"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மின்மினிப்பூச்சி - Fireflies and their Species and Bioluminescence.

மின்மினிப்பூச்சி - Fireflies and their Species and Bioluminescence.

மின்மினிப் பூச்சி.

[Part - 1]

திணை :- விலங்கு. (பூச்சி)

பெயர் :- மின்மினிப் பூச்சி.

வேறுபெயர்கள் :- மினுக்கு பூச்சி, விளக்கு பூச்சி, லைட் பூச்சி, மினுக்கும் வண்டு, கண்ணாம்பூச்சி, மின்னா, மின்னா மினுங்கி, பிளிங்கி.

ஆங்கில பெயர் :- Firefly.

அறிவியல் பெயர் :- அராச்னோகாம்பா லுமினோசா - Arachnocampa luminosa.

  தொகுதி :- கணுக்காலி. (ஆர்த்ரோபோடா - Arthropoda).

  துணை தொகுதி :- ஹெக்சபோடா (Hexapoda).

  வகுப்பு :- பூச்சி. (இன்செக்டா - Insecta).

  வரிசை :- கோலியோப்டெரா - Coleoptera. (கோலியோப்டெரா என்றால் "சிறகுள்ள வண்டுகள்" என்று பொருள்).

  துணைவரிசை :- பாலிபாகா - polyphaga.

  உள் வரிசை :- எலடெரிஃபார்மியா - Elateriformia.

  பெருங்குடும்பம் :- எலடெராய்டியா - Elateroidea.

  குடும்பம் :- லம்பிரைடே - Lampyridae. (கிரேக்க மொழியில் "லம்பிரைடே" என்றால் "பிரகாசிப்பது" என்று பொருள்).

  உடல் நிறம் :- கருப்பு, சிவப்பு, மஞ்சள், பிரவுண், பச்சை.

  சுவை :- கசப்பானவை, நச்சுத்தன்மை மிகுந்தவை. உயிருக்கு தீங்கு விளைவிப்பவை, பல மணி நேரங்களுக்கு நாவை மரத்துப்போகச் செய்யும் தன்மை கொண்டவை.

  ஒளிகளின் நிறம் :- வெளிர் மஞ்சள், பச்சை கலந்த மஞ்சள், இளஞ்சிவப்பு கலந்த பச்சை, சிவப்பு மற்றும் நீலம்.

  ஒளியின் அலைநீளம் :- 510 முதல் 670 நானோ மீட்டர்.

  காணப்படும் பகுதிகள் :- உலகில் அண்டார்டிகாவை தவிர பிற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, யூரேசியா மற்றும் அமெரிக்க கண்டம்.

  காணப்படும் இடங்கள் :- இது வெப்ப மண்டல உயிரினம். மின்மினி பூச்சிகள் பொதுவாக ஈரப்பதம் நிறைந்த வெப்ப மண்டல பிரதேச பகுதிகளில் வாழ்கின்றன. வனம் மற்றும் குகை பகுதிகளிலும் காணப்படுகின்றன. வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளில் அதிகம் காணப்படுகின்றன.

  சில வகைகள் வறண்ட சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் பின்னாளில் ஈரப்பதம் நிறைந்த இடங்களுக்கு இடம்பெயர்கின்றன.

  மேலும் ஒரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டியுள்ளது. ஆரம்பத்தில் சொன்னதுபோல பெரும்பாலும் இது வெப்பமண்டல உயிரினம் என்றாலும், குளிர்காலத்தை வாழும் சூழ்நிலையாக கொண்ட மின்மினிப்பூச்சி இனமும் இருக்கத்தான் செய்கின்றன.

  வட அமெரிக்காவில் குளிர் பிரதேசங்களில் மட்டும் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமானது தங்கள் உடலில் ஒளியை உற்பத்தி செய்வதில்லையாதலால் அதிகம் கவனிக்கப்படாத இனமாக இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

  பருவ ஆயுளின் கால அளவு.

  (ஏறத்தாழ)

  முட்டை (Egg) - 3 முதல் 4 வாரம்.

  லார்வா பருவம் (Larva) - 1 முதல் 2 வருடம்.

  கூட்டுப்புழு பருவம் (Pupa) - 3 வாரம்.

  பூச்சி பருவம் (Adult) - 3 முதல் 4 வாரம்.

