"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தைராய்டு சுரப்பி - Thyroid gland.

தைராய்டு சுரப்பி - Thyroid gland.

Thyroid gland.

உடலின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மிக அவசியம்.

பொதுவாக உடலிலுள்ள ஹார்மோன் (என்சைம்) சுரப்பிகளை இருவகையாக பிரிக்கலாம். அவை நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் (endocrine glands).


தைராய்டு சுரப்பி.

நாளமுள்ள சுரப்பிகள் என்றால் தான் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை ''நாளம்'' என்று சொல்லப்படும் நரம்புகள் வழியாக உடலின் எந்த உறுப்புகளுக்கு ஹார்மோன் தேவைப்படுகிறதோ அந்த உறுப்பிற்கு நேரடியாக அனுப்பும் வேலையை செய்வதே நாளமுள்ள சுரப்பிகளாகும்.

எடுத்துக்காட்டாக, உமிழ்நீர் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள், பால் சுரப்பிகளை குறிப்பிடலாம்.

நாளமில்லா சுரப்பிகள் என்றால் தான் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை நரம்புகள் வழியாக கடத்தாமல் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்தே நேரடியாக இரத்தத்தில் கலக்கச்செய்து உடல் முழுக்க வலம் வர செய்கின்ற சுரப்பியாகும்.

எடுத்துக்காட்டாக, பிட்யூட்டரி, தைராய்டு முதலியவைகளை குறிப்பிடலாம்.

தைராய்டு என்பது ஒரு கிரேக்க சொல். ''Thyreos'' என்றால் கிரேக்க மொழியில் ''கேடயம்'' என்று பொருள். தைராய்டு சுரப்பி நம் உடலை நோய் எதுவும் அண்டாமல் கேடயமாக நின்று பாதுகாப்பதால் இதற்கு இப்பெயர் வைத்துள்ளனர்.

நம்முடைய உடலின் முறையான வளர்ச்சிக்கும். உடலில் ஏற்படும் பலவித வளர்ச்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணியாக திகழ்வது தைராய்டு சுரப்பி. தைராய்டு சுரப்பியானது உடலின் வளர்ச்சிதை மாற்றம், திசு வளர்ச்சி, எலும்புகள் வளர்ச்சி, நரம்புகள் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் முதலியவைகளை ஊக்கப்படுத்துவதால் இதனை உடலின் ''ஆளுமை சுரப்பி'' என அழைக்கின்றனர்.

பொதுவாகவே நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் அளவில் குறைந்தால் அது உடலுக்கு பல நோய்களை ஏற்படுத்தும். அதே வேளையில் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களின் அளவு அதிகரித்தால் ஆரோக்கியத்திற்கு இன்னும் அதிக அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

''கூடினும் குறையினும் நோய் செய்யும் '' என்னும் கூற்று நாளமில்லா சுரப்பிகளுக்கு மிக அதிக அளவில் பொருந்தும்.

ஹார்மோன்கள் என்பது வேதிப்பொருட்களைக் கொண்ட நீர்ம நிலையிலுள்ள புரதங்கள் அல்லது ஸ்டீராய்டுகள்.

Thyroid gland right and left

மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் மிகப் பெரியது தைராய்டு. இது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பி நம்முடைய கழுத்தின் முன்பகுதியில், குரல்வளைக்கும் கீழ் 4 செ.மீ உயரத்துடனும் 15 முதல் 20 கிராம் எடையுடனும் காணப்படுகின்றன. இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை கொண்டது.

தைராய்டு சுரப்பியின் அருகிலேயே பக்கத்திற்கு இரண்டு என்னும் விகிதத்தில் சிறிய அளவிலான நான்கு சுரப்பிகள் உள்ளன. இதற்கு ''பாரா தைராய்டு'' (Parathyroid ) என்று பெயர்.

''தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்னும் கூற்று உண்மையோ இல்லையோ ஆனால் தைராய்டு சுரந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும் என்பது மட்டும் உண்மை.

