"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பூமி அறிவியல் - Earth Science.

பூமி அறிவியல் - Earth Science.

Earth Science.

நமது சூரியகுடும்ப வரிசையில் மூன்றாவது இடத்தில் அமைத்துள்ள கோள் நமது பூமி. நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் பல்கிப்பெருகி வாழ தகுதியான ஒரே கோளும் இதுவே. இது சுமார் 4.8 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.


பூமி அறிவியல்.

இது சூரியனிலிருந்து 14,96,00,000 கி .மீ தொலைவில் உள்ளது. சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. பூமியின் ஒரேயொரு துணைக்கோள் சந்திரன். பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கும் பூமிக்குமான தொலைவு 240,000 கி.மீ.

நாம் பூமியில் சூரியனுடைய வெப்பத்தை கடுமையாக உணர்கிறோம் அல்லவா.. அது உண்மையில் சூரியனிலிருந்து வருகிற வெப்பமே அல்ல!! இதில் ஒரு சிறிய பகுதி வெப்பம் மட்டுமே சூரியனிலிருந்து வருகிறது. பெரும்பகுதி வெப்பம் பூமியை சுற்றியுள்ள அணுத்துகள்களிலிருந்தே உற்பத்தியாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாக அமைதியாக இருக்கும் அணுக்களை சிறிதளவில் சூடுபடுத்தினால் அவைகளுக்குள் கிளர்ச்சி ஏற்பட்டு அவை வேகமாக இயக்கப்படும். சூரியனிலிருந்து வரும் சிறிதளவு வெப்பத்தினால் பூமியிலுள்ள அணுக்கள் சூடுபடுத்தப்பட்டு ஒவ்வொரு அணுக்களும் தன்னை சுற்றியிருக்கும் அணுக்களுடன் வேகமாக உராய்வதால் அணுக்களில் பெருமளவில் வெப்பம் உற்பத்தியாகிறது.

நம்முடைய இருகைகளையும் வேகமாக ஒன்றோடொன்று உரசும்போது எவ்வாறு வெப்பம் உருவாகிறதோ அதுபோல இரு அணுக்கள் ஒன்றோடொன்று வேகமாக உராயும்போதும் வெப்பம் உற்பத்தியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

இதேபோல் பல லட்சம் கோடி ட்ரில்லியன் அணுக்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்வதால் வெப்பம் மேலும் அதிகரிக்கிறது.

Earth Science_heat generated formula

எனவேதான் புவியீர்ப்பு விசையின் காரணமாக அணுக்களின் செறிவு அதிகம் உள்ள புவியின் அடித்தட்டு பகுதியில் அதிக அணுக்கள் உரசிக்கொள்வதால் வெப்பம் அதிகமாகவும், பூமியிலிருந்து மேலே போகப்போக புவிஈர்ப்பு விசை குறைந்துகொண்டே போகுமாதலால் அதன்காரணமாக அணுக்களின் செறிவும் (எண்ணிக்கை) குறைவாக இருக்குமாதலால் குறைவான அணுக்களே உராய்வை ஏற்படுத்தும் என்பதால் அதன்காரணமாக மிக குறைவான வெப்பமே உற்பத்தியாவதால் பூமியிலிருந்து மேலே போகப்போக அதிக குளிர்ச்சியை உணர்கிறோம்.

பூமி மட்டத்திலிருந்து உயரமான இடங்களான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் உயரமான மலைகள் போன்ற இடங்களில் வெப்பம் குறைவாகவும், குளிர்ச்சியாகவும், பனிக்கட்டிகள் உறைந்தும் காணப்படுவதற்கு இதுவே அடிப்படை காரணம்.

