"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
National Independence Days - Armenia- Part 4.

National Independence Days - Armenia- Part 4.

நாடுகளின் சுதந்திர தினங்கள்.

Suthanthira Thinangal.

[Part - 4].

     நாம் தொடர்ந்து சில பதிவுகளாக ஒவ்வொரு நாடுகளின் சுதந்திர தினங்களையும், சுதந்திரம் பெற்ற  தருணங்களையும் பார்த்துவருகின்றோம்...

அண்டை நாடுகளை அடிமைகொள்ளும் மனோநிலை இன்று நேற்றல்ல மன்னராட்சி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டன.

எதிரி நாடுகளை கையகப்படுத்தி தன்னுடைய நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துவதை தன் வீரத்திற்கு கிடைக்கும் அங்கீகாரமாகவே அன்றைக்கு அரசாண்ட அரசர்கள் பெருமையாக நினைத்து வந்தனர்.

இந்த நாடுபிடிக்கும் ஆசையால் மனித இனம் அடைந்த வேதனைகள் ஏராளம் ஏராளம்.

ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாடுகளிடையே உருவான காலனி ஆதிக்கத்தின் கொடுமைகள் நீண்டவை, நெடியவை.

இந்த ஆதிக்க கொடுமைகளிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணமே மக்களைப் போராட செய்து காலனி ஆட்சிக்கு சாவுமணி அடித்து சுதந்திரம் பெற காரணமாக அமைந்தது.

National Independence Days

அவ்வாறு மக்களால் உருவாக்கப்பட்ட புரட்சியின்மூலம் சுதந்திரம் பெற்ற நாடுகளின் சுதந்திர தினங்களை நாம் இந்த தொடர் பதிவின் மூலமாக தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இந்த தொடர் பதிவில் இது நான்காவது பகுதி [Part 4].

வாருங்கள் இந்த பதிவின்மூலம் மேலும் சில நாடுகளின் சுதந்திர தருணங்களை அறிந்துகொள்ளலாம்.

இதன் முதல் பகுதியை [Part 1] படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்கள்...

♦♦ National Independence Days - Angola - Part 1 ♦♦

நாடுகளின் அடிமை வாழ்வும்

சுதந்திர தருணங்களும்.

பகுதி - 4.

ஆர்மீனியா.

Armenia.

நாட்டின் பெயர் - ஆர்மீனியா - Armenia.

தலைநகரம் - யெரெவான் - Yerevan.

ஆட்சிமொழி - ஆர்மீனியம் - Armenian.

Armenia_Map


அமைவிடம் - ரஷ்யாவின் தெற்கு "காக்கசஸ்" (Caucasus Mountains) மலைப்பகுதியில் தென்மேற்கு ஆசியாவிற்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு.

இதன் நில எல்லைப் பகுதிகளாக மேற்கே "துருக்கி"யும் (Turkey), கிழக்கே "நகர்னோ-கரபாக் குடியரசு" (Nagorno-Karabakh Republic) மற்றும் "அசர்பைஜான்" (Azerbaijan) தேசமும், வடக்கே "ஜார்ஜியா" (Georgia) மற்றும் தெற்கே "ஈரான்" (Iran) மற்றும் அசர்பைஜானின் "நாக்சிவன் சுயாட்சி குடியரசு" முதலான நாடுகளும் அமைந்துள்ளன.

பரப்பளவு - 29,800 சதுர கிலோமீட்டர்.

தேசிய கொடி.

Flag of Armenia


தேசிய சின்னம்.

Coat of arms of Armenia


அடிமைபடுத்தப்பட்ட தருணம் - பண்டைய ஆர்மீனியாவானது பல்வேறு மன்னர்களின் படையெடுப்பால் பல்வேறு காலகட்டங்களில் அடிமைகொள்ளப்பட்டன.

16 ம் நூற்றாண்டில் ஆர்மீனியாவானது துருக்கியின் ஒட்டோமான் பேரரசாலும் (Ottoman Empire) ஈரானின் சாஃபாவிட் வம்ச பேரரசாலும் துண்டாடப்பட்டு பிரித்தாளப்பட்டன. மேற்கு மற்றும் கிழக்கு ஆர்மீனியா சாஃபாவிட் பேரரசின்கீழ் ஆளப்பட்டு வந்தன. அதன்பின் நடந்த போரில் ஒட்டோமான் பேரரசால் மேற்கு ஆர்மீனியா கையகப்படுத்தப்பட்டது.