தாயின் வயிற்றில் கரு உற்பத்தியான 3 வது வாரத்திலேயே அந்த சிசுவுக்கு தைராய்டு உருவாக ஆரம்பித்து விடுகிறது. கிட்டத்தட்ட 3 வது மாதத்தில் அது ஹார்மோன் உற்பத்தியை ஆரம்பிக்கிறது. அதுவரையில் அந்த கரு தனக்கு தேவையான தைராய்டு ஹார்மோனை தன் தாயின் உடலிலிருந்தே பெறுகிறது.

எனவேதான் தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் கருவிலேயே அது குழந்தையின் மூளை வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் அது கடுமையாக பாதிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் தைராய்டின் பங்கு மிக முக்கியம் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

தைராய்டு சுரப்பி சிறு மூளையிலுள்ள ''பிட்யூட்டரி'' என்னும் தலைமை சுரப்பியின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது. அந்த பிட்யூட்டரியை கன்ரோல் பண்ணுவது பெருமூளையிலுள்ள ''கைபோதலாமஸ்'' என்னும் பகுதி. எனவே பிட்யூட்டரி மற்றும் கைபோதலாமஸ் இவைகளில் எதாவது பிரச்சனை என்றால் அது தைராய்டையும் கடுமையாக பாதிப்படையச்செய்யும்.

தைராய்டு முறையாக இயங்க வேண்டுமெனில் அதிகப்படியான இரத்தவோட்டம் இதற்கு தேவை.  எனவே இது கழுத்துப்பகுதியில் பல இரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

தைராய்டு சுரப்பியில் T3 என்ற ''ட்ரை அயோடோ தைரோனின்'' (Tri Iodo Thyronine), T4 என்ற ''தைராக்சின்''(Thyroxine ) மற்றும் ''கால்சிடோனின்'' (Calcitonin) ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன.

இதில் T3 மற்றும் T4 ஆகிய இரு ஹார்மோன்களையும் தடையில்லாமல் தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்ய வேண்டுமெனில் நம் உடலில் உற்பத்தியாகும் ''டைரோசின்'' (Tyrosine ) என்ற அமினோ அமிலமும் நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் கிடைக்கும் ''அயோடின்'' என்னும் சத்தும் அவசியம்.

எனவேதான் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் பிரச்சனைக்கு உணவில் போதிய அளவில் அயோடின் கலந்த உப்பு சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் அன்றாடம் வயதிற்கேற்ப 50 மைக்ரோ கிராம் முதல் 150 மைக்ரோ கிராம் வரை அயோடின் தேவைப்படுகிறது.

தைராய்டு ஹார்மோனின் மிக முக்கிய செயல்பாடே மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதே.

இரண்டாவது உடல் வளர்ச்சியையும், வளர்ச்சிதை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதாகும்.

மூன்றாவது நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரை ,கொழுப்பு,புரதம் முதலியவைகளை சக்தியாக மாற்றும் தன்மையை கலீரலுக்கு அளிக்கிறது.

நான்காவதாக நம் உடலின் சீதோஷ்ணத்தை சமநிலை படுத்தும் வேலையையும் இதுவே கவனித்து கொள்கிறது. நம் உடலின் வளர்ச்சி மற்றும் உடலின் வெப்பத்தை தன் கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்கிறது.

மேலும், நம் உடலின் தலையாய உறுப்புகளான மூளை, இருதயம், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை கட்டிக்காப்பதும் இதுவே.

கருவிலுள்ள சிசுவின் வளர்ச்சியை மட்டுமல்ல தாயின் மடியில் தவழும் குழந்தைகளின் வளர்ச்சியையும் இது ஊக்குவிக்கிறது.

தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லையெனில் அது உங்களின் அன்றாட செயல்பாடுகளையும் பாதிக்கும், பெரும்பாலும் தைராய்டு சம்பந்தமான நோய்கள் இருவித காரணங்களால் வருகின்றன.அதில் ஒன்று ஹார்மோன் குறைவாக சுரப்பது. மற்றொன்று ஹார்மோன் அதிகமாக சுரப்பது.

தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாக சுரப்பதால் சிலவகையான நோய்களும், ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால் வேறுவிதமான உடல் உபாதைகளும் ஏற்படலாம்.

இதில் ஹார்மோன் அளவில் குறைவாக சுரப்பதை தாழ் தைராய்டியம் அல்லது ஹைபோதைராய்டிஸம் (Hyperthyrodidm) என்றும், அளவில் அதிகமாக சுரப்பதை அதி தைராய்டியம் அல்லது ஹைப்பர்தைராய்டிஸம் (Hyperthyroididm) எனவும் அழைக்கின்றனர். பெரும்பாலும் இந்த குறைபாடுகள் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.

கருவுற்ற பெண்களின் உடலிலிருந்து சில வேளைகளில் அதிக அளவில் சிறுநீர் மூலம் அயோடின் உப்பு வெளியேற்றப்படுவதால் உடலில் அதிக அளவில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டு தைராய்டு பாதிக்கப்படலாம். இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சியும், தேக வளர்ச்சியும் பாதிப்படையும் வாய்ப்பு இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்...

கருவுற்ற பெண்களுக்கு தினந்தோறும் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை. இதில் ஏதாவது குறைவு நேர்ந்தால் கரு சிதைவு ஏற்படும். பிறக்கும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி இருக்காது.

சமூக வலைத்தளங்களில் சிலர் நாங்கள் இயற்கையை சார்ந்து வாழ்வோம் எனவும்.. மருத்துவ உதவி தேவை இல்லை.. வீட்டிலிருந்தபடியே கற்காலத்தைப்போல சுகப்பிரசவம் செய்துகொள்வோம் என்று ஓலமிடுகின்றனர். இவர்களின் இந்த கூக்குரல் முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

ஏனெனில் முற்காலத்தில் மூளைவளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம்  என்பது அவ்வளவு முக்கியமல்ல. இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருந்தால் போதும் எதாவது தொழில் செய்து வாழ்க்கையை ஒட்டி விடலாம். ஆனால், இன்றைய அறிவியல் உலகில் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் என்பது மிக மிக முக்கியம்.

கருவுற்ற தாயின் உடலிலுள்ள சத்துக்குறைபாடோ அல்லது ஹார்மோன் குறைபாடோ வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்சியை பெருமளவில் பாதிக்கும் என்பதால் கருவுற்றுள்ள போது மட்டுமல்ல குழந்தை பிறந்து 2 அல்லது 3 வயது வரையில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிக மிக அவசியம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

மூளை வளம் அவ்வளவாக தேவைப்படாத முற்காலத்தில் வேண்டுமென்றால் மருத்துவ உதவி தேவைப்படாத சுகப்பிரசவம் சரியாக இருக்கலாம். ஆனால் மூளையை மூலதனமாக கொண்டு இயங்க வேண்டி இருக்கும் இந்த காலத்தில் மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே நிகழ்த்தப்படும் சுகப்பிரசவம் என்பது மூளை வளம் குறைந்த குழந்தைகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் என்பதனை புரிந்து கொண்டு அதனை தவிர்ப்பது நலம்.

Thyroid

தைராய்டு சுரப்பு குறைவாக சுரந்தால் பலப்பிரச்சினைகள் உடலில் ஏற்படலாம். அவை கை,கால் உளைச்சல், தசைப்பிடிப்பு, பசியின்மை, சோம்பல், தூக்கம், உடல்வலி, உடல் பாரம், உடல் பருமன், வறண்ட தோல், பரபரப்பான மனநிலை, அதிக வியர்வை, தலைமுடி கொட்டுதல், மறதி, தசைப்பிடிப்பு மற்றும் மலச்சிக்கல் ஆகிய உடல் உபாதைகள் காணப்படலாம். 

மேலும் இள வயது பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படுவதுண்டு. அதாவது அதிக ரத்த போக்குடைய மாதவிடாய் கோளாறு ஏற்படலாம். கருத்தரித்தலிலும் பிரச்னை ஏற்படலாம். பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படலாம்.

