"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 2.

இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 2.

Presidents of India.

India kudiyarasu thalaivarkal.

Part - 2.

          "இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India" என்னும் இத்தொடர் பதிவில் இந்திய அரசியலை வழிநடத்திய குடியரசு தலைவர்களைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.

Presidents of India

          1950 லிருந்து இன்று வரையிலும் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த தலைவர்களைப் பற்றி அறிந்துகொள்வதே இந்த பதிவின் நோக்கம். அந்த வகையில் இதோ உங்கள் முன் படைக்கப்பட்டுள்ளது அதன் இரண்டாவது பகுதி. இதன் முதல் பகுதியை படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க...

👉இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 1.👈

முதல் பகுதியில் 1950 லிருந்து 1974 வரை இந்திய ஜனாதிபதியாக இருந்த தலைவர்களைப் பற்றி பார்த்தோம். அவர்களைத் தொடர்ந்து ஜனாதிபதவிக்கு பெருமை சேர்த்த இன்னும் சில தலைவர்களைப் பற்றி இந்த இரண்டாவது பகுதியில் பார்க்கலாம் வாருங்கள்...

இந்திய குடியரசு தலைவர்கள்.

பகுதி - 2.

முகமது இதயத்துல்லா.

பெயர் :- முகமது இதயத்துல்லா - Mohammad Hidayatullah.

mohammad hidayatullah

பதவி :- இடைக்கால குடியரசு தலைவர் (Acting President).

பிறப்பு :- 1905 ம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலத்திலுள்ள ராய்ப்பூரில் (Raipur) பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- உச்ச நீதிமன்ற நீதிபதி. கல்வி துறையிலும் புரட்சியை ஏற்படுத்தியவர்.

பதவிக்காலம் :- முன்பே சொல்லப்பட்டதுபோல மூன்றாவது குடியரசு தலைவரான ஜாகீர் உசேன் (Dr. Zakir Hussain) பதவியிலிருக்கும்போதே திடீரென மரணத்தை தழுவியதால் முறையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கு சிறிதுகால அவகாசம் தேவைப்படுமாதலால் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக வி.வி. கிரி (Varahagiri Venkata Giri) தற்காலிக ஜனாதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.

அதன்பின் அவர் ஜனாதிபதி தேர்வுக்கு போட்டியிட்டதால் அரசியல் அமைப்பு சட்டப்படி தற்காலிக ஜனாதிபதி பதவியை துறந்தார்.

இதனால் துணை ஜனாதிபதி, தற்காலிக ஜனாதிபதி ஆகிய இரு இடங்களும் காலியானதாலும், முறையாக தேர்தலில் நின்று வெற்றிபெற்று மீண்டும் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்க ஒரு மாத கால அளவு இடைவெளி இருப்பதாலும் அந்த இடைவெளியை நிரப்ப 1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி முதல் 1969 ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ம் தேதி வரை தற்காலிக ஜனாதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதியான "முகமது இதயத்துல்லா" (Mohammad Hidayatullah) பதவி ஏற்றார்.

சாதனை :- 2002 ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் (Padma Bhushan) விருதுக்கு சொந்தக்காரர்.

மறைவு :- 1992 ம் ஆண்டு செப்டம்பர் 18 ம் நாள் தன்னுடைய 86 வது வயதில் மும்பையில் (Mumbai) இயற்கை எய்தினார்.

பக்ருதின் அலி அஹமத்.

பெயர் :- பக்ருதின் அலி அஹமத் - Fakhruddin Ali Ahmed.

Fakhruddin Ali Ahmed

பதவி :- குடியரசு தலைவர் (Presidents).

பிறப்பு :- 1905 ம் ஆண்டு மே 13 ம் தேதி டில்லியில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அரசியலில் கால் பதித்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார்.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் ஐந்தாவது குடியரசு தலைவர். 1974 ம் வருடம் ஆகஸ்ட் 24 ம் தேதி முதல் 1977 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி வரையில் குடியரசு தலைவராக பதவி வகித்தார்.

மறைவு :- 1977 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார்.