ஒட்டோமான் ஆட்சியில் ஆர்மீனிய மக்களுக்கு அதிக அளவு சுதந்திரம் மற்றும் சுயாட்சி வழங்கப்பட்டாலும் மதரீதியான படுகொலைகள் சுல்தான் அப்துல் ஹமீத் என்பவரால் அதிக அளவில் நிகழ்த்தப்பட்டன. இதில் 80,000 முதல் 3,00,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இப்படியொரு இனப்படுகொலை நடக்கவே இல்லையென துருக்கி தொடர்ந்து மறுத்துவருகிறது. என்றாலும், ஆர்மீனிய மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை இனப்படுகொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

1651 தொடங்கி 1828 ற்கு இடையான காலகட்டங்களில் ரஷ்ய மற்றும் பாரசீகம் (ஈரான்) இடையே அடிக்கடி மோதல்கள் இருந்துவந்தன. முடிவில் ஈரான் தன்னுடைய நிலப்பரப்பின் பெரும்பகுதியை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்கவேண்டி வந்தது.

நான்காம் கட்டமாக நடந்த போரில் கிழக்கு மற்றும் வடக்கு ஆர்மீனியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

ஐந்தாம் கட்டமாக நடந்த போரில் ஆர்மீனியா முழுவதும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.

சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1980 கோர்பசேவ் (Mikhail Gorbachev) ஆட்சிக்காலத்தில் சோவியத் யூனியனால் ஆர்மீனியாவில் கட்டப்பட்ட தொழிற்சாலைகளால் ஏற்பட்ட சுற்றுசூழல் மாசுபாட்டை எதிர்த்து ஆர்மீனிய மக்கள் குரல்கொடுக்க ஆரம்பித்தனர். தங்கள் நட்டிற்கு சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க கோரிக்கை வைத்தனர். இதுமட்டுமல்லாது இன்னும் பல கோரிக்கைகளும் ஆர்மீனியர்களால் கோர்பசேவ் முன் வைக்கப்பட்டன.

கோரபசேவ் ஆர்மீனியர்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முன்வராததால் அது ஆர்மீனியர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கியது மட்டுமல்லாது சுதந்திரத்தின் அவசியத்தையும் உணர்த்தியது.

ஆர்மீனியர்கள் ஒன்றினைந்து முதல் ஆர்மீனிய குடியரசை நிறுவ முற்பட்டபோது ஆர்மீனிய போராளிகளுக்கும் ரஷ்ய துருப்புகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வலுபெற்றது. இதில் 30 க்கும் மேற்பட்ட ஆர்மீனியர்கள் உயிரிழந்தனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்மீனியா 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் 23 ம் தேதி சுதந்திர அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், 1991 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் வருடம்தான் அது சோவியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்றாலும், 1991 ம் வருடம் டிசம்பர் 25 ம் தேதிதான் சுதந்திரம் உறுதியாக்கப்பட்டது.

1991 ம் வருடம் டிசம்பர் 25 ம் தேதி சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து ஆர்மீனியா முழுமையாக விடுபட்டு சுதந்திர நாடாக உயிர்பெற்றது.

தற்போதைய ஆட்சிமுறை - நாடாளுமன்ற ஒற்றையாட்சி குடியரசு. (ஜனாதிபதி ஆட்சிமுறை).

✒✒

இத்தாலி.

Italy.

நாட்டின் பெயர் - இத்தாலி - Italy.

தலைநகரம் - ரோம் - Rom.

ஆட்சிமொழி - இத்தாலிய மொழி - Italian.

italy-on-world-map

அமைவிடம் - இத்தாலியானது தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது.

இதன் ஒரு பகுதி நிலத்தாலும் பிற மூன்று பகுதிகள் கடலாலும் சூழப்பட்ட தீபகற்ப பகுதி மட்டுமல்லாது மத்திய தரைகடல் பகுதிகளான "சிசிலி" மற்றும் "சார்தீனியா" என்ற தீவுப்பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.

