முகமது அலி ஜின்னா - The disgusting face of Muhammad Ali Jinnah - Part 5.

முகமது அலி ஜின்னா.

Muhammad Ali Jinnah.

[Part - 5]

காதல் மனைவியின் இறப்பு அவருக்கு வருத்தத்தை தந்தாலும் அரசியல் பணிகள் விரைவிலேயே அந்த வேதனையிலிருந்து அவரை எளிதில் விடுவித்தன.


மனைவி இறந்த பின்பும் கூட தன் காதலுக்கு அடையாளமாக தனக்கு பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை விட்டு தள்ளியே இருந்தார் ஜின்னா. அந்த குழந்தையுடன் தந்தை என்ற முறையில் எந்தவித நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இக்கட்டுரையின் பகுதி 1 ஐ படிக்க அடுத்துள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க..

>>முகமது அலி ஜின்னா - Birth of Muhammad Ali Jinnah - Part 1.<<

ருட்டியின் இறப்பிற்கு பின் அக்குழந்தை பாட்டியின் அரவணைப்பில் அதாவது ருட்டியின் தாய் அரவணைப்பிற்குள் வந்தது. அப்போதுதான் அந்த குழந்தை தன் வாழ்நாளில் முதன்முறையாக உறவுகளின் பாசத்தை பெற்றது. அதுவும் தாய் வழி உறவின் பாசத்தை மட்டுமே அதனால் பெற முடிந்தது.

சரி, இனி அரசியலுக்கு வருவோம். 1929 ல்  மோதிலால் நேரு தலைமையிலான ஒரு குழுவால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியர்கள் எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என காலணி அரசுக்கு எடுத்துக் கூற இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அறிக்கையில் சிறுபான்மை மக்களை குறித்து பெரிதாக எதுவும் குறிப்பிடவில்லை. ஆகையால் 1930 வரையில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்புக்குமாக நடந்த சுதந்திரப் போராட்டம் அதன் பின் வந்த நாட்களில் பிரிவினையை நோக்கி நகர்ந்தது.

1930 ம் ஆண்டு டிசம்பர் 29 ல் அலகாபாத்தில் கூடிய முஸ்லீம் லீக் மாநாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு தனி தேசம் வேண்டுமென குரல் கொடுத்தார் கவிஞர் இக்பால். அந்த குரல் படிப்படியாக அடுத்துவந்த காலங்களில் பெரும்பாலான இஸ்லாமியர்களின் குரலாக மாறத்தொடங்கியது.

இதனிடையே அந்த ஆண்டில் நடந்த முதலாவது வட்ட மேஜை மாநாட்டை ''ஆறாம் ஜார்ஜ் மன்னர்'' தொடங்கி வைத்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாநாட்டை புறங்கணித்தது. பிற இந்திய பிரதிநிதிகளோடு இஸ்லாமிய பிரதிநிதிகள் மட்டுமே இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் அம்பேத்கார், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு தனித்தொகுதி கேட்டு வலியுறுத்தப்பட்டது.

George-VI

1935 ல் புதிய அரசு சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி 1937 ல் கூட்டாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போது முஸ்லீம்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட வேண்டுமென ஜின்னா வலியுறுத்தினார். ஆனால் காங்கிரஸோ 28 சதவீதம் அளிக்க முன்வந்தது. இந்த பிரச்சனை மேலும் பிரிவினை வாதத்திற்கு வலு சேர்த்தது,

தொடர்ந்து ஜின்னாவிற்கும் காங்கிரசுக்கும் பல கட்டமாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைய 1940 ம் ஆண்டு மார்ச் லாகூரில் முஸ்லீம் லீக் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தது.

அந்த கூட்டத்தில் முஸ்லீம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதோடு அந்த புதிய நாட்டிற்கு ''பாக்கிஸ்தான்'' என்று பெயர் வைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தனிநாடு கோரிக்கையை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சூளுரைத்தார்.

இதுநாள்வரை இந்திய ஒற்றுமையைப்பற்றி பேசிவந்த ஜின்னா 1940 க்கு பிறகு பிரிவினைப்பற்றி பேச ஆரம்பித்தார். அவருடைய உண்மையான நோக்கம் பிரிவினை அல்ல. தனியாக ஒரு இஸ்லாம் நாட்டை உருவாக்க வேண்டும் என்பதும் அவருடைய நோக்கம் அல்ல.

இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாகவே பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த ஒரே ஆசை புதிய இந்தியாவை சீர்திருத்தி அதனை கட்டமைத்தவர் என்கிற புகழும் பெருமையும் தன்னையே சேர வேண்டும்.  இந்தியாவிற்கு நம்முடைய தலைமையில்தான் சுதந்திரம் கிடைக்கவேண்டும் . நாம்தான் தேசத்தந்தையாக மிளிர வேண்டும் என்பதே.

