"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral jaundice Hepatitis B.

கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral jaundice Hepatitis B.

கீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை.

Viral jaundice Hepatitis B.

[PART - 8].

மூலிகைகள் வரிசையில் கீழாநெல்லி என்னும் மூலிகையை பற்றி பல பகுதிகளாக தொடர்ந்து பார்த்துவருகிறோம். கீழாநெல்லியின் வகைகள், தன்மைகள், மருத்துவ குணங்கள் என அவற்றின் பல பண்புகளையும் அலசி வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் மஞ்சள் காமாலையை உண்டுபண்ணும் வைரஸ்களை பற்றியும், அதனை குணப்படுத்துவதில் கீழாநெல்லிக்குள்ள பங்களிப்பு பற்றியும் பார்க்க இருக்கிறோம்.  கீழாநெல்லியை பற்றிய பதிவில் இது 8 வது பகுதி [PART - 8] இப்பதிவின் முதல் பகுதியை [PART - 1] ஐ படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை விரல்களால் அழுத்துங்க !!..

  வைரஸ்களும் கல்லீரல் அழற்சியும்.

  பல்வேறுபட்ட காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு இரணமாகி அதன் இயக்கம் தடைபட்டால் அதனையே நாம் கல்லீரல் அழற்சி என்கிறோம்.

  பெரும்பாலும் இந்த கல்லீரல் அழற்சியாலேயே நமக்கு மஞ்சள் காமாலை பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த கல்லீரல் அழற்சியை ஏற்படுத்துபவைகளில் முக்கியமானவை வைரஸ் கிருமிகள்.

  மஞ்சள் காமாலை அறிகுறிகள் தென்படுவதற்கு பல காரணங்கள் உண்டென்றாலும் வைரஸ்களால் ஏற்படும் காமாலைகளே பிரபலமாக பேசப்படுகின்றன. அதற்கு காரணம் இவைகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதே ஆகும்.

  "ஹெபாட்னாவிரிடே" (Hepadnaviridae) என்ற குடும்பத்தை சேர்ந்த பேரினமான "ஆர்த்தோ ஹெபாட்னா" (Orthohepadna) ரக வைரஸ்களால் கல்லீரல் கடுமையாக தாக்கப்படும்பொது கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு அதன் வழக்கமான பணியில் தடங்கல் ஏற்படுவதால் மஞ்சள் காமாலை தோன்றுகின்றன. இதனை வைரசால் ஏற்படும் மஞ்சள் காமாலை அல்லது வைரசால் ஏற்படும் கல்லீரல் அழற்சி என குறிப்பிடுகிறோம்.

  வகைகள்.

  இந்த வைரஸ்களில் பலவகைகள் உண்டென்றாலும் மனிதர்களில் 7 வகையான வைரஸ்களே கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி மஞ்சள் காமாலை அறிகுறியை உண்டாக்குகின்றன. அவை..

  1. ஹெப்படைட்டிஸ் A (Hepatitis A)
  2. ஹெப்படைட்டிஸ் B (Hepatitis B)
  3. ஹெப்படைட்டிஸ் C (Hepatitis C)
  4. ஹெப்படைட்டிஸ் D (Hepatitis D)
  5. ஹெப்படைட்டிஸ் E (Hepatitis E)
  6. ஹெப்படைட்டிஸ் F (Hepatitis F)
  7. ஹெப்படைட்டிஸ் G (Hepatitis G)

  இதில் "ஹெப்படைட்டிஸ் A" வைரஸை பற்றி முந்தைய பதிவில் நாம் தெளிவாக பார்த்துவிட்டோம். இன்றைய பதிவில் "ஹெப்படைட்டிஸ் B' வைரஸைப்பற்றி பார்க்க இருக்கிறோம்.

  ஹெப்படைட்டிஸ் B வைரஸின் தன்மை.

  கல்லீரலை கடுமையாக தாக்கும் இந்த "ஹெப்படைட்டிஸ் B" வகை வைரஸால் ஏற்படும் மஞ்சள் காமாலையானது முன்பு பார்த்த A வகை வைரஸைப்போல "அம்பி" அல்ல. மாறாக உயிரை காவு வாங்குவதில் "அந்நியன்". இவன் எய்ட்ஸ் வைரஸ் கிருமியைவிட பல நூறு  மடங்கு ஆபத்தானவன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

  Hepatitis B fight

  என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மைதான். இந்த B டைப் வைரஸினால் வருடமொன்றிற்கு 2 கோடிபேர் உலகெங்கும் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிதரும் உண்மை.

