"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தன்னம்பிக்கை விதைக்கும் பொன்மொழிகள் - Confidence Quotes to Inspire Your Life.

தன்னம்பிக்கை விதைக்கும் பொன்மொழிகள் - Confidence Quotes to Inspire Your Life.

Confidence Quotes to Inspire Your Life.

          வாழ்க்கையை வாழத்தெரியாமல் திக்கற்று நிற்பவர்களுக்கு பல நேரங்களில் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற வாக்கியங்கள் வழிகாட்டியாக நிற்பதை நாம் பல நேரங்களில் பார்த்து வந்துள்ளோம்.

வாக்கியங்கள் மட்டுமல்ல சில நேரங்களில் எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட அர்த்த புஷ்டியுள்ள ஒருசில வார்த்தைகள்கூட வாழ்க்கையை வழிநடத்துவதுண்டு.

Confidence Quotes - Inspire Your Life

வாருங்கள் இந்த பதிவில் நம்பிக்கை இழந்து நிற்கும் நம் மனதில் தன்னம்பிக்கையை விதைக்ககூடிய பொன்மொழிகள் சிலவற்றைப் பார்க்கலாம். அதன்மூலம் நம் வாழ்க்கையை சிறப்பான முறையில் கூர்நோக்கலாம்.

வாழ்க்கையை விருட்சமாக்கும்

தன்னம்பிக்கை விதைகள்.

 • திருப்தி உள்ள மனமே தீராத விருந்தாம்.
 • உடைவதைவிட வளைவது மேல்.
 • ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும்.
 • தீராக்கோபம் போராய் முடியும்.
 • சினம் சேதாரத்தையே உண்டுபண்ணும்.
 • அதிக அக்கறை அழிவில் முடியும்.
 • அதிகத் தந்திரம் காரியத் தடையை ஏற்படுத்தும்.
 • அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.
 • இருந்த கால் மூதேவி, நடந்த கால் சீதேவி.
 • ஆனையின் வேகம் அங்குசத்தால் அடங்கும்.
 • அச்சமில்லாதவனே அரங்கத்தில் ஏறுவான்.
 • அதிகமாக கத்தும் கழுதை அதிகமாக திங்காது.
 • இரத்த உறவு மற்ற உறவுகளைவிட மேலானது.
 • இறுதியில் சிரிப்பவனே நன்றாக சிரிப்பான்.
 • இடுகாட்டில் இருக்குது இறவாமலே சமரசம்.
 • தூய உள்ளத்தைவிட தொண்டு உள்ளம் சிறந்தது.
 • தீயக் களைகள் சீக்கிரம் விளையும்.
 • காயம் ஆறினாலும் தழும்பு ஆறாது.
 • ஏழையின் கடனே பேரொலியை எழுப்பும்.
 • நாவை அடக்கினால் சாவையும் வெல்லலாம்.
 • மொழியாத மொழி வழி இழந்து போகும்.
 • உலக்கை தேய்ந்து உளி பிடியாயிற்று.
 • உறக்கமே உடல் நலத்தின் தொடக்கம்.
 • காளை போன வழியே கயிறும் போகும்.
 • உண்மையான நண்பனே உன்னத சொத்தாம்.
 • உயிர் இல்லாதவனே குறை இல்லாதவன்.
 • கண்ட பழமையை கொண்ட மனைவியிடம் சொல்லாதே.
 • தவறுகளை காணாதே. அதற்கான தீர்வுகளைக் காண்.
 • அற்ப மனமே ஆயிரம் சந்தேகங்களுக்கான இருப்பிடம்.
 • அறியும் ஆவலில் அக்குவேறு ஆணிவேறு ஆனதே மிச்சம்.
 • அடங்கத் தெரியாதவனுக்கு ஆளவும் தெரியாது.

