"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 3.

இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 3.

Presidents of India.

India kudiyarasu thalaivarkal.

Part 3.

          இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசியலமைப்புச் சபையானது அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலும் புதியதாக உருவாக்கும் பணியை அம்பேத்கரின் தலைமையில் மேற்கொண்டது.

1949 ம் ஆண்டு நவம்பர் 26 ல் இறுதி வடிவம் பெற்ற இது 1950 ஜனவரி 26 ல் நடைமுறைக்கு வந்தது.

அன்றுதான் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக "டாக்டர். இராஜேந்திர பிரசாத்" (Dr. Rajendra Prasad) பதவி ஏற்றார்.

Presidents of India 1950-2022

இந்திய குடியரசு தலைவர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு தலைவராகிய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக "துணை ஜனாதிபதி"யாக (Vice President) மற்றொருவரும் பணியில் அமர்த்தப்படுகிறார்.

குடியரசு தலைவராக இருப்பவர் பதவியை ராஜினாமா செய்தாலோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது பதவியில் இருக்கும்போதே மரணமடைந்தாலோ உடனடியாக வேறு ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது சாத்தியம் இல்லை அல்லவா...

அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க "துணை குடியரசு தலைவர்" (Vice President) ஆக இருப்பவர் "தற்காலிக குடியரசு தலைவர்" ஆக (Acting President) பொறுப்பேற்பார்.

இவ்வாறான சூழ்நிலை இந்திய வரலாற்றில் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. 1969 ம் ஆண்டு மே 3 முதல் 1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி வரையில் "வி.வி. கிரியும்" (Varahagiri Venkata Giri), 1977 ம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் 1977 ம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி வரை "பசப்பா தனப்பா ஜாட்டியும்" (Basappa Danappa jattiதற்காலிக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ளனர்.

அதுசரி, ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்க "துணை ஜனாதிபதி" பதவியிலும் யாரும் இல்லை என்று வைத்துகொள்வோம். அப்போது என்ன செய்ய?... இருக்கவே இருக்கிறார் நம்முடைய நீதியரசர்!.

ஆம், அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் இந்திய தலைமை நீதிபதியே தற்காலிக (Acting President) குடியரசு தலைவராக செயல்படுவார்.

இவ்வாறான சூழ்நிலை இந்திய வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.

ஆம், 1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி முதல் 1969 ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ம் தேதி வரை உச்ச நீதிமன்ற நீதிபதியான "முகமது இதயத்துல்லா" (Mohammad Hidayatullahதற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

"இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India" என்னும் இந்த தொடர் பதிவில் இதுவரையில் குடியரசு தலைவர்களாக பதவி வகித்த தலைவர்களைப்பற்றி தொடர்ந்து பார்த்துவருகிறோம்.

இதோ உங்கள் முன்னால் காட்சியளிப்பது இத்தொடரின் மூன்றாவது பகுதி...

முதல் பகுதியில் (Part 1) 1950 லிருந்து 1974 வரை இந்திய ஜனாதிபதியாக இருந்த தலைவர்களைப் பற்றி பார்த்தோம்...

இரண்டாவது பகுதியில் (Part 2) 1969 ம் ஆண்டு முதல் 1992 ம் வருடம் வரையில் ஜனாதிபதியாக பதவி வகித்த தலைவர்களைப் பற்றி பார்த்தோம்...

மூன்றாவது பகுதியாகிய (Part 3) இப்பதிவில் 1992 ம் ஆண்டிலிருந்து இன்று வரையில் ஜனாதிபதியாக இருக்கக்கூடிய தலைவர்களைப் பற்றி பார்க்க இருக்கின்றோம்.

வாருங்கள் பார்க்கலாம்...

இந்திய குடியரசு தலைவர்கள்.

பகுதி - 3.

சங்கர் தயாள் சர்மா.

Shankar Dayal Sharma.

பெயர் :- சங்கர் தயாள் சர்மா - Shankar Dayal Sharma.

president of india Shankar Dayal Sharma

பதவி :- குடியரசு தலைவர்.

பிறப்பு :- 1918 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் நாள் மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- வழக்கறிஞராக சிறப்பாக பணியாற்றி வந்தவர் பின்னாளில் விடுதலை போராட்ட வீரராகவும், அரசியல்வாதியாகவும் களம் இறங்கினார்.

போபால் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். ஆந்திர பிரதேசத்தின் ஆளுனராகவும், பஞ்சாபின் ஆளுனராகவும் இருந்துள்ளார்.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் ஒன்பதாவது குடியரசு தலைவர். 1992 ம் ஆண்டு ஜூலை 25 முதல் 1997 ம் ஆண்டு ஜூலை 25 வரை குடியரசு தலைவராக பதவி வகித்துள்ளார். இதற்கு முன் துணை குடியரசு தலைவராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு.

சாதனை :- வழக்கறிஞர் தொழிலில் செய்த பல சாதனைகளைப் பாராட்டி சர்வதேச பார் அசோசியேஷன் "லிவிங் லெஜண்ட் ஆஃப் லா" என்னும் விருதினை வழங்கி கவுரவித்தது.