  ஒருவரின் உடலில் இந்த வைரஸ் புகுந்துவிட்டால் ஐந்து மாதங்களில் பல்கிப் பெருகி உடலில் பாதிப்பை உருவாக்க ஆரம்பித்துவிடும். ஆனால் பலருக்கோ இவ்வைரஸ் கிருமிகள் அமைதி காக்கும். இவர்கள் உடலில் வைரஸ் கிருமிகள் இருப்பதே வெளியில் தெரியாமல் இருக்கும்.

  இப்படியொரு வைரஸ் கிருமி தங்களின் உடலில் உள்ளது என்பதனை அறியாமலேயே பலகோடிபேர் ஜாலியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.

  ஏனென்றால், தங்களுடைய உடலில் இப்படியொரு வைரஸ் கிருமி இருக்கிறது என்பதே பலபேருக்கு தெரிவதில்லை. ஏன் தெரிவதில்லை என்றால் புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம் என்பதுபோல காலநேரம் பார்த்துக்கொண்டு அமைதியாக தூங்கி கொண்டிருக்கும் குணத்தை கொண்டது இந்த ஹெப்படைட்டிஸ் B.

  தூக்கம் கலைந்தால் இதனுடைய ஆட்டம் வேற லெவல்ல இருக்கும். பல நேரங்களில் இவருடைய பேச்சை இவரே கேட்பதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

  இந்தியாவில் மட்டுமே இந்த வைரஸ் தமக்குள் தூங்கிக்கொண்டிருப்பது தெரியாமல் சுமார் 430 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.

  anniyan ambiyaka irukkum pothu song

  இவர்கள் தம்மிடமிருந்து பிறருக்கு காதல் டூயட் பாடியபடியே நோயினை பரப்புபவர்களாகவும் இருக்கிறார்கள். [ஐயகோ எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமுன்னே தெரியலியே!!]

  பரவும் விதம்.

  இந்த ஹெப்படைட்டிஸ் B வைரஸானது நீர், உணவு, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மூலமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும் தன்மையுடையது.

  இந்த வைரஸ்கள் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவின் மூலமாகவும், மாசு கலந்த குடிநீர் வாயிலாகவும் உடலின் உள்ளே சென்று இரத்தத்தில் கலந்து இரத்த ஓட்டம் மூலமாக கல்லீரலை ஊடுருவி அதனை நலிவடைய செய்வதோடு கல்லீரலில் செல்களையும் வீங்கும்படி செய்கின்றன. இதனால் பித்த நீர் வெளியேறும் வழித்தடங்களில் தடை ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகின்றன.

  குழந்தை வயிற்றிலிருக்கும்போது தாய் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை பிறக்கும் தருவாயிலோ அல்லது குழந்தை பிறந்த சிலநாட்களிலோ குழந்தைக்கும் பரவ அதிக அளவில் வாய்ப்புள்ளது.

  ஓடியாடி விளையாடும் குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அக்குழந்தையுடன் விளையாடும் சக குழந்தைகளுக்கும் இது பரவ வாய்ப்புள்ளது.

  மருத்துவ மனைகளில் ஒருவர் பயன்படுத்திய ஊசியை மற்றவர் பயன்படுத்தினால் அவர்கள் மூலமாகவும் பிறருக்கு பரவும்.

  ஒருவரிடமிருந்து மற்றொருவர் இரத்தம் தானமாக பெறும்போது முறையாக இரத்தத்தை பரிசோதிக்க தவறினால் எளிதாக பரவிவிடும். நோய் பாதித்தவர் பயன்படுத்திய பொருள் எதுவாக இருந்தாலும் அதனை மற்றவர் பயன்படுத்தினால் அதன் மூலமாகவும் இந்நோய் பரவும்.

  இந்நோய் இருப்பவருடன் மற்றொருவர் உடல் சம்பந்தமான நெருங்கிய உறவு வைத்திருந்தால் மட்டுமே மற்றவருக்கும் அது தொற்றிக்கொள்ளும் என்பதில்லை.. வெறும் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலே போதுமானது. "இச்" சத்தம் கேட்கிறதோ இல்லையோ ஆனால் "சங்கு" சத்தம் கண்டிப்பாக கேட்கும்.

