header ads

header ads

வேடிக்கை பழமொழிகள் - Funny Proverbs in Tamil.

Funny Proverbs.

          ஒரு விஷயத்தை எளிதாக புரியவைப்பதற்கு நம் முன்னோர்கள் எதுகையுடன் கூடிய எளிய சொற்றோடர்களை பயன்படுத்தி வந்தனர். இவைகளே காலப்போக்கில் ''பழமொழிகள்'' என அழைக்கப்பட்டு வந்தன.

Funny Proverbs in Tami

          இவைகள் பல தத்துவ மொழிகளாகவும் , வேடிக்கை மொழிகளாகவும் விளங்கின. இப்பகுதியில் வேடிக்கையாக அமைந்துள்ள சில பழமொழிகளை காண்போம்.

பட்டுக்கோட்டையும் கொட்டைப்பாக்கும். 

 • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு . அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி.
 • எளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
 • ஆசைக்கு அக்காவை கட்டினானாம், கொஞ்சுவதற்கு கொழுந்தியாளை கட்டினானாம்.
 • ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
 • எண்சாண் உடம்பு இருக்க கோவணத்தில் போய் விழுந்ததாம் இடி. ...  (செத்தாண்டா சேகரு).
 • நித்திய கண்டம் பூரண ஆயுசு.
 • கம்முன்னு கிடக்குமாம் நாய், அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.
 • சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாண்டி ஆண்டி.
 • விடிய விடிய ராமாயணம் கேட்டானாம் .. விடிஞ்சப்புறம் கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் .
 • காட்டாற்றை கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, அதன் பின் நீயாரோ நான்யாரோ...
 • இடித்தவளும், புடைத்தவளும் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் அள்ளிக்கொண்டு போனாள்.
 • கடன் வாங்கியும்  பட்டினி , கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
Funny Proverbs vada poche
 • தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?
 • தொடையில் உள்ள புண் நடையில் காட்டும்.
 • மாடம் இடிந்தால் கூடம்.
 • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
 • தேரோட போச்சு திருநாடு, தாயோட போச்சு பிறந்த வீடு.
 • கடலை தாண்ட ஆசையுண்டு, ஆனால் கால்வாயை தாண்ட கால் இல்லை.
 • நீந்த தெரியாதவனை ஆறு கொண்டு போகும்.
 • ஐங்காயம் கொண்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்சுரைக்காய்க்கு.  
 • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
 • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
 • தாலிக்கு நெருப்பு சாட்சி வேலிக்கு ஓணான் சாட்சி.
 • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்.
 • சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டான்.
 • கடையும்போது வராத வெண்ணை குடையும்போது வரப்போகுதா ?
 • ஆண்டிமகன் ஆண்டியானால் நேரமறிந்து சங்கு ஊதுவான்.
 • கப்பல்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, அந்த கப்பல் உடைந்து போனால் அவள் பிச்சைக்காரி.
 • நமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உலகிலுண்டோ?
 • கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
 • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
goundamani senthil
 • பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்.
 • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடு செல்லும்.
 • இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு.
 • இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலைஅறுப்பான்.
 • ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.
 • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
 • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். அப்புறம் துடைப்பக்கட்டை.
 • பல்லக்கு ஏற யோகம் உண்டு. ஆனால் அதில் துள்ளி ஏறத்தான் சீவன் இல்லை.
 • பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி, மண் மேட்டிலே இருந்தா அக்கா!
 • அம்மணமானவர்கள் வாழும் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி.
 • சீலை இல்லையென்று சித்தி வீட்டுக்கு போனாளாம் அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.
 • பட்டா உன் பேரில், சாகுபடி என் பேரில்.
 • நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்.
 • சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?
 • பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு.
 • மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறு.
          விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பழமொழிகள் பற்றி அறிந்துகொள்ள 👉 இங்கு கிளிக்குங்க.


கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. எல்லாமே ரசித்தேன்.

  //எளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி//

  இது அதிகமாக ஹா.. ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைத்துனி என்றாலே உங்களுக்கு சிரிப்புதான் !!!

   .... தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பரே !!!...

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.