பசப்பா தனப்பா ஜாட்டி.

பெயர் :- பசப்பா தனப்பா ஜாட்டி - Basappa Danappa jatti.

Basappa Danappa jatti.

பதவி :- இடைக்கால குடியரசு தலைவர் (Acting President).

பிறப்பு :- 1913 ம் ஆண்டு செப்டம்பர் 10 ம் தேதி மகாராஷ்டிரத்தில் (Maharashtra) மும்பையில் (Mumbai) பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- வழக்கறிஞராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். மைசூர் (mysore) முதல்வராக இருந்தார்.

பதவிக்காலம் :- ஜனாதிபதியாக இருந்த "பக்ருதின் அலி அஹமத்" (Fakhruddin Ali Ahmed) திடீரென மரணத்தை தழுவியதால் வாக்கெடுப்பு மூலம் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் வரையில் "தற்காலிக குடியரசு தலைவராக" (Acting President) இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1977 ம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் 1977 ம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி வரை  "தற்காலிக குடியரசு தலைவராக" (Acting President) பதவி வகித்தார்.

மறைவு :- 2002 ம் ஆண்டு ஜூன் 7 ம் தேதி பெங்களூரில் (Bengaluru) இறந்தார்.


நீலம் சஞ்சீவி ரெட்டி.

பெயர் :- நீலம் சஞ்சீவி ரெட்டி - Neelam Sanjiva Reddy.

Neelam Sanjiva Reddy.

பதவி :- குடியரசு தலைவர் (Presidents).

பிறப்பு :- 1913 ம் ஆண்டு மே 19 ம் தேதி ஆந்திரபிரதேசத்தின் (Andhra Pradesh) அனந்தபூர் (Anantapur) மாவட்டத்திலுள்ள இல்லூர் (ILLUR) என்னும் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- அரசியல்வாதியாகவும் கூடவே சிறந்த ஒரு விவசாயி ஆகவும் திகழ்ந்தார்.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவர். 1977 ம் ஆண்டு ஜூலை 25 முதல் 1982 ம் ஆண்டு ஜூலை 25 முதல் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

சாதனை :- ஆந்திர பிரதேசத்தின் (Andhra Pradesh) முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் லோக் சபாவின் சபாநாயகராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மறைவு :- 1996 ம் ஆண்டு ஜூன் 1 ம் தேதி பெங்களூரில் தன்னுடைய 83 வது வயதில் உயிரிழந்தார்.

ஜெயில் சிங்.

பெயர் :- கியானி ஜெயில் சிங் - Giani Zali Singh.

Giani Zail Singh.

பதவி :- குடியரசு தலைவர் (Presidents).

பிறப்பு :- 1916 ம் ஆண்டு மே 5 ம் நாள் பஞ்சாபில் (Punjab) உள்ள சந்த்வான் (Sandhwan) என்ற இடத்தில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் ஏழாவது குடியரசு தலைவர். 1982 ம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி முதல் 1987 ம் ஆண்டு ஜூலை 25 ம் நாள் வரை பதவியில் இருந்தார்.

இவர் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் அப்போது பிரதமாராக இருந்த இந்திராகாந்தியால் "ஆபரேஷன் ப்ளு ஸ்டார்" (Operation Blue Star) நடத்தப்பட்டது. அதன் விளைவாக இந்திரா காந்தி படுகொலை, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் முதலியன அரங்கேற்றப்பட்டன.

சாதனை :- குடியரசு தலைவராக பொறுப்பேற்ற இந்தியாவின் முதல் சீக்கியர் என்னும் பெருமை இவரையே சாரும்.

பினாமி நிலங்களை கையகப்படுத்தவும், நிலமற்ற விவசாயிகளுக்கு அவற்றை வழங்கவும் ஜெயில் சிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் நாடெங்கிலும் போற்றப்பட்டன.

மறைவு :- 1994 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி அன்று புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது சாலை விபத்தில் காயம் அடைந்து தன்னுடைய 78 வது வயதில் மருத்துவமனையில் இறந்தார்.


இரா.வெங்கட்ராமன்.

