"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தெரிந்து கொள்ளுங்கள் - General knowledge.

தெரிந்து கொள்ளுங்கள் - General knowledge.

General knowledge.

நம்மைச்சுற்றி வாழும் விலங்குகளை பற்றியும் பறவைகளை பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்கும் விஷயங்கள் கொஞ்சம்தான். அதிலும் நாம் முற்றிலும் அறியாத பல விலங்குகள் மற்றும் பறவை இனங்கள்  வெளியுலகிற்கு தெரியாமல் அடர்ந்த காடுகளில் இன்னமும் பல  வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இது இப்படியிருக்க நாம் அன்றாடம் பார்த்துவரும் பறவை மற்றும் விலங்குகளை பற்றியாவது முழுமையாக தெரிந்து வைத்துள்ளோமா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

தெரிந்து கொள்ளுங்கள்.

 • பெங்குவின் இனத்தில் மிகப் பெரியது - எம்பரர் பெங்குவின்.

 • பாம்பினுடைய விஷத்தின் [Snake Venom] நிறம் - '' இளம் மஞ்சள்''.

 • பிளேக் நோயை பரப்பும் உயிரினம் - எலி.

 • நீந்துவதை நிறுத்தினால் இறந்துவிடும் ஒரே மீனினம் - சுறா.

 • மிகவும் உயரமாகப் பறக்கும் பறவை - ஆல்ப்ஸ் மலையில் வாழும் செங்காக்கை.
 • மாடுகளுக்கு எத்தனை இரைப்பைகள் உள்ளன தெரியுமா? - நான்கு.

 • நீரில் நின்று கொண்டே தூங்கும் மீனின் பெயர் - கடல் குதிரை.

 • கடல் நண்டின் இரத்தம் என்ன நிறத்தில் இருக்கும் தெரியுமா? - நீலம்.

 • தனியாக மூளை என்ற ஒரு அமைப்பு இல்லாத மீன் - நட்சத்திரமீன்.

 • சிவப்பு நிறத்தில் எண்ணை போன்ற கொழுப்பு திரவத்தை வியர்வையாக வெளியேற்றும் விலங்கு - நீர்யானை.

 • ஆண்பறவைகள் அடைகாக்கும் பறவையினம் - நெருப்புக்கோழி.

 • காட்டு ராஜாவான சிங்கத்தின் ஆயுள் - 15 ஆண்டுகள்.

 • சத்தமே எழுப்பாத விலங்கு - ஒட்டகச்சிவிங்கி.

 • உலகிலேயே மிக வேகமாக ஓடும் விலங்கு - சிறுத்தை.
 • நீண்ட காலம் உயிர்வாழும் பிராணி - ஆமை. ஆமைகள் சராசரியாக 150 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இதன் இதயம் பரபரப்பில்லாமல் நிதானமாக இயங்குவதே இதற்கு காரணம் என கண்டறிந்துள்ளார்கள். எனவே பதற்றமில்லாத வாழ்க்கை நீடித்த ஆயுளைத் தரும்.
 • எல்லா விலங்கினங்களும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அதன் உடல் வளர்ச்சி தடைபடும். ஆனால் இறப்புவரை வளர்ச்சி அடையும் இயல்பு கொண்டது ''முதலை''  மற்றும்  ''மீன்'' ஆகும். அதுசரி மீன் செத்தா கருவாடு தெரியும், ஆனால் அந்த கருவாடுக்கும் ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? எங்கே என்று கேட்கிறீர்களா?...ஸ்வீடன் நாட்டில்தான்.

 • இடப்பெயர்ச்சி பண்பினால் விலங்கு என்றும், ஒளிச்சேர்க்கை பண்பினால் தாவரம் என்றும் கருதப்படும் உயிரினம் - யூக்ளினா.

 • தன் உணவை தானே தயாரிக்கும் உயிரினம் - யூக்ளினா.

Euglena

 • பாம்பு முட்டையானது நாட்கள் செல்லச்செல்ல அளவில் சிறிது பெரிதாகும் தன்மையுடையது. ஏனெனில் பாம்பு முட்டையானது கோழி முட்டைபோல் திடமான ஓடுகளால் ஆனது அல்ல. அது ரப்பர் போல் நெகிழும் தன்மையுடையது. எனவே அது கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை சிறிதளவு பெரிதுபடுத்திக் கொள்கின்றன.

