"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பச்சை மாம்பா - Pachai Mamba - Green Mamba.

பச்சை மாம்பா - Pachai Mamba - Green Mamba.

Green mamba.

Pachai Mamba.

உலகிலுள்ள பாம்பு இனங்களை இருவகைகளாக பிரிக்கலாம். அவை விஷமுள்ள பாம்புகள் மற்றும் விஷமில்லாத பாம்புகள். விஷமுள்ள பாம்புகள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பவை ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் மாம்பா (mamba) வகை பாம்புகள்.

இந்த வகையான பாம்புகளில் இருவகையான இனங்கள் உள்ளன. அவையாவன "கருப்பு மாம்பா" (black mamba) மற்றும் "பச்சை மாம்பா" (green mamba).

இங்கு நாம் பச்சை மாம்பா பற்றி சற்று விரிவாக பார்க்க இருக்கிறோம்.

  பச்சை மாம்பா.

  பெயர் :- பச்சை மாம்பா - Green mamba.

  திணை :- விலங்கினம் - Animal.

  தொகுதி :- முதுகுநாணி - Chordate.

  துணைத்தொகுதி :- முதுகெலும்பிகள்.

  வகுப்பு :- ஊர்வன - reptile

  வரிசை :- செதிலுடைய ஊர்வன - Squamata.

  துணை வரிசை:- பாம்புகள் - Serpentes.

  பேரினம் :- dendroaspis.

  இனம் :- D . angusticeps.

  குடும்பம் :- எலாப்பிடே - Elapidae.

  தாயகம் :- தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், தான்சானியா, கென்யா.

  பாம்பின வகைகள்.

  இது "மாம்பா" என்னும் பாம்பின் வகையை சார்ந்தது. இதில் "கருப்பு மாம்பா" மற்றும் "பச்சை மாம்பா" என்னும் இரு வகைகள் உள்ளன.

  பச்சை மாம்பாவின் பிரிவுகள்.

  பச்சை மாம்பாவில் மூன்று வகையான இனங்கள் உள்ளன. அவையாவன..

  1. கிழக்கு ஆப்பிரிக்க  பச்சை மாம்பா - D.angusticeps.
  2. மேற்கு ஆப்பிரிக்க பச்சை மாம்பா - D. viridis.
  3. மத்திய ஆப்பிரிக்க ஜேம்சனின் மாம்பா - D .jamesoni.
  green mamba

  இயல்பு.

  அமைதியானது, எச்சரிக்கையானது அதேவேளையில் மிகவும் சுறுசுறுப்பானதும் கூட.

  பொதுவாகவே இது யாருடனும் எந்த வம்புதும்புகளுக்கும் போவதில்லை.  அது பாட்டுக்கு சிவனேன்னு இருக்கும். சும்மா இருக்கமுடியாமல் நாமாக  வலியபோய் சீண்டினோமென்றால் நம் அவசரத்தைப் புரிந்துகொண்டு பூலோகத்திலிருந்து "மேலோகம்" செல்வதற்கு டிக்கெட் புக் செஞ்சு தரும். கவலை வேண்டாம் நான்கு மணிநேரத்தில் பயணத்தை தொடங்கிவிடலாம்.

  உடலமைப்பு.

  பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இது மாம்பா இன பாம்புகளில் மிக சிறியது. அதாவது "கருப்பு மாம்பா" வைவிட சிறியது. 1 . 5 மீட்டரிலிருந்து 2 மீட்டர் நீளம் வரை வளரும் இயல்புடையது. பெண் பாம்பைவிட ஆண் பாம்பு கொஞ்சம் சிறியதாக இருக்கும். இதன் எடை சுமார் 1 கிலோவிலிருந்து ஒன்றரை கிலோவரைக்கும் இருக்கலாம்.

  வாயின் உட்புறம் இனத்தைப் பொறுத்து வெள்ளை அல்லது நீலம் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். இவைகள் மரங்களிலேயே வாழ்வதால் இவைகளின் பச்சை நிறம் மரத்தின் இலைகளோடு ஓத்துப்போவதால் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது எளிதாகிறது.

  வயிற்றுப்பகுதி வெளிர்பச்சை நிறத்தில் இருக்கும். உடனே நம்ம ஊரு "பச்சை பாம்பு" ன்னு நெனெச்சு ''சாம்பார் நல்லா இருக்கணும்''னு சொல்லி உருவ ஆரம்பிச்சிடாதீங்க. நெனப்புதான் பொழைப்ப கெடுக்கும்னு சொல்லுவாங்க. உடம்பு முழுக்க அம்புட்டும் விஷம். அப்புறம் உங்களுக்கு பால் ஊத்தும்படி ஆகிடும்.