தைராய்டு சுரப்பு அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அதிக தாகம், அதிக பசி,நடுக்கம், எரிச்சல், எடை குறைவு, கண்பார்வை குறைபாடு, மாதவிடாய் குறைவு, இருதய பாதிப்பு முதலியன ஏற்படலாம்.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒருவருக்கு தைராய்டு பிரச்சினை என்றால்  மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை . சிலருக்கு மேற்குறிப்பிட்டுள்ள எந்தபிரச்சனையும் இல்லாமல் வெறும் மலச்சிக்கல் மட்டுமே இருக்கலாம்.

தைராய்டு சுரப்பி குறைபாடு பரம்பரை குறைபாடுகளாகவும் சிலருக்கு தொடர்வதுண்டு.

உலக மக்கள் தொகையில் மூன்று சதவீத மக்கள் தைராய்டு தொடர்பான நோயினால் பாதிப்படைகின்றனர். தைராய்டு ஹார்மோனில் அடிப்படை பொருளாக ''அயோடின் '' இருப்பதால் பொதுவாக அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு பாதிப்படையலாம் அல்லது தைராய்டு அழற்சியால் ஏற்படலாம்.

மேலும் தலைமை சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பி உடலிலுள்ள அத்தனை சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் திறன் பெற்றுள்ளதால் பிட்யூட்டரியில் எதாவது பிரச்சனை என்றாலும் தைராய்டு பாதிக்கப்படலாம்.

தைராய்டு பிரச்சனையை இரத்தப்பரிசோதனை மூலமாகவே எளிதாக கண்டறிந்து விடலாம். ஒரு சிலருக்கு ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். தைராய்டு சுரப்பியில் ஏற்படும் நோய்களால் உலக அளவில் 150 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பிறக்கும்போதே தைராய்டு பிரச்னையோடு பிறக்கும் குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிடில் அவர்களின் மூளை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படலாம்.

தைராய்டு ஹார்மோனில் அடிப்படை மூலப்பொருளாக இருப்பது அயோடின். எனவே தைராய்டு சுரப்பி முறையாக இயங்க வேண்டுமெனில் நம் உணவில் அயோடின் சத்து போதுமான அளவில் இருத்தல் வேண்டும்.

உணவில் அயோடின் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அதன் இயக்கம் பாதிக்கப்பட்டு குறைவாக ஹார்மோன் சுரப்பதால் தைராய்டில் வீக்கம் ஏற்படலாம். இதனையே ''முன்கழுத்துக்கழலை'' (Goiter) என்கிறோம்.

சிலநேரங்களில் தைராய்டு சுரப்பி அதிக ஹார்மோனை சுரப்பதாலும் முன்கழுத்து கழலை ஏற்படலாம். சிலருக்கு அது கொழுப்பு கட்டியாகவோ அல்லது சாதாரண நீர்கட்டியாகவோ இருக்கலாம். சில நேராக்களில் அது அபாயகரமான புற்றுநோயாக கூட இருக்கலாம் எனவே தாமதிக்காமல் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

goiter

தைராய்டு சம்பந்தமான குறைபாடு என்றால் உடனே கழுத்துப்பகுதியில் வீக்கம் போன்ற கழலை (Goitre) இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கழுத்துப்பகுதியில் கழலை போன்ற வீக்கம் ஏற்படாமலேயே கூட பல விதமான தைராய்டு நோய்கள் வருவதுண்டு.

தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டியதில்லை. நோய் நீங்கியது அறிந்தால் மாத்திரையை நிறுத்திவிடலாம். ஒருவேளை தொடர்ந்து பலவருடங்கள் மாத்திரை சாப்பிட வேண்டிவந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை.

நோய் வந்தபின்பு வருந்துவதை விட வருமுன் காப்பதே சிறப்பு. முறையான எளிய உடற்பயிற்சிகள் நோய்கள் நம் உடலை அண்டவிடாமல் காக்கும் கேடயம் எனலாம்.

முறையான யோகாசன பயிற்சி அனைத்து விதமான தைராய்டு பிரச்சினைகளையும் வேரறுக்கும்.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.