"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Some Information about Birds.

Some Information about Birds.

பறவைகளைப் பற்றி சில தகவல்கள்...

"அதோ அந்த பறவைபோல

வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள்போல

ஆட வேண்டும்...."

          கண்ணதாசன் கவி புனைந்து 1965 ல் வெளிவந்த "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நாமும் பறவையாக மாறிவிட மாட்டோமா என மனது ஏங்கும்.

MGR

பறவையாக சிறகடிக்க ஆசைப்படுவதில் தப்பில்லைதான். ஆனால் இந்த பறவைகளைப்பற்றி எந்தளவிற்கு நாம் தெரிந்து வைத்துள்ளோம் என கேள்வி எழுப்பினால்?... பதில் பூஜ்யம்தான்..

நாம்வாழும் இந்த உலகில் சுமார் 9,000 வகை பறவைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள். ஆனால் இந்த பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு பெற்றவையாக திகழ்கின்றன. அவைகளில் சிலவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

🐦🐦🐦🐦🐦🐦

Penguin Swimming.

பொதுவாக நீங்கள் ஆகாயத்தில் பறக்கும் பறவையை பார்த்திருப்பீர்கள். ஆனால் நீருக்கடியில் பறக்கும் பறவையை பார்த்திருக்கிறீர்களா?

கடலிற்குள் இறங்கி மூச்சை பிடித்துக்கொண்டு உங்கள் முட்டைக்கண்களை முழித்து பார்த்தீர்கள் என்றால் அங்கு குறுக்கும் மறுக்குமாக பல "பென்குயின்"கள் பறந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

penguins-swimming-underwater

உண்மையில் பென்குயினால் பறக்கமுடியாது என்பது உண்மை.

ஆனால், ஆகாயத்தில் பறப்பதற்கு பயனற்ற அதன் இறக்கைகளை துடுப்புபோல பயன்படுத்தி கடலில் நீந்துவது பார்ப்பதற்கு நீருக்குள் பறவையொன்று பறப்பதுபோல காட்சியளிக்கும்.

பென்குயினை பற்றிய இன்னொரு தகவல் தெரியுமா? பென்குயின் ஒரே ஒரு முட்டைதான் இடுகின்றன. முட்டையை ரீலீஸ் செய்வதோடு பெண் பறவையின் வேலைமுடிந்தது. முட்டையை கண்ணும் கருத்துமாக அடைகாத்து குஞ்சு பொரிக்க வைப்பது ஆண் பறவைகளின் வேலை.

🐦🐦🐦🐦🐦🐦

Owl Magic.

பாட்டில் மூடியை திருகுவதுபோல தன் குட்டை கழுத்தை வட்டமாக சுழற்றும் திறன்கொண்ட பறவை எது தெரியுமா?

அது நம்ம "ஆந்தையார்" தாங்க!!.

இது தன்னுடைய கழுத்தை 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் திறனை பெற்றுள்ளன.

Owl Magic

🐦🐦🐦🐦🐦🐦

Hariyal Bird.

இந்தியாவிலுள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக அளவில் காணப்படும் "ஹரியால்" (Hariyal) என்னும் பறவை தரையில் தடம் பதிப்பதைக் காண்பது அரிது. காரணம் உயரமான மரங்களில் வாழ்வதையே இவைகள் விரும்புகின்றன. மரங்களிலிருந்து அவைகள் மண்ணில் இறங்குவதே இல்லை.

Hariyal Bird.

இவை இந்தியா மட்டுமல்லாது இலங்கை, பர்மா, சீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளிலும் காணப்படுகின்றன.

பச்சை நிறத்தில் காணப்படும் இது இந்தியாவில் "மஞ்சள் கால் பச்சை புறா" என்று அழைக்கப்படுகிறது.

🐦🐦🐦🐦🐦🐦

மரங்கொத்தி - பூங்கொத்தி.

"மரங்கொத்தி" (Woodpeckers) பறவைகள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?.. அதில் மட்டுமே 200 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளனவாம்.

Woodpeckers

மர பட்டைகளில் மறைந்து வாழும் புழு பூச்சிகளை கண்டறிந்து உணவாக்கிக் கொள்வதற்காகவும், சிலநேரங்களில் தனக்கான மரபொந்து வீடுகளை உருவாக்கிக் கொள்வதற்காகவும் மரங்களை கொத்துகின்றன.

