Tuesday, March 26, 2019

இராஜ நாகம் - கருநாகம் [King Cobra]

தாயகம் :- தென்கிழக்கு ஆசியா.

அறிவியல் பெயர் :- Ophiophagus hannah [ஓபியோபாகஸ் ஹன்னா]

ஆயுள் :- 20 ஆண்டுகள்.

உடலமைப்பு :-  விஷப்பாம்புகளில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகை இதுவே. சுமார் 7 மீட்டர்.(22 அடி).



                இதில் உடலில் சிற்சில மாற்றங்களுடன் சில இனங்களும் இருக்கின்றன. இவைகளில் சிலமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. சில வகைகள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. இவை 20 ஆண்டுகள் உயிர் வாழும்.
               இவைகள் 300 அடிக்கு அப்பாலுள்ள இரையின் சிறு அசைவைக்கூட பார்க்கும் திறன் படைத்தது. அந்த அளவிற்கு கண்பார்வை கூர்மையானது. பெண் இனத்தைவிட ஆண் பாம்புகள் தடிமனாகவும், நீளமாகவும் இருக்கின்றன. நல்லபாம்பைப்போல இதுவும் படமெடுக்கும். ஆனால் நல்ல பாம்பின் படம் மிக அகலமாக இருக்கும் இதனுடைய படம் அகலம் குறைவாக இருக்கும்.



               நாம் சாதாரணமாக குறிப்பிடும் ''நாகப்பாம்பு '' என்பது வேறு, ''இராஜநாகம்'' என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.....இரண்டிற்குள்ளும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இராஜநாகம் ஆப்பிரிக்காவிலுள்ள ''மாம்பா '' என்னும் கொடிய விஷம் கொண்ட பாம்பினத்தின் வம்சாவழியைச் சேர்ந்ததாகும்.

இனப்பெருக்கம் :-
                                    இது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. . ஜனவரி, பிப்பிரவரி, மார்ச் மாதங்களில் இனச்சேர்க்கையும் ஏப்ரல், மே மாதங்களில் முட்டையும் இடுகின்றன.



அதிகப்படியாக 30 முட்டைகள் வரை இடும். காய்ந்த இலைகளை கூடு போல அமைத்து அதற்குள் முட்டையிட்டு அடைகாக்கின்றன.



28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் முட்டைகள் அடைகாக்கப்படுகின்றன.

வாழிடம் :- அடர்ந்த காட்டுப்பகுதியிலும், மூங்கில் புதர்கள் நிறைந்துள்ள பகுதிகளிலும்  வசிக்கின்றன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

உணவுமுறை :- இவைகள் பெரும்பாலும் பாம்பினங்களையே உணவாக உட்கொள்கின்றன. அரிதாகவே பிற உயிரினங்களை உணவாக உட்க்கொள்ளும்.



கொடிய விஷமுள்ள பாம்புகளைக்கூட தாக்கி அழித்து ''ஸ்வாகா'' செய்துவிடும். எனவேதான் நாகங்களுக்கெல்லாம் இராஜாவாக இதை அங்கீகரித்து ''இராஜ நாகம்'' (king Cobra) என்று பெருமையாக அழைக்கிறோம். இது ஒருமுறை உணவு உட்கொண்டால் அதன்பின் பலநாட்கள் உணவு இல்லாமல் வாழும் திறன்படைத்தது.

விஷத்தன்மை :- மிகக் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷமானது ஆப்பிரிக்க ''கறுப்பு மாம்பா'' பாம்புகளைவிட 5 மடங்கு வீரியமானது. தொட்ட நீ செத்த......



               விஷப்பாம்புகளில் இவர்தான் ''ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ மகா கனம் பொருந்திய குலோத்துங்க இரண்டாம் புலிக்கேசி''. ஏனெனில் இது விஷத்தன்மை வாய்ந்த ஏனைய அனைத்து பாம்பு வகைகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது.
               பிற கொடிய விஷப்பாம்புகளின் விஷத்தை விட இதன் விஷம் வீரியம் கொஞ்சம் குறைந்ததுதான் என்றாலும் ஒருதடவை தீண்டும்போது அதிக அளவு குறிப்பாக 6 முதல் 7 மில்லி விஷத்தை உட்செலுத்தும் திறன் படைத்தது என்பதால் இதன் விஷம் உயிருக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கிறது.


                இதுகடித்த சிலநிமிடங்களிலேயே மனிதன் இறக்கும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் யாரையும் இவைகள் தேவையில்லாமல் தீண்டுவதில்லை. ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது. இந்த எச்சரிக்கையையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கினால், தன் உயிருக்கு ஆபத்து என்று உணரும் பட்சத்தில் கடைசியாகவே விஷத்தை பிரயோகிக்கின்றன.


இதன் விஷம் நரம்புமண்டலத்தை மிக கடுமையாக பாதிக்கும். கடித்த சில நிமிடங்களிலேயே மயக்க நிலைக்கு கொண்டுசென்று விடும்.
               பாம்பு தீண்டி இறப்பவர்களின் பெரும்பாலானோர் அதாவது 75 சதவீதம் பேர் இராஜநாகம் என்று சொல்லப்படும் கருநாகம் தீண்டுவதாலேயே இறக்கின்றனர். மேலும் இப்பாம்பினால் தீண்டப்பட்டவர்கள் பிழைப்பது மிக கடினம். 75 சதவீதம் பேர் மரணத்தையே தழுவுகின்றனர் என்றாலும் அதில் 25% பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருப்பதால் மனம்தளராமல் உடனடியாக சிகிச்சையை தொடரவேண்டும்.

8 comments:

  1. //ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது//

    வலிமையானவனின் தன்னம்பிக்கை!

    சுவாரஸ்யமான கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. வலிமை பிறரை வருத்தாது என்பது நிதர்சன உண்மை...

      Delete
  2. கட்டுரை அருமை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி...

      Delete
  3. கட்டுரை அருமை.நாகம் அதுவும் கருநாகம் ஆயுள் அதிகம் போலும்![[

    ReplyDelete
    Replies
    1. yes, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. கட்டுரை அருமை

    ReplyDelete
    Replies
    1. Chokkan Subramanian .... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல...

      Delete

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...