  Fireflies - Bioluminescence.

  பசுமையும் மஞ்சளும் கலந்த நட்சத்திரங்கள்தான் விண்ணிலிருந்து மண்ணில் இறங்கி வந்து உங்கள் முன்னால் களிநடம் புரிகிறதோ என்று ஆச்சரியப்பட்டு போகுமளவிற்கு மின்மினிபூச்சிகளின் உடலிலிருந்து வெளிப்படும் ஒளிகள் உங்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம்.

  மின்மினி பூச்சி மட்டுமல்ல சில தாவரங்கள், சிலவகை காளான்கள்,  சிலவகை மீன்கள் மற்றும் பல சிறிய உயிரினங்கள் கூட உடலில் ஒளி உமிழும் தன்மையை பெற்று உள்ளன. இதில் சிலவகை பாஃடீரியாக்களும் அடங்கும்.

  இவைகள் இவ்வாறு ஒளிவீசுவதற்கு காரணம் இதன் உடலினுள் நடக்கும் வேதியாற்றலானது ஒளியாற்றலாக மாற்றம் பெறுவதே.

  சிலவகை பூச்சிகளில் பெண் இனம் மட்டுமே ஒளியை உற்பத்தி  செய்கின்றன. இன்னும் சில உயிரினங்களில் ஆண், பெண் இரண்டுமே ஒளியை உற்பத்தி செய்கின்றன.

  பயோலூமினஸென்ஸ்.

  உயிரினங்கள் தன் உடலில் இவ்வாறு ஒளிவிடும் தன்மையை "பயோலூமினஸென்ஸ்" (bioluminescence) என குறிப்பிடுகின்றனர். இந்த ஒளியில் வெப்பம் இருப்பதில்லை. எனவே இதனை "குளிர் ஒளி" என அழைக்கின்றனர்.


  Firefly bioluminescence.

  இதுவரையில் 1500 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் தங்கள் உடலில்  ஒளியை உற்பத்தி செய்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. பலவித மீன்கள், நத்தைகள், பாசிகள், காளான்கள், பவளப்பாறைகள், சில அரியவகை பூச்சிகள், கணுக்காலிகள் என பலதும் இதனுள் அடக்கம்.

  மின்மினிப்பூச்சிகள் பெரும்பாலும் தங்களுடைய இரை மற்றும் தன்னுடைய துணையை கவர்வதற்காகவும், எதிரியை எச்சரிப்பதற்காகவும் ஒளியை பயன்படுத்துவதாகக் கண்டறித்துள்ளனர்.

  இதன் வயிற்றுபகுதியின் உட்புறத்தில் வட்டவடிவில் ஒளி உமிழ் செல்கள் (photcytes) உள்ளன. இதில் ஒளிரக்கூடிய "லூசிபெரின்" (luciferin ) என்ற ஒரு வேதியியல் பொருளும் அதில் "லூசிபெரஸ்" என்ற என்சைம்மும் உள்ளது.

  இந்த என்சைம் - ல் உள்ள "அடினோசைன் ட்ரை பாஸ்பேட்" (ATP) எனும் ஆற்றல் மிகுந்த வேதியியல் கூட்டுப்பொருள் கால்சியம் மற்றும் ஆக்சிஜனுடன் இணைந்து வினைபுரிந்து ஒளியை உற்பத்தி செய்கிறது. உடலினுள் உற்பத்தியாகும் ஒளி வெளிப்பட ஒளி ஊடுருவும் அமைப்பும் (Transparent)  இவற்றின் அடிவயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளன.

  இவைகளின் உடலில் இருந்து வெளிப்படும் வெளிச்சம் குறிப்பிட்ட இடைவெளியில் "மினுக் மினுக்" என விட்டு விட்டு ஒளிர்வதற்கு காரணம் மைட்டோகாண்டிரியாவை உற்பத்தி செய்யும் ATP யின் வேலையாகும். இது நைட்ரிக் ஆக்சைடை வினையூக்கியாக பயன்படுத்தி ஆக்சிஜனை வெளியிடும்போது ஒளியுமிழ் உறுப்பு பிரகாசமாக ஒளிர்கிறது.

