யுரேனஸ் - பயோடேட்டா - Uranus bio data.

Uranus biodata.

பெயர்க் காரணம் - கிரேக்க கடவுளின் பெயரான ''யுரேனஸ்'' என்னும் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

Uranus bio data

யுரேனஸ்  - பயோடேட்டா.

யுரேனஸ் கிரகத்தின் சிறப்பு.

இது சூரியனிலிருந்து 7வது இடத்தில் அமைந்துள்ளது. நம் சூரிய குடும்பத்தின் 3 வது பெரிய கோளாகும். இக்கிரகத்தை சுற்றி மெல்லிய வளையங்கள் காணப்படுகின்றன.

கிழக்கிலிருந்து மேற்காக தன்னைத்தானே சுற்றி வருகிறது. நம் சூரிய குடும்பத்திலுள்ள வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய இந்த இருகோள்களை தவிர பிற அனைத்து கோள்களும் மேற்கிலிருந்து கிழக்காக (தன்னைத்தானே சுற்றுதல்) சுற்றுகிறது. வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய இரு கிரகங்களிலும் சூரியன் மேற்கே உதித்து கிழக்கே மறையும்.

தன்மை.

நீலம் மற்றும் பசுமை கலந்த நிறத்தில் காணப்படுகிறது. இது மிகப்பெரியதொரு வாயுக்கோளம். இது பிற கோள்களை போல் நேராக நின்று சுழலாமல் கிடைமட்டமாக படுத்தபடி சுழல்கிறது.

Biodata.

சூரியனிடமிருந்து தொலைவு  - 2,872,460,000 கி.மீ.

சூரியனை சுற்றும் வேகம்  - 6.8352 Km/s.

சூரியனை சுற்றும் வட்ட பாதையின் அளவு -  2,870,658,186 Km.

சுற்றுப்பாதையின் சராசரி திசைவேகம் - 24,277 Km/h

சூரியனை சுற்றும் கால அளவு - 84 ஆண்டுகள் 3 நாள் 15 மணி 66 நிமிடம்.

தன்னைத்தானே சுற்றும் கால அளவு  - 17 மணி 14 நிமிடம்.

தன் அச்சில் சுழலும் வேகம்  - 2.59 Km/s.

சராசரி வெப்பநிலை -  - 197.2 ⁰ C.

விடுபடு திசைவேகம் - 21.29 Km/s.

சராசரி ஆரம் - 25,362 ± 7 Km.

நில நடுக்கோட்டு ஆரம் - 25,559 ± 4 Km.

துருவ ஆரம் - 24,973 ± 20 Km . 

யுரேனஸ் கிரகத்தின் விட்டம் - 51,111 Km.

சூழல் அச்சு சாய்வு கோணம் - 97.8 ⁰.

காந்த மண்டலம் - உண்டு.


Uranus

வளிமண்டல அமுக்கம் - 130 Kpa.

யுரேனஸின் எடை  - 8.686 × 10 ³⁵Kg.

கன அளவு -  6.833×10¹³Km³.

யுரேனஸின் சராசரி அடர்த்தி  -1.28 கி/cm ³.

மேற்பரப்பு  - 8,115,600,000 Km ².

ஈர்ப்பு விசை - 8.69 m/s ².

துணைக்கோள் - 27 துணைக்கோள்கள் இதனை சுற்றி வருகின்றன.

யூரேனஸில் காணப்படும் பொருட்கள்.

இது பனிப்பாறைகளால் ஆன ஒரு கோள். இதில் பெரும்பாலும் நீர், மீத்தேன், அமோனியா அடங்கியுள்ளது.

வளிமண்டலம்.

இதன் வளிமண்டலத்தில் 83% ஹைட்ரஜன், 15% ஹீலியம், 2.3% மீத்தேன், 0.009% Hydrogen  deuteide மற்றும் அமோனியா முதலிய வாயுக்கள் காணப்படுகின்றன.

உயிரின  வாழ்க்கை.

உயிரினங்கள் வாழ்வதற்கான மூலப்பொருள்களோ சூழ்நிலைகளோ இல்லை..பனிப்பாறைகளும் வாயுக்களும் செறிந்துள்ள வாயுக்கோளம். இங்கு மணிக்கு 900 Km வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

0 கருத்துகள்