"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Birth of Pakistan and death of Jinnah - Part 7.

Birth of Pakistan and death of Jinnah - Part 7.

முகமது அலி ஜின்னா.

Muhammad Ali Jinnah.

[Part - 7]

          ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய பதிவில் இது ஏழாவது பகுதி. அதாவது இறுதிப்பகுதி. வாருங்கள் இவருடைய வாழ்வின் கடைசி அத்தியாயத்தையும் பார்த்துவிடலாம்.

தன்னுடைய சுயநலத்தால் மக்கள் மனதில் மதவெறி ஊட்டி பலதர மக்களும் கூடிவாழ்ந்த இந்தியா என்னும் ஒரு ஆல விருட்சத்தை பிரிவினை என்னும் கோடாரியால் இரண்டாக வெட்டிப்பிளந்து பாகிஸ்தான் என்கிற ஒரு நாட்டை உருவாக்கியதில் வெற்றி கண்டார் ஜின்னா.


எப்படியாவது ஒரு நாட்டிற்கு தலைவராகிவிட வேண்டும் என்ற தன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள பல லட்சம் உயிர்களை பலி கொடுத்து அவர்களின் இரத்தம் தோய்ந்த மரண ஓலங்களுக்கு நடுவே தனக்கு அரசாள ஒரு நாடு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த சமயத்தில் அவருக்கு புதிய நாட்டை பற்றி சில கவலைகள் வாட்டின.

பாகிஸ்தானை இந்தியாவை விட பெரிய மதசார்பற்ற நாடாக்கி காட்டுவது, அதை ஒரு ஜனநாயக நாடக நிலை நிறுத்துவது, இந்தியாவை விட வளம் பொருந்திய வல்லரசாக ஆக்குவது. அதன் மூலம் தன்னை ஒரு ஒப்பற்ற உலக தலைவருள் ஒருவராக இவ்வுலகை ஏற்றுக்கொள்ள செய்வது, அதற்காக கடுமையாக உழைப்பது. இதுதான் அவருடைய கவலையாக இருந்தது.

எப்படியாவது இதையெல்லாம் குறுகிய காலத்திற்குள் சாதிக்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு.

ஆனால், இதைவிட இன்னொரு ஆசையும் அவருக்கு இருந்தது. அந்த ஆசையை விரைவில் நிறைவேற்றி வைக்கும்படி ஜவகர்லால் நேருவுக்கு கோரிக்கையும் வைத்தார்.

இந்தியாவிலுள்ள தெற்கு மும்பையில் ''மலபார் ஹில்'' (Malabar Hill) பகுதியில் ஜின்னா ஆசையாகக் கட்டிய வீடு  ஒன்று உள்ளது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் அது இந்தியப்பகுதிக்குள் மாட்டிக்கொண்டது. அந்த வீட்டிற்கு ''ஜின்னா ஹவுஸ்'' (Jinnah House) என்று பெயர். இது அவருடைய கனவு மாளிகை. பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டது. பங்களா முழுவதும் மார்பிள்களால் இழைக்கப்பட்டிருக்கும் வசந்த மாளிகை.

jinnah house

இங்குதான் தன் மனைவி ருட்டியுடன் சிலகாலம் வாழ்ந்து வந்தார். இங்குதான் அவரின் ஒரே மகள் ''தீனா வாடியா'' (Dina Wadia) பிறந்தார்.

தான் ஆசையாக கட்டிய கனவுமாளிகை இதுவென்றும், தன் வாழ்க்கையின் கடைசி காலம் வரையில் இவ்வீட்டிலேயே வசிக்க வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை எனவும் அடிக்கடி கூறுவார்.

ஆனால், அவர் ஆசை நிராசையானது. பாகிஸ்தான் பிரிவினையால் அவரால் நெடுநாட்கள் தொடர்ந்து இந்த மாளிகையில் வசிக்க முடியவில்லை.

எனவே பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற பின் தன்னை சந்திக்க வருபவர்களிடம் தன் கடைசி ஆசையாக ஜவகர்லால் நேருவிடம் தெரிவிக்க கோரி ஒரு கோரிக்கையை வைத்தார்.

''நான் என் இறுதிக்காலத்தில் மும்பைக்கு செல்வேன். அங்கு நான் ஆசையாக கட்டிய எனது கனவு மாளிகையில் வசிப்பேன். எனவே அதற்கான ஏற்பாட்டை இப்போதிருந்தே தொடங்கும்படி என் அன்புக்குரிய ஜவகர்லால் நேருவிடம் சொல்லுங்கள்'' என்பதே அந்த கோரிக்கை.

இந்த கோரிக்கையை அறிந்த நேருவுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இவர் இந்தியா வந்தால் இவருக்கு இந்திய மக்கள் எப்படியான ''வரவேற்பை'' கொடுப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறாரே என்று வேதனையுற்றார்.

