"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அறிந்து கொள்ளுங்கள் - general knowledge.

அறிந்து கொள்ளுங்கள் - general knowledge.

General knowledge.

உலகில் வாழும் பிற அனைத்து வகையான உயிரினங்களோடும் ஒப்பிடும்போது மனிதன் மட்டுமே இவ்வுலகிலுள்ள அனைத்து இயற்கை வளங்களையும் அனுபவிக்கும் தன்மையுடையவனாக இருக்கின்றான்.

அவ்வாறு பயன்படுத்தும் இயற்கை வளங்களில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்வதென்றால் பலவித தாதுப்பொருட்களையும், உலோகங்களையும் குறிப்பிடலாம். எனவே இவைகளைப்பற்றிய கூடுதல் விஷயங்களை அறிந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்... எனவே வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

அறிந்து கொள்ளுங்கள்.

 • உலகில் அதிகமாக தங்கம் வெட்டி எடுக்கும் நாடு - தென் ஆப்பிரிக்கா.

 • சலவை சோடாவின் வேதி பெயர் - சோடியம் கார்பனேட்.

 • மிகவும் லேசான அடர்த்தி குறைந்த திண்ம நிலை உலோகத் தனிமம் - லித்தியம்.

 • தங்கத்தை கரைக்கும் திறன் கொண்ட அமிலம் - இராஜ திராவகம். ( இது 1 பங்கு நைட்ரிக் அமிலமும், 3 பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் கலந்த கலவை ).
 • வெள்ளியின் உருகு நிலை - 961 டிகிரி செல்ஸியஸ்.

 • உலோகம் போன்ற பளபளப்பைக் கொண்ட மின்சாரம் கடத்தும் அலோகம் - கிராபைட்.

 • "சிலி சால்ட் பீட்டர்" எனப்படுவது - சோடியம் நைட்ரேட் .

 • கந்தகத்தின் உருகுநிலை வெப்பம் எவ்வளவு - 113 டிகிரி செல்சியஸ்.

 • நம் உடலில் மெக்னீசிய சத்துவின் பங்கு என்ன - எலும்புகள், பற்கள் உறுதிக்கு.

 • தங்கத்தை விட விலை அதிகமுள்ள, அதே வேளையில் தங்கத்தை விட 30 மடங்கு அரிதாக கிடைக்கும் உலோகம் - பிளாட்டினம்.

 • பிளாட்டினம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது - தென் ஆப்பிரிக்கா.

 • உலோகங்கள் ஒளியை தன் வழியாக செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் தங்கம் மிக மெல்லிய தகடாக இருக்கும் போது எந்த ஒளியை தன் வழியாக ஊடுருவ அனுமதிக்கும் - பச்சை நிறம்.

 • செம்பு சல்பேட் மற்றும் கால்சியம் ஆக்சைடு கலந்த கலவை - போர்டோ கலவை. ( இது பூச்சி கொல்லியாகப் பயன்படுகிறது).

 • டைட்டேனியம் (Titanium ) என்னும் உலோகத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு - ஆஸ்திரேலியா.

 • வெண்துத்தம் என அழைக்கப்படுவது - துத்தநாக சல்பேட். 

 • கடல்வாழ் தாவரங்களின் சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்.

 • அச்சு மை, ரப்பர் ஸ்டாம்ப் மை தயாரிக்க பயன்படுவது - கிளிசரால்.

 • டெட்டாலில் கலந்துள்ள வேதிப்பொருள் - கார்பாலிக் அமிலம்.

 • கையில் வைத்தாலே உருகும் உலோகம் - காலியம் மற்றும் சீசியம்.

Gallium_cesium

 • கடல் நீரிலிருந்து கிடைக்கும் உலோகம் - மெக்னீசியம்.

 • நாணயங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகம் - நிக்கல்.

 • தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கும் தனிமம் - தோரியம்.[Thorium].

 • ஜிப்சம் என்பது என்ன - கால்சியம் சல்பேட்.

 • பாரீஸ் சாந்து என அழைக்கப்படுவது - தூள் நிலை கால்சியம் சல்பேட்.

 • அதிக அடர்த்தியான, கனமான உலோகம் - ஓஸ்மியம்.

 • யூரியா உரம் எதிலிருந்து பெறப்படுகிறது - கால்சியம் சயனைட்.

 • சிவப்புக்கல் (Ruby) -ன் வேதியியல் பெயர் - அலுமினியம் ஆக்ஸைடு.

 • சுட்ட சுண்ணாம்பின் வேதி பெயர் - கால்சியம் ஆக்ஸைடு.

 • சிலி வெடியுப்பு என்பது - சோடியம் நைட்ரேட்.

 • எப்சம் உப்பின் ரசாயன பெயர் - மெக்னீசியம் சல்பேட்.

 • செயற்கை மழையை உருவாக்க பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருள் - சில்வர் அயோடைடு.

 • கந்தக அமிலத்தின் அடர்த்தி எண் - 1.84.

 • நவச்சாரத்தின் இரசாயனப் பெயர் - அமோனியம் குளோரைடு.

 • உயர் கொதிநிலை [6000 டிகிரி செல்ஸியஸ்]  கொண்ட தனிமம் - டாண்டலம்.

general knowledge_Thorium

 • அறையின் வெப்ப நிலையில் நீர்மநிலையில் இருக்கும் அலோகம் - புரோமின்.

 • திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம். (Mercury).

 • பாதரசத்தின் கொதிநிலை - 357 ⁰ C.

 • கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து.

 • அலுமினியத்திற்கு அடுத்தபடியாக அதிகமாக கிடைக்கும் உலோகம் - இரும்பு.

 • உலகில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட உலோகம் - தாமிரம். (Copper).

 • ஆகாய விமானங்களின் பாகங்கள் தயாரிக்க அதிகம் உபயோகப்படும் பொருள் - அலுமினிய உலோக கலவை.

 • பூமியில் அதிக அளவில் கிடைக்கும் உலோகம் - அலுமினியம். (aluminium).

 • அலுமினியம் எந்த தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது - பாக்ஸைட்.

 • அர்ஜென்டைன் தாதுவிலிருந்து அதிகமாக கிடைக்கும் உலோகம் - வெள்ளி.

மேலும் இதைப்போல் இன்னும் பல பொது அறிவு விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டுமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.


💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.