தொப்பைக் கணபதியை கூட அவன் தம்பி பழனி ஆண்டியைப்போல் மாற்றும் திறன் வாய்ந்த ஆசனமும் உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது அல்லவா ?
ஆனால், அது உண்மைதான் .... யோகாசன வரிசையில் '' யோக முத்ரா ஆசனம் '' என்று ஒரு பயிற்சி உள்ளது. எவ்வளவு பெரிய தொப்பை வயிற்றையும் கரைத்து விடும் திறன் கொண்டது.
அதுமட்டுமல்ல முதுகுவலி, தண்டுவடத்திலுள்ள பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் திறன் இதற்கு உண்டு. சரி இப்போது இத்துணை சிறப்பு பெற்ற யோக முத்ரா ஆசனம் பயிற்சி செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.
பயிற்சி செய்யும் முறை :-
முதலில் விரிப்பின் மேல் பத்மாசனத்தில் அமர்வது போல் கால்களை மடக்கி நன்கு நிமிர்ந்து உட்காரவும் .
பின் இருகைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று மடித்து இடதுகையால் வலது காலின் பெருவிரலையும், வலது கையால் இடது காலின் பெருவிரலையும் பிடித்துக்கொள்ளவும்.
இது சிரமமாக தோன்றினால் இருகைகளையும் பின்னால் ஒன்றோடு ஒன்று பிடித்துக்கொள்ளவும்.
பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டவாறு மூக்கு அல்லது வாய்ப்பகுதி தரையில் படும்படி நிதானமாக குனியவும். அதன் பின் மூச்சை இயல்பாக விடலாம்.
இந்நிலையில் 30 வினாடிகள் அப்படியே இருக்கவும். அதன்பின் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி எழுந்து பழைய நிலைக்கு வரவும். 20 வினாடி கழித்து மீண்டும் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி முன்போல் குனியவும். இவ்வாறு இப்பயிற்சியை 3 முதல் 5 தடவை செய்யவும்.
அதன்பிறகு சிறிது ஓய்வுக்குப்பின் வேறு வகையான ஆசனங்கள் செய்ய வேண்டுமெனில் செய்யலாம். அனைத்து ஆசனங்களையும் செய்த பின் கடைசி ஆசனமாக '' சவாசனம் '' கண்டிப்பாக செய்ய வேண்டுமென்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
மன அழுத்தத்தைப் போக்கும் திறனும் இதற்கு உண்டு. யோக ஆசனங்களில் இது தனி முத்திரை பதிப்பதால் இதற்கு யோக முத்திரை என்று பெயர்.

பயிற்சியால் விளையும் பலன் :-
இந்த ஆசனமானது எவ்வளவு பெரிய தொப்பை வயிற்றையும் கரைத்து விடும் திறன் கொண்டது. மேலும் முதுகுவலி, தண்டுவடத்திலுள்ள பிரச்சினைகள், வயிறு சம்பந்தப்பட்ட அஜீரண கோளாறுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனை அனைத்தையும் ஓட ஓட விரட்டும் திறன் இப்பயிற்சிக்கு உண்டு. மேலும் மலச்சிக்கலும் நீங்கும். நீரழிவு நோயையும் கட்டுப்படுத்தும். முதுகு தண்டு நன்கு வளைந்து கொடுப்பதால் இளமை மேலிடும். முகப்பொலிவும்,வசீகர தோற்றமும் உண்டாகும்.
மன அழுத்தத்தைப் போக்கும் திறனும் இதற்கு உண்டு. யோக ஆசனங்களில் இது தனி முத்திரை பதிப்பதால் இதற்கு யோக முத்திரை என்று பெயர்.
👍👍👍👍👍👍👍👍👍👍
No comments:
Post a Comment
நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...