"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா அக்யூமினாட்டா - Heliconia acuminata.

ஹெலிகோனியா அக்யூமினாட்டா - Heliconia acuminata.

ஹெலிகோனியா அக்யூமினாட்டா.

Heliconia acuminata.

          அக்யூமினாட்டா (acuminata) என்றால் "நீண்ட கூர்மையான நுனிகளைக் கொண்ட" என்ற பதத்தை குறிப்பதாகக் கொள்ளலாம். இது கூர்மையான நுனிகளைக்கொண்ட பூ மடல்களை பெற்றுள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது.

Heliconia acuminata.

மடல்கள் உட்பக்கம் குவிந்து ஓடம் போன்ற அமைப்பினை பெற்றுள்ளதால் மழைக்காலங்களில் இதன் உட்பகுதிகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. நீரை அடிப்படையாக கொண்டு வாழும் சின்னஞ்சிறு உயிரினங்களுக்கு இது சிறந்த வாழ்விடமாக அமைகிறது.



    Heliconia acuminata.

    தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா அக்யூமினாட்டா - Heliconia acuminata.

    பொதுவான ஆங்கில பெயர் :- Yellow heliconia.

    தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

    குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

    இனம் :- அக்யூமினாட்டா - Acuminata.

    பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

    வரிசை :- Zingiberales.

    பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.

    வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகள்.

    தாயகம் :- தென் அமெரிக்க நாடான பிரேசில் (Brazil) ஐ தாயகமாக கொண்டது. மேலும் தென் அமெரிக்க நாடுகளான பிரஞ்சு கயானா (French Guiana), கயானா (Guyana), சுரினாம் (Suriname), வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), பெரு (Peru) மற்றும் பொலிவியா (Bolivia) ஆகிய நாடுகளை பூர்வீகமாகக்கொண்டு இயற்கையாகவே வளருகிறது.

    உட்பிரிவுகள்  :- இதில் டேவிடா (Davida), ரூபி (Ruby) என பல உட்பிரிவுகள் உள்ளன.

    தாவரத்தின் தன்மை.

    இது பார்ப்பதற்கு வாழைமரம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இலை தண்டுகளுடன் சேர்த்து சுமார் 1 மீட்டரிலிருந்து 3 மீட்டர் நீளம்வரை நீள்கிறது.

    இது மேல்நோக்கி நிமிர்ந்த நிலையிலுள்ள பூக்களை பூக்கும் தாவர இனம். இது 1 முதல் 2 மீட்டர் உயரம்வரை வளரும். இதனை பூந்தொட்டிகளிலும்  வளர்த்து பயனடையலாம். 3 வருடங்கள்வரை பலன் தரும். அதன்பின் முதிர்ந்த செடிகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு புதிய இளம் செடிகளை வளர்த்து பலன் பெறலாம்.

    மலர்களின் தன்மை.

    இது வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள்நிற பூக்களை பூக்கிறது. பூக்கள் நுனிப்பகுதியில் கறுப்பு நிற பட்டைகளை கொண்டுள்ளன. பூ மடல்கள் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மே முதல் டிசம்பர் வரை பூக்கும்.

    இது தற்போது உலகம் முழுவதும் அழகுச்செடிகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. கோடைகாலம் முழுவதும் பூக்கும் தன்மையுடையது.

    மலர்கள் இனிமையான மதுவை நிரம்பவே கொண்டுள்ளன. வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடிப்பதற்கு இது போதுமானதாக உள்ளது.

    மேலும் தடித்த மலர் மஞ்சரிகளைக் கொண்டுள்ளதால் இம்மலர்கள் அதிக நாட்கள் வாடாமல் இருக்கும்.

    காய்களின் தன்மை.

    0.5 செ.மீ விட்டம்கொண்ட முக்கோண வடிவமுடைய மஞ்சள்நிற காய்களை கொண்டுள்ளன. இவைகள் கனியும்போது பளப்பளப்பான நீலநிறம் கொண்டவையாக மாறுகின்றன. இவைகள் மஞ்சளும் நீலமுமாக செடிகளுக்கு விசேஷ அழகை கொடுக்கின்றன. இவைகள் கடினமான மூன்று விதைகளை கொண்டுள்ளன.


    Heliconia acuminata fruits
    Heliconia acuminata fruits.

    இனப்பெருக்கம்.

    சிறிய ரக கிழங்குகள் (Tuber) மூலமாகவும், விதைகள் (Seeds) மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தை பெருக்குகிறது.

    "ஹம்மிங்" (Humming Bird) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

    வளரும் நிலப்பகுதிகள்.

    தற்காலங்களில் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதை வியாபாரத்திற்காக அதிக மண்வளம் உள்ள நிலங்களிலும், வீடுகளில் அழகுக்காக பயிரிடும் பட்சத்தில் பூந்தொட்டிகளிலும் வளர்த்து வரலாம்.

    சாகுபடி.

    வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு சேய் செடிகளை தனியாக பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர்செய்யலாம்.

    தழைக்கூளங்களை பரப்பி அதன்மேல் பாத்தி அமைத்து இளம் செடிகளை நடவு செய்தல் வேண்டும்.

    இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 12 மாதங்கள்வரை ஆகலாம்.

    Heliconia acuminata.

    மண் வறண்டுபோகாத அளவிற்கு குறைந்த அளவு நீர்ப்பாசனம் போதுமானது. கோடைகாலங்களில் மட்டும் அதிக அளவில் நீர்ப்பாசனம் தேவைப்படலாம்.

    இது பயிர் செய்யப்படும் நிலம் வடிகால்வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். நல்ல தரமான பூக்கள்  வேண்டுமெனில் மக்கிய தொழு உரம் இடவேண்டியதும் அவசியம்.

    சிலந்திப்பூச்சிகளால் இவைகள் பாதிக்கப்படலாம். சிலந்திப்பூச்சிகள் (Spider) மிக வேகமாக பரவும் தன்மையுடையதாதலால் இதனை ஒழித்துக்கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம் 

    பயன்கள்.

    இது வழக்கமான மலர் அலங்காரத்தில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. வீடு, ஹோட்டல் மற்றும் பூங்காக்களில் அலங்கார தாவரமாக வளர்க்கப்படுகிறது.

    வீடுகளில் இதனை அலங்கார தாவரமாக வளர்ப்பது எப்படி என்பதனை விரிவாக அறிய கீழேயுள்ள சுட்டியை தட்டி கொஞ்சம் தெளிவாகவே தெரிகிஞ்சுக்கோங்க.

    >>"ஹெலிகோனியா சாகுபடி - Heliconia - Cultivation and Crop protection."<<

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.