பெயர் :- இராமசுவாமி வெங்கட்ராமன் - Ramaswamy Venkataraman.

Ramaswamy Venkataraman.

பதவி :- குடியரசு தலைவர் (Presidents).

பிறப்பு :- 1910 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு (Pattukkottai) அருகிலுள்ள "ராஜாமடம்" (Rajamadam) என்னும் கிராமத்தில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- வழக்கறிஞர் தொழில் பார்த்துவந்த இவர் தொழிற்சங்கவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். எழுத்தாளரும் கூட. சுதந்திர போராட்டத்தில் மிக தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

பதவிக்காலம் :- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவர். 1987 ம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி முதல் 1992 ம் ஆண்டு ஜூலை 25 முதல் ஜனாதிபதியாக பதவிவகித்தார்.

சாதனை :- சுதந்திரப்போராட்டத்திற்கு இவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் எழுத்தாளுமையை பாராட்டி ரஷ்ய அரசு "Soviet Land" என்னும் பரிசை வழங்கி கவுரவித்துள்ளது.

கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டைகள் இவரால் உருவாக்கப்பட்டவை.

பாகிஸ்தானுக்கு பயணம் செய்த முதல் இந்திய குடியரசு தலைவர் இவரே.

மறைவு :- 2009 ஜனவரி 27 ம் தேதி தன்னுடைய 98 வது வயதில் புது டில்லியிலுள்ள இராணுவ மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

💖💝💗💖💝💗

          சரி, இந்த பதிவில் 1969 ம் ஆண்டு முதல் 1992 ம் வருடம் வரையில் ஜனாதிபதியாக பதவி வகித்த தலைவர்களைப் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்து 1992 ம் ஆண்டிற்கு பின்பு குடியரசு தலைவராக பொறுப்பேற்று ஜனாதிபதி மாளிகையை அலங்கரித்த தலைவர்களைப் பற்றி தொடர்ந்து வரும் மூன்றாவது பகுதியில் (Part 3) பார்க்க இருக்கின்றோம்...

[தொடரும்]...

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

7 கருத்துகள்

 1. மனதில் இடம் பிடித்தவர் கலாம் அவர்கள் மட்டுமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்... கலாம் மட்டுமல்ல... கே.ஆர். நாராயணனும்கூட மனதில் நிறுத்த வேண்டிய தலைவரே!!...

   நீக்கு
 2. பசப்பா தனப்பா பற்றி எனக்கு நினைவில்லை. நல்ல தகவல்கள். மற்ற ஜனாதிபதிகள் மனதில் அவ்வளவாக நிற்பதில்லை. கலாம் அவர்கள் தான் மனதில் எப்போதும் நிற்பவர்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலாம் மட்டுமல்ல கே.ஆர். நாராயணனும் கூட ஜனாதிபதி பதவியை மிக சிறப்பாக பயன்படுத்தியவர்கள். எனவே இருவரையுமே நாம் மனதில் வைத்து போற்றுதல் வேண்டும்.
   தங்களின் கருத்துகளுக்கு நன்றி சகோதரி...

   நீக்கு
  2. "பசப்பா தனப்பா" வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியாக பதவிபேற்கவில்லை. மாறாக, "துணை குடியரசு தலைவர்" (Vice President) பதவியில் இருந்தவர். அப்போது ஜனாதிபதியாக (President) இருந்த "பக்ருதின் அலி அஹமத்" (Fakhruddin Ali Ahmed) திடீரென மரணத்தைத் தழுவியதால் அடுத்த குடியரசு தலைவரை முறையாக தேர்ந்தெடுக்கும் வரையில் "தற்காலிக குடியரசு தலைவராக"வே (Acting President) இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

   இதனை பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

   தங்களின் கருத்து பதிவிடலுக்கு நன்றி சகோதரி!...

   நீக்கு
 3. நல்ல தகவல்கள் அடுத்தடுத்த வரலாற்றில் தங்களது பெயரும் இடம் பெறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே!... தங்களது வாக்கு பலிக்கட்டும்... நன்றி!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.