"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மோனோமர் - Monomer.

மோனோமர் - Monomer.

வேதியியல் அறிவோம்.

Monomer.

மோனோமர்.

          "மோனோமர்" (Monomer) என்பது சிறிய மூலக்கூறுகள். "Mono" என்றால் "ஒன்று" என்று பொருள். "mer" என்றால் "பகுதி" என்று பொருள். அதாவது இது ஒரு ஒற்றை மூலக்கூறினைக்கொண்ட பகுதி என்று பொருள். இது பாலிமர்களுக்கான அடிப்படை அலகு மட்டுமல்ல புரதங்களின் கட்டுமான தொகுதியாகவும் விளங்குகின்றன.

Monomer.

மோனோமர்களுக்கு எடுத்துக்காட்டாக குளுக்கோஸ் (Glucose), வினைல் குளோரைடு (Vinyl Chloride), அமினோஅமிலங்கள் (Amino Acid), எத்திலீன் (Ethylene) இவைகளை குறிப்பிடலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள மோனோமர்களை ஒன்றிற்கு மேற்பட்டவைகளோடு இணைத்து வேதியியல் வினைகளுக்கு உட்படுத்தும்போது எலக்ட்ரான்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் இவைகள் தன்னை ஒத்த பிற கரிம மூலக்கூறுகளுடன் சங்கிலிபோல இணைந்து மிகநீளமான சங்கிலி தொடரை உருவாக்கும் திறனை பெறுகின்றன.

monomer double-bond

அவ்வாறு உருவான சங்கிலி தொடர்கள் பல இணைந்து சிக்கலான பிணைப்பை பெறும்போது அவைகள் "பாலிமர்"களாக உருவாக்கம் பெறுகின்றன. பல லட்சக்கணக்கான மோனோமர்கள் ஒன்றோடு ஒன்றாக சங்கிலிபோல் பிணைந்தால் மட்டுமே பாலிமர்கள் (Polymer) உருவாக முடியும்.

பாலிமர்களின் அடிப்படை கட்டமைப்பிற்கு மோனோமர்கள் தேவை. மோனோமர் (Monomer) இல்லையெனில் உங்களால் வேதியியல் அடிப்படையில் பாலிமர்களை உருவாக்கவே முடியாது.

அதாவது வீடுகள் கட்ட உங்களுக்கு செங்கல் தேவையெனில் அந்த செங்கல்லை உருவாக்க முதலில் "செம்மண் துகள்" தேவையல்லவா... அதுபோலவேதான் பாலிமர்களை உருவாக்க வேண்டுமெனில் "மோனோமர்" துகள்கள் தேவை.

அதுசரி, பாலிமர் (Polymer) என்றால் என்ன?

பாலிமர் (Polymer) என்பது நெகிழும் தன்மையுடைய ஒரு இரசாயன கலவை.

"Poly" என்றால் "பல" என்று பொருள். "mer" என்றால் "பகுதி" என்று பொருள். பல மோனோமர்கள் ஒன்றையடுத்து ஒன்றாக பிணைக்கப்பட்ட அலகுகளைக் கொண்டதே பாலிமர்.

polymer

இந்த பாலிமரிலும் இருவகையான பாலிமர்கள் உள்ளன. ஒன்று இயற்கையானது மற்றொன்று செயற்கையானது.

இயற்கையான பயோபாலிமர்களுக்கு (Bio Polymers) எடுத்துக்காட்டாக பட்டு (Silk), ரப்பர் (Rubber), செல்லுலோஸ் (Cellulose), கொலாஜன் (Collagen), கெரட்டின் (Keratin), அம்பர் (Amber), கம்பளி (Wool), ஸ்டார்ச் (Starch), ஷெல்லாக் (Shellac) மற்றும் டி.ஏன்.ஏ. (DNA) ஆகியவைகளைக் குறிப்பிடலாம். இவைகள் உயிரினங்களை அடிப்படையாகக் கொண்டவை.

செயற்கையானதுக்கு எடுத்துக்காட்டாக பாலிஎத்திலீன் (Polyethylene) ஐ குறிப்பிடலாம்.

செயற்கையாக இவைகள் ஆய்வகங்களில் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?