மரங்கொத்தி பறவையைப்போலவே "பூங்கொத்தி பறவை" (Flowerpecker) என்று ஒரு பறவை உள்ளது. இது "தேன்சிட்டு" (Sunbird) அல்ல. தேன்சிட்டிற்கு அலகு பூக்களிலுள்ள தேன்களை குடிப்பதற்கு ஏற்றாற்போல நீளமாக இருக்கும். ஆனால் இந்த பூங்கொத்திக்கு அலகு குட்டையாக உள்ளது. இதிலும் பலவகையான பூங்கொத்தி இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

Types of Flowerpecker

இந்த பறவையின் எடை வெறும் 5 கிராம் மட்டுமே.

Flame-crowned and Tickell's flowerpecker

இதன் முக்கிய உணவு பூக்களிலுள்ள தேன்களும், பழங்களும்தான்.

🐦🐦🐦🐦🐦🐦

மவுன ராகம் - நாரை (Stork).

பறவைகளிடமுள்ள விசேஷ அம்சமே அதன் குரல்கள்தான்.

ஒவ்வொன்றும் தன் இனிமையான குரல்களால் ஒரு பெரிய இசைக்கச்சேரியையே நடத்திக்காட்டிவிடும். அந்த அளவிற்கு ஒவ்வொரு பறவைகளின் குரல்களும் தனித்துவமானவை.

Stork

ஆனால் குரலே எழுப்பாமல் வாழும் பறவைகளும் உள்ளன. இதற்கு ஆதாரமாக  "நாரை", "கூழைக்கடா" இவைகளோடு இன்னும் சிலவகை கழுகுகளையும் குறிப்பிடலாம்.

நாரைகள் பொதுவாக மேல் கீழ் என இரு அலகுகளையும் ஒன்றோடொன்று அடிப்பதின்மூலம் "பட் பட்" என்ற ஒலியை எழுப்புகின்றன.

Pelican

ஆனால் நாரைகளில் பலவகையான நாரைகள் உள்ளன. அதில் ஒருவகையான நாரையானது குரலெழுப்பினால் தாரை தப்பட்டையெல்லாம் கிழிந்து தொங்குகிறதோ இல்லையோ நம் செவிப்பறை கிழிந்து தொங்கிவிடும் என்பது மட்டும் உறுதி.

நீங்கள் கூக்குரலிட்டால் அது எவ்வளவு தூரம்வரை கேட்கும்?...

???? 😲😲😲 ???.

ஆனால் பறவைகளில் ஒருவகையான நாரை உள்ளது. அது கூக்குரலிட்டால் 3 கி.மீ வரை கேட்குமாம். அது சரி அதன் பெயர் என்ன என கேட்கிறீர்களா? அதன் பெயரே "கூக்குரல் நாரை" என்பதுதானாம்.

🐦🐦🐦🐦🐦🐦

Kookaburra.

மனிதர்களைப்போலவே சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த கிளிகளில் மட்டுமே 322 வகைகள் உள்ளனவாம்.

கிளிகள் பேசுவதெல்லாம் இருக்கட்டும்... அச்சுஅசலாக மனிதர்களைபோலவே சிரிக்கும் பறவையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் "கூகபுர்ரா" (Kookaburra).

Kookaburra

🐦🐦🐦🐦🐦🐦

Marsh Warbler - Mimicry Bird.

பிறரை போலவே பேசி மிமிக்கிரி செய்யும் மிமிக்கிரி கலைஞர்களை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்... ஆனால் பிற பறவைகளைப்போலவே குரலெழுப்பி மிமிக்கிரி செய்து கடுப்பேத்தும் பறவையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இவ்வாறாக மிமிக்கிரி செய்யும் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 15 ற்கும் மேல் உள்ளன.

Marsh Warbler

அதில் ஒருவர்தான் நாம் மேலே பார்க்கின்ற "மார்ஷ் வார்ப்ளர்" (Marsh Warbler). இவர் பார்ப்பதற்கு இந்த பூனையும் பால்குடிக்குமா என்பது போலத்தான் தெரிகிறார். ஆனால் பண்ணுகிற சேட்டை இருக்கே... கொஞ்சநஞ்சமல்ல.

🐦🐦🐦🐦🐦🐦

Kiwi.

தன்னுடைய வாசனையுணரும் சக்தியை பயன்படுத்தி முகர்ந்துபார்த்தே வேட்டையாடும் விலங்குகள் பல உள்ளன என்றாலும், அவைகளில் நாய் சிறப்பானவை என்பது நமக்குத் தெரியும்.

