header ads

header ads

முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 1.


பெயர் :- முகம்மது அலி ஜின்னா. (Muhammad Ali Jinnah).


பிறப்பு  :- 1876 ம் ஆண்டு, டிசம்பர் 25 ம் தேதி.

பிறப்பிடம் :- கராச்சி, பாகிஸ்தான்.(Wazir Mansion, Karachi, Pakisthan.)

பெற்றோர் :- ஜின்னாபாய் பூஞ்சா .(Jinnahbhai Poonja),  மிதிபாய் ஜின்னா (Mithibai Jinnah).


கல்வி :- City Law (1895), வழக்கறிஞர்.

உடன்பிறந்தவர்கள் :- ஜின்னாபாய் பூஞ்சா தம்பதிகளுக்கு மொத்தம் 7 குழந்தைகள். அதில் முகமது அலி ஜின்னாதான் மூத்தவர். ஏழு குழந்தைகளின் விபரங்கள் -
 1. முகமது அலி ஜின்னா. [நம் கதாநாயகர்]
 2. அகமது அலி ஜின்னா.
 3. பூண்டே அலி ஜின்னா.
 4. ரஹ்மத் பாய் ஜின்னா.
 5. ஷிரீன் பாய் ஜின்னா.
 6. பாத்திமா ஜின்னா.
 7. மரியம் பாய் ஜின்னா.
மனைவிகள் :- நம் கதாநாயகருக்கு இரண்டு மனைவிகள்.

               முதல் மனைவி '' எமிபாய் ஜின்னா''.( Emibai jinnah). இவருக்கு 1892 ல் திருமணம் முடிந்தது 1893 ல் மரணத்தை தழுவினார்.


               இரண்டாவது மனைவி ''ரத்தன்பாய் பெட்டிட்'' என்னும் ரூட்டி (Rattanbai Petit jinnah). இவருக்கு 1918 ல் திருமணம் நடந்தது. 1929 ல் மரணத்தை தழுவினார்.


குழந்தை :- ஒரே ஒரு குழந்தை .. பெண் குழந்தை. பெயர் ''தீனா வாடியா'' (Dina Wadia) குழந்தையின் தாயார் ரத்தன்பாய் பெட்டிட் என்னும் ரூட்டி.


ஜின்னா பதவி வகித்த அரசியல் கட்சிகள் :- இந்திய தேசிய காங்கிரஸ் (1906 - 1920), அகில இந்திய முஸ்லீம் லீக் (1913 - 1947), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1947 - 1948).

இறப்பு :- 1948 ம் ஆண்டு, செப்டம்பர் 11 ம் தேதி. வயது 71.

இறப்பிற்கான காரணம் :- காச நோய்.

இறப்பிடம் - கராச்சி, பாகிஸ்தான்.

🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸

               நெசவுத்தொழில் செய்து குடும்பம் நடத்தும் ஒரு ஏழை தந்தையின் மகன் '' ஜின்னா பாய்''.

               குஜராத்திலுள்ள ''கத்யவார்'' என்னும் பகுதியிலுள்ள ''பனேலி'' என்னும் சிறிய கிராமம்தான் இவருடைய ஊர். இவருக்கு இரண்டு சகோதரர்கள். ஒரு சகோதரி. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் நெசவுத்தொழிலும், விவசாயமும் செய்தே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

               ஆனால், ஜின்னாபாய்க்கு தன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த நெசவுத்தொழிலை தானும் தொடர சிறுவயது முதலே விருப்பம் இல்லாததால் வேறு தொழில் ஏதாவது தொடங்கலாம் என்ற நோக்கத்தில் தொழில் தேடி பக்கத்திலுள்ள ''கொண்டால்'' என்னும் சிறிய நகருக்கு தனியாக பயணப்பட்டார்.