இதன் தீபகற்ப நிலப்பகுதியான வடக்கு பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் தங்களுடைய எல்லைப் பகுதிகளைக் கொண்டுள்ளன.

"சான் மேரினோ" மற்றும் "வத்திகான் நகர்" என்ற இரு தனி நாடுகள் இத்தாலியின் நிலப்பகுதிக்குள்ளேயே அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

பரப்பளவு - 301,318 சதுர கிலோமீட்டர்.

தேசிய கொடி.

Flag_of_Italy


தேசிய சின்னம்.

Emblem_of_Italy


அடிமைபடுத்தப்பட்ட தருணம் - பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தாலி என்றொரு நாடு இருக்கவில்லை. இக்காலக்கட்டத்தில் இத்தாலி பல சிற்றரசுகளாகச் சிதறிக்கிடந்தன. அவ்வரசுகளிடையே அதிகாரப்போட்டி தலைவிரித்தாடின. இதனை பயன்படுத்திக்கொண்ட ஐரோப்பாவின் பலம்பொருந்திய அரசுகள் தங்களுடைய சூழ்ச்சியால் பல சிற்றரசுகளை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன.

உதாரணமாக,... நேப்பிள்ஸ், சிசிலி என்பன ஸ்பானியாவின் கட்டுப்பாட்டிலும், மொடினா, பிர்மா, வெனிஸ், டஸ்கனி முதலான நகரங்கள் ஆஸ்திரேலியாவின் கீழும் இருந்தன. மத்திய இத்தாலியோ பார்ப்பரசரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது.

இவ்வாறு பல்வேறு பிரதேசமாக வெளிநாட்டினரின் ஆதிக்கத்தின் கீழ் பிளவுபட்டுக்கிடந்த நிலப்பரப்பு மீது கி.பி 1797 ம் ஆண்டு முதலாம் நெப்போலியன் என்னும் "நெப்போலியன் பொனபாட்" போர்தொடுத்தார். இவர் பிரான்ஸ் நாட்டின் படைத்தலைவராகவும், அரசியல் தலைவராகவும் விளங்கியவர்.

இவர் இத்தாலியின் வட பகுதியான லொம்பாடி, நேப்பிள்ஸ், ஜினோவா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றினார். கி.பி 1807 ம் ஆண்டு பார்ப்பரசரின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தாலியப் பிரதேசத்தை வென்று ஏற்கனவே தன் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசத்தையும் ஒன்றிணைத்து "வட இத்தாலி" என்ற அரசை நிறுவினார்.

ஆனால் அடுத்தடுத்த போர்களில் ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணமாக 1815 ல் வியன்னா மாநாட்டின் வாயிலாக நெப்போலியன் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் கி.பி. 1798 ற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களுக்கே திருப்பி கொடுக்க முன்வந்தார். இதன் காரணமாக மத்திய இத்தாலி பாப்பரசருக்கும் ஏனைய பிரதேசங்கள் அந்தந்த அரச வம்சத்தினருக்கும் கிடைத்தன.

அதன்பின் ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இத்தாலி பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன.

வியன்னா மாநாட்டிற்கு பிற்பட்ட ஆட்சிகள் அனைத்தும் கொடுங்கோல் ஆட்சிகளாக இத்தாலியில் விஸ்வரூபம் எடுத்தன. இதனால் பல இன்னல்களுக்கு ஆளான இத்தாலிய மக்கள் மனதில் முதல் முறையாக தேசிய உணர்வு பீறிட்டு எழுந்தது. சிதறுண்டு கிடக்கும் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரே பிரதேசமாக கட்டமைக்க முடிவு செய்தனர்.

இதன் காரணமாக "ஜோசப் மசினி" என்பவரால் "கபோனாரி" என்ற இரகசிய விடுதலை இயக்கம் மக்கள் ஆதரவுடன் உருவாக்கப்பட்டன. 1825 ல் ஆஸ்திரிய அரசு இவ்வியக்கத்தை அடக்குமுறையின் வாயிலாக தடை செய்து மசினியை பிரான்சுக்கு நாடு கடத்தியது. இதனால் மக்கள் போராட்டத்தில் தளர்வு ஏற்பட்டாலும் இது நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1831 ல் மீண்டும் மசினியின் தலைமையில் "இளம் இத்தாலிய இயக்கம்" என்னும் இயக்கம் உருவானது.

இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க பல வெளிநாடுகளில் கொரில்லா போர்களை வெற்றிகரமாக நடத்தியதில் நல்ல அனுபவமிக்க தலைவரான குஸிப் கரிபால்டி (Giuseppe Garibaldi) என்பவர் 1860 ம் ஆண்டு 1000 வீரர்களை வழிநடத்தி சென்று மெசினா நகரைத் தவிர பிற நகரங்களை கைப்பற்றினார். அதன்பின் படிப்படியாக நேப்பிள்ஸ் மற்றும் மெசினா நகரங்கள் இணைக்கப்பட்டன. அதன்பின் பிஸ்மார்க் உடன்படிக்கையின்படி இத்தாலியுடன் வெனிஸ் நகரம் இணைக்கப்பட்டது.

அதன்பின் 1870 ல் "ரோம்" இத்தாலியுடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக சிற்றரசுகளாக பிளவுபட்டு அடிமைப்பட்டுக்கிடந்த பிரதேசங்கள் இணைக்கப்பட்டு இத்தாலி என்னும் ஒருங்கிணைந்த சுதந்திர தேசம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டது.

சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - ஒரே நாளில் இத்தாலிக்கு சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. சிற்றரசுகளாக பிளவுபட்டு அடிமைப்பட்டுக்கிடந்த பிரதேசங்கள் பலவும் படிப்படியாக ஒன்றிணைக்கப்பட்ட பின்பே கடைசியாக 1870 ல் "ரோம்" இத்தாலியுடன் இணைக்கப்பட்டது.

அதன்பின் பல்வேறு சீரமைப்புகளுக்குப் பின்னால் இத்தாலியக் குடியரசு நாடானது 1946 ம் ஆண்டு ஜூன் 2 ம் தேதி உருவானது.

தற்போதைய ஆட்சிமுறை - மக்களாட்சி குடியரசு.

          "நாடுகளின் சுதந்திர தினங்கள்" (Part 4) என்னும் நான்காவது பகுதியான இப்பதிவில் ஆர்மீனியா - Armenia மற்றும் இத்தாலி - Italy ஆகிய நாடுகளின் அடிமைப்பட்ட தருணங்களையும், அதன்பின் அடிமை வாழ்விலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்ற நிகழ்வுகளையும் மிக சுருக்கமாகப் பார்வையிட்டோம்...

இதன் தொடர் பதிவாகிய ஐந்தாவது பகுதியை பார்வையிட அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை தட்டுங்க.

★★National Independence Days - India - Part 5★★

❤❤❤❤

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

 1. தகவல்கள் வழக்கம் போல சிறப்பு நண்பரே

  பதிலளிநீக்கு
 2. ஆர்மீனியான்னு பார்த்ததுமே அந்நாட்டு எம்ப்ராய்டரிதான் நினைவுக்கு வந்தது. ஆர்மீனியன் எம்ப்ராய்டரி என்றே உண்டு.

  ஆர்மீனியா மக்கள் சூப்பர் இல்ல? அதுவும் தொழிற்சாலை மாசு விடுதலை!!! ரஷ்யாவும் நிறைய ஆதிக்கம் செலுத்தியிருக்கு...யூனியன் சிதறியதில் நிறைய காரணங்கள் இருக்குன்னு தெரியுது.

  இப்பவும் பாருங்க போர்....

  இத்தாலி பற்றிய தகவல்களும் ரொம்ப புதுசு...ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகை ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டிருக்கின்றன. ஆனா அப்படியும் எந்த நாட்டுக்கும் விடியல் இல்லாதது போல இருக்குன்னும் தோன்றும்.

  நல்ல தகவல்கள் தொகுப்பு, சிவா. அறிவுபூர்வமா நிறைய எழுதறீங்க!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்மீனியன் எம்ப்ராய்டரி பற்றிய தகவல் எனக்கு புதியது. தங்கள் வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி!... மேலும் தங்களுடைய விரிவான கருத்துரைகளுக்கு நன்றி சகோதரி...

   நீக்கு
 3. இதுக்கு முந்தின ரெண்டு விட்டுட்டேன் போல பார்க்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.