எனவே நாம் பகல் நேரங்களில் உணரும் வெப்பதின் அளவானது ஒரு சிறுபகுதி மட்டுமே சூரியனிலிருந்து பெறுகிறோம் என்பதையும் பெரும்பகுதி வெப்பம் நம்மை சுற்றி இருக்கும் அணுக்களிலிருந்தே பெறுகிறோம் என்கிற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

எனவே இனி வெப்பம் அதிகமாக உணர்ந்தால் அத்தனை வெப்பமும் சூரியனிலிருந்துதான் நேரடியாக பூமியை வந்தடைவதாக தவறாக புரிந்து கொண்டு சூரியனை திட்டி தீர்க்காதீர்கள்..

heat generated

சரி.. இனி பூமியின் வடிவ அமைப்பை பார்ப்போம்.. பூமி கோள வடிவமானது என்றாலும்  அனைத்து பக்கங்களிலும் சம அளவினை கொண்ட கோளம் அல்ல. கொஞ்சம் தட்டை வடிவ அமைப்பைக் கொண்டது.

இதன் பூமத்திய ரேகையின் அளவு 40,074 கி.மீ. ஆனால் இதன் இரு துருவங்களையும்  அளந்து பார்த்தோமெனில் 68 கி.மீ  குறையும். எனவே பூமியின் துருவப்பகுதி சிறிது தட்டையானது என்ற முடிவுக்கு எளிமையாக வந்துவிட முடியும்.

சுருக்கமாக சொல்லப்போனால் பூமியானது பூசணிக்காயின் வடிவத்தைக் கொண்டது. பூமியின் நிறை ஏறக்குறைய 6,000 மில்லியன் மில்லியன் டன்கள்.

நிலநடுக்கோடு வழியாக பூமியின் விட்டம் 12,756 கி.மீ. வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கி.மீ.

பூமியின் சராசரி அடர்த்தி 5.5351g cm ³. பூமியின் மொத்த  பரப்பளவு 510 மில்லியன் சதுர கி.மீ.

பூமியின் மேல் பகுதியிலிருந்து 40 கிலோமீட்டர் ஆழம் வரை ''crust'' என்னும் வெளித்தோடு அமைந்துள்ளது. இது மண் மற்றும் கடினமான பாறைகளால் ஆனது. அதற்கும் கீழே உள்ளது ''Mantle'' என்னும் பகுதியாகும். இது சுமார் 2900 கி.மீ ஆழம் வரை பரவி உள்ளது. இது திட மற்றும் உருகிய நிலையிலுள்ள பாறையாகும். இதற்கும் கீழே ''core'' என்று சொல்லப்படும் பூமியின் மையப்பகுதி வருகிறது. இதுவே பூமியின் அதிகம் வெப்பம் நிறைந்த பகுதியாகும்.

earth crust

பூமியின் மேல் பகுதியிலுள்ள மொத்த எடையும் பூமியின் Core என்னும் மைய பகுதியை அழுத்துவதால் அங்குள்ள மூலக்கூறுகள் அதிக அழுத்தத்தின் காரணமாக வேகமாக இயக்கப்பட்டு அதிகப்படியான வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. இங்கு வெப்பநிலை 4000 ⁰ C  முதல் 5000 ⁰ C வரை காணப்படுகிறது. எனவே இங்கு இரும்பு மற்றும் நிக்கல் உருகிய நிலையில் உலோக குழம்பாக காணப்படுகிறது.

பூமியின் ஈர்ப்பு விசையால் நாம் பூமியோடு கட்டுண்டு இருக்கிறோம். தீடீரென்று பூமியின் ஈர்ப்புவிசை நின்றுபோனால் நாம் பூமியிலிருந்து விடுபட்டு ஆகாயத்தில் மிதக்க ஆரம்பித்து விடுவோம். அதுமட்டுமல்ல நம் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய காற்றுமண்டலம் காணாமல் போய்விடும்.

இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும் புவிஈர்ப்பு விசை என்பது வேறு. புவி காந்த விசை என்பது வேறு. இந்த இரு விசைகளுமே பூமியில் உள்ளன. ஆனால் இரண்டும் ஒரே தன்மையுடையன இல்லை. இரண்டும் வெவேறு தன்மையுடையன. இதில் புவியீர்ப்பு விசை என்பது புவியின் ''பொருண்மை'' யை (Mass) சார்ந்தது. இது பூமியில் உள்ள அனைத்து பொருட்களையும் தன்னோடு இழுத்து பிணைத்து வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.

