"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.

அர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.

Aardha bhujangasana.

யோகாசனங்களில் அனைத்து வயதினரும் எளிதாக கற்றுக்கொள்ள முடியாத, பயிற்சி செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ள ஆசனங்கள் பல இருக்கின்றன. பலருடைய உடல் கடினமான ஆசனங்களை செய்வதற்கு வளைந்து கொடுப்பதில்லை.


அர்த்த புஜங்காசனம்.

ஆனால், அதே வேளையில் அனைவராலும், அனைத்து வயதினராலும் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களும் நிறைய இருக்கின்றன.

எனவே வயதானவர்கள் மற்றும் உடல் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை குறைவாக இருப்பவர்கள் கடின ஆசனங்களை பயில முயற்சி செய்து பல உடல் பிரச்சனைகளை வருவித்துக் கொள்வதை விட மிக எளிதாக இருக்கும் யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து வருவதே சிறப்பு.

நாம் இப்போது குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவராலும் எளிதில் பயிற்சி செய்யும் விதமாக அமைந்துள்ள எளிய ஆசனம் ஒன்றைப் பற்றி பார்ப்போம்.

''அர்த்த புஜங்காசனம்'' என்னும் இந்த ஆசனமானது சுவாசக்கோளாறு உட்பட மார்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சீர் செய்வதோடு மலச்சிக்கலையும் நிவர்த்தி செய்யும் வல்லமை கொண்டது.

"புஜம்" என்றால் தோள்பட்டையிலிருந்து முழங்கைவரையுள்ள பகுதிகளைக் குறிக்கும் சொல். மேற்குறிப்பிட்ட உறுப்புகளை இந்த ஆசனம் பலப்படுத்துவதால் இது "அர்த்த புஜங்காசனம்" என பெயர் பெறுகிறது.

மேலும், வடமொழியில் "புஜங்கம்" என்பது ஊர்ந்து செல்லும் பாம்பைக் குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பயிற்சியின் போது நம் கழுத்து, தலை முதலியன பார்ப்பதற்கு நல்லபாம்பு படம் எடுப்பதுபோல தோற்றமளிப்பதால் இதற்கு "அர்த்த புஜங்காசனம்" என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

"அர்த்த" என்றால் பாதி என்று அர்த்தம். "அர்த்த புஜங்காசனம்" என்றால் "பாதி புஜங்காசனம்" என்று பொருள். அப்படியென்றால் "முழு" புஜங்காசனமும் உள்ளதா என்றால்.. ஆம், உள்ளது. அதற்கு "புஜங்காசனம்" என்று பெயர். இதனை பயிற்சி செய்வது கொஞ்சம் கடினமானது.

எனவே, முதலில் இந்த எளிதான அர்த்தபுஜங்காசனத்தை பயிற்சிசெய்து தோள்பட்டை மற்றும் கைகள் பலம்பெற்றபின் "புஜங்காசனம்" பயிற்சியில் ஈடுபடலாம். இந்த புஜங்காசனம் பயிற்சியைப்பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

>> புஜங்காசனம் - சர்ப்பாசனம் - Bhujangasana or Sarpasana <<

சரி, இனி நாம் "அர்த்த புஜங்காசனம்" பயிற்சியைப்பற்றி பார்ப்போம்.

இதை பயிற்சி செய்வது  மிக மிக எளிது. இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை இப்போது பார்ப்போம்.

ardha bhujangasana female

செய்முறை.

முதலில் ஒரு விரிப்பில் இரு கால்களையும் ஒன்று சேர்ந்தாற்போல நேராக நீட்டி குப்புற படுக்கவும். இருகைகளையும் தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டமாக வைக்கவும்.

பின் இரு கைகளின் உள்ளங்கைகளையும் தலையின் அருகில் இரு பக்கங்களிலும் வைத்து கழுத்தை நிமிர்த்தி தலையை மெதுவாக மேலே தூக்கவும். இடுப்பிலிருந்து தலைவரை உடல் மேலெழும்பியபடி இருக்கவேண்டும்.

ardha bhujangasanam

இரு கைகளும் '' ட''  வடிவத்தில் இருக்க வேண்டும். இரு கால்களின் மேல் பாதங்களும் தரையில் படர்ந்தபடி இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் 15 முதல் 20 வினாடிகள் இருந்து பழைய நிலைக்கு திரும்பவும். இந்த ஆசனத்தை 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யவும்.

பயன்கள்.

இது முதுகெலும்பையும், தோள்பட்டையையும் வலுவாக்கும். மார்பு மற்றும் வயிறு பலம் பெறும். சுவாசக்கோளாறுகளை சரி செய்யும். மலச்சிக்கல் விலகும்.

மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். சிறிய இடையை விரும்பும் பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது.

இதனுடன் எளிமையான வேறு சில ஆசனங்களையும் சேர்த்து பயிற்சி செய்து வருதல் வேண்டும்.

நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையை விரும்புபவர்கள் தினந்தோறும் காலை அல்லது மாலை அல்லது இருவேளைகளும் சிலவகையான ஆசனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம்.

ஒவ்வொரு தடவையும் ஆசனப் பயிற்சியை நிறைவு செய்யும்போது கடைசி ஆசனமாக ''சவாசனம்''  கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

சவாசனம் செய்வது எப்படி என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

''சவாசனம்'' பற்றி அறிந்து கொள்ள >> இங்கு கிளிக்குங்க << .

யோகாசனத்தின் அடிப்படை மற்றும் ''சவாசனம்'' பற்றி அறிந்து கொள்ள >> இங்கு கிளிக்குங்க <<.

💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்