ஆனால், காங்கிரசாலும், காந்தியாலும் தன் ஆசை நிராசையாவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுதந்திரத்திற்கான பேச்சுவார்த்தையில் தான் ஓரம்கட்டப்படுவதாக உணர்ந்தார்.

அதனால் தன்னுடைய ஆசையை வேறு வழியில் நிறைவேற்றிக்கொள்ள பிரிவினை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார்.

பாகிஸ்தான் என்னும் ஒரு நாட்டை உருவாக்கி தன் எண்ணம்போல் அதனை சீர்படுத்தி தன்னை ஒரு சிறந்த தலைவராக இவ்வுலகை ஏற்றுக்கொள்ளச் செய்வதே அதன் நோக்கம்.

அதற்காக எந்த இழப்பையும் விலையாக கொடுக்க அவர் துணிந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

எனவே, சுதந்திர இந்தியாவிற்கு தான் தலைவராக முடியாவிட்டாலும் இந்தியா சுதந்திரம் அடையும் அதே நாளில் பாகிஸ்தான் என்கிற ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கி அதற்கு தான் தலைவராகி காட்டுவது என்று முடிவு செய்தார். அவருடைய அந்த எண்ணத்தில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலை என்ன தெரியுமா? பல லட்சக்கணக்கானவர்களின் உயிர்ப்பலி.

''வெள்ளையானே வெளியேறு'' என்று கோஷம் ஒலிக்கும் போதெல்லாம் நாட்டை இரண்டாக வெட்டி விட்டு வெளியேறு என்று முழங்கினார் ஜின்னா.

நிலைமை விபரீதமாக மாறிக்கொண்டிருப்பதை பார்த்த காந்தியடிகள் ஜின்னாவின் உள்மன ஓட்டத்தை புரிந்து கொண்டு ஜின்னாவையே நாட்டின் தலைவர் ஆக்கிவிடலாம். இதனால் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என்ற அளவிற்கு இறங்கி வந்தார். ஆனால் நேருவும், பட்டேலும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

jinnah nehru gandhi sarthar

இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று சொன்னவர்தான் பின்னாளில் தன்னுடைய சுய லாபத்திற்காக மதத்தை பயன்படுத்தி முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று அறைகூவல் விட்டார்.  இவ்வளவுதான் இவரின் கொள்கைப்பிடிப்பின் லட்ஷணம்.

''அல்லா'' மற்றும் ''குரானின்'' பெயரால் இயங்குங்கள். இந்து அரசு அமைக்க இருக்கும் ''காஃபிர்'' களின் சக்திக்கு நீங்கள் பலியாகிவிடாதீர்கள் என்று மதவாதத்தை தூண்டினார்.

முஸ்லீம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெறுவதற்கு அவர்களின் ஒரே பிரதிநிதி தான்தான் என்பதை நிலைநாட்டுவதற்காக மதத்தை முன்னிறுத்தி பேச ஆரம்பித்தார். இதனால் இஸ்லாமியர்களின் ஆதரவு அவருக்கு பெருகியது,

1946 ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்த பிரிட்டனால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவிலிருந்து விலகி முஸ்லீம் லீக் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை தொடங்கியது. அதன் மூலம் நாடு முழுவதும் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. இதனை ''டைரக்ட் ஆக்க்ஷன் டே -Direct action day '' என அகில இந்திய முஸ்லீம் லீக் பெருமையாக குறிப்பிட்டது. அந்த பெருமையின் சில அச்சம் நிறைந்த எச்சங்களை கீழே காணலாம்.

Direct action day 1

இந்தியா துண்டாடக்கூடாது என மற்றொரு தரப்பு கோஷமிட முஸ்லீம் லீக்கின் போராட்டம் கொல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரமாக வெடித்தது.

இதில் ஆயிரக்கணக்கான இந்துக்களும், முஸ்லீம்களும் கொல்லப்பட்டனர். 3 நாட்களாக நடந்த கலவரத்தில் 10,000 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த கலவரம் நவகாளி, பீகார், உத்திரபிரதேசம், மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கும் பரவியது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கலவரம் அதன் கோரமுகத்தைக் காட்டியது.

இருதரப்பிலும்இரத்தவெறி கொண்ட கும்பலால் இந்து மற்றும் முஸ்லீம் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். அதுவரை ஒற்றுமையாகவும், சகோதரர்களாகவும் இருந்த இஸ்லாமியர்களும் இந்துக்களும் விரோதிகளாக மாறி ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டார்கள்.

Direct action day2

இந்திய முஸ்லிம் லீக் ஆரம்பித்து வைத்த போராட்டம் கடைசியில் லட்சக்கணக்கான மக்களின் கொலைகளிலும், வேதனைகளிலும் போய்  முடிந்தது. இந்த சம்பவம் இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தின.

இதுவே பாகிஸ்தான் என்னும் ஒருநாடு பிரிவதற்கு மிக அதிக அளவில் வலு சேர்த்தன எனலாம்.

இதன் தொடர்ச்சி "பகுதி 6" ஐ படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க..

>> "முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - Direct action day - Part 6."<<


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.