இருவேறு தன்மைகொண்ட "மோனோமர்"களை வேதிவினைக்கு (Chemical reaction) உட்படுத்தும்போது அவைகள் வேதியியல் பிணைப்புகள் (Chemical Bond) மூலமாக ஆய்வகங்களில் பாலிமர்கள் உருவாக்கப்படுகின்றன.

அதாவது இரண்டு வெவ்வேறு சிறிய அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறுகள் அதாவது மோனோமர்கள் "பாலிமரைசேஷன்" (Polymerization) எனப்படும் சூப்பர் மாலிகுலர் (Supramolecular) முறையில் மோனோமர்கள் ஒன்றையடுத்து ஒன்றாக சங்கிலி போன்று இணைந்து பாலிமர்களை உருவாக்குகின்றன.

அவ்வாறு உருவாக்கப்படும் பாலிமர்கள் அதன் தன்மைகளைப் பொறுத்து மூன்று வகைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. அவை...

 1. தெர்மோபிளாஸ்டிக்ஸ் - Thermoplastic (நெகிழ்வானவை)
 2. தெர்மோசெட்கள் - Thermoset (திடமானவை)
 3. எலாஸ்டோமர்கள் - Elastomers (செயற்கை இழைகள்)

இந்த செயற்கை பாலிமருக்கு எடுத்துக்காட்டாக PVC - Polyvinyl Chloride (பாலிவினைல் குளோரைடு), செயற்கை ரப்பர் (Synthetic rubber), சிலிகான் (Silicon), பாலிஎதிலீன் (Polyethylene), பாலிஸ்டிரீன் (Polystyrene), நியோபிரீன் (Neoprene) மற்றும் நைலான் (Nylon) ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

சரி, எந்த இரு "மோனோமர்" மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது எந்த விதமான "பாலிமர்" உருவாகிறது என்பதனை பார்ப்போம் வாருங்கள்.

 • டெரிலீன் தயாரிக்கப் பயன்படும் மோனோமர்கள்?

          எத்திலீன் கிளைக்கால் + டெரிதாலிக் அமிலம்.

 • பியுனா N ரப்பர் (buna N rubber) தயாரிக்கத் தேவையான மோனோமர்கள்?

          பியூட்டா டையீன் + அக்ரிலோ நைட்ரைல்.

 • நைலான் - 66 தயாரிக்கத் தேவைப்படும் மோனோமர்கள்?

          ஹெக்சா மெத்திலின் டையமின் + அடிப்பிக் அமிலம்.

👼 👼 👼 👼 👼 👼 👼

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

12 கருத்துகள்

 1. பலருக்கும் பயனுள்ள பதிவு நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. சிவா எனக்கு 12 ஆம் வகுப்பு நினைவுக்கு வந்துவிட்டது!!! கூடவே மகனுக்குச் சொல்லிக் கொடுத்ததும் நினைவுக்கு வந்தது. மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. கண்டிப்பாக, தமிழ்வழிக் கல்வி பயிலும் பல மாணவ மாணவிகள் இதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். மிக மிகப் பயனுள்ள பதிவு. நீங்கள் ஏன் மாணவர்களுக்கு என்று புத்தகம் போடக் கூடாது. பல நல்ல தகவல்கள் தருகிறீர்கள் சிவா....ரொம்பவே அறிவு பூர்வமான பதிவுகள்

  பாராட்டுகள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி சகோதரி!
   புத்தகம் போடுவதற்கான முயற்சிகள் தொடருகின்றன...
   நன்றி!

   நீக்கு
  2. ஓ அப்படியா! மனமார்ந்த வாழ்த்துகள் நாஞ்சில் சிவா சகோ!

   கீதா

   நீக்கு
 3. கல்லூரியில் படிப்பவர்களுக்கும் கூட உதவும் நேர்முகத்தேர்வுகள் உட்பட

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஓர் ஆசிரியனாகச் சொல்கிறேன் என் சப்ஜெக்ட் இல்லை என்றாலும் விளக்கங்கள் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். மாணவர்கள் பலருக்கும் பயன்படும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துகளுக்கு ரொம்பவும் நன்றி சார்!...

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.