வில்போல் வளைக்கவும்.

குறிப்பாக வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படும்படியும், வயிற்று பகுதியிலிருந்து உடலின் பிற உறுப்புகள் அப்படியே வில்போல் வளைந்து இருக்கும்படியும் உடலை அமைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் இருக்கும்போது மூச்சை அடக்குதல் கூடாது. இயல்பாக மூச்சு விடுங்கள்.

இந்நிலையில் 10 முதல் 30 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். பின் 10 அல்லது 15 வினாடி ஓய்வுக்கு பின் மீண்டும் இப்பயிற்சியை மேற்கொள்ளவும். இதேபோல் திரும்ப திரும்ப 5 அல்லது 6 தடவை இந்த ஆசனத்தை பயிற்சி எடுக்கவும்.

dhanurasanam

பயன்.

இது ஒரு அற்புதமான ஆசனம். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். அஜீரணமும், மலச்சிக்கலும் நீங்கும்.

மார்பு பலம் பெறும். மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சிறுநீரகம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். சிறுநீரக கோளாறு அகலும். முதுகுவலி நீங்கும். தொப்பை, ஊளைச்சதை முற்றிலும் குறையும். இளமையும், சுறுசுறுப்பும்  உண்டாகும். ஆண்மை பெருகும்.

குறிப்பு.

வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று அதன் பின்பே இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இதயநோயாளிகள், முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், வயிற்றில் புண் மற்றும் விரைவாதம் உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும்.

💢💢💢💢💢

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

0 கருத்துகள்