தகவல் பெட்டகம் - மனித உடலியல் - Human Physiology general knowledge.

Human Physiology.

நம்முடைய உடலை ஒரு தொழிற்சாலையுடன் ஒப்பிடலாம்.  

தொழிற்சாலை என்றால் "லாக் டவுன்" காலங்களில் இழுத்து மூடப்படும் சாதாரண தொழிற்சாலை அல்ல. மிக நேர்த்தியாக பணிசெய்யும் ஒரு அற்புத தொழிற்கூடம். அதுவும் ஓய்வு என்பதே  இல்லாமல் 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு தொழில் பட்டறை.

இவ்வளவு சிறப்புப்பெற்ற இந்த உடலைப்பற்றி நாம் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளோம் என்று கேள்வி எழுப்பினோம் என்றால் விடை பூஜ்யம்தான்.

உலக விஷயங்களை தெரிந்துவைத்திருக்கும் அளவிற்கு நம் உடல்சார்ந்த விஷயங்களை தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது வேதனைதான். 

வாருங்கள்! இந்த பதிவில் உடலைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களை பொதுஅறிவு வாயிலாக புதுஅறிவு பெற்று தெளிவடைவோம்.

மனித உடலியல்.

General knowledge.

 • விட்டமின் C என்பது - அஸ்கார்பிக் அமிலம். (Ascorbic acid).

 • பற்களிலும், எலும்புகளிலும் உள்ள வேதிப்பொருள் - கால்சியம் பாஸ்பேட். (Calcium Phosphate).

 • பாலில் உள்ள புரத சத்தின் பெயர் - கேசின். (Casein).

 • 1 யூனிட் இரத்தம் என்பது - 350 மி.லி.

 • மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் - 120 / 80 ஆகும்.

 • இதய இயக்கத்தை கட்டுப்படுத்தும் உறுப்பு -   முகுளம்.

 • இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - நான்கு.

 • தாய்ப்பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோனின் பெயர் - ஆக்சிடோசின். (Oxytocin).
 • எலும்பு, மற்றும் பல் வளர்சிக்கு உதவுவது - கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்.

 • வெள்ளை அணுக்களில் மிக சிறியவை - லிம்போசைட்டுகள்.

 • கால் பாதங்களிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 14.

 • தயமின் [Thiamine] என்று அழைக்கப்படும் வைட்டமின் - வைட்டமின் B1. (Vitamin B1).

 • மனித உடலிலுள்ள இரத்தத்தின் அளவு - 5 . 5 லிட்டர்.

 • இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் - 120 நாட்கள்.

 • சிறுநீரக கற்களில் காணப்படும் பொருள் - கால்சியம் ஆக்ஸலேட். (Calcium Oxalate).

 • உணவை ஜீரணிக்க மனித உடலில் உற்பத்தியாகும் அமிலம் - ஹைட்ரோகுளோரிக் அமிலம். (Hydrochloric acid).

 • இதயநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவி - எலக்ட்ரோ கார்டியோகிராம். (Electrocardiogram).

Electrocardiogram

 • குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது - ஆண்களின் குரோமோசோம்கள்.

 • இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் பொருள் - ஹீமோகுளோபின்.

 • மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 206.

 • மனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை - 700 முதல் 800.

 • இதயத்தின் மேல்பகுதியில் அமைந்திருக்கும் பெரிய நிணநீர் சுரப்பி - தைமஸ் (Thymus).

 • பித்த நீரை சுரக்கும் உறுப்பு - கல்லீரல்.

 • மனிதனின் நகம் 1 வருடத்தில் வளரும் அளவு - சுமார் 12 அங்குலம்.

 • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உறுப்பு - அட்ரீனல் சுரப்பி.

 • நிமோனியா என்னும் நோயால் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பு - நுரைஈரல்.

 • கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் - ''லெப்டின்''.

 • இரத்தக் குறைவினால் ஏற்படும் நோய் - அனிமியா. (Anemia).

Anemia

 • மனித உடலில் குதிகால்களில் காணப்படும் தசைநார் - ஏசில்ஸ் டெண்டன்.

 • மனித உடலிலுள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 1,00,000 கிலோ மீட்டர்.

 • மனித உடலில் காணப்படும் மிக சிறிய எலும்பு - நடுக்காது அங்கவடி எலும்பு.

 • மார்புக்கூட்டின் விலா எலும்புகளின் எண்ணிக்கை - 24. ( 12 ஜோடி ).

 • வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் - 2 முதல் 3 வாரங்கள்.

 • உடலில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம் - எலும்பு மஜ்ஜை.

 • இரத்தம் உறைவதற்கு காரணமாக இருப்பது - திரோம்போசைட்.

 • குளுக்கோஸ் - ஐ  க்ளைகோஜனாக சேமித்து வைக்கப்படும் உறுப்பு - கல்லீரல்.
 • நுரையீரலில் அமைந்திருக்கும் சிரைகளின் எண்ணிக்கை - நான்கு.

 • உடலில் புதிய திசுக்கள் உற்பத்தியாக தேவைப்படும் ஊட்டச்சத்து - புரதம்.

 • டைஃபாய்டு நோய்க்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியின் பெயர் - ஆண்டி டாக்ஸின்.(Anti - toxin).

 • மனித உடலில் உள்ள சுரப்பிகளில் அளவில் பெரியது - கல்லீரல். (Liver).

 • மனிதனுடைய கல்லீரலின் எடை - 1.5 கிலோகிராம்.

 • இட, வல பெருமூளை அரை வட்ட கோளங்களுக்கிடையே செய்தி பரிமாற்றத்திற்கு உதவுவது - கார்பஸ் கலோசம்.

 • மூளையின் நரம்பு செல் மற்றும் நியூரான்களின் எண்ணிக்கை - 5000 கோடி முதல் 10,000 கோடி வரை.

general-knowledge human brain

 • ஆண்களிடம் சுரக்கும் ஹார்மோன் - ஆண்ட்ரோஜன்.

 • பெண்களிடம் சுரக்கும் ஹார்மோன் - ஈஸ்ட்ரோஜன்.

 • நாம் சாதாரணமாக தும்மும் தும்மலின் வேகம் - மணிக்கு 160 கி .மீ .

 • மனித உடலில் பெருங்குடலின் நீளம் - 1.5 மீட்டர்.

 • மனித உடலில் சிறு குடலின் நீளம் - 6 . 5 மீட்டர்.

 • சிறுகுடலிலுள்ள குடலுறிஞ்சிகளின் எண்ணிக்கை - நான்கு மில்லியன்.

 • உமிழ்நீரில் அடங்கியுள்ள என்சைம் - டையாலின்.

 • மனிதனின் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளின் (Salivary glands) எண்ணிக்கை - 6. (3 ஜோடி).

இதுபோல் இன்னும் பல அறிவுசார்ந்த பொதுஅறிவு விஷயங்களை அறிந்துகொள்ள விருப்பமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

>>"கார சாரமான தகவல்கள். general-knowledge - part1."<<


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.