  Green Mamba

  வாழிடம்.

  பெரும்பாலும் குளிர்ச்சியான இடங்களையே தேர்ந்தெடுக்கின்றன. அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மரத்திலேயே தன் வாழ்க்கையை கழிக்கின்றன. பகலில் இரை தேடுகிறது. இரவில் ஹாயாக தூங்குகிறது.

  உணவுமுறை.

  எலிகள், அணில்கள், சிறிய வகை பாலூட்டிகள், பறவைகள், பறவைகளின் முட்டைகள், வௌவால்கள், தவளைகள் முதலியவைகளை மரத்தில் மறைந்திருந்தபடியே தாக்கி உணவாக உட்கொள்கின்றன.

  இனப்பெருக்கம்.

  ஏப்ரல், மே , ஜூன் மாதங்களில் இன சேர்க்கையில் ஈடுபடுகின்றன. பெண் பாம்புடன் இணைய ஒன்றிற்கு மேற்பட்ட ஆண் பாம்புகள் போட்டி போடும்.

  போட்டி சிறிய அளவில் போராக மாற நேரம் செல்லச் செல்ல அதுவே  பெரிய அக்கப்போராக மாறி பலமணி நேரம் கூட நீடிக்கும். இறுதியில் ஒரே ஒரு பாம்பு மட்டுமே ஜெயிக்கும். சண்டையில் ஜெயிக்கும் அந்த பாம்பு வெற்றிக்களிப்பில் சாந்தி முகூர்த்தத்திற்கு ரெடியாகும்.

  எல்லாம் சுபமாக முடிய பெண்பாம்பிற்கு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பிரசவவலி ஏற்பட 5 முதல் 15 முட்டைகள் வரை இடுகிறது. அடுத்த மூன்று மாதங்களில் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகிறது.

  Green mamba

  ஆயுள்.

  15 ஆண்டுகளிலிருந்து அதிகப்படியாக 25 ஆண்டுகள் வரை உயிர்வாழும். ஆனால் சில வேளைகளில் அற்ப ஆயுள்களிலும் போய்விடுவதுண்டு அதற்கு காரணம் இவைகளின் எதிரிகள்தான். பெரும்பாலும் இவைகளின் ஜென்ம எதிரிகளான கழுகு மற்றும் கீரிகளால் வேட்டையாடப்படுகின்றன.

  விஷத்தின் தன்மை.

  கொடிய விஷமுள்ளவை. இதன் விஷம் நியூரோடாக்சின், கால்சிகுளூடின் மற்றும் டென்ட்ரோடாக்சின் கலந்த கலவை என அறியமுடிகிறது. ஆனால் கருப்பு மாம்பாவிற்கு இருக்கும் அளவிற்கு விஷம் இல்லையென்றாலும் அதனோடு ஒப்பிடும்போது கொஞ்சூண்டுதான் குறைவு.

  இது கடித்த இடத்தில வீக்கம், தலைசுற்றல், குமட்டல், பார்வை மங்குதல், குறைந்த இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஒழுங்கற்று துடித்தல், மூச்சு விடுவதிலும் உமிழ்நீரை விழுங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுதல் முதலியவற்றை உண்டுபண்ணும்.

  மேலும் பக்கவாதம், தசைப்பிடிப்பு முதலானவைகளையும் ஏற்படுத்தும். அவசரமாக சிகிச்சை அளிக்காவிடில் அரைமணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள்ளாக மரணத்தை உண்டுபண்ணும்.

  குறிப்பு.

  இந்த மாம்பா பாம்பு நம் நாட்டில் உள்ளதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.

  ஆனால், இதன் வம்சாவளியை சேர்ந்த மற்றொரு பாம்பினம் நம்மிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மாம்பாவை விட ஐந்து மடங்கு அதிக விஷத்தன்மை கொண்டது. அதைப்பற்றி அறிந்து கொள்ள தட்டுங்க.

  >> "இராஜ நாகம் - கருநாகம் - King Cobra."<<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  16 கருத்துகள்

  1. ஆத்தாடி... அதிர வைக்கும் தகவல்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக நண்பரே!!! வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி !!!

    நீக்கு
  2. தளம் மீண்டும் மாற்றியது போல் உள்ளதே... வாழ்த்துகள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தளம் ஒரேஒரு முறைமட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது நண்பரே .... ஆனால் ஒரு வாரம் கழித்தே செட்டிங் மற்றும் பதிவுகள் அதில் அப்டேட் செய்யப்பட்டதால் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது போன்றதொரு தோற்றத்தை தருகிறது ... அவ்வளவே !!!

