"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
இதையும் தெரிந்து கொள்வோம். - General Knowledge - Tamil.

இதையும் தெரிந்து கொள்வோம். - General Knowledge - Tamil.

Creatures - General Knowledge.

இன்றைய அறிவியல் உலகம் மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான எல்லா வசதிவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இவ்வுலகில் மனிதர்களாகிய நாம் மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்றால் இல்லை. நம்மைச்சுற்றி பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என பல்வேறு உயிரினங்களும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. மனிதர்களாகிய நமக்கு இவ்வுலகில் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை பிற உயிரினங்களுக்கும் உண்டு.

எனவே, அந்த உயிரினங்களின் வாழ்க்கை முறை மற்றும் அவைகளின் வாழ்வியல் உரிமைகளையும்  அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.

ஆனால், அவைகளின் அனைத்து வாழ்வியல் நுட்பங்களையும் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோமா என்றால்  இல்லை என்றே சொல்ல வேண்டும். 

வாருங்கள்!,  இப்பதிவில் உயிரினங்களைப்பற்றிய சில உண்மைகளை சின்னஞ்சிறு பொது அறிவு கேள்வி பதில்களாக  தெரிந்துகொள்வோம்.

உயிரினங்களை தெரிந்து கொள்வோம்.

 • இரு கண்களிலும் நான்கு விழித்திரை கொண்ட மீன் இனம் - அனப்லெப்ஸ். ( Anableps ).
 • காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது - உரோமக் கற்றைகளால் ஆனது.

 • பூனையின் கண்கள் இரவில் மின்னுவதற்கு காரணம் - டபீட்டம் லூசிடம். (Tapetum lucidum).

 • மிக வேகமாக ஓடும் பூச்சி - கரப்பான் பூச்சி. (Cockroaches).

 • மாமிசம் தின்னும் ஆஸ்திரேலிய கிளி - கியா. ( Kea ).

 • அதிக சத்தம் எழுப்பும் பூச்சியினம் - சிகாடா. (Cicada ).

 • நீண்ட தூரம் தொடர்ந்து கூட்டமாக பறக்கக் கூடிய பறவை - ஆர்டிக் டெர்ன். (Arctic tern ).

General Knowledge_Cicada

 • கழுகுகள் இறக்கைகளை அசைக்காமல் தொடர்ந்து பறக்கும் தூரம் - 6 கி . மீ.

 • விலங்குகளில் அதிக அறிவு படைத்தது - டால்பின். ( Dolphin ).

 • பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா - லாக்டோ பாசில்லஸ்.

 • பன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் - ஏ எச் 1 என் 1 வைரஸ்.

 • தற்போது உலகில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது - ப்ளூவேல் என்னும்  நீலத்திமிங்கலம். ( blue whale ).

 • நீண்டகாலம் உயிர்வாழும் பறவை - நெருப்புக்கோழி. (Ostrich).

 • உலகின் மிகச் சிறிய பறவை - ஹம்மிங். ( Hummingbird ). இதன் எடை 16 கிராம்.

 • முட்டையிடும் பாலூட்டிகள் - எறும்புத்தின்னி (Anteater). மற்றும் டக்பில் பிளாடிபஸ். (Duckbill Platypus).

General Knowledge - Hummingbird

 • வௌவால்கள் உருவாக்கும் மீயொலி அலைகளின் அதிர்வெண் - 70,000 Hz.

 • கடலில் உள்ள மீன்களுக்கு பெருமளவில் உணவாக பயன்படும் உயிரி - பிளாங்டன். (Plankton).

 • உலகிலேயே அதிக அளவில் முட்டையிடும் உயிரினம் - கரையான். (Termite).

 • பட்டுப்புழுவிற்கு உணவாக அளிக்கப்படும் தாவரம் - மல்பெரி இலைகள்.

 • பட்டுப்பூச்சியை தாக்கும் வைரஸ் நோய் - கிராஸ்செரி.

இதுமாதிரியான அறிவியல் சார்ந்த பொது அறிவு தகவல்களை அறிந்துகொள்ள விருப்பமா? அருகிலுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

>> "உலக பொது அறிவு தகவல்கள் - General Knowledge - Tamil."<<

💓💙💓💙💓💙💓

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.