  ஒளியுமிழ் செயல்கள் நடைபெறாத வேளையில் பாயோலூமினசென்ஸிற்கு தேவைப்படாத ஆக்சிஜனை மைட்டோகாண்டிரியாவின் (mitochondria) இயக்கத்திற்கு ATP எடுத்துக்கொள்கிறது. அவ்வேளையில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியும் தடைபட இதனால் பயோலூமினசென்ஸ் ஒளி அணைக்கப்படுகிறது. இங்கு நைட்ரிக் ஆக்சைடு "ஆன்" "ஆப்" சுவிட்சியாக வேலைசெய்கிறது.

  இதுபோன்ற பயோலூமினசென்ஸ் ஒளியை உற்பத்தி செய்யாத மின்மினிப்பூச்சி இனங்களும் ஏராளமாக உள்ளன. இதற்கு உதாரணமாக "எலிச்னியா" (Ellychnia) இனத்தை குறிப்பிடலாம்.

  சில இனங்கள் லார்வா பருவம்வரை ஒளிவீசுகின்றன அதன்பின் ஒளிவீசும்  தன்மையை இழந்து விடுகின்றன. ஒளியின்மையால் இவைகள் இரவில் நடமாடுவதில்லை பகலில்தான் துணைகளை தேடி பறக்கின்றன. துணைகளை கண்டறிய இரசாயன சமிஞ்சைகளை பயன்படுத்துகின்றன. இவைகள் பெண் பூச்சிகள் வெளிப்படுத்தும்  "ஃபெரோமோன்" என்னும் ஹார்மோன்களின் வாசனையால் ஈர்க்கப்பட்டு தங்களுடைய துணையை கண்டறிகின்றன.

  தற்போது விஞ்ஞானிகள் மின்மினிப்பூச்சியில் லூசிஃபெரேஸை உருவாக்கும் மரபணுவை அதன் டி.என்.ஏ (DNA) விலிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.

  பிரித்தெடுக்கப்பட்ட இந்த மரபணுவை ஒளிவீசும் தன்மையில்லாத பூச்சிகளின் உடலில் செலுத்தி அவற்றையும் ஒளிரச்செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

  கீழே உள்ள படத்தில் ஒரு "பழப்பூச்சி" விஞ்ஞானிகளின் தயவால் ஒளிர்வதை காணலாம்.

  fruit flies

  இப்படியே போனால் விரைவிலேயே உங்கள் தலையை சுற்றிலும் ஒரு ஒளிவட்டத்தை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  துணைக்குடும்பம்.

  மின்மினிப்பூச்சியானது "லம்பிரைடே" (Coleoptera) என்னும் ஒளிரும்வகை வண்டு குடும்பத்தை சார்ந்த ஒரு பூச்சி இனமாகும். மிக சிறிய அளவிலிருந்து அதன் இனத்தைப்பொறுத்து அதிகப்படியாக 1 அங்குல நீளம்வரையுள்ள மின்மினி பூச்சிகள்கூட உள்ளன.

  இதன் தன்மையை கொண்டு  இதனை மேலும் 5 துணைக்குடும்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர். இந்த 5 துணை குடும்பங்களிலும் மொத்தமாக சேர்த்து 2000 வகையான இனங்கள் உள்ளன. இவைகளை மேலும் "பேரினம்" மற்றும் "சிற்றினங்கள்" என தனித்தனியாக பிரித்து வகைப்படுத்துகின்றனர்.

  பேரினம் - சிற்றினம்.

  இந்த இனங்களில் ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா நிறங்களில் ஒளியை உமிழும் மின்மினி பூச்சிகளும் உள்ளன.

  பொதுவாக மின்மினி பூச்சிகள் பச்சையும் மஞ்சளும் கலந்த ஒளியையே உற்பத்தி செய்கின்றன. நம்மிடையே உலா வரும் மின்மினிப்பூச்சிகளும் பச்சை-மஞ்சள் ஒளியையே உற்பத்தி செய்கின்றன. ஆனால் "பைராக்டோமினா" என்னும் மின்மினி பூச்சியானது மஞ்சளும் அரக்கு நிறமும் கலந்த ஒளியை வெளியிடுகின்றன.

  அதுபோல, தென்கிழக்கு அமெரிக்காவில் காணப்படும் "ஃபாஸிஸ் ரெட்டிகுலட்டா" என்னும் மின்மினி பூச்சியானது பசுமைகலந்த நீலநிற ஒளியை வெளியிடுகின்றன.

  தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை மின்மினிப்பூச்சி வெளியிடும் ஒளியில் புத்தகம் கூட படிக்கலாமாம்.

  ஒவ்வொரு வேறுபட்ட இனத்தை சேர்ந்த பூச்சிகளுக்கும் அணைந்து அணைந்து எரியும் ஒளியின் கால அளவு ஒன்றுபோல இருப்பதில்லை. வித்தியாசப்படுகின்றன. இந்த கால இடைவெளியை வைத்துதான் தன் இனத்தை இவைகள் எளிதாக கண்டுணர்ந்துகொள்கின்றன.

  Fireflies

  பேரினங்கள்.

  மின்மினி பூச்சியில் பல்வேறு பேரினங்களும் ஒவ்வொரு பேரினத்திலும் பல்வேறு சிற்றினங்களும் உள்ளன. இவைகள் ஒவ்வொன்றும் மஞ்சள், கருப்பு, பச்சை, பழுப்பு என உடல் நிறத்திலும், வடிவத்திலும் சற்றே மாறுபடுகின்றன.

  இவைகளில் எல்லா இனங்களும் ஒளியை உற்பத்தி செய்வதில்லை. சில இனங்கள் மட்டுமே ஒளியை உற்பத்தி செய்கின்றன. ஒளியை உற்பத்தி செய்யாத இனங்கள் பகலிலும், ஒளியை உற்பத்தி செய்யும் இனங்கள் இரவிலும் சுறுசுறுப்பாக உலா வருகின்றன.

  சில இன மின்மினிப்பூச்சிகளில் பெண் இனம் பறக்கும் தன்மையை இழந்தும் காணப்படுகின்றன.

  வட அமெரிக்காவில் மட்டும் 170 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. கனடாவிலும் 150க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இங்கிலாந்தில் 30க்கும் மேற்பட்ட இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. ஜப்பானில் "லூசியோலா க்ரூசியாட்டா", "அக்வாடிகா லேட்டரிலிஸ்" உட்பட சுமார் 50 இனங்கள்வரை உள்ளன. ரஷ்யாவில் சுமார் 20 இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சுமார் 20 இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

  பேரினங்களில் சில.

  கீழே மிக முக்கியமான சில பேரினங்களின் பெயர்களை காணலாம்.

  TAMIL ENGLISH
  லூசிடோட்டா Lucidota
  டிரிலாஸ்டர் Drilaster
  கர்டோஸ் Curtos
  சைபோனோசெரஸ் Cyphonocerus
  அக்வாடிகா லேட்டரிலிஸ் aquatica lateralis
  எலிச்னியா Ellychnia
  லம்பைரிஸ் Lampyris
  லாம்பிரிகெரா Lamprigera
  லூசிடினா Lucidina
  லூசியோலா Luciola
  பெரோப்டிக்ஸ் Peroptyx
  ஹோடேரியா Hotaria
  ஃபோட்டினஸ் Photinus
  ஃபோட்டூரிஸ் Photuris
  பிரிஸ்டோலிகஸ் Pristolycus
  ஸ்டெனோக்ளடியஸ் Stenocladius
  பைராக்டொமினா Pyractomena
  பைரோகோலியா Pyrocoelia
  ஃபாஸிஸ் ரெட்டிகுலட்டா Phausis reticulata
  பிளோட்டோமஸ் Pleotomus
  மைக்ரோஃபோட்டஸ் Microphotus
  டெனாஸ்பிஸ் Tenaspis
  பொல்லாக்லாஸிஸ் Pollaclasis
  ரோவர் Rover
  பிடெரோப்ட்டிஸ் Pteroptyx
  பைகோலுஸியோலா Pygoluciola
  பாஸ்சிஸ் Phausis
  பிதெரோட்டஸ் Pterotus
  அஸ்பிஸோம Aspisoma
  டையப்ஹேனஸ் Diaphanes
  பைரோபைகா Pyropyga

  சிற்றினங்கள்.

  மேலே 30 க்கும் மேற்பட்ட பேரினங்களை பார்த்தோம். இது போன்று ஒவ்வொரு இனங்களுக்குள்ளும் சிறுசிறு மாற்றங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.

