"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
உடலியல் - Physiology general knowledge.

உடலியல் - Physiology general knowledge.

General knowledge of  Physiology.

உலக அறிவை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் நிறைய நூல்களை தேடித்தேடி படிக்கின்றோம். ஆனால் நம்முடைய உடலைப்பற்றிய அறிவு நம்மிடம் எந்த அளவில் இருக்கிறது என்று என்றாவது சிந்தித்து பார்த்தோமா?...

நம்மில் பலருக்கு நாம் வாசம் செய்யும் இந்த உடலைப்பற்றிய அடிப்படை அறிவோ அல்லது அதன் இயக்கம் பற்றியோ அடிப்படை புரிதலோ இல்லாமல் முழுவாழ்க்கையையும் முடித்துவிட்டு அடங்கிப்போகிறோம்.

தேக வாழ்க்கையை முடிக்கும்முன் நம்முடைய உடலிலுள்ள சில அடிப்படை விஷயங்களை ஓரிரு வரிகளில் பொதுஅறிவு விஷயங்களாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உடலியல் -  General knowledge.

 • மனிதனின் கண்களில் விழிக்கோளம் எத்தனை அடுக்குகளால் ஆனது - 3 அடுக்குகள்.

 • கண்ணீரைச் சுரக்கும் சுரப்பியின் பெயர் - லேக்ரிமல் சுரப்பி.

 • உடலில் இரத்தம் பாயாத பகுதி - கருவிழி.

 • கண்ணிற்குள் வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துவது  - ஐரிஸ். (Iris).

 • வைட்டமின் D குறைவினால் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் - ரிக்கெட்ஸ் - rickets. ( எலும்புருக்கி நோய் ).

Physiology general knowledge rickets

 • மனிதனின் முதுகுத் தண்டு தொடரில் எத்தனை எலும்புகள் உள்ளன - 33 எலும்புகள்.

 • மூளையிலுள்ள இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி - முகுளம். ( Medulla Oblongata ).

 • உலகின் மிக அதிகமானோரில் காணப்படும் இரத்த குரூப் - O பாஸிட்டிவ்.

 • O வகை இரத்த மனிதர்கள் எந்த இரத்த வகையினரிடமிருந்து இரத்தம் பெற முடியும் - O இரத்த வகை.

 • ஆன்டிஜன்கள் இல்லாத இரத்த குரூப் - O குரூப்.

 • ஆன்டிபாடி இல்லாத இரத்த குரூப் - AB குரூப்.
 • மலேரியா நோயினால் பாதிப்படையும் உறுப்பு - மண்ணீரல். (Spleen).

 • மனிதனின் சாதாரண உடல் வெப்பநிலை - 36.9 ⁰ C.
 • டையாலிசிஸ் சிகிச்சை உடலின் எந்த உறுப்பு பழுதடைவதால் செய்யப்படுகிறது - சிறுநீரகம். ( Kidneys ).

 • மனிதனின் கேட்கும் திறன் - 81 dB to 120 dB.

 • உமிழ் நீரிலுள்ள (விழுங்குநீர்) நொதி - டயலின்.

 • இரத்தம் உறையாமல் பாதுகாக்க இரத்த வங்கிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் - சோடியம் சிட்ரேட் . (Sodium Citrate).

 • மனித உடலின் சராசரி வெப்பநிலை - 37 டிகிரி செல்ஷியஸ்.

 • மனித உடலிலுள்ள மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல். ( Liver ).

 • மனித உடலிலுள்ள எலும்புகளில் மிக சிறியது எது - காதில் உள்ள ''ஸ்டேப்ஸ்''  ( Stapes ) என்னும் எலும்பு.

Physiology general knowledge

 • அனைத்து வகை க்ரூப் இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தம் (universal recieplant) - AB க்ரூப் 

 • அனைத்து குரூப் இரத்தத்திற்கும் தானமாக வழங்கப்படும் இரத்த குரூப் (universal donar).- O குரூப்.

 • உலகின் மிக அபூர்வமான இரத்த குரூப் - AB நெகடிவ்.

இதுபோன்ற பல பொது அறிவுசார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள விருப்பமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

>> "பொது அறிவு வினா - விடை. General Knowledge Quiz."<<

💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்