  The sound of the kissing horn

  மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு அதாவது பல் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் இவர்கள் பாதுகாப்பாக இல்லையெனில் இவர்களும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

  ஓரின சேர்க்கையாளர்களைக் கண்டால் இதற்கு ரொம்பவே பிடிக்குமாம்.

  வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள்.

  இந்த ஹெப்படைட்டிஸ் B வைரஸ் ஒருவரின் உடலுக்குள் நுழைந்துவிட்டால் ஆரம்பகட்டத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கும். இந்த அமைதி 10 லிருந்து 20 வருடங்கள்வரை நீடிக்கும். சில நேரங்களில் இதைவிட அதிக காலங்கள் நீடிப்பதுண்டு. அதன்பின்பே  மெல்லமெல்ல தன்னுடைய வேலையை காண்பிக்க ஆரம்பிக்கும்.

  இந்நோய் பாதிப்பால் காய்ச்சல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, மூட்டுக்களில் வலி, தோல் தடிப்பு இவைகளுடன் கண்கள் மற்றும் தோல்கள் லேசான மஞ்சள் நிறத்தையும் அடையும்.

  வயிற்றில் நீர் கோர்த்து வயிறு உப்பிசம்போல் காணப்படும். உடலும் வீங்கும். பசி எடுக்காது. இதனால் உடல் எடை குறையும். எப்போதும் சோர்வாகவே இருக்கும். லேசான மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் லேசான காய்ச்சலும் இருக்கும்.

  நோய் பாதித்த ஆரம்ப காலகட்டத்தில் மலம், சிறுநீர் அதிக அளவில் மஞ்சளாக காணப்படும். ஆனால் போகப்போக மலம் மஞ்சள் நிறம்மாறி வெளிறிய நிறத்தை அடையும்.

  நோய் முற்றிய நிலையில் தோல்கள் மஞ்சள் நிறம் பெறுவதோடு கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இந்நோயால் மூளை பாதிப்படைவதால் சோர்வு, அடிக்கடி மயக்கமடைதல் முதலியன நடந்தேறும். உடல் சூடு குறைந்து நடுக்கமும் உண்டாகும்.

  இந்நோய் பல மாதங்கள் நீடித்தால் கடுமையான கல்லீரல் அழற்சி (Acute Fulminating Hepatitis), கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis Liver) ஏற்படுவதோடு கல்லீரல் புற்றுநோயில் கொண்டுபோய் விட்டுவிடும்.

  கல்லீரல் சுருக்க நோய்.

  இந்நோய் வலுப்பெறும் காலகட்டங்களில் வயிற்றின் வலது பக்கத்தின் மேல்பகுதியில் அதாவது கல்லீரல் அமைந்திருக்கும் பகுதியில் வலி காணப்படும். சரியான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் கல்லீரலில் சுருக்கம் ஏற்பட்டு "கல்லீரல் சுருக்கநோய்" உண்டாகும். இது நாள் செல்ல செல்ல கல்லீரல் புற்றுநோயாக வடிவெடுக்கும்.

  பத்து பேர்கள் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் 8 பேர்களுக்கு ஹெப்படைட்டிஸ் B வைரஸின் பாதிப்பால் ஏற்பட்ட கல்லீரல் சுருக்க நோயினால் வந்த புற்று நோயாகத்தான் இருக்கும்.

  எனவே ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து களைய வேண்டும். இல்லையெனில் "அம்பி" போல காட்சியளிபவர் திடீரென "அந்நியனாக" மாறிவிடும் வாய்ப்பும் உள்ளது.

  அவ்வாறு அந்நியனாக மாறும் பட்சத்தில் பசியின்மை, வாந்தி, உடல் எடை குறைதல், காய்ச்சல், மூட்டுவலி, வயிறு வீக்கம், உடல் வீக்கம் இவைகளுடன் கல்லீரல், மண்ணீரல் வீக்கமடைவதோடு மலத்தின் வழியாக இரத்தமும் வெளியேறும்.

  அதுமட்டுமல்ல, மூக்கிலிருந்து இரத்தம் வருதல், பல்லீறுகளிலிருந்து இரத்தம் கசிதல், இரத்த வாந்தி முதலியவைகள்கூட ஏற்படலாம்.