thiruma kuruma speech

People of Tamilnadu question

 • அரை கிறுக்கனை விட முழு கிறுக்கன் எவ்வளவோ மேல்.
 • அடங்காத மாட்டை அடக்க மூங்கில் தடியால் ஒரு அடி.
 • போதையில் மூழ்கியவன் வார்த்தையில் நீந்துவான்.
 • முட்டாள் நண்பனை விட கற்றறிந்த பகைவனே மேல்.
 • வாய் வீரம் பேசுபவர் கைவீரம் காட்டமாட்டார்.
 • விழுந்தவன் சிரித்தானாம் வெட்கத்துக்கு அஞ்சி.
 • வேலிக்கு போட்ட முள் காலுக்கு வினையாச்சு.
 • விதைத்துக்கொண்டே இரு. விளைந்தால் மரம்... சிதைந்தால் உரம்.
 • ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடு... நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்.
 • உன்னுடைய அண்டை வீட்டுக்காரன் நல்லவனாக இருந்தால் நாளைய பொழுதும் நல்லதாகவே விடியும்.
 • தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு.
 • அறிந்தறிந்து செய்கின்ற பாவத்தை அழுதழுதுதான் தொலைக்க வேண்டும்.
 • ஆளுக்கு ஆள் மேஸ்திரியானால் கட்டடத்தை கட்டி முடிப்பது எப்போதாம்?
 • இல்லாததற்கே இதயம் ஏங்கும். போல்லாததற்கே பொழுதும் தூங்கும்.
 • மனதில் குறை இருக்கலாம். ஆனால், கறை இருக்கக் கூடாது.
 • உடைமை ஒரு தடவை மூழ்க உடையவனோ பலமுறை மூழ்குவான்.
 • உடைந்த உள்ளத்திற்கு உகந்த மருந்தே நட்பு.
 • உன்னால் கைவிட முடியாததை கைக்கொள்ளாதே.
 • பதர் நீக்கி நெல் கொள். இடர் நீக்கி சொல் கொள்.
 • உண்மையான புகழ்ச்சி வேர்கொண்டு தழைக்கும்.
 • உன்னிடம் இருப்பதையே கெட்டியாக பற்று.
 • உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
 • எளியோரை வாட்டுபவன் எப்போதும் கோழையாகவே இருப்பான்.
 • எலி போல் தோன்றும் பகைவனையும் புலி போலவே எண்ணு.
 • எல்லாவற்றையும் இழந்தவருக்கும் ஒரு எதிர்காலம் உண்டு.
 • ஒரு சேரக் கட்டினால் ஒன்பது யானை பலம்.
 • சிறுபிள்ளை சகவாசம் சீலையைத்தான் கிழிக்கும்.
 • ஒரு தவறுக்கு அடிபணிந்தால் அது மற்றொன்றையும் கூட்டி வரும்.
 • கடந்து போனது கரணம் போட்டாலும் திரும்பி வராது.
 • காக்கத் தெரிந்தவனுக்கே காரியமும் கைகூடும்.
 • காலியான பணப்பைதான் பயணத்தின்போது பெரும் சுமையாகத் தெரியும்.
 • கிழப்பூனையும் குட்டிப்பூனையைப் போலவே நடிக்கும்.
 • கிழ வேடன் வலைவிரிப்பதில் கெட்டிக்காரன்.
 • கிசுகிசு பேச்சுக்கள்தான் நீண்ட தொலைவு வரையிலும் கேட்கும்.
 • சமையல் சுவையாக இருந்தால் படையல் பிரமாதமாக இருக்கும்.
 • தன் நிழலோடு தானே சண்டையிடுபவனின் பெயர்தான் முட்டாள்.
 • மனநிலை என்பது மிக சிறியதுதான். ஆனால் அது ஏற்படுத்தும் மாற்றங்களோ மிகப்பெரியது.
 • நம்பிக்கை இல்லாதவன் வெல்வது கடினம். நம்பிக்கை உள்ளவன் வீழ்வது கடினம்.

💟 💟 💟 💟 💟 💟

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. ஒரு சில தெரிந்தவை. ஒரு சில இதே பொருளில் கொஞ்சம் மாற்றிய சொற்களில் வேறு வரிகளில். அனைத்துமே அருமை.

  குடிச்சவன் வார்த்தைகள் நீந்துவான் - சிரித்துவிட்டேன். உண்மை.
  கிசு கிசு பேச்சுக்கள்தான் நீண்ட தொலைவு வரை கேட்கும் - உண்மையோ உண்மை. நம்ம மக்கள் தலைக்குள் இந்த எதிர்மறைகள்தான் டக்குனு ஏறுதுங்க. நல்ல விஷயம் நீங்க என்னதான் அறிவு பூர்வமான அறிவியல், நல்ல விஷயங்கள் பேசினாலும் ஏறவே மாட்டேங்குது. யுட்யூப்ல போய் பார்த்தாலே தெரியும். அக்கப்போருக்கு இருக்கும் பார்வைகள்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு தங்களுக்கு பயனளித்ததில் மகிழ்ச்சி. நானும் "யூடியூப்" ஐ தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். நீங்கள் சொல்வதுபோல அந்த அக்கப்போருக்கு இருக்கும் பார்வைகள் இருக்கே.... கொஞ்சம் ஓவராகத்தான் போயிட்டு இருக்கு...

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.