  சிற்றினங்களில் சில.

  குறிப்பாக "லூசியோலா" என்ற இனத்தில் லூசியோலா லூசிடானிகா (Luciola lusitanica), லூசியோலா க்ரூசியாட்டா (Luciola cruciata) என பல சிற்றினங்கள் உள்ளன. "ஃபோட்டினஸ்" என்ற இனத்தில் ஃபோட்டினஸ் பைரலிஸ் (Photinus Pyralis), ஃபோட்டினஸ் கரோலினஸ் (Photinus carolinus) என மேலும் பல சிற்றினங்கள் உள்ளன. அதுபோல "ஃபோட்டூரிஸ்" என்னும் இனத்தில் ஃபோட்டூரிஸ் வெர்சிகலர் (Photuris versicolor), ஃபோட்டூரிஸ் ஃபிரண்டலிஸ் (Photuris frontalis), ஃபோட்டூரிஸ் கஞ்சனர் (Photuris congener) என பல சிற்றினங்கள் உள்ளன.

  "பொல்லாக்லாஸிஸ்" என்னும் இனத்திலுள்ள மிக முக்கியமான சிற்றினம் பொல்லாக்லாஸிஸ் பிஃபாரியா (Pollaclasis bifaria). அதுபோல "பிளோட்டோமஸ்" என்னும் இனத்திலுள்ள மிக முக்கியமான சிற்றினங்கள் பிளோட்டோமஸ் பாலென்ஸ் (Pleotomus Pallens), பிளோட்டோமஸ் நிக்ரிகன் (Pleotomus nigricans) ஆகும்.

  முதல் இனமான "லூசிடோட்டா" (Lucidota) வில் மட்டுமே 160 சிற்றினங்கள் உள்ளன.

  நீங்கள் சிற்றினங்களைப்பற்றி எளிதில் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் "லூசிடோட்டா" (Lucidota) என்னும் இனத்தில் உள்ள 160 சிற்றினங்களின் பட்டியல் மட்டும் கீழே முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன.

  லூசிடோட்டா சிற்றினங்களின் பட்டியல்.