இவர் உண்மையாகவே இந்தியா வந்து மாளிகையில் வாழ்வதற்கு ஆசைப்படுகிறாரா அல்லது அதற்கு முன்னால் ஒரேயடியாக பாடையில் போவதற்கு ஆசைப்படுகிறாரா தெரியவில்லையே என 'வல்லபாய் படேல்' நொந்து போனார்.

அருகிலிருந்த காந்தியோ. ''அடடே இந்த ஜின்னா ஒரு லூசாக இருக்குமோ. இது நமக்கு முன்னாடியே தெரியாம போச்சே. ரொம்பகாலமா நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தார். இவர் இப்படி லூசுப்பயன்னு முன்னாடியே தெரிச்சிருந்தா பாதி நாட்டை இப்படி பிரித்து கொடுத்திருக்க வேண்டாமே'' என்று தலையில் கை வைத்தபடி தரையில் உட்கார்ந்தே விட்டார்.

முகமது அலி ஜின்னா - Birth of Pakistan and death of Jinnah

முகமது அலி ஜின்னா - Birth of Pakistan and death of Jinnah

மும்பைக்கு திரும்பி வந்தால் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதும், இந்திய மக்கள் தன்னை முதல் வேலையாக ''கொத்துப்பரோட்டா'' போட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்பதும் ஜின்னாவிற்கு ஏன் தெரியாமல் போனது என்பது நமக்கும் புரியவில்லை. ( ஒருவேளை காந்தியடிகள் சந்தேகப்பட்டது போல இவர் உண்மையிலேயே ''லூசு'' தானோ!)

உண்மையில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு நாட்டை கட்டியெழுப்பி உலகின் மகாத்மா என பெயரெடுப்பதையே ஜின்னா விரும்பினார்.

பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக ஒரு இந்துவை நியமித்தார் என்பதிலிருந்து அவரின் எண்ணத்தை புரிந்து கொள்ளலாம். ஆனால் அது காலப்போக்கில் ஒரு முஸ்லீம் நாடாகவே உருமாறிப்போகும் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

ராணுவத்திற்கு அரசியலில் எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது என்று அறிவித்தார். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது. இன்றுவரை பாகிஸ்தானின் ஆட்சிக்கட்டிலில் ராணுவத்தின் குறுக்கீடு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, தீவிரவாதத்தை உற்பத்தி செய்து அதை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறிப்போனதுதான் கொடுமை.

ஜின்னா எதைப்பற்றியெல்லாம் கனவு கண்டாரோ அத்தனை கனவுகளும் குழிதோண்டி புதைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல இன்றுவரையில் அந்நாட்டுமக்களை தீவிரவாதமும், வறுமையும் மாறி மாறி மிரட்டிக்கொண்டிருப்பது வேதனையே. அவருடைய பாழும் கனவினால் பல லட்சம் மக்கள் பலியானதே மிச்சம்.

தன்னுடைய எந்த நோக்கமும் நிறைவேறாததால் பாகிஸ்தான் உருவாகி 1 வருடத்திலேயே நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார் ஜின்னா.

jinnah house 2

மரணம் நெருங்கி வரும் வேளையில் அவர் வேதனையோடு சொன்ன வார்த்தைகள் இதோ.

"ஒன்றுபட்ட இந்தியர்களின் மனதில் பிரிவினையை ஏற்படுத்தி பாகிஸ்தானை உருவாக்கியதில் நான் மிகப்பெரிய அளவில் தவறிழைத்து விட்டேன், இப்போதே டெல்லிக்கு சென்று ஜவகர்லால் நேருவிடம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரே நாடக, சகோதரர்களாக ஒன்றுபட்ட இந்தியாவாக இருப்போம் என கூற ஆசைப்படுகிறேன் '' என்றார்.

ஆனால் காலம் கடந்துபோயிருந்தது. கண்கெட்டப்பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய ஆசைப்பட்டதுபோல ஜின்னாவின் கடைசி ஆசையும் அந்தோ நிறைவேறாமலேயே போனது.

1948 ல் செப்டம்பர் 11 ம் தேதி உடல்நலக் குறைவினால் ஜின்னா தன்னுடைய 71 வது வயதில் மரணம் அடைந்தார்.

jinnah Tomb

பாகிஸ்தானை உருவாக்கி அதை எப்படியெல்லாம் மேன்மையுற செய்ய வேண்டுமென்று நினைத்தாரோ அந்த எண்ணம் இன்று வரை நிறைவேறவில்லை.