 • முட்டையிடும் பாலூட்டி விலங்குகள் - எறும்புத்தின்னி, பிளாட்டிபஸ் மற்றும் டக்பில்ட்.

 • இனிப்பு சுவையை அறியமுடியாத விலங்கு - பூனை.
 • இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மான் இனம் - திகாம்பர்.

 • நெருப்புக்கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவைவிட பெரியது.

 • எலிகள் மூலம் மனிதனுக்கு பரவும் நோய் -  ''பிளேக்''.

 • பூனையின் பார்வைத் திறன் மனிதனின் பார்வைத் திறனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

 • பச்சோந்தியின் நாக்கு அதன் உடல் அளவை விட இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.

 • ஒரே தாவலில் 13 மீட்டர் வரை தாண்டும் விலங்கு - கங்காரு.

 • அதிக நாட்கள் நீரின்றி வாழும் உயிரினம் - கங்காரு எலி.

 • மாமிசம் சாப்பிடாத கழுகு இனம் - பனங்கொட்டைக் கழுகு.

 • முன்னால், பின்னால் பக்கவாட்டில் என நாலாபக்கமும் பறக்கும் திறன் வாய்ந்த பறவை - தேன்சிட்டு.

Purple Rumped Sunbird

 • குரங்குகள் என்றாலே நமக்கெல்லாம் குதூகலம்தான். காரணம் அவைகளின் குறும்பான சேட்டைகள். உலகில் மொத்தம் 25 வகையான குரங்கு இனங்கள் உள்ளனவாம். மனிதகுரங்குகள் 50 ஆண்டுகள் உயிர்வாழும்.

 • உலகின் மிக உயரமான விலங்கு - ஒட்டகச்சிவிங்கி. பிறக்கும் போதே கொம்புகளுடன் பிறக்கும் மிகச்சில விலங்குகளில் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்று.

 • மிகப்பெரிய பாலூட்டி - நீல திமிங்கலம்.

 • குட்டிப்போட்டு பாலூட்டும் சுறாமீன் - கார்சாரடான்.

 • நீந்த தெரியாத ஒரே விலங்கு - ''ஒட்டகம்''. பாக்டீரியன் ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்கள் உண்டு.

camel

 • வௌவால்கள் ஓசை எழுப்பி அதன் மூலமாகவே பொருள்களையும் பாதைகளையும் கண்டறிகின்றன என்பதனை முதன் முதலில் கண்டறிந்து கூறியவர் - லாசரோ ஸ்பலான்சானி .

 • நீர்யானையின் வியர்வை சிவப்பாக இருக்கக் காரணமான அணுக்கள் - ஹீமோக்ளோபின்.

 • கருப்பு நிற தந்தம் கொண்ட யானை இனம் எங்கு வாழ்கிறது - ஆப்பிரிக்கா.

 • யானை ஒன்றின் எடை எவ்வளவு தெரியுமா? 4,000 கிலோ. அதுசரி, நம்ம டைனோசரின் எடை எவ்வளவு தெரியுமோ ? 80,000 கிலோவாம். அடேங்கப்பா.

Dinosaur

குறிப்பு.

மன்னிக்கவும். டைனோசர் எங்கே, யாரால், எப்போது எடைபோட்டு பார்க்கப்பட்டது என்கின்ற முழுமையான விபரங்கள் எதுவும் இன்னமும் நமக்கு கிடைக்கவில்லை. அப்படி எடைபோட்டு பார்த்தவரைத்தான் "திருநெல்வேலி அருவா"யோடு இன்னமும் தீவிரமாக தேடிக்கொண்டே இருக்கின்றோம். சில்வண்டுக்கு பொறந்த பயபுள்ள கைல சிக்கமாட்டேங்குது.

💚💚💚💚💚💚💚

மேலும் இதைப்போல் இன்னும் பல பொது அறிவு விஷயங்களை தெரிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.


💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்