"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கார சாரமான தகவல்கள். general-knowledge.

கார சாரமான தகவல்கள். general-knowledge.

Acid and Alkali Information.

காரசாரமான விவாதம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் காரசாரமான தகவல்களை பற்றி கேள்விப்பட்டதுண்டா?...

கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்ற சொற்றொடருக்கு சொந்தமான காரமும், சாரமும் வேதியியல் துறைக்கு இரு கண்கள் போன்றவை.

காரம் என்பது சுண்ணாம்பு போன்ற கார சுவையுடைய பொருளை குறிக்கும். 

சாரம் என்பது உப்பு மற்றும் புளிப்பை குறிப்பது. அதாவது அமில தன்மையுள்ள பொருட்களை குறிக்கும். இந்த இரண்டும் இல்லையெனில் வேதியியல் (இரசாயனவியல் ) என்கிற ஒரு துறையே இல்லை எனலாம்.

மூலிகை மருத்துவத்தில் மூலிகைகளாகட்டும் அல்லது வேறு இரசாயன மூலப்பொருள்களாகட்டும் அவைகள் காரத்தன்மையுள்ளவை மற்றும் அமிலத் தன்மையுள்ளவை என இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

காரத்தன்மையுள்ள மூலிகைகளை "பெண்" தன்மையுள்ள மூலிகை என்றும், சாரம்(உப்பு ) அதாவது அமிலத்தன்மையுள்ள மூலிகை "ஆண்" என்றும் வகைப்படுத்தப்படுகிறது. மருந்து தயாரிக்க இந்த இரு தன்மையுள்ள இருவேறு மூலிகைகளை ஒன்றாக சேர்க்கும்போது "குழந்தை" என்னும் ஒரு  நோய் தீர்க்கும் புதிய மருந்து உருவாகிறது என்பது கோட்பாடு.

சரி, இப்பதிவில் காரசாரத்தை பற்றிய விரிவான தன்மைகளை நாம் இங்கு பார்க்கப்போவதில்லை . மாறாக அதுபற்றிய சில பொதுஅறிவு துணுக்குகளை மட்டுமே பார்க்க இருக்கிறோம்.

காரம் - சாரம் - பொதுஅறிவு.

 • போர்டோக் கலவை என்பது - காப்பர் சல்பேட் + சுண்ணாம்பு நீர். (Copper Sulphate + Calcium hydroxide).

 • கடல் பஞ்சிலிருந்து பிரிந்தெடுக்கப்படும் வேதிப்பொருள் - அயோடின். (Iodine).
 • செயற்கை பட்டு தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள் - காப்பர் சல்பேட். (Copper Sulphate).

 • ஹேர் டை தயாரிக்க, மற்றும்  ஓட்டு போடும்போது விரல்களில் வைக்கப்படும் அடையாள மை தயாரிக்க பயன்படும் இரசாயனபொருள் - சில்வர் நைட்ரேட் . (Silver Nitrate).

 • கடல் உப்பின் வேதி பெயர் - சோடியம் க்ளோரைடு (Sodium chloride). இதன் உருகுநிலை - 801 ⁰ C.
 • வெடியுப்பின் வேதிப் பெயர் - பொட்டாசியம் நைட்ரேட். (Potassium nitrate).

 • மணலின் வேதியியல் பெயர் - சிலிக்கன் டை ஆக்ஸைடு. (Cilicon dioxide).

 • சிலி வெடியுப்பின் வேதி பெயர் - சோடியம் நைட்ரேட். (Sodium Nitrate).

 • மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட். (Copper Sulfate).

 • அறைவெப்ப நிலையில் எரியும் பொருள் - வெண் பாஸ்பரஸ். (White Phosporus).

White phosphorus

 • அயோடினுடன் பொட்டாசியம் அயோடைடு சேர்த்தால் கிடைப்பது - டிஞ்சர் ஆப் அயோடின். (tincture of iodine).

 • வெண் பாஸ்பரஸை சிவப்பு பாஸ்பரசாக மாற்றுவதற்கு பயன்படும் வினையூக்கி - அயோடின் - Iodine.

 • கடின நீரை மென் நீராக மாற்றுவதற்கும், சலவை சோடா தயாரிப்பதற்கும் பயன்படுவது - சோடியம் கார்பனேட். (Sodium carbonate).

 • நவச்சாரத்தின் வேதி பெயர் - அமோனியம் க்ளோரைடு. (Ammonium chloride).

 • தாமிர சல்பைடின் நிறம் என்ன - கருமை.

 • ரொட்டி தயாரிக்க பயன்படுத்தும் வேதியியல் உப்பு - சோடியம் பை கார்பனேட். (Sodium Bicarbonate).

 • தீக்குச்சிகள் தயாரிக்கப் பயன்படுவது - பாஸ்பரஸ். (Phosporus).

 • சிவப்பு பாஸ்பரஸின் உருகுநிலை - 560 டிகிரி செல்ஸியஸ்.

red phosphorus

 • நீரின் தற்காலிக கடின தன்மைக்கு காரணம் - கால்சியம் பை கார்பனேட். (Calcium Bicarbonate).

 • காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்கினால் சோப்பு கிடைக்கும் - கொழுப்பு.

 • எப்சம் உப்பின் வேதி பெயர் - மெக்னீசியம் சல்பேட் (Magnesium sulfate).

 • அதிக அளவில் சேர்மம் உருவாக்க காரணமாக இருக்கும் தனிமம் - ஆக்சிஜன். (Oxygen).

 • சோப்பு தயாரிக்க பயன்படும் வேதிப்பொருள் - சோடியம் ஹைட்ராக்ஸைடு. (Sodium Hydroxide).

 • நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்.

 • முகப்பவுடர் தயாரிக்க பயன்படுத்தப்படும் அடிப்படை பொருள் - மக்னீசியம் சல்பேட். (Magnesium sulfate).

 • எரிசோடாவின் வேதிபெயர் - சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium hydroxide).

 • சுண்ணாம்புக்கல்லில் அடங்கியுள்ள அடிப்படை பொருள் -  கால்சியம் சல்பேட். (Calcium sulfate).

 • எலிகளை கொல்ல பயன்படும் வேதிப்பொருள் - துத்தநாக பாஸ்பைடு. (Zinc phosphide).

Zinc phosphide

 • மோர்ஸ் உப்பின் வேதி பெயர் - சோடியம் சல்பேட் (Sodium sulfate).

 • எரி பொட்டாஷ் அல்லது  காஸ்டிக் பொட்டாஷ் வேதி பெயர் - பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு. (Potassium Hydroxide).

 • புகைப்படத்துறையில் உபயோகப்படுத்தப்படும் ரசாயன உப்பு - சோடியம் தயோ சல்பேட். (Sodium thiosulfate).

 • கண்ணீர்புகை குண்டுகள் தயாரிக்க பயன்படும் சேர்மம் - பென்சாயில் குளோரைடு. (Benzoil Chloride).

 • வெள்ளை துத்தம் என்பதன் வேதி பெயர் - ஜிங்க் சல்பேட். (Zinc sulfate).

 • நாம்  அருந்தும் சோடாவில் உள்ள பொருள் - கார்பன் - டை - ஆக்சைடு (அல்லது) கரியமிலவாயு. (Carbon Dioxide).

 • நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்.

 • காய்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் வாயு - அசிட்டிலின் வாயு.

இதுபோல் இன்னும் பல அறிவுசார்ந்த பொதுஅறிவு விஷயங்களை அறிந்துகொள்ள விருப்பமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.