  No TAMIL ENGLISH
  1 லூசிடோட்டா அங்கஸ்டாட்டா Lucidota angustata
  2 லூசிடோட்டா அட்ரா Lucidota atra
  3 லூசிடோட்டா அப்பிசிபென்னிஸ் Lucidota apicipennis
  4 லூசிடோட்டா அப்பென்டிகுலட்டா Lucidota appendiculata
  5 லூசிடோட்டா அபிகலிஸ் Lucidota apicalis
  6 லூசிடோட்டா அபிகிகார்னிஸ் Lucidota apicicornis
  7 லூசிடோட்டா அமபிலிஸ் Lucidota amabilis
  8 லூசிடோட்டா அர்மாட்டா Lucidota armata
  9 லூசிடோட்டா அல்பிகோலிஸ் Lucidota albicollis
  10 லூசிடோட்டா அல்போகோர்னூட்டா Lucidota albocornuta
  11 லூசிடோட்டா அல்போசின்டா Lucidota albocincta
  12 லூசிடோட்டா அன்டோனியோ Lucidota antonioi
  13 லூசிடோட்டா ஆடாக்ஸ் Lucidota audax
  14 லூசிடோட்டா ஆண்டெனாட்டா Lucidota antennata
  15 லூசிடோட்டா ஆர்கெண்டினா Lucidota argentina
  16 லூசிடோட்டா ஆர்னாட்டா Lucidota ornata
  17 லூசிடோட்டா ஆரண்டியாகா Lucidota aurantiaca
  18 லூசிடோட்டா ஆலிவேரி Lucidota olivieri
  19 லூசிடோட்டா ஆஸ்குலாட்டி Lucidota osculatii
  20 லூசிடோட்டா இங்க்லோரியா Lucidota ingloria
  21 லூசிடோட்டா கன்கோர்ஸ் Lucidota concors
  22 லூசிடோட்டா பாரல்லெல்லா Lucidota parallela
  23 லூசிடோட்டா இம்மோர் Lucidota immemor
  24 லூசிடோட்டா இன்கம்ப்டா Lucidota incompta
  25 லூசிடோட்டா இன்டரப்டா Lucidota interrupta
  26 லூசிடோட்டா இன்விடா Lucidota invida
  27 லூசிடோட்டா இனப்பெர்டா Lucidota inaperta
  28 லூசிடோட்டா இனாபிகலிஸ் Lucidota inapicalis
  29 லூசிடோட்டா உபெரதான Lucidota uberadana
  30 லூசிடோட்டா எமரிட்டா Lucidota emerita
  31 லூசிடோட்டா எலோங்காட்டா Lucidota elongata
  32 லூசிடோட்டா ஒப்லோங்கோனோட்டா Lucidota oblongonotata
  33 லூசிடோட்டா ஓகுலாட்டா Lucidota oculata
  34 லூசிடோட்டா க்ளுகி Lucidota klugii
  35 லூசிடோட்டா கவுனெல்லி Lucidota gounelli
  36 லூசிடோட்டா கம்ப்ரசிகார்னிஸ் Lucidota compressicornis
  37 லூசிடோட்டா காகசென்சிஸ் Lucidota caucaensis
  38 லூசிடோட்டா காம்ப்ளனாட்டா Lucidota complanata
  39 லூசிடோட்டா கன்ஃபார்மிஸ் Lucidota conformis
  40 லூசிடோட்டா கான்ராட்டி Lucidota conradti
  41 லூசிடோட்டா கிராண்ட்ஜீனி Lucidota grandjeani
  42 லூசிடோட்டா கிளெர்மொன்டி Lucidota clermonti
  43 லூசிடோட்டா குக்குல்லாட்டா Lucidota cucullata
  44 லூசிடோட்டா குவாட்ராடிஃபெரா Lucidota quadratifera
  45 லூசிடோட்டா குவாட்ரிகுட்டாட்டா Lucidota quadriguttata
  46 லூசிடோட்டா கொமிட்டாட்டா Lucidota comitata
  47 லூசிடோட்டா கோஸ்டாட்டா Lucidota costata
  48 லூசிடோட்டா சப்டூபிடேட்டா Lucidota subdubitata
  49 லூசிடோட்டா சப்மாகுலாட்டா Lucidota submaculata
  50 லூசிடோட்டா சப்ளெக்ஸ் Lucidota supplex
  51 லூசிடோட்டா சப்னிகிரா Lucidota subnigra
  52 லூசிடோட்டா சாந்தோசெரா Lucidota xanthocera
  53 லூசிடோட்டா சாந்தோப்லூரா Lucidota xanthopleura
  54 லூசிடோட்டா சாப்டா Lucidota saepta
  55 லூசிடோட்டா சிக்னடிகோலிஸ் Lucidota signaticollis
  56 லூசிடோட்டா சிமோனி Lucidota simoni
  57 லூசிடோட்டா சிரிகியானா Lucidota chiriquiana
  58 லூசிடோட்டா சின்க்டா Lucidota cincta