  இந்நோய் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதிலும் 10 வயதிலிருந்து 20 வயதுக்குட்பட்ட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அவர்களுக்குள் அம்பியாக உள்நுழையும் வைரஸானது தீடீரென கேரக்டர் சேஞ்சு ஆகி உயிர்பறிக்கும் "ரெமோ"வாக மாறிவிடுவதுண்டு.

  Hepatitis B Remo

  இளம் பெண்களிடம் ரெமோவாக வேலைசெய்யும் இது ஆண்களிடம் மட்டும் அந்நியனாக மாறிவிடுகிறது.

  எனவே, ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவரிடம் ஆலோசனைகளையும் தேவையான சிகிச்சையையும் கடைப்பிடித்து வந்தால் அம்பி அந்நியனாக மாறுவதை ஓரளவு தடுத்து நிறுத்தமுடியும்.

  அதைவிடுத்து இதைப்பற்றி கவலையேகொள்ளாமல் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தால் நிலைமை ரொம்ப மோசமாகி "கும்பிபாகம்", "அந்த கூபம்", "அக்கினி குண்டம்", "வஜ்ர கண்டகம்", "கிருமி போஜனம்" என்று கைமீறிப்போய்விடும்.

  Anniyan punishment

  இந்நோயை குணப்படுத்துவதில்
  கீழாநெல்லியின் பங்கு.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லி எந்த விதத்திலும் பயன்படப்போவதில்லை. கீழாநெல்லியை தொடர்ந்து நீங்கள் முயற்சி செய்தால் கீழாநெல்லிக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்து அடுத்த அமாவாசை இரவுக்குள்ளாகவே எள்ளும் எண்ணெய்யும் இறைத்து "திவசம்" செய்யவேண்டி வந்துவிடும்.

  Keelanelli - Hepatitis B fight

  "ஹெப்படைட்டிஸ் B" க்கு தடுப்பூசி உள்ளது. இதனை குறிப்பிட்ட இடைவெளியில் 3 அல்லது 4 தடவை போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்க முடியும்.

  சிகிச்சைமுறை.

  வைரஸ் A  மற்றும் வைரஸ் B இரண்டுக்குமே தனித்தனி தடுப்பூசிகள் உள்ளன. எனவே என்னவிதமான வைரஸ் பாதித்துள்ளது என்பதனை இரத்த பரிசோதனைமூலம் கண்டறிந்து அதற்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

  நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருமே போட்டுக்கொள்ளலாம்.

  குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்வதால் எதிர் காலங்களில் இந்நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இந்த ஊசியை முதல் முறையாக போடும்போது ஒரே வருடத்தில் 3 முறை போடவேண்டிவரும்.

  Hepatitis B Vaccine

  அதாவது முதல் ஊசி போடப்பட்டபின் சரியாக 1 மாதம் கழித்து 2 வது ஊசி போடவேண்டும். ஆறுமாதம் கழித்து 3 வது ஊசியும் போடவேண்டும். அதன்பின் 10 வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை ஊசிபோட்டுக்கொண்டால் வாழ்நாள்முழுவதும் இந்த வைரஸ் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

  ஆனால் இந்த தடுப்பூசி போடும்போது வேறு எதாவது கடுமையான தொற்று நோய்களோ, காய்ச்சலோ இல்லாதிருக்கவேண்டும்.

  இன்றைய பதிவில் கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் ஹெப்படைட்டிஸ் B (Hepatitis B) வைரஸை பற்றி பார்த்தோம். தொடர்ந்துவரும் அடுத்த பதிவில் இதற்கு அடுத்துள்ள 5 வகையான வைரஸ்களையும் பார்க்க இருக்கிறோம்.

  • ஹெப்படைட்டிஸ் C (Hepatitis C)
  • ஹெப்படைட்டிஸ் D (Hepatitis D)
  • ஹெப்படைட்டிஸ் E (Hepatitis E)
  • ஹெப்படைட்டிஸ் F (Hepatitis F)
  • ஹெப்படைட்டிஸ் G (Hepatitis G)

  மேற்குறித்த வைரஸ்களுடன் "அடைப்பு காமாலை" யைப்பற்றியும், அதனை நிவர்த்தி செய்வதில் கீழாநெல்லியின் பங்களிப்பு (???) பற்றியும் பார்க்க இருக்கிறோம்...

  இக்கட்டுரையின் 9 வது [Part - 9] பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க...

  >>கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral inflammatory jaundice.<<

  💥💥💥💥💥💥💥

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்