மறைவு :- 1999 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தியதி தன்னுடைய 81 வது வயதில் புதுதில்லியில் மரணமடைந்தார்.


கே.ஆர். நாராயணன்.

K.R. Narayanan.

பெயர் :- திரு. கோச்சேரி ராமன் நாராயணன் - Kocheril Raman Narayanan.

President - K.R.Narayanan

பதவி :- குடியரசு தலைவர்.

பிறப்பு :- 1920 ம் ஆண்டு அக்டோபர் 27 ல் கேரளாவின் கோட்டையத்தில் உள்ள உழவூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்.

(குறிப்பு :- இவருடைய உண்மையான பிறந்தநாள் அக்டோபர் 27 அல்ல என்றும் முதன் முதலாக பள்ளியில் சேர்க்கப்படும் போது ஒரு குத்துமதிப்பாக ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டதுதான் இது என்றும் சொல்லப்படுகிறது. பின் வந்த நாட்களில் அக்டோபர் 27 யையே தன்னுடைய பிறந்தநாளாக ஏற்றுக்கொண்டு அனைத்து இடங்களிலும் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது).

முன்பு பணிபுரிந்த துறை :- பத்திரிக்கை செய்தியாளராகவும், எழுத்தாளராகவும், வெளிநாட்டு தூதுவராகவும், அரசியல்வாதியாகவும் தன் வாழ்க்கையில் பயணித்துள்ளார்.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் பத்தாவது குடியரசு தலைவர். 1997 ம் ஆண்டு ஜூலை 25 ம் நாள் முதல் 2002 ம் ஆண்டு ஜூலை 25 ம் நாள் வரை குடியரசு தலைவராக பதவி வகித்தார்.

சாதனை :- இந்திய வெளியுறவு துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

பொதுவாக குடியரசு தலைவர்கள் எவரும் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை. அந்த மரபை உடைத்தெறிந்து 1998 ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதன்மூலம் குடியரசு தலைவராக இருப்பவரும் வாக்களிக்க கடமைப்பட்டவரே என்பதனை அழுத்தமாக பதிவு செய்தார்

மறைவு :- 2005 ம் ஆண்டு நவம்பர் 9 ம் தேதி தன்னுடைய 85 வது வயதில் உடல்நல குறைவால் புதுதில்லியில் காலமானார்.


ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

Dr. A. P. J. Abdul Kalam.

பெயர் :- திரு. அவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல்கலாம் - Dr. A. P. J. Abdul Kalam.

Dr. A. P. J. Abdul Kalam.

பதவி :- குடியரசு தலைவர்.

பிறப்பு :- 1931 ம் ஆண்டு அக்டோபர் 15 ம் நாள் இராமேஸ்வரத்தில் பிறந்தார். 

முன்பு பணிபுரிந்த துறை :- அறிவியலாளராகவும், பொறியாளராகவும் பணிபுரிந்தார்.

பதவிக்காலம் :- இந்திய அறிவியலாளரும், பொறியாளருமான இவர் இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக 2002 ல் பொறுப்பேற்றுக்கொண்டார். 2002 ம் ஆண்டு ஜூலை 25 முதல் 2007 ம் ஆண்டு ஜூலை 25 வரையில் மக்கள் விரும்பும் ஜனாதிபதியாக ஜனாதிபதி மாளிகையை அலங்கரித்தார்.

சாதனை :- ஜனாதிபதி பதவியில் அமர்ந்த முதல் அறிவியலாளர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரர். அதிக வாக்குகளை பெற்ற முதல் ஜனாதிபதி என்னும் பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. இவர் ஜனாதிபதியாக இருப்பதை இந்தியர்கள் அனைவருமே பெருமையாக உணர்ந்தனர். 1997 ற்கான "பாரதரத்னா" விருதுக்கு சொந்தக்காரர்.

மறைவு :- 2015 ம் ஆண்டு ஜூலை 27 ஷில்லாங்கில் வைத்து இறந்தார்.

பிரதீபா பட்டீல்.

Pratibha Patil.

பெயர் :- பிரதீபா தேவிசிங் பட்டீல் - Pratibha Devisingh Patil.

Pratibha Devisingh Patil.

பதவி :- குடியரசு தலைவர்.

பிறப்பு :- 1934 ம் ஆண்டு டிசம்பர் 19 ம் தேதி மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்திலுள்ள நட்கான் கிராமத்தில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- அரசியல்வாதியாக திகழ்ந்தார். 2004 முதல் 2007 வரையில் இராஜஸ்தான் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் 12 வது குடியரசு தலைவராவார். 2007 ம் ஆண்டு ஜூலை 25 முதல் 2012 ம் ஆண்டு ஜூலை 25 வரை பதவியில் இருந்தார்.

சாதனை :- இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் என்னும் பெருமையை இவரே அடைகிறார்.


பிரணாப் முகர்ஜி.

Pranab Mukherjee.

பெயர் :- பிரணாப் குமார் முகர்ஜி - Pranab Mukherjee.

Pranab Mukherjee

பதவி :- குடியரசு தலைவர்.

