"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
வக்ராசனம் - Vakrasanam.

வக்ராசனம் - Vakrasanam.

Vakrasanam.

''வக்ரா'' என்றால் முறுக்குதல் என்று பொருள்.. இந்த ஆசனத்தில் உடல் திருக்கப்படுவதால் இது ''வக்ராசனம்'' என பெயர் பெற்றது. இந்த ஆசனம் அனைத்து வயதினரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ள ஒரு எளிய ஆசனம்.


வக்ராசனம்.

பொதுவாக யோகாசனம் செய்வதற்கு வயது ஒரு தடை அல்ல. ஐந்து வயதில் தொடங்கி சுமார் எண்பது வயது வரையில் இருபாலரும் இப்பயிற்சியில் ஈடுபடலாம்.

பருமனான உடலை கொண்டவர்கள் உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனங்களை செய்வது என்பது கடினம். இவர்கள் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களை செய்து  உடல் மெலிந்தபின் பிற ஆசனங்களை செய்ய முன்வரலாம்.

அதிகாலை உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் என்றாலும் மாலையிலும் யோகா செய்துவரலாம் தவறில்லை. காலையில் உடல் நன்கு வளைந்து கொடுப்பதில்லை ஆனால் மாலையில் உடல் நன்கு பயிற்சிக்கு வளைந்து கொடுப்பதை நீங்கள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம்.

Vakrasana

காலை, மாலை இரு நேரங்களிலும் யோகாசனப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

காலையோ, மாலையோ யோகா பயிற்சி செய்வதற்குமுன் மலசலம் கழித்து வயிறு காலியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். உணவு உண்டவுடன் பயிற்சியில் ஈடுபடுதல் கூடாது. உணவு உண்டு நான்கு மணிநேரம் கழித்தே பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

அதேபோல் பயிற்சி செய்து முடித்த உடன் சாப்பிட கூடாது. பயிற்சி முடிந்து அரைமணிநேரம் கழித்த பின்பே சாப்பிடுவதோ, குளிப்பதோ, குளிர்ந்த நீரால் முகம் கழுவுவதோ செய்தல் வேண்டும்.

சரி, இனி வக்ராசனத்தை பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்.

செய்முறை.

முதலில் ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகள் இரண்டையும் பிட்டத்தின் இரு பக்கங்களில் தரையில் ஊன்றியபடி நிமிர்ந்து உட்காரவும்.

வலதுகாலை மடக்கி வலது பாதத்தை இடது முழங்காலின் அருகில் வைக்கவும். உடலை வலது பக்கமாக திருக்கி இடது கையை வலது முழங்காலுக்கு வெளிப்புறமாக கொண்டு சென்று வலது காலின் பெருவிரலை பிடித்துக் கொள்ளவும். வலது உள்ளங்கையை தரையில் ஊன்றவும்.

Vakrasanam step by step

இதேநிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்கவும்.

பின் இடதுகையை விடுவித்து உடலை நேராக கொண்டுவந்து கையை தரையில் ஊன்றிக்கொள்ளவும். வலதுகாலை நேராக நீட்டிகொள்ளவும். அதன்பின் கால்களை மாற்றி உடலை இடதுபக்கமாக திருப்பி இப்பயிற்சியை செய்யவும்.

இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி 3 முதல் 6 தடவை வரை செய்துவரலாம்.

பலன்.

முதுகுப்பகுதி நன்றாக திருகப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முதுகுவலி, இடுப்புவலி முதலியவற்றை நீக்குகிறது. நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து இப்பயிற்சியை செய்துவர நோய் நீங்கி நாடி நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும்.

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள் அனைத்தும் நன்கு அழுத்தப்பட்டு சுறுசுறுப்பாகின்றன. இதனால் மலசிக்கல், அஜீரணம், நீரழிவு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், உடல் பருமன், தொந்தி முதலியன நீங்கும்.

குறிப்பு.

''ஹெர்னியா'' என்று சொல்லப்படும் குடல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இப்பயிற்சி செய்தல் கூடாது.

இதே பயிற்சியை சிற்சில மாற்றங்களுடன் காலை மடக்கி வைத்துக்கொண்டு செய்யும் பயிற்சி முறையும் உள்ளது. அதற்கு "அர்த்த மத்ஸ்யேந்திராசனம்" என்று பெயர். அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை கீழேயுள்ள சுட்டிதனை சொடுக்கி அறியவும்.


💢💢💢💢💢

 

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

20 கருத்துகள்

 1. இது நானும் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது நண்பரே....

  தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஒரு காலத்தில் யோகா வகுப்பு சென்றதுண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே !! உங்களின் சுறுசுறுப்புக்கு அதுதான் காரணமாக இருக்குமோ?