               தந்தையின் பரிபூரண ஆசிர்வாதத்தோடுதான் தன் பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருக்கு வெறும் 15 வயதுதான். 15 வயதே நிரம்பிய பாலகனை ஒரு தந்தை தனியாக நெடுந்தொலைவு அனுப்புகிறார் என்றால் தன் மகன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். எப்படியும் தொழில் செய்து பிழைத்துக் கொள்வான் என்கிற அபார நம்பிக்கை அவருக்கு.

               அப்படி தனியாக சென்ற அவர் அங்கு சொந்தமாக வியாபாரம் செய்யலானார். வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக விருத்தி அடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார் தந்தை.

               மகனுக்கு 17 வயது. இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று முடிவு செய்தார். ஏனென்றால் அப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கெல்லாம் 14 வயதிலேயே திருமணத்தை முடித்து விடுவார்கள். ( அடடே ... நாம ரொம்ப லேட்டா பொறந்துட்டோமோ?...)


               ஆனால் , மகனுக்கோ 17 வயது ஆகிவிட்டதே  என்ற கவலை. உடனே பெண்பார்க்கும் படலத்தை தொடங்கினார்.

               மிதிபாய் என்கிற பெண்ணை தேர்வு செய்து தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆக்சுவலி இது லேட் மேரேஜ்...  ( என்னாது ....  லேட் மேரேஜா .. டேய்! போங்கடா சும்மா கடுப்பேத்தாதீங்கடா ) ... 1874 ம் வருடம் திருமணம் இனிதே நடைபெற்றது.

               தன்னுடைய வியாபாரத்தை பெரிய அளவில் விருத்தி செய்ய நினைத்தார் ஜின்னா பாய். எனவே திருமணம் முடிந்த கையோடு தன் புது மனைவியுடன் தன் தொழிலை விரிவாக நடத்த ''கராச்சி'' நகருக்கு குடி பெயர்ந்தார்.

               அங்கு ஒரு வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். குறுகிய காலத்திலேயே நிறுவனம் அமோகமாக லாபம் ஈட்டியது. மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார். இந்த சந்தோஷமான நிகழ்வுகளால் மனைவி கருவுற்றார்.

               அடுத்த ஐயிரண்டு திங்களில் அதாவது 1876 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி நம் கட்டுரையின் கதாநாயகனான ''முகமது அலி ஜின்னா'' கராச்சியில் உள்ள வஜீர் மாளிகையில். ''ஓ! இதுதான் பூலோகமா நீங்கள்தான் மானுடர்களா?'' எனறு யோசித்தபடியே திரு அவதாரம் எடுக்கிறார்.

               ( என்னாது .... ''திரு அவதாரமா'' ? ...  என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதன ...  ...  அவதாரம் கிவதாரம்னு சொல்லி பொரளிய கெளப்புறீங்க.)...

               சரி, .... சரி !...  ரிலாக்ஸ் ... இனி வரும் இரண்டாவது பகுதியில் திரு அவதாரத்தின் திருவிளையாடலை தொடர்ந்து பார்க்கலாம்..

                                                                                         [ திருவிளையாடல் தொடரும்] ...

முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறின் இரண்டாம் பகுதியை படிக்க >> இங்கு கிளிக்குங்க <<

👉👉👉👉👉👉👉👉👉👉


கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. //முதல் மனைவி '' எமிபாய் ஜின்னா''.( Emibai jinnah). இவருக்கு 1982 ல் திருமணம் முடிந்தது 1983 ல் மரணத்தை தழுவினார்//

  இதில் குழப்பம் உள்ளது சரி செய்யவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. KILLERGEE Devakottai . தவறை சுட்டிக்காட்டியதற்கு அன்பு கலந்த நன்றி நண்பரே !!! இப்போது தவறை திருத்திக்கொண்டேன் ... மிக்க நன்றி!!!

   நீக்கு
 2. அடுத்த பகுதிக்குச் செல்ல இங்கேயே லிங்க் தந்திருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.