பிறப்பு :- 1935 ம் ஆண்டு டிசம்பர் 11 தேதி மேற்கு வங்காளத்தின் பிர்ஹம் மாவட்டத்திலுள்ள மிரதி என்ற கிராமத்தில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். மத்திய அரசின் நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் 13 வது குடியரசு தலைவர். 2012 ம் ஆண்டு ஜூலை 25 முதல் 2017 ம் ஆண்டு ஜூலை 25 வரை குடியரசு தலைவராக பதவி வகித்தார்.

சாதனை :- இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான "பத்ம விபூஷன்" விருதினை பெற்றுள்ளார். 2019 ம் ஆண்டிற்கான "பாரத ரத்னா" விருதினையும் பெற்றுள்ளார். மேலும் மிக சிறந்த எழுத்தாளர். 12 ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு :- 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று தன்னுடைய 84 வது வயதில் டெல்லி இராணுவ மருத்துவமனையில் மரணத்தை தழுவினார்.


ராம் நாத் கோவிந்த்.

Ram Nath Kovind.

பெயர் :- ராம் நாத் கோவிந்த் - Ram Nath Kovind.

Ram Nath Kovind

பதவி :- குடியரசு தலைவர்.

பிறப்பு :- 1945 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தேஹாத் மாவட்டத்தில் உள்ள பாரௌன்க் என்னும் கிராமத்தில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும் செயலாற்றிவந்தார். பீகார் மாநிலத்தின் ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார்.

பதவிக்காலம் :- இவர் இந்தியாவின் 14 வது குடியரசு தலைவராவார். 2017 ம் ஆண்டு ஜூலை 25 முதல் 2022 ம் ஆண்டு ஜூலை 25 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்தார்.

சாதனை :- ஆளுனராக பணியாற்றிய காலகட்டத்தில் பல்கலைகழகங்களில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க நீதித்துறை ஆணையத்தை உருவாக்கினார். இது அவருடைய சாதனையாக பார்க்கப்படுகிறது.

திரௌபதி முர்மு.

Draupadi Murmu.

பெயர் :- திரௌபதி முர்மு - Draupadi Murmu.

Draupadi Murmu

பதவி :- குடியரசு தலைவர்.

பிறப்பு :- 1958 ம் ஆண்டு ஜூன் 20 ம் தேதி ஒடிசா(Odisha) விலுள்ள மயூர்பஞ்ச் (Mayurbhanj) மாவட்டத்திலுள்ள உபர்பேடா (Uparbeda) என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.

முன்பு பணிபுரிந்த துறை :- ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னராக பணியாற்றியுள்ளார்.

பதவிக்காலம் :- இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக 2022 ம் ஆண்டு ஜூலை 21 ல் ஜனாதிபதியாக பதவியேற்ற இவர் தற்போது வரையில் தனக்கான பணியை செவ்வனே நிறைவேற்றி வருகிறார்.

சாதனை :- ஒடிசா சட்டமன்றத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான "நீலகந்தா" (Nilkantha Award) விருதை பெற்றுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டாவது பெண் என்னும் பெருமையை பெறுகிறார்.

🔔🔔🔔🔔🔔🔔🔔

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. நம்ம கலாம் அவர்களைப் பார்த்ததும் பரவசம்.

  தற்காலிக ஜனாதிபதி பதவி - விவி கிரி, பசப்ப தானப்ப பற்றியும் நீதியரசர் இதயப்துல்லா பற்றிய தகவல்களும் தெரிந்துகொண்டோம்

  கலாமிற்குப் பிறகு எனக்குத் தற்போதைய ஜனாதிபதி அவர்களது உரை மிகவும் பிடித்திருக்கிறது. சிறைச்சாலைகள் கூடுதல் கட்ட வேண்டும் கைதிகள் நெருக்கடியாக இருக்கு என்று எழுப்பிய குரலுக்கு அவர் மிக அழகான பதில் கொடுத்துள்ளார். எதற்குக் கூடுதலாகக் கட்ட வேண்டும்? கைதிகளைக் குறைப்பதை அல்லவா சிந்திக்க வேண்டும்? சின்ன சின்ன குற்றங்கள் புரிந்தவர்கள் எல்லாம் சிறைச்சாலைக்குள், கொலை செய்தவர்கள் வெளியில் சுற்றிக்கொடிருக்கிறார்கள் என்று அதையும் சொல்லி இருக்கிறார். கூடவே, அவர் கிராமத்து மக்கள் ...சிறிய கிராமம் ஆனால் அந்தமக்கள் வழக்குரைஞரையும், ஆசிரியரையும், மருத்துவரையும் தெய்வமாகக் கொண்டாடி மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அழகான கருத்து இதன் பின்னில் உள்ளது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்... அப்துல்கலாமை பார்த்தாலே அனைவரையும் பரவசம் தொற்றிக்கொள்ளும்... தற்போதைய ஜனாதிபதி முர்முவின் கருத்துக்களை தெளிவாக தெரிய செய்துள்ளீர்கள்... நன்றி சகோதரி!

   நீக்கு
 2. சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.