"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சவாசனம்- சாந்தி ஆசனம். Savasana - Santhiyasana.

சவாசனம்- சாந்தி ஆசனம். Savasana - Santhiyasana.

Savasana - Santhiyasana.

யோகாசனப்பயிற்சியில் மிகமிக முக்கியமான ஆசனம் இந்த சவாசனம் ஆகும். ஏனெனில் யோகாசனப் பயிற்சியை முடித்தவுடன் கடைசி ஆசனமாக கண்டிப்பாக ''சவாசனம்''. செய்யவேண்டும். இது மிகமிக முக்கியம்.


சவாசனம்- சாந்தி ஆசனம்.

''சவம்'' என்றால் பிணம். அதாவது பிணம்போல் உடலை தளர்வாக எந்தவித விறைப்புத் தன்மையும் இல்லாமல் வைத்து படுத்திருக்க வேண்டுமாதலால் சவாசனம் எனப்பெயர் பெற்றது. இது உடலை சாந்தப்படுத்துவதால் இதனை "சாந்தி ஆசனம்" எனவும் அழைக்கின்றனர்.

யோகாசனம் செய்யும் நீங்கள் இறுதி ஆசனமாக சவாசனம் செய்யாமல் பயிற்சியை முடித்தால் நீங்கள் இதுவரை செய்த மொத்த பயிற்சியும் வீண் என்பதைப் புரிந்து கொள்ளவும். எனவே கடைசி பயிற்சியாக சவாசனத்தை கண்டிப்பாக செய்யவும். சவாசனம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

செய்முறை விளக்கம்.

விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். கால்களை நேராக நீட்டி லேசாக அகட்டி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மேற்புறம் பார்த்திருப்பதுபோல கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைக்கவும்.

உடம்பின் எந்த ஒரு உறுப்பையும் விறைப்பாக வைக்காமல் தளர்வாக வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் செத்த பிணம் போல் கிடக்க வேண்டும். சுவாசம் இயல்பாக விடவும்.

savasana

குறிப்பாக மனதில் எந்த வித எண்ணங்களும் இல்லாமல் நார்மலாக படுத்திருக்கவும். மனது மற்றும் உடல் இரண்டும் Relax ஆக இருக்கவேண்டும். 10 நிமிடம் இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.

இந்த ஆசனமானது ஆழ்ந்த தூக்கத்தை தரவல்லது ஆதலால் பலபேர் அப்படியே நிம்மதியாக தூங்கிவிடுகிறார்கள். எனவே விழிப்புடன் இருங்கள்.

சவாசனத்தின் பலன்.

ஆசனங்களிலேயே மிகவும் சுகமான இன்பகரமான ஆசனம் ஒன்று உண்டு என்றால் அது இந்த ஆசனம்தான். அனுபவித்து பார்த்தவர்களுக்கே அது புரியும். (பின்ன இருக்காதா.. காலை அகட்டி வச்சுக்கிட்டு மல்லாக்க விட்டத்த பாத்துக்கிட்டு தூங்குறதுன்னா சும்மாவா).

vadivelu Savasana

ஆசனபயிற்சியின்மூலம் உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்புகள் சில விறைப்பான தன்மை அடைந்திருக்கலாம். அதை அப்படியே விடும் பட்சத்தில் சுளுக்கு, தசைப்பிடிப்பு முதலிய பிரச்சனைகளை வருவிக்கலாம்.

எனவே பயிற்சியின் முடிவில் இந்த சவாசனத்தை செய்து உடம்பின் உள் மற்றும் வெளி உறுப்புகளை தளர்வடைய செய்வதால் அனைத்து உறுப்புகளுக்கும், நரம்பு மண்டலங்களுக்கு சுத்த இரத்தம் சீராக பாய்ந்து உடலை வலுப்படுத்துகிறது. உடலின் அத்தனை உறுப்புகளும் செப்பனிடப்படுகிறன்றன.

குறிப்பு.

''யோகாசனப் பயிற்சி'' அல்லது ''சூரியநமஸ்காரம்'' செய்பவர்கள் பயிற்சி முடிந்தவுடன் கடைசிப் பயிற்சியாக ''சவாசனம்'' கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். அப்படி செய்யாமல் விட்டால் இதுவரையில் நீங்கள் செய்த பயிற்சியின் முழு பலன்களும் கிடைக்காதது மட்டுமல்ல, உடல்வலி, தசைப்பிடிப்பு முதலிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

யோகாசனப் பயிற்சியை கடினமான பயிற்சிகள் மற்றும் எளிதான பயிற்சிகள் என இருவகையாகப் பிரிக்கலாம். இந்த தளத்தில் நீங்கள் எளிதாக பயிற்சி செய்யக்கூடிய பல யோகா பயிற்சிகள் இடம்பிடித்துள்ளன. பாலாசனம், சிசுபாலாசனம், வீரபத்ராசனம், திரிகோணாசனம் முதலியன அவைகளுள் சில. மேற்குறிப்பிட்டுள்ள எளிய ஆசனங்களை அந்தந்த பக்கங்களுக்கு சென்று பார்வையிடவும்.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.