"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தகவல் களஞ்சியம் - விருதுகள் - general knowledge - Awards.

தகவல் களஞ்சியம் - விருதுகள் - general knowledge - Awards.

General Knowledge - Awards.

ஏதாவது ஒரு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அவர்களின் சாதனைகளை பாராட்டி வழங்கப்படும் நற்சான்றிதழ் பரிசுகளே விருதுகள் எனலாம்.


இப்பதிவில் உலகில் வழங்கப்பட்டு வரும் மிக முக்கிய  விருதுகள் சிலவற்றை பற்றிய தகவல்களை காணலாம்.

விருதுகள்.

நோபல் பரிசு.

[Nobel Prize]

உலகின் மிகப்பெரிய விருதாக நோபல் பரிசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது வேதியியல் ஆய்வாளரான ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895 ல் தொடங்கப்பட்டது. 1901 ம் ஆண்டு முதல் இது வழங்கப்பட்டு வருகிறது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

புலிட்சர் விருது.

[Pulitzer Prize]

சர்வதேச அளவில் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசை சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டி வழங்கப்படும் அமெரிக்க விருது. இது நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகையாக 10,000 அமெரிக்க டாலர்களும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

புக்கர் பரிசு.

[Booker prize].

சிறந்த இலக்கியத்திற்காக எழுத்தாளர்களுக்கு  பிரிட்டன் வழங்கும் பரிசு. இலக்கியங்களுக்கு வழங்கப்படும் பரிசுகளில் மிக உயர்ந்த பெருமைமிகு பரிசாக கருதப்படுகிறது. 1968 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பரிசுத்தொகை50,000 பவுண்ட்.

மகசேசே விருது.

[Magsaysay Award]

இது ஆசியாவின் நோபல்பரிசு என அழைக்கப்படுகிறது. இவ்விருது  பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபரான மறைந்த ''ரமோன் மகசேசே'' நினைவாக வழங்கப்படுகிறது. இவர் பிலிப்பைன்ஸ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்.

general knowledge - Awards.

சிறந்த நோக்கங்களுக்காக நேர்மையுடனும் சுயநலமில்லாமலும் தொடர்ந்து பாடுபவர்களுக்கு இப்பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது . பதக்கம், சான்றிதழ், மற்றும் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை 30,000 டாலர்கள்.

ரைட் லைவ்லி ஹீட் விருது.

இது நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படும் விருது. சுற்றுப்புற சூழல், மற்றும் பாதுகாப்புக்காக அயராது உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை 1 லட்சம் டாலர்.

பத்மஸ்ரீ விருது.

[Padma shri]

இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய குடியியல் விருது. இது 1954 ம் ஆண்டு நிறுவப்பட்டது. கலை, கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை முதலியவைகளில் சிறப்பாக பங்களிப்பவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

சாகித்ய அகாடமி விருது.

[Sahitya Akademi Award].

இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சிறுகதை, நாவல், இலக்கியம் போன்றவற்றை படைக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் மிகச்சிறந்த மதிப்புமிக்க இந்திய அரசின் இலக்கிய விருதாகும். 

Awards_general_knowledge

இது முதன்முதலாக 1954 ல் நிறுவப்பட்டது. பரிசுத்தொகையும், பட்டயமும் வழங்கப்படுகின்றன. பரிசுத்தொகை 1 லட்சம்.

சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்.

[Champions of the earth].

சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் என்னும் சுற்றுசூழல் விருதானது சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக பாடுபடும் மனிதர்களுக்கு ஐ.நா வின் சுற்றுசூழல் அமைப்பு வழங்கும் உயரிய விருது.

சுற்றுசூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதுமையாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுப்பவர்களுக்கு இப்பரிசு பரிந்துரைக்கப்படுகிறது. பரிசுத்தொகை 2 லட்சம் டாலர்.

பாரத ரத்னா விருது.

[Bharat Ratna Award ]

மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இது இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

bharat ratna award

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், சமூகசேவை முதலிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

காந்தி அமைதி பரிசு.

[Gandhi Peace Prize]

இது காந்திஜியின் 125 வது பிறந்த நாளான 1995 ல் நிறுவப்பட்டது. அமைதியை விரும்பிய காந்தியடிகளை கவுரவிக்கும் முகமாக இந்த பரிசு இந்திய அரசால் உருவாக்கப்பட்டது.

வன்முறை இன்றி அமைதி வழியில் போராடும் தலைவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் அமைதிக்கான விருது. பரிசுத்தொகை 1 கோடி.

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.