என்றாலும், பாகிஸ்தான் என்னும் நாடு உள்ளவரை ''ஜின்னா'' என்னும் பெயரும், தலைவர் என்கின்ற பெயரில் அந்நாட்டு மக்களின் மனதில் மட்டும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

முகமது அலி ஜின்னா - Birth of Pakistan and death of Jinnah

ஜின்னா உயிர் துறந்தபின் ஏறத்தாழ 19 வருடங்கள் கழித்து 1967 ம் ஆண்டு ஜூலை 9 ம் தியதி ஜின்னாவிற்கு அனைத்து விதங்களிலும் உறுதுணையாகவும் ஆலோசகராகவும் இருந்து வந்த ஜின்னாவின் அன்பு சகோதரி "பாத்திமா ஜின்னா" (Fatima jinnah) கராச்சியில் வைத்து தன் இன்னுயிரை நீத்தார்.

ஜின்னாவின் மரணத்திற்கு "காசநோய்" (Tuberculosis) காரணமென்றால் பாத்திமாவின் மரணத்திற்கு "இதய செயலிழப்பு" (Heart failure) காரணம் என கூறப்படுகிறது. என்றாலும், பாகிஸ்தானின் முதல் பிரதமரான "லியாகத் அலி கான்" ஐ (Liaquat Ali Khan) படுகொலை செய்த அதே கும்பலால் இவரும் தனது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தியும் நிலவி வருகிறது. ஆனால் உண்மை நிலவரம் இன்றுவரை வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளது.

முகமது அலி ஜின்னாவின் சமாதி அமைந்துள்ள Mazar-e-Quaid பூங்கா வளாகத்திலேயே பாத்திமாவின் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளது.

முகமது அலி ஜின்னா - Birth of Pakistan and death of Jinnah

ஒரு மனிதனுக்கு பொதுநலம் மரித்து சுயநலம் உயிர்த்தெழுமானால் அவன் வாழும் தேசத்தில் மரண ஓலங்களே எங்கும் ஒலிக்கும் என்பதற்கு "முகமது அலி ஜின்னா" ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இவரது முட்டாள் தனமான பிடிவாதத்தால்.... பிரிவினை வாதத்தால்... வேதனைகளையும், கொடும் துயரத்தையும் அனுபவித்ததோடு நில்லாமல், நம்மோடு ஒட்டி உறவாடிய உறவுகளையும் பிரிந்து... ஒரு பாவமும் அறியாத பல லட்சம் அப்பாவி உயிர்களையும் இழந்து... இன்றுவரை நாம் கண்ணீரில் துடித்துக்கொண்டு இருப்பதைத்தவிர வேறு என்ன நன்மைகளைப் பெரிதாக பெற்றுவிட்டோம் என்று தெரியவில்லை.

இனியாவது புரிந்து கொள்வோம் மைந்தர்களே, நேசத்தோடு வாழும் நம்மிடையே கொடும் தீச்சுடராய் ஊடுருவும் பிரிவினை கோஷம் வேண்டவே வேண்டாம் தோழர்களே.

''நாம் தமிழர்கள்'' என்றும் ''திராவிடநாடு தனிநாடு'' என்றும்.. இன்றும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டி உளறிக்கொண்டு திரியும் சில கூறுகெட்ட "டம்ளர்" மற்றும் "குருமா" ஓநாய் கூட்டங்களை இனிமேலாவது இனம் கண்டறிந்து நம்மை விட்டு தள்ளியே வைத்திருப்போம் என்று இன்றுமுதல் உறுதி ஏற்போம் நண்பர்களே..

நன்றி!

பாரத் மாதாகி ஜெய் !!!

இத்தொடரின் "முதல் பகுதி " யை படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க.

>>"முகமது அலி ஜின்னா - Birth of Muhammad Ali Jinnah - Part 1."<<

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

 1. அருமையான கட்டுரையை தந்தமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. KILLERGEE Devakottai - தங்களின் பாராட்டுதல்கள் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நன்றி ! நன்றி !!!.

   நீக்கு
 2. முதலிலிருந்து படிக்கவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே! முதலிலிருந்து படிக்கவும். தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்யவும். நன்றி !

   நீக்கு
 3. படித்து முடித்து விட்டேன்.  ஜின்னா தவறுக்கு வருந்தலாம்.  ஆனால் பயன் இல்லை.  திருத்திக் கொள்ள முடியாத, திரும்பிச் செல்ல முடியாத தவறு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்... நீங்கள் சொல்வது உண்மைதான் ... ஆனால் வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே !!!

   நீக்கு
 4. இதையெல்லாம் படிக்கும் போது நெஞ்சமே பதைபதைக்கிறது படுபாவி ஜின்னா அய்யகோ அந்த நிலை இன்னொரு தடவை வரவே கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ! தங்கள் கருத்திற்கு நன்றி !! "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" ... இனி பிரிவினை கோஷங்களால் நம் நாடு ஒரு உயிரையோ அல்லது ஒரு உறவையோ இழக்கவே கூடாது என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்வோம் ...

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.