"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
தெரியுமா உங்களுக்கு? General knowledge.

தெரியுமா உங்களுக்கு? General knowledge.

General knowledge.

நம்முடைய மூளை நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நடக்கும் பல தகவல்களை தனக்குள் சேகரித்து வைத்துக்கொள்கின்றன. இதில் நல்ல விஷயங்களும் அடங்கும் அதே வேளையில் பல தவறான தகவல்களும் அடங்கும்.

அவ்வாறு கண்டதையும் சேகரிக்கும் குப்பைத்தொட்டியாக நம் சிந்தனை அமையாமல் அறிவியல் தகவல்களை சேகரிக்கும் பல்கலைக்கழகமாக அமையவேண்டும் என்பதே நம் ஆவல்.

அதற்கு பல அறிவியல் துணுக்குகளை அறிந்துகொள்ள முற்பட வேண்டும். அதற்கு இந்த பகுதி உங்களுக்கு உதவி செய்யும் என்றே நம்புகிறோம் .... 

தெரியுமா உங்களுக்கு?

 • நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.

 • அழும் அதிசய சுவர் அமைந்துள்ள நாடு - ஜெருசேலம்.

 • அதிக அளவில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள உலக தலைவர் - லெனின்.

 • உலகின் அகலமான நதி - அமேசான்.

 • மரப்பாச்சி பொம்மைகள் - எந்த மரத்தால் செய்யப்படுகின்றன - கருங்காலி மரம்.
 • இயந்திரமனிதனுக்கு முதலில் 'ரோபோ' என்று பெயர் சூட்டியவர் - காரெல் கேபெக்.

 • மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் வராத நோய் ஒன்று உண்டு. அது என்ன நோய் தெரியுமா?....அதுதான் ''தொழுநோய்''.

 • நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படும் உறுப்பு எது தெரியுமா ? - நுரையீரல்.

 • வீடுகளில் வளர்க்கப்படும் தேனீக்கள் எந்த வகையைச் சார்ந்தது தெரியுமா? - ஏ பி ஸ் இண்டிகா.

 • உலகிலேயே அதிக அளவு முட்டையிடும் உயிரினம் - கரையான். நாளொன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் இடும்.

 • ஒரு நாக்குப்பூச்சி எத்தனை முட்டைகள் இடும் தெரியுமா? - சுமார் 2 லட்சம் முட்டைகள் இடும்.

 • வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் - அசாடிராக்டின் (Azadirachtin).

 • உலகின் உயரமான மரம் - செக்கோயா.

 • ரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுவது - பார்மிக் அமிலம்.

 • பென்சிலினுக்கு மாற்றாக கொடுக்கப்படும் மருந்து - எரித்ரோமைசின்.

 • காகிதத்தின் மூலப்பொருள் - செல்லூலஸ்.

 • வெறிநாய் கடித்தால் பரவும் ''ரேபிஸ்'' (Rabies) நோய் மனித உடலில் எந்த உறுப்பை முதலில் பாதிக்கிறது? - மூளை.

 • புத்தர் பிறந்த இடம் - லும்பினி.

 • டெல்லி செங்கோட்டையை கட்டியவர் - ஷாஜகான்.

 • கண்கள் திறந்த நிலையிலேயே முதலைகள் தூங்குகின்றன. மேலும் நாக்கை வெளியே நீட்ட முடியாத விலங்கும் இதுவே.

 • இரும்பை போன்ற உறுதியான மரம் - யூக்காலிப்டஸ்.

eucalyptus

 • உலக அதிசயங்களுள் ஒன்றான "பைசா டவர் - Tower of Pisa" என்னும் சாய்ந்த கோபுரம் உள்ள நாடு - இத்தாலி.

 • "மொஹஞ்சோதரா" என்ற சொல்லின் பொருள் என்ன தெரியுமா? - "இறந்தவர்களின் நகரம்" என்று பொருள்.

 • பாலைவனமே இல்லாத கண்டம் - ஐரோப்பா.

 • எந்த இடத்தை மையமாக வைத்து உலக நேரம் நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா ? - கிரீன்விச்.

 • ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகாமை தீவுகளை தவிர வேறு எந்த நாட்டிலும் காணப்படாத விலங்கு - கங்காரு.

 • ருத்ராட்சத்தில் எத்தனை வகைகள் உள்ளன - 38 வகைகள்.

 • அஜந்தாவிலுள்ள குகைக்கோவில்களின் மொத்த எணிக்கை - 27.

 • மிகப்பெரிய பூக்களை பூக்கும் தாவரம் - ரப்ளேசியா.
 • உலகின் மிக நீளமான கடற்கரை - காக்ஸ் பஜார் கடற்கரை.

 • உலகிலேயே அதிகமாக தங்கம் உற்பத்தி செய்யும் நாடு - தென் ஆப்பிரிக்கா.

 • போதைப்பொருளான அபின் செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளையே நாம் சமையல் பொருள்களுள் ஒன்றாக பயன்படுத்தி வருகிறோம். அது எது தெரியுமா - கசகசா. (குறிப்பு - கசகசா செடியின் காய்களின் மேற்புறத்தை கீறி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவத்தை உறையவைத்தே "அபின்" என்னும் போதைப்பொருள் தயாரிக்கிறார்கள்.)

 • உலகில் சராசரியாக மொத்தம் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன - 2796 மொழிகள்.

 • மலர்களுக்கு நிறம் கொடுக்கும் வேதிப்பொருள் - ஆந்தோசயனின்.

 • விஷங்களில் மிகக்கொடியதாக கருதப்படுவது - புளூட்டோனியம்.

 • காப்பி விதையிலுள்ள இரசாயனப்பொருள் - காஃபின்.

 • அதிவிரைவில் ஆவியாகும் திரவம் - ஆல்கஹால்.

 • பாலை தயிராக மாற்றும் பொருள் - ரெனின்.

 • நமது நாட்டில் அதிகம் கிடைக்கும் தாதுப்பொருள் - மைக்கா.

mica

 • எரிமலை இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா.

 • மிக அதிகமான எழுத்துக்களைக்கொண்ட மொழி - சீன மொழி.

 • இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன - 1652 மொழிகள்.

 • நாம் பொதுவாக இடமிருந்து வலமாகவே எழுதுவோம். ஆனால் வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி எது தெரியுமா? - உருது.

 • கங்காருவின் குட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா ? - ஜோய்ல்ஸ்.

 • மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் - லியானோர்டோ டாவின்சி.

leonardo davinci

 • கடல் மட்டத்திற்கும் கீழே உள்ள நாடு - டென்மார்க்.

 • அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை வடிவமைத்தவர் யார் தெரியுமா?  - ஜேம்ஸ் ஹோபன்.

 • மூட்டைப்பூச்சி ஒரு முறைக்கு எத்தனை முட்டைகள் இடும் தெரியுமா ? - 200 முதல் 500 வரை.

 • பன்றி நாடாப்புழு எத்தனை முட்டையிடும் - சுமார் 50000.

 • முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு இவைகளில் எந்த கரு கோழிக்குஞ்சுகளாக வளர்ச்சி அடைகிறது - வெள்ளைக்கரு.

மஞ்சள் கருவானது முட்டைக்குள்ளிருக்கும் கோழிக்குஞ்சுவின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு ஊட்டச்சத்து உணவாக மட்டும் பயன்படுகிறது. இது அனைத்து வகை உயிரினங்களின்  முட்டைகளுக்கும் பொருந்தும்.

மேலும் இதைப்போல் இன்னும் பல பொது அறிவு விஷயங்களை தெரிந்துகொள்ள அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.


💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்