"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Dodo bird.

Dodo bird.

டோடோ பறவை.

dodo bird.

          பறவைகள் சரணாலயம் சென்று வந்தோமெனில் நாம் இதுவரை காணாத பல பறவை இனங்களை கண்டுவரலாம். இன்னும் அற்புதமான எழில் பொருந்திய பல பறவைகள் நம் கண்களுக்கு தென்படாமலேயே இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனங்களில் ஏராளமாக வாழ்ந்து வருகின்றன.

dodo bird.

இன்னும் சில பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும் பல பறவை இனங்கள் இவ்வுலகிலிருந்து முற்றிலுமாக அழிந்து விட்டன. அப்படி அழிந்து போன ஒரு பறவையினத்தைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

டோடோ.

பறவையின் பெயர் :- டோடோ - Dodo.

இனம் :- பறவை (Bird).

குடும்பம் :- புறா (Pigeon).

துணைக்குடும்பம் :- en. Raphinae.

பேரினம் :- raphus cucullatus.

இனம் :- Cucullatus.

தாயகம் :- மொரீசியஸ் தீவுகள்.

வரலாற்று தகவல்.

ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள மொரீஷியஸ் தீவில் (Mauritius Island) ''டோடோ'' (dodo) என்னும் இப்பறவை இனம் 300 ஆண்டுகளுக்கு முன்னால் பெருமளவில் வாழ்ந்து வந்தது.

இது வான்கோழியைவிட உருவில் பெரியது. இதன் கால்களும், இறக்கைகளும் குட்டையானவை ஆகையால் இவைகளால் வேகமாக ஓடவோ, பறக்கவோ முடியாது.

ஏனெனில், அக்காலக்கட்டத்தில் இத்தீவில் இந்த பறவையை கொன்று சாப்பிடக்கூடிய பாலூட்டி விலங்குகளோ வேறு எதிரி உயிரினங்களோ இல்லை. எதிரிகள் இல்லாததால் இவைகள் வேகமாக ஓடவேண்டிய அவசியமோ, பறந்து தப்பிக்க வேண்டிய அவசியமோ இல்லாமல் போனதால் பரிணாமவளர்ச்சியில் வலுவான கால்களோ, வலுவான இறக்கைகளோ பெறமுடியவில்லை.

dodo bird

மேலும் இதன் முட்டைகளை திருடி சாப்பிடுவதற்கு எந்த எதிர் உயிரினமும் இத்தீவில் இல்லை என்பதால் இவை எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெறும் தரையிலேயே முட்டைகளை இட்டன. இவற்றின் இந்த பண்புகளே இவைகளின் ஒட்டுமொத்த அழிவிற்கும் காரணமாக அமைந்து விட்டன. ஆம் இப்பறவைகள் தற்போது ஒன்றுகூட இவ்வுலகில் இல்லை.

மொரீஷியஸ் (Mauritius) தீவுகளுக்கு முதன்முதலாக கப்பலில் வந்திறங்கி குடியேறிய ஐரோப்பியர்கள் தாங்கள் இதுவரை பார்த்திராத ஒரு புதுவகையான பறவை இத்தீவில் இருப்பதைப் பார்த்து அதிசயித்தனர்.

இதுவரை எதிரிகளை பார்த்திராத டோடோ பறவைக்கு மனிதர்களைப் பார்த்து ஓடிஒளியவேண்டும் என்று தோன்றவில்லை. நெருங்கிவரும் ஆபத்தை உணராமல் அவர்கள் அருகிலேயே நட்புடன் நின்றது.

இதன் உணர்வுகளை புரிந்துகொள்ள திராணியற்ற அந்த மானுட முட்டாள்களோ இது தங்களைப்பார்த்து பயப்படாமல் நிற்பதால் இந்த அப்பாவி பறவைக்கு ''முட்டாள் பறவை'' என்று பெயர் வைத்து விட்டனர். ''dodo'' என்றால் அவர்கள் பாஷையில் "முட்டாள்" என்று அர்த்தமாம்.

பெயர் வைத்தது மட்டுமல்ல இப்பறவையை ருசிபார்க்கவும் அவர்களின் நாவும் மனமும் துடித்தன. விளைவு படிப்படியாக இப்பறவையை உணவுக்காக கொன்று அழிக்க ஆரம்பித்தனர். இதன் இறைச்சி மென்மையாகவும், சுவையாகவும் இருந்ததால் இதை கொன்று தின்பதையே முழுநேர வேலையாக கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் கப்பலில் கொண்டுவந்த அவர்களின் வளர்ப்பு பிராணிகளான நாய்களும் (dog), குரங்குகளும் (Monkey), பன்றிகளும் (Pig) டோடோ பறவைகளின் முட்டைகளை தின்று தீர்த்தன.

விளைவு..

1681 ற்குப் பிறகு அதாவது மனிதர்கள் குடியேறிய 100 ஆண்டுகளுக்குள்ளாகவே இப்பறவைகள் அடியோடு அழிந்து போயின. வேதனை.

இப்பறவைகளின் எலும்புகளை (Bone) சேகரித்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக (University of Oxford) பொருட்காட்சி சாலையில் இன்றும் காட்சிக்காக வைத்திருக்கின்றனர்.

Oxford Dodo head

ஒரு இனத்தையே கொன்று தின்று விட்டு எலும்புகளை மட்டும் பொருட்காட்சி சாலையில் வைத்து பார்த்துக்கொண்டிருப்பதில் என்ன பெருமை என்று புரியவில்லை.

இனியாவது அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கும் உயிர்களை மனித நேயத்தோடு போற்றி பாதுகாப்போம்.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்