"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தெரிந்ததும், தெரியாததும் - general knowledge.

தெரிந்ததும், தெரியாததும் - general knowledge.

General knowledge.

நீங்கள் பல தகவல்களையும் உங்கள் விரல் நுனிகளில் சேகரித்து வைத்திருப்பவர் என்பது எங்களுக்கும் நன்கு தெரிந்ததே. சுருக்கமாக சொல்லப்போனால் உங்களை ஒரு நடமாடும் "பல்கலைக்கழகம்" என்றே சொல்லவேண்டும். 

என்றாலும், சில பொது அறிவு விஷயங்கள் என்று வரும் பட்சத்தில் பல்கலைக்கழகமும் சில நேரங்களில் பல்லிளித்துக்கொண்டு நிற்கும் அல்லவா. (நான் உங்களை சொல்லவில்லை). எனவே, சில விஷயங்களை ஆழமாக இல்லாவிட்டாலும் மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்பதில் தப்பில்லைதானே. வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

தெரிந்ததும், தெரியாததும்.

 • நைல் நதி தெரியும், அதன் நீளம் தெரியுமா?
6650 கிலோ மீட்டர்.  
 • ஹெலிகாப்டர் தெரியும், அதன் அதிகபட்ச வேகம் தெரியுமா?
மணிக்கு 400 கிலோமீட்டர்.
 • பாதரசம் தெரியும். பாதரசத்தின் உறைநிலை தெரியுமா?
39 டிகிரி செல்ஸியஸ்.
 • சினிமா தெரியும் . முதல் சினிமா படம் தயாரிக்கப்பட்ட ஆண்டு தெரியுமா?
கி.பி.1888 ம் ஆண்டு.
 • உழவனின் நண்பன் ''மண்புழு'' என்பது தெரியும், உழவனின் எதிரி யார் என்று தெரியுமா?
வெட்டுக்கிளி.
 • "காலரா" நோய் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அது வருவதற்கு காரணமான கிருமி எது என்பது தெரியுமா?
விப்ரோகாமா.
 • கரப்பான்பூச்சியை நீங்கள் அடிக்கடி பார்த்து இருக்கலாம். ஆனால் அதன் இரத்தத்தின் நிறம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
வெள்ளை.
 • மிளகாய் தெரியும். அதன் சுவை மிக அதிக அளவு காரமானது என்பதும் உங்களுக்கு தெரியும்.  ஆனால் அது காரமாக இருப்பதற்கு காரணமான பொருள் எதுவென்று தெரியுமா ?
காப்செய்சின்.
 • கண்ணாடி தெரியும், ஆனால் அதனை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் யார் என்பது தெரியுமா?
மெசபடோமியர்கள்.
 • பிரான்ஸ்-ல் உள்ள ஈபெல் கோபுரம் தெரியும். ஆனால் அதன் உயரம் தெரியுமா?
984 அடிகள்.
 • பிளாஸ்டிக் தெரியும். பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு தெரியுமா?
1868 ம் ஆண்டு.
 • கம்ப்யூட்டர் மவுஸ் தெரியும். அதை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?
டக்ளஸ் ஏஞ்சல்பார்ட்.
 •  ரூபாய் தெரியும்.அது  இந்தியாவில் எங்கு அச்சடிக்கப்படுகிறது தெரியுமா?
நாசிக்.
 • யானைக்கால் நோய் தெரியும். ஆனால் அதை பரப்பும் கொசுவின் பெயர் தெரியுமா? 
க்யூலெக்ஸ்.
 • மலேரியா நோய் தெரியும். ஆனால் அதை பரப்பும் கொசுவின் பெயர் தெரியுமா?
''அனோபிலிஸ்'' கொசு.