பூமியின் வளிமண்டலத்தில் பெருமளவில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அடங்கியுள்ளது. சிறிய அளவில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பலவகை வாயுக்கள் உள்ளன. இந்த வாயுக்கள் உயிர் வாழ்க்கைக்கு தேவையான பிராணவாயுவை தருவது மட்டுமல்லாது பூமியின் வெப்பத்தை சீராக்குவதற்கும், சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களை வடிகட்டுவதற்கும் காற்றுமண்டலம் பயன்படுகிறது.

மேலும், விண்வெளியிலிருந்து பூமியை நோக்கிவரும் விண்கற்களை காற்று மண்டலத்திற்கு உள்ளேயே எரித்து பூமியில் வந்து மோதாமல் பூமியை காப்பாற்றுகிறது. அதுசரி இந்த வாயு மண்டலத்தின் உயர அளவு தெரியுமா? சுமார் 1000 கி.மீ.

பூமி செங்குத்து நிலையில் சுழலாமல் 23.4⁰ சாய்ந்த நிலையிலேயே சுழலுகிறது. இது தன்னைத்தானே சுற்றிக்கொண்டே பூமியையும் சுற்றுகிறது. இது ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதற்கு 23 மணி 56 நிமிடமும், சூரியனை சுற்றுவதற்கு 365.26 நாட்களும் எடுத்துக்கொள்கிறது.

இது சூரியனை வலமிருந்து இடமாக அதாவது மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது.

பூமி சூரியனை சுற்றும் வேகம் என்ன தெரியுமா? மணிக்கு 1,00,000 கிலோமீட்டர். அடேங்கப்பா !!!

இதிலிருந்து நாம் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கும் போது கூட மணிக்கு 1 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது புரிகிறது அல்லவா?

''புல்லட்'' ட்ரெயின் மணிக்கு 650 கிலோமீட்டர் பயணிக்கும் என்று சொல்லி ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறோம். ஆனால் அதைவிட அளவில் கோடானுகோடி மடங்கு பெரிதான பூமி மணிக்கு 1லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டிருப்பதையும், அதன் மேலிருக்கும் நாமும் அதனுடன் சேர்ந்து அதே வேகத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதையும் ஏனோ மறந்துவிடுகிறோம்!

இனி யாராவது நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டால் சும்மா உட்கார்ந்து இருக்கிறேன் என்று சொல்லாதீர்கள். நான் மணிக்கு 1 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள். சரியா?!.

ஆனால்.. டிராபிக் போலீசிடம் மட்டும் இதை சொல்லிப்புடாதீங்கோ..  அப்புறமா ஓவர் ஸ்பீடா போனதா கேஸ் பைல் பண்ணி லாக்கப்ல கொண்டு வச்சு நொங்கிப்புடுவானுங்கோ..

overspeed fine

மேலும் பூமியைப்பற்றிய முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை சுட்டுங்க..

>> பூமி - பயோடேட்டா - Earth biodata <<

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. அற்புதயான
  ஆச்சர்யமான
  இயற்கையின்
  ஈர்ப்புகளைப்பற்றி
  உண்மையை
  ஊரறியட்டுமென்ற
  எண்ணங்களோடு
  ஏட்டினிலே
  ஐம்புலண்களைப்பற்றியும்
  ஒளியலைகளோடு
  ஓங்கியொலித்து
  ஔவைப்பாட்டி கதைபோலவே சொல்லி வரும் தங்களுக்கு நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா ... ஆகா ... கவித ... கவித .... சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள இது புதுக்கவிதை அல்ல.... அதையும் தாண்டி புனிதமானது !!!...

   நீக்கு
  2. Suresh ... வருக நண்பரே ! தங்களின் வருகைக்கும்,தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி !!! ...

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.