  59 லூசிடோட்டா இன்சிங்னிட்டா Lucidota insignita
  60 லூசிடோட்டா சினுவாடிகோலிஸ் Lucidota sinuaticollis
  61 லூசிடோட்டா செக்ஸ்குட்டாட்டா Lucidota sexguttata
  62 லூசிடோட்டா செரிகார்னிஸ் Lucidota serricornis
  63 லூசிடோட்டா செவ்ரோலாட்டி Lucidota chevrolati
  64 லூசிடோட்டா செவெரா Lucidota severa
  65 லூசிடோட்டா ட்ரிஸ்டிகலர் Lucidota tristicolor
  66 லூசிடோட்டா ட்ரிஸ்டிஸ் Lucidota tristis
  67 லூசிடோட்டா ட்ரைகோஸ்டாட்டா Lucidota tricostata
  68 லூசிடோட்டா டசிட்டூர்னா Lucidota taciturna
  69 லூசிடோட்டா டயபனுரா Lucidota diaphanura
  70 லூசிடோட்டா டார்டிடா Lucidota tardita
  71 லூசிடோட்டா டிஃபோர்மிஸ் Lucidota difformis
  72 லூசிடோட்டா டிலாடிகார்னிஸ் Lucidota dilaticornis
  73 லூசிடோட்டா டின்க்டா Lucidota tincta
  74 லூசிடோட்டா டிஜீனி Lucidota dejeani
  75 லூசிடோட்டா டிஸ்கிவிட்டாடா Lucidota discivittata
  76 லூசிடோட்டா டிஸ்கொலர் Lucidota discolor
  77 லூசிடோட்டா டிஸ்கோய்டியா Lucidota discoidea
  78 லூசிடோட்டா டிஸ்மிலிஸ் Lucidota dissimilis
  79 லூசிடோட்டா டூப்ளிகேட்டா Lucidota duplicata
  80 லூசிடோட்டா டெனுசின்க்டா Lucidota tenuecincta
  81 லூசிடோட்டா டெனுயிஸ் Lucidota tenuis
  82 லூசிடோட்டா டெஸ்டாசைப்ஸ் Lucidota testaceipes
  83 லூசிடோட்டா அப்ரோகிமான்ஸ் Lucidota approximans
  84 லூசிடோட்டா ப்ராக்ஸிமா Lucidota proxima
  85 லூசிடோட்டா ப்ராபின்கா Lucidota propinqua
  86 லூசிடோட்டா ப்ளாமன்னி பிக் Lucidota plaumanni
  87 லூசிடோட்டா பங்காசி Lucidota banghaasi
  88 லூசிடோட்டா பர்விகோலிஸ் Lucidota parvicollis
  89 லூசிடோட்டா பனோனி Lucidota banoni
  90 லூசிடோட்டா பாசலிஸ் Lucidota basalis
  91 லூசிடோட்டா பாரிலிஸ் Lucidota parilis
  92 லூசிடோட்டா பாலிடிகோலிஸ் Lucidota pallidicollis
  93 லூசிடோட்டா பாலிப்ஸ் Lucidota pallipes
  94 லூசிடோட்டா பிகிடியாலிஸ் Lucidota pygidialis
  95 லூசிடோட்டா பிரிமர்கினலிஸ் Lucidota premarginalis
  96 லூசிடோட்டா பிளான்சார்டி Lucidota blanchardi
  97 லூசிடோட்டா பிளானிகார்னிஸ் Lucidota planicornis
  98 லூசிடோட்டா பினோட்டாட்டா Lucidota binotata
  99 லூசிடோட்டா பினோடடென்ஸ் Lucidota binotatens
  100 லூசிடோட்டா புருலானா Lucidota purulana
  101 லூசிடோட்டா புருனேரி Lucidota bruneri
  102 லூசிடோட்டா புரோபாட்டா Lucidota probata
  103 லூசிடோட்டா புரோஸ்கிரிப்டா Lucidota proscripta
  104 லூசிடோட்டா பெக்டினாட்டா Lucidota pectinata
  105 லூசிடோட்டா பெர்புசில்லா Lucidota perpusilla
  106 லூசிடோட்டா பெருவியானா Lucidota peruviana
  107 லூசிடோட்டா பெல்லா Lucidota bella
  108 லூசிடோட்டா பென்னாட்டா Lucidota pennata
  109 லூசிடோட்டா பேரி Lucidota baeri
  110 லூசிடோட்டா பைகோலர் Lucidota bicolor
  111 லூசிடோட்டா பைசெல்லோனிச்சா Lucidota bicellonycha
  112 லூசிடோட்டா பைபார்டிடா Lucidota bipartita
  113 லூசிடோட்டா பைலோசெரா Lucidota phyllocera
  114 லூசிடோட்டா பொலிவியானா Lucidota boliviana
  115 லூசிடோட்டா போகோடென்சிஸ் Lucidota bogotensis
  116 லூசிடோட்டா மல்லேரி Lucidota malleri
  117 லூசிடோட்டா மார்ஜினிகோலிஸ் Lucidota marginicollis