   நீக்கு
  2. ஹா..   ஹா...  ஹா...    சுறுசுறுப்பா?  நானா?!

   நீக்கு
  3. உங்களின் எழுத்தில்தான் தெளிவாக தெரிகிறதே அதை வைத்தே சொன்னேன் !!!

   நீக்கு
 3. சிவா என்பதிடிவுகள் பலவற்றில் உங்கள்பின்னூட்டம் கண்டேன் என்பதிவுகளைப் படிப்பது தெரிகிறது நன்றி என்சுபாவம் எதையும் கேள்வி கேட்டுப் புரிந்துகொள்வது தெரியாத பலவற்றையும் செய்துபார்ப்பது பலபுதிய முயற்சிகள்செய்துபார்ப்பதௌ தங்களுக்கு விருப்பமானால் சில சுட்டிகள்தருகிறேன் படித்துப்பார்க்க 81 வயதிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள உதவுவது வலைப்பூவே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. G.M Balasubramaniam நன்றி சார் !!! நீங்கள் என் வலைதளத்திற்கு வந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி !!! நான் சில நாட்களாகத்தான் தங்கள் பதிவுகளை படித்துவருகிறேன் .... அருமையாக எழுதுகிறீர்கள் ... வாழ்த்துக்கள் ... நான் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் ... எனவே உங்கள் பதிவுகள் அனைத்தையும் முதலில் இருந்தே படித்துவிடும் ஆர்வத்தில் உள்ளேன் ... சுட்டியை கண்டிப்பாக அனுப்புங்கள் ... நீங்கள் வலைத்தளத்தில் மிளிர்வது எங்கள் பாக்கியம் ... நன்றி !

   நீக்கு
 4. http://gmbat1649.blogspot.com/2012/06/blog-post.html

  http://gmbat1649.blogspot.com/2011/06/blog-post_11.html

  http://gmbat1649.blogspot.com/2012/08/blog-post_21.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார் !!! படித்துவிட்டு என் கருத்துக்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ... நன்றி !!!.

   நீக்கு
 5. சில மாதங்கள் யோகா செய்து வந்தேன். சூழல்களால் பிறகு செய்ய முடியாமல் போனது. வக்ராசனம் நல்லதொரு ஆசனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே !!! தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மகிழ்ச்சி நண்பரே !!!

   நீக்கு
 6. பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள யோகாசன ஆலயத்தில் முறைப்படி யோகா கற்று மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அந்த பயிற்சியை செய்து வந்தேன். பணி சுமை காரணமாக அதைத் தொடர இயலவில்லை. தங்களின் பதிவு எனக்கு பழையவைகளை நினைத்துப் பார்க்க வைத்தது. நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே !!! தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மகிழ்ச்சி... தங்களின் பழைய நினைவுகளை அசைபோட வைத்ததில் தனக்கும் மகிழ்ச்சியே !!!...

   நீக்கு
 7. சில வருடங்களுக்கு முன்பு யோகா வகுப்புக்கு சென்றதுண்டு. அதன் பிறகு செல்ல இயலவில்லை. தங்களின் இந்த பதிவை பார்த்தவுடன் மீண்டும் யோக கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை வருகிறது. பார்ப்போம் இந்த கொரோனா முடிந்த பிறகு யோக வகுப்புக்கு செல்ல முடியுமா என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே !!! தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மகிழ்ச்சி... மீண்டும் யோக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் !!..

   நீக்கு
 8. gmb-சாருடைய பதிவிலிருந்து இங்கு வந்தேன்! யோகாவைத் தொடர்ந்து செய்துவருபவர் நீங்கள் என்று தெரிகிறது. ‘சவாசனம்’ பற்றி எழுதியுள்ளீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே !!! தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மகிழ்ச்சி... ‘சவாசனம்’ பற்றியும் எழுதியுள்ளேன். ஆசனப் பயிற்சியின் முடிவில் கடைசியாக கண்டிப்பாக செய்யவேண்டிய அசனம் இது. கேழே உள்ள மூன்று "லிங்க்" லுமே சவாசனம் பற்றிய குறிப்பு உள்ளது ... படித்து பயன் பெறுக !!!
   >> யோகாசனம்-யோகா-அறிமுகம் <<
   >> சூரிய நமஸ்காரம் <<
   >> சவாசனம் <<

   நீக்கு
 9. நோய்களை குணப்படுத்தும் சிறந்த உடற்பயிற்சியாக யோகாசனம் விளங்குகின்றது அதனை தாங்கள் வெளிப்படுத்தியது பயனுள்ள பதிவாகக் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே !!! தங்களின் வருகைக்கும் ... தங்களின் கருத்துக்களை தன்னோடு பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி !!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.