நாயைப்போலவே முகர்ந்து பார்த்தே வேட்டையாடும் ஒரு பறவை உள்ளது. அதுதான் "கிவி" (Kiwi) பறவை.

kiwi

🐦🐦🐦🐦🐦🐦

Pigeon.

Pigeon

புறாவின் இரு இறகுகளின் எடையானது அதன் எலும்புகளின் எடையைவிட அதிகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

(நம்புங்க பாஸ்...)

🐦🐦🐦🐦🐦🐦

Magic for magiegg.

கடைகளில் 5 ரூபாய்க்கு வாங்கும் "லகான்" கோழிமுட்டை பார்ப்பதற்கு தூய வெண்மை நிறத்தில் இருக்கும். ஆனால் நாட்டுக்கோழி முட்டை அப்படியல்ல. இவைகள் சிறிது பழுப்பு நிறத்தில் (Brown color) காணப்படும். ஆனால் இதன் உற்பத்தி குறைவு என்பதால் மார்க்கெட்டில் அதிகமாக விற்பனைக்கு வருவதில்லை. வந்தாலும் விலை அதிகம். ஒரு முட்டையின் விலை 12 ரூபாய்.

இந்த விலையேற்றத்தை கருத்தில்கொண்டு பொதுஜனங்களுக்கு உதவும் விதமாக "லகான்" முட்டையைக்கொண்டே "நாட்டுகோழி முட்டை" தயார் செய்கிறார்கள்.

எவ்வாறெனில், 5 ரூபாய் லகான் முட்டையை வாங்கிவந்து தேயிலை வடித்த நீரில் அரைமணி நேரம் ஊற வைக்கிறார்கள்... ஹைய்யா... !!! .... அரைமணி நேரத்தில் பழுப்புநிற நாட்டுகோழி முட்டை ரெடி. விலை வெறும் 11 ரூபாய்தான். 1 ரூவா லாபம்...

magic egg

அப்போ இனிமே டெய்லி நாட்டுகோழி முட்டை ஆம்லெட்தான்... ஒரே ஜாலிதான் போங்க!!...

magic chicken

ஆம்லெட்டெல்லாம் இருக்கட்டும்... கோழி முட்டையில் பச்சைநிற கோழிமுட்டையும் இருக்கிறது தெரியுமோ?!!!... "ஈஸ்டர் எக்கர்" (Easter egger), "இஸ்பார்"(Isbar), "ஆலிவ் எக்கர்" (Olive egger) முதலிய கோழி இனங்களெல்லாம் "பச்சை" நிறத்தில் முட்டைகள் இடுகின்றன.

Easter-Egger-Eggs

Isbar

Olive-Eggs

🐦🐦🐦🐦🐦🐦

Ostrich.

நெருப்புக்கோழி தெரியுமா?...

ம்... ம்ம்... தெரிந்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி...

நெருப்புக் கோழியினுடைய மூளையின் எடை வெறும் 40 கிராம் மட்டுமே என்பது தெரியுமா?!!.

இன்னாது... தெரியாதா??

சரி.. சரி ... ஒன்றே ஒன்றுதானே தெரியவில்லை... விடுங்க பாஸ்...

நெருப்புக்கோழியின் கண்கள் அதன்மூளையைவிட பெரியதாக உள்ளன என்பதாவது தெரியுமா?!!!

இன்னாது... இதுவும் தெரியாதா... 😨😨😩😩... (பார்றா... என் செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல...)

Ostrich.

🐦🐦🐦🐦🐦🐦

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. ஹரியால் (இது கேள்விப்பட்டதுண்டு ஆனால் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை) , பூங்கொத்தி, மார்ஷ் வாப்ளர் தவிர மற்றவை பற்றி கொஞ்சம் தெரியும் அறிந்ததுண்டு. நல்ல பதிவு.

  தேன் சிட்டைப் படம் பிடிக்க முடியவே இல்லை எத்தனையோ இங்கு வருகின்றன.

  பறவைகள் உலகம் பெரியது. படங்களையும் தகவல்களையும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் பறவையானால்...?

  https://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் "if-you-are-a-bird" பகுதியை பார்வையிட்டேன்... மிகவும் அருமையாக உள்ளது... பாராட்டுக்கள்.

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.