Anopheles
 • அந்தமான் தெரியும். அதில் மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன தெரியுமா?
104 தீவுகள்.
 • அலெச்சாண்டர் தெரியும். அவர் மரணமடையும்போது அவருடைய வயது என்ன தெரியுமா?
33.
 • சூயிங்கம் தெரியும், ஆனால் அது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
''சிக்கில்'' என்னும் மரப்பிசினிலிருந்து.
 • செவாலியே விருது தெரியும். அதை உருவாக்கியவர்  யார் தெரியுமா?
நெப்போலியன்.
 • நாளந்தா பல்கலைக்கழகம் தெரியும் அதை நிறுவியவர் யார் தெரியுமா?
குமார குப்தர்.
 • பூனை தெரியும். அதன் பார்வையின் திறன் தெரியுமா?
மனிதனின் பார்வையைவிட 8 மடங்கு கூர்மையானது.
 • நீல திமிங்கலம் தெரியும் . அதன் நீளம் தெரியுமா?
30 மீட்டர்.
 • "கிரிக்கெட்" விளையாட்டு பற்றி அறியாதவர்களே இருக்கமுடியாது எனலாம். ஆனால் அது எந்த நாட்டின் தேசிய விளையாட்டு என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆஸ்திரேலியா.
 • கூடைப்பந்தாட்ட விளையாட்டு உங்களுக்கு தெரிந்ததே. ஆனால் அந்த விளையாட்டை முதன்முதலில் உருவாக்கி நமக்கு தந்தவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா?
டாக்டர் ஜேம்ஸ் நாய்ஸ்மித்.
 • நோபல் பரிசு தெரியும்ஆனால் அதைப்பெற்ற முதல் பெண்மணி  யாரென்று தெரியுமா?
மேரி கியூரி.
 • கடல்நீரின் சுவை உவர்ப்பு என்பதும். அதற்கு காரணம் கடல்நீரில் கலந்துள்ள உப்பு சேர்மங்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் கடல்நீரில் எத்தனை சதவீதம் உப்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
35 சதவீதம்.
 • மிக நுண்ணிய உயிரினம் "வைரஸ்" என்பது நமக்கு தெரியும். ஆனால் அதைவிட பன்மடங்கு சிறிய தீங்கிழைக்கும் உயிரினம் எது என தெரியுமா?
ப்ரியான்.
 • ரோபோ என்னும் இயந்திர மனிதன் அனைவருக்கும் தெரியும். அதை முதன் முதலில் உருவாக்கியவர் யார் தெரியுமா?
ஐசக் அசிமோ.
 • கிரிக்கெட் மட்டைதெரியும். அது எந்த மரத்திலிருந்து தயார் செய்கிறார்கள் தெரியுமா?.
வில்லோ மரம்.

willow tree
 • வ. உ .சி. வெள்ளையர்களால் சிறைவைக்கப்பட்டது தெரியும், ஆனால் எத்தனை ஆண்டுகள் என்பது தெரியுமா?
40 ஆண்டுகள்.
 • மல்லிகைப்பூவும் தெரியும். அதன் வாசமும் உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த வாசனை உருவாக காரணமாக இருக்கும் வேதிப்பொருள் என்னவென்று தெரியுமா?
பென்சைல் அசிட்டேட்.
 • கார் பேட்டரி தெரியும். ஆனால் அதில் பயன்படுத்தப்படும் அமிலம் எதுவென்று தெரியுமா?
சல்பியூரிக் அமிலம்.
 • அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். ஆனால் அதை உருவாக்கியவர் யார் என்று தெரியுமா?.
ஈபிள்.
 • முத்து [Pearl ] தெரியும். ஆனால் அது முழுமையாக விளைச்சலாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?
15 ஆண்டுகள்.

muthu_Jeddah lighthouse
 • லைட் ஹவுஸ் [lighthouse ] தெரியும். உலகிலேயே மிக உயரமான லைட் ஹவுஸ் எது தெரியுமா?
 • சவுதி அரேபியாவிலுள்ள ''Jeddah lighthouse'' - 436 அடிகள்.

 • இரத்தம் சிவப்பணுக்களால் ஆனது என்பது தெரியும். ஆனால் அதை கண்டறிந்த ஆண்டு தெரியுமா?
1675 ம் ஆண்டு.
 • அமெரிக்கா தெரியும். அதன் பூர்வ இன  குடிமக்கள் யார் தெரியுமா?
செவ்விந்தியர்கள் என பெயரிட்டு அழைக்கப்படுகின்ற பழங்குடி மக்கள்.
 • பூமியின் நிலப்பரப்பு ஏழு கண்டங்களால் ஆனது என்பது தெரியும். ஆனால் அதில் பெரியது எது தெரியுமா?
ஆசிய கண்டம்.

மேலும் இதைப்போல் இன்னும் பல பொது அறிவு விஷயங்களை தெரிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.


💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்