  118 லூசிடோட்டா மிசெரா Lucidota misera
  119 லூசிடோட்டா த்ரீகலர் Lucidota tricolor
  120 லூசிடோட்டா மேக்ரெசென்ஸ் Lucidota macrescens
  121 லூசிடோட்டா ப்ரயுடேட்டா Lucidota fraudata
  122 லூசிடோட்டா மோனாச்சா Lucidota monacha
  123 லூசிடோட்டா ராமிகார்னிஸ் Lucidota ramicornis
  124 லூசிடோட்டா ரிடக்டின்டிகா Lucidota reductitincta
  125 லூசிடோட்டா ருஃபிதோராக்ஸ் Lucidota rufithorax
  126 லூசிடோட்டா ரூஃபிகோலிஸ் Lucidota ruficollis
  127 லூசிடோட்டா ரூஃபெசென்ஸ் Lucidota rufescens
  128 லூசிடோட்டா ரோஸிமாகுலாட்டா Lucidota roseimaculata
  129 லூசிடோட்டா லாட்டிகார்னிஸ் Lucidota laticornis
  130 லூசிடோட்டா லிட்டுராட்டா Lucidota liturata
  131 லூசிடோட்டா லிம்பாட்டா Lucidota limbata
  132 லூசிடோட்டா லுடிகோலிஸ் Lucidota luteicollis
  133 லூசிடோட்டா லுனாட்டா Lucidota lunata
  134 லூசிடோட்டா லுனுலாட்டா Lucidota lunulata
  135 லூசிடோட்டா லூட்டோஹுமரலிஸ் Lucidota luteohumeralis
  136 லூசிடோட்டா லெகோன்டி Lucidota lecontei
  137 லூசிடோட்டா லேட்டியர் Lucidota latior
  138 லூசிடோட்டா லேடல்பா Lucidota latealba
  139 லூசிடோட்டா வாக்னெரி Lucidota wagneri
  140 லூசிடோட்டா விட்ரிகோலிஸ் Lucidota vitricollis
  141 லூசிடோட்டா பென்நெட்ஸ்ராட்டா Lucidota fenestrata
  142 லூசிடோட்டா ஜுகுண்டா Lucidota jucunda
  143 லூசிடோட்டா ஜெனிகுலட்டா Lucidota geniculata
  144 லூசிடோட்டா ஹிக்கரி Lucidota hickeri
  145 லூசிடோட்டா ஹீட்டோரோசெரா Lucidota heterocera
  146 லூசிடோட்டா ஹெய்னி Lucidota heynei
  147 லூசிடோட்டா ஸ்பார்சிகலர் Lucidota sparsicolor
  148 லூசிடோட்டா புன்ச்டாட்டா Lucidota punctata
  149 லூசிடோட்டா ஃபிளாபெல்லிகார்னிஸ் Lucidota flabellicornis
  150 லூசிடோட்டா ஃபிளாவிப்கள் Lucidota flavipes
  151 லூசிடோட்டா ஃபுல்குரன்ஸ் Lucidota fulgurans
  152 லூசிடோட்டா ஃபுல்வோடிங்க்டா Lucidota fulvotincta
  153 லூசிடோட்டா ஃபுஸ்கட்டா Lucidota fuscata
  154 லூசிடோட்டா எலாப்ஸா Lucidota elapsa
  155 லூசிடோட்டா சிக்னாடிகார்னிஸ் Lucidota signaticornis
  156 லூசிடோட்டா நோபிலிஸ் Lucidota nobilis
  157 லூசிடோட்டா பிக்மேயா Lucidota pygmaea
  158 லூசிடோட்டா மெல்லிகுலா Lucidota mellicula
  159 லூசிடோட்டா யூசெரா Lucidota eucera
  160 லூசிடோட்டா ஹீட்டோரோக்ளிடா Lucidota heteroclita

  இதுவரையில் "மின்மினிப் பூச்சி - Firefly - Part 1." என்னும் முதல் பகுதியாகிய இப்பதிவில் மின்மினி பூச்சியைப்பற்றிய அடிப்படை விஷயங்கள், "பயோலூமினஸென்ஸ்", மின்மினியின் இனங்களைப்பற்றிய குறிப்புகள் மற்றும் சிற்றினங்களைப்பற்றிய விபரங்கள் பலவும் பார்த்தோம்.

  இதன் தொடர்ச்சியாகிய "மின்மினிப்பூச்சி - Fireflies and their subfamilies." என்னும் அடுத்துவரும் இரண்டாவது பகுதியில் இதன் துணை குடும்பங்களை பற்றியும், மின்மினிப்பூச்சிகளின் தன்மை மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள இருக்கிறோம்.. தொடருங்கள்..

  இப்பதிவின் இரண்டாவது பகுதியை படிக்க கீழேயுள்ள லிங்கை கிளிக்குங்க.


  🐚🐌🐚🐌🐚🐌🐚🐌

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.