    நீக்கு
  3. அடியாத்தி உங்க ஏரியா பக்கம் வரவே பயமாக இருக்கிறதே...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இதுக்கே பயந்தா எப்படி .... எங்க ஏரியாவுல இதைவிட படுபயங்கரமான "கொரானா" எல்லாம் இருக்கே !!! ...

    நீக்கு
  4. பச்சை மாம்பா - பெயரே கலக்கலா இருக்கே! அட பச்சைப் பாம்பு தானேன்னு நினைச்சா பட்டுன்னு போட்டு சட்டுனு மேலே அனுப்பிடும் போல! தகவல்கள் சிறப்பு.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக !! .... ஆம் ... நண்பரே ! கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் அதுவே ப்ரீ விசா அரேஞ்ச் பண்ணி தந்திடும் ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !...

    நீக்கு
  5. அழகு ஆபத்தானது என்பது சரிதான். பார்க்க பசுமையாக இருந்தாலும் பல் பட்டால் பரலோகம் தான் போலும். மாம்பா பாம்பு பற்றி அறியாத அரிய தகவல்களை தெரிந்துகொண்டேன். நன்றி!

   பதிலளிநீக்கு
  6. "பல் பட்டால் பரலோகமா" .... அடடா ... சொற்றொடர் நன்றாக இருக்கிறதே .... வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி நண்பரே !!!

   பதிலளிநீக்கு
  7. பச்சை நிறத்தில் அழகான ஆனால் கொடிய விஷமான பாம்பு வகை என்று தெரிகிறது. மிக மிகச் சிறப்பான தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது.

   துளசிதரன்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் நண்பரே ! நம் நாட்டில் உள்ள பச்சைபாம்பிற்கு உயிரை கொல்லும் விஷம் கிடையாது ... ஆனால் அதே பச்சை நிறம் கொண்ட இது உயிரை கொல்லும் விஷம் கொண்டது என அறியும்போது அச்சமாகத்தான் இருக்கிறது. கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !!

    நீக்கு
  8. ஆஹா! பச்சை நிறமே பச்சை நிறமே நு பாடலாம்னு பார்த்தா பக்கத்துல போயி பேசக் கூட முடியாது போலருக்கே. சோசியல் டிஸ்டன்ஸ்தான் போல! நம்ம ஊர்ல மெயினா 4 வகை விஷப்பாம்பு உண்டே...கருநாகம் அதான் ராஜநாகம் பத்தி சொல்ல வந்தேன் ...நீங்களே சொல்லிருக்கீங்க. பாம்பு பத்தி கொஞ்சம் தெரியும் பின்ன கிண்டி பாம்பு பார்க் பக்கத்துலதானே வீடு !!! இப்ப பங்களூர் ல இருந்தாலும்...வீட்டுக்குக் குழந்தைகள் விருந்தினர் வந்தால் கிண்டி பார்க்குக்குத்தான் முதல் விசிட். அது போல முதலை பார்க் ஈசிஆர் ல போனப்ப அங்கு பாம்பு விஷம் எடுப்பதையும் பார்த்திருக்கிறேன். பாம்போடு நிறைய அனுபவம் உண்டு ஊரில் கிராமத்தில் இருந்தவரை.

   நல்ல பதிவு சிறப்பான தகவல்.

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நம்ம ஊரு பச்சைபாம்புன்னு நெனைச்சுக்கிட்டு "பச்சை நிறமே பச்சை நிறமே"ன்னு பாடிகிட்டு பக்கத்துல போனா அப்புறமா பாடையிலதான் போகணும் ... அதுசரி கிண்டி பாம்பு பார்க் பக்கத்துலதான் வீடா .... ஐயகோ ... அப்படீன்னா அந்த நினைப்பே அடிக்கடி கனவுல பாம்புகளை கூட்டிக்கிட்டு வருமே .... ம் ... தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி ...

    நீக்கு
  9. பைரவர்களில் சுயம்வரம் நடப்பது போல இதுலயும் சுயம்வரம் போட்டி சண்டை எல்லாம் இருக்கும் ....அனிமல் ப்ளானட் ல முன்னாடி பார்த்த நினைவு இருக்கு.

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆகா ... நன்றியுள்ள அந்த ஜீவனை "பைரவர்" என்ற அதன் தெய்வீகமான பெயரை நினைவுபடுத்தி உயர்வாக குறிப்பிடுகிறீர்களே!! .... இதற்காகவே அந்த ஜீவனின் சார்பாக உங்களுக்கு நன்றி சகோதரி !!!

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.